Thursday, April 9, 2009

3 ஜென்சியின் சிலிர்ப்பான குரல்ஜென்சியின் சிலிர்ப்பான குரல்
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் மூலம் அறிமுகமான திரைப்படப்பாடகி திருமதி. ஜென்சி அவர்களின் தகவல்கள் அடங்கிய ஒலித்தொகுப்பு பண்பலையில் ஒலிப்பரப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு தகவல்கள் பாடல்கள், பேட்டி என்று தேடி வழங்கிய எனது சேலம் நண்பர் திரு. காசக்காரணூர் ராஜ்குமார் அவரக்ளூக்கு என் நன்றி. ஜென்சி குரல் கிட்டத்தட்ட முற்றிலும் மற்ந்து விட்ட நிலையில் ரசிகர்கள் இருந்தாலும் அவர் குறைந்த பட்சம் 40 பாடல்களே பாடியிருந்தாலும் அனைத்து அற்புதம். பாடல்களில் எந்த இடத்திலும் சிறிதளவு கூட மலையாளம் கலக்காத பாஷையில் அவரின் இனிமையான் குரல் அருமை. மேலும் பாடல்கள், பேட்டி ஆகியவற்றை அற்புதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல்.நாராயாணா அவர்கள் இதற்கு மிகவும் உதவி செய்தவர் திரு.ரவிவர்மா அவர்கள் ஜென்சியின் சிலிர்ப்பான குரலை வழங்கியதற்க்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

8 comments:

anbuchezhian said...

ஆம், இரவி அவர்களே!

ஜென்சியின் குரல் ஒரு வித்தியாசமானது.

புதிய வார்ப்புகள் படத்தில் அவர் பாடிய பாடல் இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

நன்றிகள் கோடி உங்களுக்கு!

Covai Ravee said...

வாங்க அன்புசெழியன் சார்..

தொடர்ந்து வருகை தந்து உற்சாகப்படுத்துகிறீர்கள். இன்னும் வருகிறது காத்திருங்கள். பின்னூட்டத்துக்கு நன்றி.

jagasubash said...

Jensi - Arpudhana Kural konda Padagi. Paadalgal Ennikkaiyil Kuraivu anal Ketka ketka thithikkum paadalgal. Nichayam Marakka Mudiyadha Kural. Covai Ravi, Salem Rajkumar, RGL & Ravivarma ena anavairukkum NANDRIGAL.
Jagadeesh
Coimbatore

Covai Ravee said...

வாங்க ஜெகதீஸ் சார்..

உங்களைப்போன்ற தீவிர வானொலி ப்ரியர்கள் இருக்கும் வரை எங்களூக்கு என்ன கவலை உங்க்ள் ஆக்கங்கள் தான் இங்கு இணைய தள நண்பர்களுக்கு உற்சாகமூட்டுகிறது இது போன்ற வித்தியாசமான ஆக்கங்களை வழங்குங்கள் என்று இணைய தள நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். வருகைக்கு நன்றி.

ரெண்டு said...

Thanks a ton Kovai Ravee. Jensi madam's voice is magnetic similar to Janaki amma voice. Iru paravaigal songs is my all time favorite. Thanks once again......

Instead of posting songs like other sites, pls post such useful interviews and compilations....

Thanks, Ram

Anonymous said...

நண்பரே
உங்களின் ஜென்சி பாடல் தொகுப்பில் ஜென்சியோட குரலும் சரி இசையும் சரியாக தெளிவாக இல்லை,
ஜென்சி எல்லா பாடல்களும் அனேகமாக இளையராஜாவின் இசையில் வந்தவை.அந்த பாடல்கள் எல்லாம் இசை ஒலிப்பதிவுகளில் சிறந்தவை ஆகையால் பாடல் தெளிவோடு கிடைத்தால் இன்னும் சுகமாக இருக்குமே

அன்பன்
ராஜேந்திரகுமார்

Covai Ravee said...

உயர்திரு ராஜ்குமார் அவர்களே..
வணக்கம் தங்களின் பின்னூட்டம் பாசப்பறவைகள் தளத்தில் பார்த்தேன். பின்னணி பாடகி திருமதி.ஜென்சி அவர்களின் ஒலிக்கோப்புக்கள் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மை தான் இந்த தளம் வானொலி நேயர்களின் ஆக்கங்களையும் வானொலி அறிவிப்பாளர்களின் நிகழ்ச்சிகளூம் பதிவேற்றுவதேயாகும். தாங்கள் சொன்னது போல் இணையதளத்தில் நல்ல தரமான ஒலிக்கோப்பு பதியவேண்டும் தான் நான் இல்லைஎன்று சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பூம் போது செல் பேசியில் பதிவு செய்வதால் ஒலிக்கோப்பி தரம் குறைவாக இருக்கும் பொருத்துகொள்க. வானொலி நேயர்களின், அறிவிப்பாளர்களின் மகிழ்ச்சிக்காக பதிவு செய்வது. சில அறிய தகவல்களூம் அறிதான பாடல்களும் நாம் கேட்க உதவுமே என்ற நோக்கம்தான் அது மட்டுமல்லாமல் தாங்கள் சொல்வது போல் பல பேர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இது நல்ல வாய்ப்பு. என்னால் முடிந்த வரை நல்ல ஒலித்தொகுப்பு பதிவேற்ற முயற்சி செய்கிறேன். ரொம்ப மோசமாக இருந்தால் நானே பதிய மாட்டேன். ஆக தங்களின் மேலான கருத்துக்கு நன்றி,. அடிக்கடி வாங்க உங்க உணர்வுகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. - கோவை ரவி

கும்க்கி said...

ஜென்சி குரல் கிட்டத்தட்ட முற்றிலும் மற்ந்து விட்ட நிலையில் ரசிகர்கள் இருந்தாலும்....

ஏங்க மறக்க முடியிற குரலா அது..?

அந்த குரலும் அது தரும் ரம்மியமான நினைவலைகளும் எத்தனை காலமானாலும் மறக்க முடியாதுங்க...

Follow by Email