Thursday, May 14, 2009

10 இரவின் மடியில் 300ஆவது நிகழ்ச்சிஇரவின் மடியில் 300ஆவது வாழ்த்து நிகழ்ச்சி ஆமாம் அன்பர்களே சூரியன் பண்பலையில் 300 வாரங்களாக சனிக்கிழமை இரவு நேரத்தில் அரசன் ஆப்டிக்கல்ஸ் நிறுவனத்தார் ஒலிப்பரப்பி வரும் இரவின் மடியில் 300ஆவது ஒலித்தொகுப்பு தான் இவை. இந்த நிகழ்ச்சியை முழுவதும் நேயர்களூக்காகவே வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் வாழ்த்து மழையில் நனையும் சூரியன் பண்பலைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பாசப்பறவைகளான இந்த தளத்தின் நேயர்கள் எல்லோரும் தங்கள் வாழ்த்துக்களை உள்ளத்தின் உணர்வுகளை மிகவும் அற்புதமாக மிகவும் உணர்ச்சிவயபட்டு வாழ்த்தியிருக்கிறார்கள். எல்லோரின் வாழ்த்துக்களும் அருமை அருமை என் மனதை கவர்ந்த நேயர்களின் வாழ்த்துக்களை இங்கே நானும் வழங்கிய்ருக்கிறேன். எல்லோரின் வாழ்த்துக்களும் இங்கே வழங்கலாம் தான் தட்டச்சு செய்ய நேரமில்லை யாதலாலும் மேலும் அவர்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கள் ஒலி வடிவமாக கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ற என்னத்தினாலும். சிலவற்றை மட்டும் வழங்கியுள்ளேன். வாழ்த்துக்களை அனுப்பிய அனைத்து நேயர்களூக்கும் என் வாழ்த்துக்கள். இது எப்படி இருக்கு? வாழ்த்துக்களூக்கே வாழ்த்துக்கள்...

Get this widget | Track details | eSnips Social DNA


300ஆவது பதிவு இரவின் மடியில் வாழ்த்து மடல்

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
பேதமுடன் சமூகத்தில் வாழும் மனிதர்களை
இசை உணர்வால் சமரசம் நெய்தலை காட்டி
ஒருங்கிணைக்கும் உறவு பாலம்
இரவின் மடியில் ஓர் இசைக்குடும்பம்
ஆயிரம் உறவுகளில் பெருமைகள் இல்லை
இசைக்குடும்பத்தில் உறுப்பினன் என்பதில் ஒருமித்தபெருமிதம்
காற்றலையில் உருவாக்கி தந்த பந்தம்
அது என்றும் தொட்டு தொடரும் ஆயுள் பரி எந்தம்

- திருப்பூர், தண்ணீர்பந்தல், அகிலா விஜயகுமார்

வானம் முழுவதும் தளர்ச்சி தரும் வாழ்க்கையில்
வார முடிவில் உற்சாகம் தரும் உன்னத நிகழ்ச்சி
இந்த இரவின் மடியில்.

கூட்டுப்பறவைகளின் பாட்டுக்குயில்களாக்கி
மாற்றி காட்ட இடம் தந்த
விரிந்த வானம் இந்த இரவின் மடியில்.

வருவாய் நேசித்து வாழ்வு தொலைக்கும் பொழுதுகளில்
இனிமை மாறாத பாடல்களால் இதம் அளிக்கும்
பொழுதுகள் இந்த இரவின் மடியில்.

இது பழைய பாடல்களின் களம்
ரசனையை மேம்படுத்து தளம்
மெட்டுக்கு பாடல் பலம்
பாடலுக்கு இனிய குரல் பலம்
இனிய குரலுக்கு மெட்டு பலம்
பழைய பாடலுக்கு இளமை மாறாத இனிமை பலம்
அந்த பழைய பாடல் பிரியர்களுக்கு
இந்த இரவின் மடியில் பலம்

- சுந்தராபுரம், ஜெகதீசன்

300ஆவது இரவின் மடியில் நிகழ்ச்சி
இந்த நெடிய பயணத்தில் 49ஆவது
மணிதுளியில் உன்னோடு இணைந்தேன்
விதி வசத்தால் என்னை விட்டு பிரிந்து
நிற்கும் என் மகளூக்காக பாடல் ஒன்றை
கேட்டிருந்தேன் அதை படித்த அறிவிப்பாளர்
ஆண்டவனை நம்புங்கள் விதி வசத்தால்
பிரிந்த மகளை நிச்சயம் இணைப்பான் என்று
ஆறுதல் கூறினார். அவரின் வாக்கு அந்த
நிகழ்ச்சியின் கேட்ட உங்களின் வாழ்த்து
அந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டியது எனக்கு
ஆயிரக்கணக்கான் கருத்துக்கள் தன் வசம் பொங்கும்
அனுபவங்கள் உணர்ச்சி பூர்வமான என்னங்கள்
உணர்ச்சிமிகு எழுத்துக்கள் அத்தனையும் விளைவது
இந்த இரவின் மடியில் நிகழ்ச்சியில் மட்டுமே

- சேலம், காசக்காரணூர் ராஜ்குமார்

முத்தான பாடல்களின் அணிவகுப்பு
முதன்மையான ஒலித்தொகுப்பு
முண்டியடித்து முயற்சிக்கும் முகவர்களின்
முடிவில்லா ரசனை இசைத்தேடல்
முந்நூறாவது வார இரவின் மடியில்
தேசமெங்கும் எதிர் ஒலிக்கும்
பிரபஞ்சம் யாவும் பிரதிபலிக்கும்
பரிதவிக்கும் பாசப்பறவைகளின்
பிரதிபலன் பாராத பாமாலை கீதங்கள்
தொடரட்டும் என்றென்றும்
இசை தெரிக்கட்டும் எத்திக்கும்

-- கோவை ரவி

அன்பர்களே, ஒலித்தொகுப்பில் ஒவ்வொரு நேயர்களின் வாழ்த்துக்களுக்கும் அறிவிப்பாளர் அந்தந்த நேயரின் மனஓட்டத்தை உணர்ந்து அவர்களுக்கு பிடித்த பாடல்களை ஒலிபரப்பி தன் நன்றியை தெரிவித்தது தான் இந்த ஒலித்தொகுப்பின் உச்சகட்ட சிறப்பம்சம். அடடே என்று கேட்க ஆர்வமாக இருக்கிறதல்லவா? இணையதள நண்பர்களான உங்கள் வாழ்த்துக்களையும் இங்கே இதிலே தாருங்களேன். அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.நாராயானா அகமகிழ்வார்.

8 comments:

rahini said...

வாழ்த்துக்கள்
உங்கள் இசைச்சேவை தொடரட்டும்

jagasubash said...

இனிய பாடல்கள் தந்து நிகழ்ச்சியை இனிமை ஆக்கிய பண்பலை பாசப்பறவைகளுக்கும், தனது வளமான குரலால் நேயர் நெஞ்சங்களை வசப்படுத்தும் இனிய அறிவிப்பாளர் ஆர் ஜி எல் அவர்களுக்கும் அரசன் ஆப்டிகல்சிற்கும் மற்றும் சூரிய பண்பலைக்கும் நன்றிகள்! பழைய பாடல்கள் தந்த நமது மூத்த இசை கலைஞர்கள் கவிஞர்கள் மற்றும் திரை கலைஞர்களுக்கு நன்றிகள் வணக்கங்கள்!!!

ஜெகதீஷ்
சுந்தராபுரம்
கோவை - 24

jagasubash said...
This comment has been removed by a blog administrator.
Covai Ravee said...

நன்றி நண்பரே.... உங்கள் இரவின் மடியில் வாழ்த்து உண்மையில் அருமை.... சொல்லி
வைத்தார் போல ரத்தின சுருக்கமான வரிகள்... நன்றி

ஆர்.ஜி.எல்.நாராயானா

anbuchezhian said...

எங்களை தன் வசியக்குரலால் மயக்கி வைத்திருக்கும் ஆர்.ஜி.எல்.நாராயணா அவர்களே! உங்களுக்கு என் கோடான கோடி நன்றிகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.

நீங்கள் புதிய அப்துல் ஹமீது. அவர் வழி சென்று மென்மேலும் சாதிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் கோவை இரவி அவர்களுக்கு என்றென்றும் நன்றி!

அன்புச்செழியன்

Covai Ravee said...

//எங்களை தன் வசியக்குரலால் மயக்கி வைத்திருக்கும் ஆர்.ஜி.எல்.நாராயணா அவர்களே! உங்களுக்கு என் கோடான கோடி நன்றிகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.
நீங்கள் புதிய அப்துல் ஹமீது. அவர் வழி சென்று மென்மேலும் சாதிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.//

அன்புசெழியன் சார் மிகவும் சரியாக சொன்னீர்கள் அப்துல்ஹமீது சாரின் குரலில் மயங்காதவர்கள் உண்டோ? அவரின் சாயல் இவருக்கும் உண்டு அவரிடமும் ஒரு பேட்டி எடுத்து ஒரு நிகழ்ச்சி தந்துள்ளார். இதே தளத்தில் நேயர்களின் முந்தைய ஆக்கங்கள் 2 உள்ளன அதனுள் சென்று பார்க்கவும். அந்த நிகழ்ச்சியும் மகிழ்ச்சியை தரக்கூடியது. மறுமொழி வழங்கி உற்சாகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க இன்னும் ஏகப்பட்டது உள்ளது. லண்டன் வானொலி நிகழ்ச்சிகளூம் இங்கே வரும் காத்திருப்புக்கள் என்றும் வீன்போவதில்லை.

சென்ஷி said...

அருமையான தொகுப்பு ரவிஜி.. இரவின் மடியில் என்ற சொல்லிற்கு ஏற்றாற் போல இரவில் அமர்ந்து பொறுமையாய் கேட்க வைத்த உங்கள் அன்பிற்கு நன்றிகள் பலப்பல..

தொகுப்பாளரின் குரல் வசீகரிக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்!

Covai Ravee said...

//தொகுப்பாளரின் குரல் வசீகரிக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்!//

வாங்க சென்ஷி அவர்களே இது போல் பல தொகுப்புக்கள் இந்த தளத்தில் இருக்கின்றன நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழுங்கள். மேலும், தமிழ்மண நட்சத்திர பதிவாளாராக உள்ளீர்கள் பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

Follow by Email