Thursday, April 30, 2009

8 லண்டன் தமிழ் வானொலியில் பாலுஜியின் ஒலித்தொகுப்பு(Down Load) 45 நிமிட ஒலிக்கோப்பு தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்

லண்டன் தமிழ் வானொலியில் பாலுஜியின் ஒலித்தொகுப்பு ஒலிஉலா வரவிருக்கிறது கூடிய விரைவில். திருமதி.ராகினி பாஸ்கர் அவர்களின் ரத்தின சுருக்கமான சிறிய ஓர் அறிமுகம் இவர் லண்டன் தமிழ் வானொலி மற்றும் டி.ஆர்.டி தமிழ் வானொலிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளினி, மழலை கொஞ்சும் குரல்யாளினி தன் கவிதைகள் மூலம் திரை இசைப்பாடல்களை வழங்கி வெளிநாடுகளில் வாஞ்சையுடன் வாழும் தமிழ் நெஞ்சகளூக்காக மகத்தான சேவை செய்கிறார். இவரின் அற்புதமான பணி பாராட்டுக் குரியது. சமீபத்தில் எனக்கு அறிமுகமான இவரிடம் நான் “டாக்டர் எஸ்.பி.பி மீது உங்கள் கொஞ்சும் குரலில் ஒரு கவிதை ஒலித்தொகுப்பு வழங்குங்கள் எங்களுக்காக” என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அவர் இருக்கும் வேளை பளூவிலும் நடக்குமா என்ற சந்தேகத்துடன் தான் இருந்தேன். என்ன ஒரு ஆச்சரியம் ஒரே நாளில் அவர் மீது கொண்ட அன்பால் கவிதைகள் புணைந்து பாடல்கள் தேர்வு செய்து ஒலித்தொகுப்பாக வழங்கியது சாதாரணமான விசயமல்ல. அவர் கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தை கண்டு பிரமித்துப்போனேன். எப்படி எப்படி முடியும்? என்று இன்னும் கூட என் ஆச்சரியம் தீரவில்லை. அது மட்டுமல்லாமல் ஒலித்தொகுப்பை கேளூங்கள் அன்பரே என்று தொகுப்பையும் முதன் முதலாக அனுப்பியும் விட்டார். நான் அதை பாலுஜியின் அபிமானத்தை பெற்ற அன்பர்களூக்காக வழங்குவதில் அவருடன் சேர்ந்து நானும் பெருமை கொள்கிறேன். இப்பேர்பட்ட இசையன்பர்களை வழங்க காரணமாக இருந்த பாலுஜிக்கு நான் ஆயுள் முழுவதும் கடமைப்பட்டவனாவேன்.

Saturday, April 25, 2009

7 நிலவு தூங்கும் நேரம்இதற்க்கு முன் பதிவில் ஜானகியம்மா பிறந்தநாள் ஒலிக்கோப்பில் ஒரு பாடல் ராகம் சொல்லி எது கேட்டிருந்தார் நமத் ஆதர்ஸ் அறிவிப்பாளர் அது என்ன பாட்ல் என்று கண்டு பிடித்தீர்களா அன்பர்களே? இல்லையென்றால் இதோ இந்த ஒலித்தொகுப்பில் அந்த பாடலுக்கு விளக்கமும் யார் பாடியது எந்த படம் சரியாக யார் சொன்னார்கள் என்று ஒலிக்கோப்பின் இறுதியில் அறிவிப்பாளர் சொல்லீயிருக்கிறார். ஓர் ஆர்வக்கோளாரினால் ஒலிகோப்பின் இறுதியில் சென்று கேட்டு விடாதீர்கள் நிகழ்ச்சியின் வழக்கம் போல் சுவாரசியம் போய்விடும் சரியான விடையை பல பேர் சொல்லியிருக்கிறார்கள் அதையும் கேளூங்கள். கேட்டுவிட்டு உங்கள் உணர்வுகளையும் மறுமொழியில் எனது கருத்தையும் சொல்கிறேன். என்னங்க சரிங்களா? பாடல்கள் லிஸ்ட் எப்படி கேட்க ஆர்வமாக உள்ளதா? கேட்டுவிடுவோம்...

அந்த பாடல் ராகத்தின் பேச்சிலும், ஒரு பாட்டில் பொடிவைத்து பேசியிருக்கிறார் நமது அறிவிப்பாளர் எங்கே என்று அதையும் கண்டு பிடித்து விடுவீர்கள் நிகழ்ச்சியின் இறுதியில். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நேயர்களூக்கும் என் நன்றி.

1.நிலவு தூங்கும் நேரம்
2.அழகாக சிரித்தது அந்த நிலவு
3.மெட்டி ஒலி காற்றோடு
4.சுகம் சுகமே தொடத்தொடதானே
5.தெரியும் தெரியும் விசயம்
6.அம்மம்மா சரணம் உன் பாதங்கள்
7.தங்கத்தில் பாடாத
8.பூங்கதவே தாழ்திறவாய்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, April 24, 2009

6 இசைக்குயிலின் 72 ஆவது பிறந்தநாள்23.04.2009 அன்று தென்னிந்தியாவின் இசைக்குயில் டாக்டர் எஸ்.ஜானகியம்மாவின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். அதன் தொடர்பாக இந்த ஒலித்தொகுப்பு.
நமக்கு தனியாக ஒரு மலரைப் பார்த்தாலே அழகில் மனதை கொள்ளைக்கொண்டு போகும். ஒரு பூங்கொத்தாக மலர்களை பார்த்தால் கேட்கவா வேண்டும் இதோ இந்த் மலர் பாமலர் பூங்கொத்தை அவரின் பிறந்த நாள் பரிசாக வழங்கி வணங்குகிறேன். அவர் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

ஆமாம் அன்பர்களே நேற்று கோவை பண்பலையில் இனிய இரவில் டாக்டர் எஸ்.ஜானகியம்மாவின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியை அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்கள் வழங்கினார். அவரின் மனதை மயக்கும் குரலில் அம்மவின் தனிப்பாடல்கள் கேட்டு மகிழுங்கள் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.
பாமாலை பூங்கொத்து ஒலித்தொகுப்பு

1.நான் தாயாக வேண்டும், 2.காற்றுக்கென்ன வேலி, 3.அன்பே எங்கும்,காற்றினிலே வரும் கீதம், 4.பாடவா உன் பாடலை, 5.செந்தூரப்பூவே, 6.மானாட போது, 7.அடடட மாமரக்கிளியே, 8.ஒரே முறை உன் தரிசனம், 9.தூரத்தில் நான் கண்ட உன் முகம்
10.உன்னை ராதா அழைக்கிறாள், 11.தேனூறும் ராகம்

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, April 20, 2009

5 வாலிபன் சுற்றும் உலகம்வாலிபன் சுற்றும் உலகம்

அன்பு உள்ளங்களே...

29.04.2009 அன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மாலை 6 மணிக்கு 6 பாடல்கள் கொண்ட மெல்லிசைமன்னர் எம்.எஸ்.வி அவர்களின் புதிய இசை ஆல்பம் வெளியீடு. இதில் பிரபல பாடகர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி,ஏழிசை வேந்தன் டி.எம்.சௌந்தரராஜன், பாடும் நிலா எஸ்.பி.பாலு, இசையரசி பி.சுசீலா, சின்னகுயில் சித்ரா ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளார்கள் பாடலாசிரியர் பத்மஸ்ரீ வாலி அவர்கள். குறுந்தகடு வாங்கி கேட்டு மகிழுங்கள்.

Dear Friends and Well Wishers and Music Lovers and Ardent Fans of our Beloved SPB,
Most of us think, Aayiram Nilavey Va is the first song of SPB, but Baluji's
first Recorded song was for the movie Hotel Ramba, and unfortunately the song was never released. Then Baluji sang Iyarkai ennum Ilaya kanni...in the movie Shanthi Nilayam. Sri. MSV, who initiated our beloved Baluji in to singing in films, has been a huge support to Baluji and so is our Baluji to Sri. MSV.

A new CD/Cassette release of the film: Valiban Sutrum Ulagam.
6 songs composed by MSV on 29/04/09 at AVM studio A/C theatre from 6-9 PM .
Name of the Movie -VALIBAN SUTTRUM ULAGAM
LYRICS - VALI
SINGERS - MSV, TMS, SPB, P.Susheela, Chithra

தகவல் உதவி. நன்றி எனது நண்பர் திரு.நியுயார்க் ராஜ் அவர்கள்

Saturday, April 18, 2009

4.மஞ்சள் வெயில் மாலையிலேஇந்த ஆக்கத்தை உருவாக்கியவர் திருமதி.விஜயலக்‌ஷ்மி சுந்தரராஜன் அவர்களூக்கு பெரிதும் உதவியாக இருந்த எனது நண்பர் சுந்தராபுரம் திரு.ஜெகதீஸ் அவர்கள். இருவரின் உழைப்பு இந்த ஆக்கத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஒவ்வொரு பாடல் தெரிவும் பழைய பாடல் பிரியர்களுக்கு பிரியாணி சாப்பிட மாதிரி சப்புக்கொட்டி ருசிக்கலாம். எல்லாப்பாடல்களூம் வித்தியாசமான தெரிவுகள் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை அன்புடம் தெரிவியுங்கள். இது போன்ற ஆக்கங்களை வழங்க கோவை நேயர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளார்கள். ஆக்கத்தை உருவாக்கிய திருமதி.விஜயலக்ஷ்மி சுந்தரராஜன், திரு.ஜெகதீஸ் அவர்களூக்கும் மற்றும் பாசப்பறவைகள் நேயர்களுக்கும் இணையதள ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களூம் நன்றிகளும்.

1.கானா இன்பம் கனிந்ததேனோ,சபாஷ் மீனா,டி.ஏ.மோதி,பி.சுசீலா
2.காதல் யாத்திரைக்கு,மனிதன் மாறாவில்லை,ஏ.எல்.ராகவன்,பி.சுசீலா
3.நிலவோடு வான்முகில்,ராஜராஜன்,சீர்காழி கோவிந்தராஜன்,ஏ.பி.கோமளா
4.மஞ்சள் வெயில் மாலையிலே,காவேரி,சி.எஸ்.ஜெயராமன்,எம்.எல்.வசந்தகுமாரி
5.மன்னிக்கவேண்டுகிறேன்,இருமலர்கள்,டி.எம்.சவுந்த்ரராஜன்,பி.சுசீலா
6.நான் பாடிய முதல் பாட்டு,ஐந்துலட்சம்,டி.எம்.எஸ்
7.அழகான பொருளே,தென்றல்வீசும்,பி.பி.ஸ்ரீரினிவாஸ்
8.ஆண்டவன் ஒரு நாள்,டெல்லி மாப்பிள்ளை,டி.எம்.சவுந்திரராஜன்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, April 9, 2009

3 ஜென்சியின் சிலிர்ப்பான குரல்ஜென்சியின் சிலிர்ப்பான குரல்
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் மூலம் அறிமுகமான திரைப்படப்பாடகி திருமதி. ஜென்சி அவர்களின் தகவல்கள் அடங்கிய ஒலித்தொகுப்பு பண்பலையில் ஒலிப்பரப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு தகவல்கள் பாடல்கள், பேட்டி என்று தேடி வழங்கிய எனது சேலம் நண்பர் திரு. காசக்காரணூர் ராஜ்குமார் அவரக்ளூக்கு என் நன்றி. ஜென்சி குரல் கிட்டத்தட்ட முற்றிலும் மற்ந்து விட்ட நிலையில் ரசிகர்கள் இருந்தாலும் அவர் குறைந்த பட்சம் 40 பாடல்களே பாடியிருந்தாலும் அனைத்து அற்புதம். பாடல்களில் எந்த இடத்திலும் சிறிதளவு கூட மலையாளம் கலக்காத பாஷையில் அவரின் இனிமையான் குரல் அருமை. மேலும் பாடல்கள், பேட்டி ஆகியவற்றை அற்புதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல்.நாராயாணா அவர்கள் இதற்கு மிகவும் உதவி செய்தவர் திரு.ரவிவர்மா அவர்கள் ஜென்சியின் சிலிர்ப்பான குரலை வழங்கியதற்க்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, April 7, 2009

2 ஏழிசைவேந்தனுடன் தேனிசைக் குயில்கள்பல அருமையான பாடல்கள் மெனக்கெட்டு தேடிப்பிடித்து விடலாம். அந்த பாடல்களில் உள்ள வரிகளையும் ஆழ்ந்து ரசித்து பாடல்கள் தொகுப்பு தருவது என்பது சாதாராணமான விசயம் இல்லை. அந்த அபார முயற்சி எடுத்து, திருப்பூர் திரு. அழகிரிசாமி அவர்களின் திறமை அவரின் எழுத்த்துக்களில் வெட்டவெளிச்சமாக பிரதிபலிக்க்கிறது. இதோ ஏழிசைவேந்தனுடன் தேனிசைக் குயில்கள் வழங்கிய பாடல் தொகுப்பு எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு ஏற்படுத்தாத பாடல் தெரிவுகள். தரவிற்க்கம் செய்து கேட்டு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள். நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர் வழக்கம் போல் நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் தான். அனுபவியுங்கள்.

1.ஆனந்தம் இன்று ஆரம்பம்,இதயவீணை,டி.எம்.எஸ்,ஜானகி
2.திங்கள் முகில் சூடும், அன்னை அபிராமி,டி.எம்.எஸ்,எம்.ஆர்.விஜயா
3.கண்ணில் தெரிகின்ற வாணம்,ரகசியபோலிஸ்115,டி.எ.எஸ்.எல்.ஆர்.ஈஸ்வரி
4.அலங்காரம் போதுமடி,மிஸ்டர்,சம்பத்,டி.எ.எஸ்.மனோரமா
5.கனவுகண்டேன் நான்,சிவகங்கை சீமை,டி.எம்.எஸ்,டி.எஸ்.பகவதி
6.பொங்கிவரும் புதுநிலவே, நெஞ்சில்குடியிருக்கும்,இரும்புத்திரை,டி.எம்.எஸ்,பி.லீலா
7.சித்திரமண்டபத்தில்,அன்பைத்தேடி,டி.எம்.எஸ்,ஜெ.ஜெயலலித்தா
8.பட்டினம் மெல்லிய,ஞாயிறும் திங்களும், டி.எம்.எஸ்,பி.சுசீலா
9.சதாரம்,டி.எம்.எஸ்,பானுமதி

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, April 2, 2009

1 அகரமுதல எழுத்தெல்லாம்அரசன் ஆப்டிக்கல்ஸ் நிறுவனர் திரு.விஜயகுமார் அவர்களின் அற்புதமான ஆக்கம். இந்த ஒலித்தொகுப்பில் அடங்கிய பாடல்களுக்கு அதிகபட்சம் தொலைபேசியிலேயே தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பழைய பாடல் ப்ரியர்கள் இந்த ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டு மகிழலாம். பாசப்பறவைக்ளான வானொலி நண்பர்களின் ஆக்கங்களூக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திரு. விஜயகுமார் அவர்களூக்கு நன்றி. அவரின் பதிவையே முதல் பதிவாக வழங்கி மகிழ்கிறேன். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள்.

1.அகரமுதல எழுத்தெல்லாம்,
2.என்னுயிர்தோழி கேளொரு சேதி
3.பருவம் எனது பாடல்
4.பாட்டு ஒன்று கேட்டேன்
5.தாழையாம் பூமுடிச்சு
6.மலரென்ற முகமென்ற

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email