Thursday, May 28, 2009

13 ஓராயிரம் பார்வையிலே..கோபிச்செட்டிபாளையம், திரு.தேங்காய் தாசன் 300வது வார இரவின் மடியில் வாழ்த்து செய்தியுடன் 302வது வார இரவின் மடியில் நிகழ்ச்சி துவங்குவதே அலாதியானது அதுவும் இந்த ஒலித்தொகுப்புக்கு ஆக்கத்தை அனுப்பிவைத்த அறிவிப்பாளர் அட்டகாசமாக சொல்வது போல் ஆலாந்துறை அண்ணதுரை அவர்களூக்கு நன்றி. இந்த ஒலிதொகுப்பில் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த பாடல் ஓராயிரம் பார்வையிலே ஆஹா ஆஹா அருமை அருமை.. எத்தனை தடவை கேட்டாலும் மீணடும் மீண்டும் கேட்க துடிக்கும் பாடல்.

மற்ற பாடல்கள் தெரிவிலும் திரு. அண்ணாதுரையின் ஆதங்கங்கள் தெள்ளதெளிவாக தெரிகின்றன. ஆக்கத்தை உருவாக்கிய திரு.பி.அண்ணாதுரை, பூளூவம்பட்டி, ஆலாந்துரை
அவர்களூக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்களும் சேரட்டும்..

அண்ணையைப்போல் ஒரு தெயவம் இல்லை >> பசுமை நிறைந்த நினவுகளே >> ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் >> மதுரையில் பறந்த மீன்கொடியை >> கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு >> மயக்கமா கலக்கமா மனதிலே >> ஒண்ணாஇருக்க கத்துக்கணும் >> நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு >> தூங்காதே தம்பி தூங்காதே.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் செய்ய / For Download

12 அன்பே..அன்பே என் ஆரமுதேகோவை,கணபதி நேயர் திரு.வி.எஸ்.பாலசந்தரன் 300வது வார இரவின் மடியில் வாழ்த்து செய்தியுடன் தாமதமாகதான் வானொலி நிலையத்துக்கு வந்தது என்று அறிவிப்பாளர் தெரிவித்தாலும். அவரின் வாழ்த்து அம்சமாக இருந்தது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் துவக்கத்திலே தொடங்கும் வாழ்த்துசெய்தி அதை தொடர்ந்து..

அறிதான பழைய பாடல்கள் சிலவற்றை நானே முதல் முறை கேட்கிறேன் அமிர்தமாக தித்திக்கிறது. பழைய பாடல் பிரியர்களுக்கு இது ஒரு இசைகுளியல் உருவாக்கியவர் திருமதி.ஜி.கமலம், பாளையக்கோட்டை, திருநெல்வேலி. அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்ப்பாக நன்றி. பதிவிறக்கம் செய்து கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிடுங்கள் இசைப்பிரியர்களே.

1.புத்தம் புது மேனி,சுபதினம்,டாக்டர்.பாலமுரளி கிருஷ்னா,பி.சுசிலா
2.அன்பே..அன்பே என் ஆரமுதே,கோமதியின் காதலன்,டாக்டர்.சீர்காழி கோவிந்தராஜன்,ஜிக்கி
3.இன்பம் யாவுமே துன்பமாகுமே, திருமணம்,டி.எம்.எஸ்
4.மகாராஜன் உலகையாளலாம்,
5.சின்ன சின்ன நடை நடந்து,காவேரியின் கணவன்,பி.சுசீலா
6.தென்றலே வாராயோ,வாழ்விலே ஒரு நாள்,டி.எம்.எஸ்,ஜீவரத்தினம்
7.சொன்னாலும் வெட்கமடா,முத்து மண்டபம்,டி.எம்.எஸ்
8.நான் செய்த பூஜாபலன்,ஏ.எம்.ராஜா,பி.லீலா

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள் / For Down Load

Tuesday, May 19, 2009

11 மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தததுமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததது

வென்னிலவை முதல் நாள் படைத்தான் >> பூ பூத்ததை யார் பார்த்தது >> செந்தாழம் பூவில் வந்தாடும் >> மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததது >> கலைவாணியோ ராணியோ அவள் யாரோ >> விழியிலே மலர்ந்தது மொழியிலே கலந்தது >> அந்தமானைப் பாருங்கள் >> அழகு ஆயிரம் உலகம் முழுவதும்.

Get this widget | Track details | eSnips Social DNA


இசையன்பர்களே மேலே உள்ள வரிகள் சந்தேகமே இல்லாமல் மத்தியகால பாடல்களின் பாடல் பல்லவிகள் தான்.இதில் என்ன விஷேசம் என்றால் வழக்கமான ஒரு வசீகரமான சொல் விளையாட்டு உள்ளது. இந்த ஒலித்தொகுப்பு கேட்டு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது மிகவும் ஸ்வாரசியமான விளையாட்டு தொகுப்பு. அது என்ன சொல் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா வேறு வழியில்லை இந்த ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டே ஆகவேண்டும். அது என்ன சொல் என்ற ஆர்வக்கோளாறினால் ஒலித்தொகுப்பின் இறுதியில் சென்று கேட்டீர்கள் என்றால் ஒரு ஸ்வாரசியம் போய்விடும் பரவாயில்லையா?

இந்த விளையாட்டில் எத்தனை பேர் கொண்டு குறுஞ்செய்தி அனுப்பி கலந்து கொண்டு திக்கு முக்காடுகிறார்கள் என்று பாருங்கள் (என்னையும் சேர்த்து தான்) இறுதியில் வெற்றி வாகை சூடிய நண்பர் ஏற்காடு மாவட்டதில் வசித்து வரும் திரு.ரவிகுமார் அவர்கள். திரு ரவிக்குமார் அவர்களூக்கு பாசப்பறவைகளின் அன்பான வாழ்த்துக்கள். இந்த ஒலித்தொகுப்பை வழக்கம் அட்டகாசமாக அழகாக தொகுத்து வழங்கிய பாசப்பறவைகளின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களுக்கு நன்றி.. நன்றி..நன்றி.

Thursday, May 14, 2009

10 இரவின் மடியில் 300ஆவது நிகழ்ச்சிஇரவின் மடியில் 300ஆவது வாழ்த்து நிகழ்ச்சி ஆமாம் அன்பர்களே சூரியன் பண்பலையில் 300 வாரங்களாக சனிக்கிழமை இரவு நேரத்தில் அரசன் ஆப்டிக்கல்ஸ் நிறுவனத்தார் ஒலிப்பரப்பி வரும் இரவின் மடியில் 300ஆவது ஒலித்தொகுப்பு தான் இவை. இந்த நிகழ்ச்சியை முழுவதும் நேயர்களூக்காகவே வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் வாழ்த்து மழையில் நனையும் சூரியன் பண்பலைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பாசப்பறவைகளான இந்த தளத்தின் நேயர்கள் எல்லோரும் தங்கள் வாழ்த்துக்களை உள்ளத்தின் உணர்வுகளை மிகவும் அற்புதமாக மிகவும் உணர்ச்சிவயபட்டு வாழ்த்தியிருக்கிறார்கள். எல்லோரின் வாழ்த்துக்களும் அருமை அருமை என் மனதை கவர்ந்த நேயர்களின் வாழ்த்துக்களை இங்கே நானும் வழங்கிய்ருக்கிறேன். எல்லோரின் வாழ்த்துக்களும் இங்கே வழங்கலாம் தான் தட்டச்சு செய்ய நேரமில்லை யாதலாலும் மேலும் அவர்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கள் ஒலி வடிவமாக கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ற என்னத்தினாலும். சிலவற்றை மட்டும் வழங்கியுள்ளேன். வாழ்த்துக்களை அனுப்பிய அனைத்து நேயர்களூக்கும் என் வாழ்த்துக்கள். இது எப்படி இருக்கு? வாழ்த்துக்களூக்கே வாழ்த்துக்கள்...

Get this widget | Track details | eSnips Social DNA


300ஆவது பதிவு இரவின் மடியில் வாழ்த்து மடல்

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
பேதமுடன் சமூகத்தில் வாழும் மனிதர்களை
இசை உணர்வால் சமரசம் நெய்தலை காட்டி
ஒருங்கிணைக்கும் உறவு பாலம்
இரவின் மடியில் ஓர் இசைக்குடும்பம்
ஆயிரம் உறவுகளில் பெருமைகள் இல்லை
இசைக்குடும்பத்தில் உறுப்பினன் என்பதில் ஒருமித்தபெருமிதம்
காற்றலையில் உருவாக்கி தந்த பந்தம்
அது என்றும் தொட்டு தொடரும் ஆயுள் பரி எந்தம்

- திருப்பூர், தண்ணீர்பந்தல், அகிலா விஜயகுமார்

வானம் முழுவதும் தளர்ச்சி தரும் வாழ்க்கையில்
வார முடிவில் உற்சாகம் தரும் உன்னத நிகழ்ச்சி
இந்த இரவின் மடியில்.

கூட்டுப்பறவைகளின் பாட்டுக்குயில்களாக்கி
மாற்றி காட்ட இடம் தந்த
விரிந்த வானம் இந்த இரவின் மடியில்.

வருவாய் நேசித்து வாழ்வு தொலைக்கும் பொழுதுகளில்
இனிமை மாறாத பாடல்களால் இதம் அளிக்கும்
பொழுதுகள் இந்த இரவின் மடியில்.

இது பழைய பாடல்களின் களம்
ரசனையை மேம்படுத்து தளம்
மெட்டுக்கு பாடல் பலம்
பாடலுக்கு இனிய குரல் பலம்
இனிய குரலுக்கு மெட்டு பலம்
பழைய பாடலுக்கு இளமை மாறாத இனிமை பலம்
அந்த பழைய பாடல் பிரியர்களுக்கு
இந்த இரவின் மடியில் பலம்

- சுந்தராபுரம், ஜெகதீசன்

300ஆவது இரவின் மடியில் நிகழ்ச்சி
இந்த நெடிய பயணத்தில் 49ஆவது
மணிதுளியில் உன்னோடு இணைந்தேன்
விதி வசத்தால் என்னை விட்டு பிரிந்து
நிற்கும் என் மகளூக்காக பாடல் ஒன்றை
கேட்டிருந்தேன் அதை படித்த அறிவிப்பாளர்
ஆண்டவனை நம்புங்கள் விதி வசத்தால்
பிரிந்த மகளை நிச்சயம் இணைப்பான் என்று
ஆறுதல் கூறினார். அவரின் வாக்கு அந்த
நிகழ்ச்சியின் கேட்ட உங்களின் வாழ்த்து
அந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டியது எனக்கு
ஆயிரக்கணக்கான் கருத்துக்கள் தன் வசம் பொங்கும்
அனுபவங்கள் உணர்ச்சி பூர்வமான என்னங்கள்
உணர்ச்சிமிகு எழுத்துக்கள் அத்தனையும் விளைவது
இந்த இரவின் மடியில் நிகழ்ச்சியில் மட்டுமே

- சேலம், காசக்காரணூர் ராஜ்குமார்

முத்தான பாடல்களின் அணிவகுப்பு
முதன்மையான ஒலித்தொகுப்பு
முண்டியடித்து முயற்சிக்கும் முகவர்களின்
முடிவில்லா ரசனை இசைத்தேடல்
முந்நூறாவது வார இரவின் மடியில்
தேசமெங்கும் எதிர் ஒலிக்கும்
பிரபஞ்சம் யாவும் பிரதிபலிக்கும்
பரிதவிக்கும் பாசப்பறவைகளின்
பிரதிபலன் பாராத பாமாலை கீதங்கள்
தொடரட்டும் என்றென்றும்
இசை தெரிக்கட்டும் எத்திக்கும்

-- கோவை ரவி

அன்பர்களே, ஒலித்தொகுப்பில் ஒவ்வொரு நேயர்களின் வாழ்த்துக்களுக்கும் அறிவிப்பாளர் அந்தந்த நேயரின் மனஓட்டத்தை உணர்ந்து அவர்களுக்கு பிடித்த பாடல்களை ஒலிபரப்பி தன் நன்றியை தெரிவித்தது தான் இந்த ஒலித்தொகுப்பின் உச்சகட்ட சிறப்பம்சம். அடடே என்று கேட்க ஆர்வமாக இருக்கிறதல்லவா? இணையதள நண்பர்களான உங்கள் வாழ்த்துக்களையும் இங்கே இதிலே தாருங்களேன். அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.நாராயானா அகமகிழ்வார்.

Thursday, May 7, 2009

9 ராகமும் கானமும்அன்பு உள்ளங்களே ராகமும் கானமும் என்ற தலைப்பில் ஒரு அற்புதமான ஒலித்தொகுப்பு இது. பாடல்கள் பட்டியலை பாருங்கள் எல்லாமே மெகா ஹிட் பாடல்கள் தான் சந்தேகமே இல்லை. இந்த ஒலித்தொகுப்பில் அதிகபட்சம் தாஸண்ணா பாடல்கள் தான் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஒரு விஷேசமான அற்புதமான தகவல்களும் உள்ளது அவை என்ன? கேட்டுதான் பாருங்களேன் கேட்டுவிட்டு உங்கள் அற்புதாமான உணர்வுகளை ஒரு வரியில் எழுதிடுங்கள் உருவாக்கியவர் உற்சாகமாகிடுவார்.

இந்த இனிமையான ஒலித்தொகுப்பை உருவாக்கி வழங்கியவர் கோவை நேயர் திரு. ஜெயப்ரகாஷ் நல்ல தொரு தகவல்கள் தேடி பிடித்து நமக்காக வழங்கியுள்ளார். அவருக்கு பாசப்பறவைகள் இசையன்பர்கள் சார்பாகாக வாழ்த்துக்கள். இந்த ஒலிக்கோப்பை ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நீரோடை போன்று தொகுத்து வழங்கிய எங்கள் சின்னதம்பி பெரியதம்பி புகழ் திரு.கோபாலகிருஷ்ணன் சாருக்கு வாழ்த்துக்களை நன்றியுடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

1.பூங்கதவே தாழ்திறவாய்
2.ஆகாய வெண்ணிலாவே
3.காற்றில் எந்தன் கீதம்
4.ஆடல் கலையே தேவன்
5.ஏரிககரை பூங்காற்றே
6.பழமுதிர்சோலை எனக்காகதான்
7.தம்தனம் னனம் தாளம் வரும்
8.அம்மா என்று அழைக்காத
9.இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே

இந்த இனிமையான ஒலித்தொப்பு உருவாக்கியவர் அவருக்கு வாழ்த்துக்கள்.

திரு.ஜெயப்ரகாஷ்
103,வைசியாள் வீதி
கோவை -1

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email