Monday, June 29, 2009

17 நதியினில் வெள்ளம்இந்த வார இரவின் மடியில் ஆக்கத்தை உருவாக்கியவர் திருமதி.கே.எஸ்.வளர்மதி, நாமக்கல் மாவட்டம். வளர்மதி அவர்களின் பாடல் தெரிவுகள் அபாரம் அதுவும் ஒவ்வொரு பாடலை ரசித்த விதமும் அதனை பாங்குடன் தொகுத்து வழங்கிய நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல்.என் சாரும் அசத்திவிட்டார்கள். பொறுமையுடன் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. பாசப்பறவைகள் இணைய தள இசையன்பர்களுக்காக வழங்கிய திருமதி வளர்மதி அவர்களூக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


1.மண்ணுக்கு மரம் பாரமா,தைபிறந்தால் வழி பிறக்கும், எம்.எஸ்.ராஜேஸ்வரி
2.சின்ன சின்ன கண்ணிலே,தேன்நிலவு,ஏ.எம்.ராஜா,பி.சுசீலா
3.கொடி அசைந்ததும் காற்று வந்ததா,டி.எம்.எஸ்,பி.சுசீலா
4.நான் உன்னை அழைக்கவில்லை,எங்கிருந்தோ வந்தாள்,டி.எம்.எஸ்
5.நதியினில் வெள்ளம்,தேனும் பாலும்,டி.எம்.எஸ்
6.கடவுள் இருக்கின்றார்,ஆனந்த ஜோதி,டி.எம்.எஸ்
7.ஏதோ மனிதன் பிறந்து விட்டான்,பி.பி.ஸ்ரீனிவாஸ்
8.யாரை எங்கே வைப்பது,டி.எம்.எஸ்
9.எதற்கும் ஒரு காலம் உண்டு,எம்.எஸ்.விஸ்வநாதன்

இங்கே பதிவிறக்கம் செய்யலாம்

Tuesday, June 16, 2009

16 இறைவன் என்றொரு கவிஞன்.. கருத்துக்களஞ்சியம்இறைவன் என்றொரு கவிஞன்.. கருத்துக்களஞ்சியம்

இசையன்பர்களே இந்த ஒலித்தொகுப்பு ஒரு வித்தியாசமான அனுபவத்தை உருவாக்கும் ஒலித்தொகுப்பு. இந்த நவீனத்துவ உலகில் இனிவரும் காலங்களில் தெய்வ பக்தி கூடுமா, குறையுமா? என்ற அற்புதமான யோசிக்கவைக்கும் ஒரு கேள்வியை வானொலி நேயர்கள் முன் வைத்து இரண்டு விதமான பதில்களை எதிர்நோக்கி அவர்களின் கருத்துக்களை பெற்று அழகாக தொகுத்து வழங்கியுள்ளார் பாசப்பறவைகளின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திர்.ஆர்.ஜி.எல்.நாராயாணா அவர்கள். அவர் கூற்று படியே தெய்வபக்தி கூடுமா, குறையுமா? என்பதை பார்க்கும் முன்.

உலகில் வாழும் அனைத்தும் உயிர்களும் இசையில் மயங்காமல் இருப்பதில்லை. மனிதன் மட்டுமல்ல வாயில்லா ஜீவராசிகளூம் தன் செவிகள் மூலம் இனிமையான இசையை கேட்டு ரசிக்கின்றன. இதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் மனிதன் தன் ஆறாவது அறிவால் மிகவும் அனுபவித்து இசையை ரசிக்கின்றான். என்ன சார் இது அறிவிப்பாளர் என்னமோ கேள்வி கேட்டால் நீங்க இசையை பற்றி சொல்கின்றீர்களே என்று முணுமுணுப்பது கேட்கிறது. அவசரப்படாதீங்க சார். என் ஆதர்ஸ பாடகர் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பலதடவை நேரிலும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் சொன்னவை தான் இது. ஒரு உண்மையான கவிஞனையும், கலைஞனையும் இசை இறைவன் அருகிலே கொண்டு செல்கிறது என்பார். இது முற்றிலும் உண்மை. சரியாக சொல்லவேண்டுமென்றால் இசை எல்லா உயிர்களையும் இயக்கி வைக்கிறது உயிரோடு கலந்தது. ஆகையால் சில சமயங்களில் இறைவனையே கவிஞன், கலைஞன் என்றும் சொல்கிறார்கள். சரிதானே? ஆகமொத்தம் நம் வாழ்நாள் முழுவதும் இசையை தொடர்ந்து ரசிப்பதால் நாம் இறைவனை மானசீகமாக நமக்கே தெரியாமல் வேண்டுகிறோம் உண்மைதானே. இருந்தாலும் நம் வானொலி நேயர்களின் கருத்துக்களையும் கேட்பதால் நாம் குறைந்துவிட மாட்டோம் அவர்களின் மனதில் தோன்றும் கருத்துக்களையும் கேட்போமே. இனி காலங்களில் தெய்வ பக்தி கூடுமா? குறையுமா? இந்த ஒலித்தொகுப்பை நீங்களும் பதிவிறக்கம் செய்து கேட்டுவிட்டு உங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே?

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்க யோசனை சொன்னவர் யாராக இருந்தாலும் அவருக்கும், நேயர்களின் கருத்துக்களை பதிவிற்காக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.ரவிவர்மா அவர்களூக்கும், தன் இனிமையான குரலில் எல்லோரையும் மயங்கவைத்து அற்புதமாக தொகுத்து வழங்கிய டிஜ்ஜிடல் குரலோன் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மிநாராயாண அவர்களூக்கும் மேலும் இந்த கருத்துக்களஞ்சியத்துக்கு தங்களின் மேலான கருத்துக்களை எழுதி அனுப்பிய அனைத்து அன்பர்களூக்கும் பாசப்பறவைகள் தளத்தின் சார்பாக நன்றி.. நன்றி.. நன்றி..

இங்கே பதிவிறக்கம் செய்து கேளுங்கள்

Thursday, June 11, 2009

15 அன்று ஊமைப்பெண்ணல்லோ

Image and video hosting by TinyPic

வழக்கம் போல் எப்போதும் விலாசம் குறிப்பிடாத திருமதி.ஜோதி அவர்களீன் 300வது ஆக்கத்தின் வாழ்த்துக்களூடன் துவங்குகிறது. 304வது ஆக்கத்தை உருவாக்கியவர் கோவை,திருமதி கவிதா செல்வராஜ் அவர்களின் இந்த ஒலித்தொகுப்பும் அற்புதமான ரசணை மிக்கது. இவரின் பாடல் தெரிவுன்கள் இரவின் மடியில் நிகழ்ச்சியில் அதிகம் ஒலிப்பரப்பபட்டவை தான். இருந்தாலும் ஒவ்வொரு பாடலின் விளக்கமும் எப்படி ஒவ்வொரு நேயருக்கும் வாழ்க்கையுடன் ஒத்துப்போகிறது என்று கேளூங்கள்.

1.அன்று ஊமைப்பெண்ணல்லோ >> 2.காதல் சிறகை காற்றில் >> 3.இன்றென்ன மதுள்ளமே >> 4.அடிக்கற கைதான் அணைக்கும் >> 5.தன்னைத்தானே நம்பாதது சந்தேகம் >> 6.உறவு என்றொரு சொல்லிருந்தால் >> 7.மனம் ஒரு குரங்கு >> 8.பணம் பந்தியிலே

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, June 5, 2009

14 கோடை மறைந்தால் இன்பம் வரும்


இந்த் ஒலித்தொகுப்பில் உள்ள பழைய பாடல்கள் அதிகம் இரவின் மடியில் ஒலிப்பரப்பியிருந்தாலும் ஆக்கத்தை உருவாக்கியவரின் ரசனை மேலோங்கி உள்ளது. ஒரே விதமான பாடல்கள் பல கோணங்களில் இங்கே உலா வருவது அதிசயம் தானே. இதோ திருமதி கௌசல்யா எழிழரசன் அவர்களின் 300வது வார வாழ்த்து மடல் துவக்கத்திலேயே சக்கைப்போடு போடுகிறது. கேட்டு மகிழுங்கள்.

இனிமையான ஆக்கத்தை உருவாக்கிய விஜயலக்‌ஷ்மி விஜயகுமார் அவர்களூக்கு வாழ்த்துக்க்ள் மற்றும் பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக ந்ன்றி.

திருமதி.விஜயலக்‌ஷிமி விஜயகுமார் 303 வார நேயர், கோவை

பாடல் தெரிவுகள் பட்டியல்.

1.சித்திரம் பேசுதடி,சபாஷ் மீனா
2.தன்னிலவு தேனிறைக்க,படித்தால் மட்டும் போதுமா,பி.சுசீலா
3.முல்லைமலர் மேலே,உத்தமபுத்திரன்,டிஎம்,எஸ்,பி.சுசீலா
4.மாறாத சோகம் தானோ,கண்டசாலா,பி.சுசீலா
5.கோடை மறைந்தால் இன்பம் வரும்,மஞ்சள்மகிமை,கண்டசாலா,பி.சுசீலா
6.அன்பாலே தேடிய என் செல்வம்,தெய்வபிறவி,சி.எஸ்,ஜெயராமன்,எஸ்.ஜானகி
7.கொஞ்சிவரும் நெஞ்சில்,எல்லாம் உனக்காக,பி.சுசீலா
8.நீரோடும் வைகையிலே,

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email