Tuesday, July 28, 2009

25 நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...


நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...

இந்த பதிவின் தலைப்பு ஒரு பாடலில் வரும் அருமையான் வரி எந்த பாடல் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா அன்பர்களே. இல்லையென்றால் ஒலிக்கோப்பை துவக்கத்திலேயே கேட்டு விடுங்கள். இந்த வரிக்கு முழுவதும் சம்பந்தப்பட்டது தான் இந்த பதிவும் பாடல் ஒலித்தொகுப்பு என்னவென்று ஆவலாக உள்ளது தானே?

பதிவிறக்கம் இங்கே

இதுமட்டுமல்லாமல், இந்த சிறப்பு ஒலித்தொகுப்பில் ஒரு கேள்வி டாக்டர் சீர்காழ் கோவிந்தராஜன் அவர்கள இளையராஜா அவர்களின் இசையில் பாடிய முதல் பாடல் எது? உங்களூக்கு தெரிந்தாலும் சொல்லலாம். ஒலித்தொகுப்பு ஸ்வாரசியமானது முழுவதும் கேட்டு விட்டு சொல்லுங்கள். சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற எறும்பின் தகவகளுடன் இடையிடையே கீழ்கண்ட பாடல்கள் அனைத்துமே அருமை இனிமை.

அகரம் இப்ப சிகரம் ஆச்சு >> கடவுள் அமைத்து வைத்த மேடை >> விழியில் என் விழியில் ஒரு >> மெட்டி ஒலி காற்றோடு >> ஆழக்கடலில் தேடிய முத்து >> அழகே அழகே தேவதை >> மாம்பூவே சிறுமைனாவே >> உறவுகள் தொடர்கதை உணர்வுகள் >> வசந்தம் பாடி வர வைகை ஓடி வர.

ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா, கோவை

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, July 27, 2009

24 ஔவையாரின் ஆத்திசூடி
விநாயகர் கடவுள், ஔவையார் (எனக்கு மட்டுமல்ல, ஏன் எல்லோருக்கும் இவரை தான் ஔவையாராக தெரியும்)

Get this widget | Track details | eSnips Social DNA


ஔவையாரின் ஆத்திசூடி

இந்த பதிவின் தலைப்பை பார்த்து விட்டு ஹைதர் காலத்து பாடல் தொகுப்பாக இருக்குமோ என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள் இசைப்பிரியர்களே. இந்த பதிவு எழுதும் போது தான் பண்பலை நிலையத்தார் இனிய இரவு நிகழ்ச்சிகளில் ஏன் அதிகம் போடுவதில்லை என்று மிகவும் வருந்தினேன். இந்த ஒலித்தொகுப்பில் எனக்கு பிடித்த பாடல்கள் தான் இதில் சந்தேகமிலை ஏன் அனைவருக்கும் பிடிக்கும். இருந்தாலும், அநேக நேயர்களின் விருப்பமும் பழைய பாடல்கள் ஒலிப்பரப்ப மாட்டார்களே என்று ரொம்பத்தான் ஏங்கியிருக்கிறார்கள். அது கிடக்கட்டும் சார் விசயத்துக்கு வருவோம். ஔவையாரை பற்றி நாம் பள்ளிப்பருவத்தில் தான் படித்து தெரிந்து இருக்கிறோம். அதுவும் ஆத்திசூடி மூலமாக மட்டும். இதோ இந்த தொகுப்பில் ஔவையாரைப்பற்றி எவ்வளவு தகவல்கள் அறிவிப்பாளர் எந்த தொகுப்பில் இருந்து எடுத்தாரோ தெரியவில்லை எனக்கு ஆச்சரியம். நிச்சயம் ஏதோ ஒரு புத்தகத்தில் இருக்கும் அது உண்மை. தகவல்கள் ஏராளம் ஏராளம். இந்த காலத்து நேயர்களூக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது. இணையத்தில் தகவல் இருக்கலாம் அநேகம்பேர் படித்தும் இருக்கலாம். இருந்தாலும் பொட்டியை தட்டி கொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களூக்காக இதோ இந்த ஒலித்தொகுப்பு.
தகவல்களூக்கு பாடல்கள் ஒத்து போகாததாக இருந்தாலும் இதிலும் ஒரு இனிமை இருக்கிறது. சரிதானே அன்பர்களே.

அழகாக தொகுத்து வழங்கியவர் எனதருமை அறிவிப்பாளர் திருமதி.ஆர்.ஜி.எல்.நாராயான அவர்களூக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

1.ஜெர்மனியின் செந்தேன் மலரே >> 2.கண்மணியே காதல் என்பது >> 3.அள்ளித்தந்த பூமி >> 4.ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு >> 5.ஆகாய கங்கை பூந்தேன் மலர 6.செந்தூரப்பூவே செந்தூரப்பூவே >> 7.அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடிடும் >> 8.அடி ஆடிடும் பூங்கொடியே

பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்

23 தூங்காதே தம்பி தூங்காதேஇரவின் மடியில் 310 வாரம் ஆக்கத்தை உருவாக்கியவர் திருமதி. கல்யாணி ராம்நாத் அவர்களின் அழகான வரிகளில் இனிமையான பழைய பாடல்களின் ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் வேறுயாராக இருக்க முடியும்? அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் தான். கேட்டு மகிழுங்கள்.

310 வது இரவின் மடியில் ஒலித்தொகுப்பு வழங்கியவர் திருமதி.கல்யாணி ராம்நாத் பதிவிறக்கம் இங்கே

1.தமிழுக்கு அமுதென்று பெயர்.பஞ்சவர்ணக்கிளி,பி.சுசீலா
2.வாடிக்கை மறந்ததோனோ,கல்யாணப்பரிசு,ஏ.எம்.ராஜா,பி.சுசீலா
3.சின்னப்பயலே சின்னப்பயலே,அரசிளங்குமரி,டி.எம்.எஸ்
4.காகிதத்தில் கப்பல் செய்து,அன்புக்கரங்கள்,டி.எம்.எஸ்
5.தூங்காதே தம்பி தூங்காதே,நாடோடி மன்னன்,டி.எம்.எஸ்
6.ஒற்றுமையால் வாழ்வதாலே,பாகப்பிரிவினை,சீர்காழி கோவிந்தராஜன்,லீலா
7.வெள்ளிபனி மலை மீது,
8.தன் வாழ்வில் காணா,சீர்காழி கோவிந்தராஜன்

Friday, July 17, 2009

22 ஆயிரம் இரவுகள் வருவதுண்டுகற்பகம் படத்தில் நடித்த நடிகை சாவித்திரி

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு இருந்தாலும் சேலம் மாவட்டத்திலிருந்து திருமதி.எம்.ஏ.கலாமணி அவர்களூக்கு இந்த நிகழ்ச்சி வந்த இரவு மகிழ்ச்சியான இரவு தான் என்பதில் சந்தேகமில்லை. திருமதி கலாமணி அவர்கள் தன் ஆக்கதை அழகான ரசிப்பால் பழைய பாடல் பெட்டகத்தை இந்த ஒலித்தொகுப்பை வடிவமைத்திருக்கிறார். இந்த ஒலித்தொகுப்பை மெருகேற்றியவர் வேறு யார் நம்ம ஆதர்ஸ் அற்விப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.என் அவர்களே தான். பாடல் வரிகளை கேளூங்கள் உங்களை 40 ஆண்டுக்கு முன் கொண்டு சென்று விடும் நீங்கள் அப்போது பிறந்திருந்தால். அருமையான் ஆக்கத்தை வழங்கிய திருமதி. கலாமணி அவர்களூக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள். கேட்டு மகிழுங்கள் தோழர்களே.

Get this widget | Track details | eSnips Social DNA


அம்மாவும் நீயே அப்பாவும் நீயே,களத்தூர் கண்ணம்ம,எம்.எஸ்.ராஜேஸ்வரி
வாராய் நீ வாராய்,மந்திரி குமாரி,திருச்சி லோகநாதன்
கல்யாண ஊர்வலம் வரும்,அவன்,ஜிக்கி
ஒருமுறை தான் வரும்,மங்கையர் திலகம்,ஜிக்கி
முடியும் என்றால் படியாது,மிஸ்ஸியம்மா,ஏ.எம்.ராஜா
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு,கற்பகம்,பி.சுசீலா
எட்டாத கிளையில் கிட்டாத கனிப்போல்,செங்கமலத்தீவு,எம்.எஸ்.ராஜேஸவரி
என் அன்பே பாவமா,தேவதாஸ்,பாலசரஸ்வதி
மன நாட்டிய மேடையில் ஆடினேன்,மீண்ட சொர்க்கம்,

பதிவிறக்கம் இங்கே.. இங்கே..

Thursday, July 16, 2009

21 தாஜ்மஹால் தேவையில்லைவாவெண்ணிலா உன்னைத்தானே >> பூவே உன்னை நேசித்தேன் >> சோலைப்பூவில் மாலை தென்றல் >> ஒரு ராகம் பாடலோடு >> தாஜ்மஹால் தேவையில்லை >>
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு >> காதல் வைபோகமே >> வைகரையில் வைகைக்கரையில்.

Get this widget | Track details | eSnips Social DNA


வணக்கம் அன்பு உள்ளங்களே, இந்த வாக்கியம் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயணா அவர்களின் பிரியமான வார்த்தை. இந்த வார்த்தையை ஆத்மார்த்மாக சொல்லுகிறார் என்றால் அன்று நிகழ்ச்சியில் ஒரு பொடி வைக்கிறார் என்று அர்த்தம். அதேபோலே துவக்கத்தில் அவரே சொல்லிவிடுகிறார். மேலே பாடல் வரிகள் பார்த்தீர்களா? நீ......ண்.....ட இடைவெளிக்கு பிறகு ஒரு சொல்யுத்த நிகழ்ச்சியை ஆரம்பித்து விட்டார் அறிவிப்பாளர். உண்மையிலேயே என்னையும் சேர்த்து தான் அனைவரும் ஏங்கித்தான் போனார்கள் என்று சொல்லவேண்டும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கும் பண்பலை நிறுவனத்தாரும் ஓர் அன்பு வேண்டுகோள் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது இது போன்ற வித்தியாசமான போட்டிகள் ஒலிப்பரப்பினால் நேயர்கள் மிகவும் உற்சாகமாக கேட்பார்கள் சில வாரங்களாக கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வு எல்லோருக்கும் இருந்தது. சரி விசயத்துக்கு வருகிறேன். வழக்கம் போல் அறிவிப்பாளர் ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து எல்லாப் பாடல்களிலும் வருவது போல் தொகுத்து வழங்கினார். எல்லாமே இனிமையான பாடல்கள் தான் அதன் இனிமையில் மயங்கி வார்த்தையை கண்டு பிடிக்க போராடி தவறியவர்களீல் நானும் ஒருவன் ஆகையால் ஒரு சில பாடல்களில் வார்த்தைகள் விடுபட்டு போயிருக்கும். நான் அதிகம் விவரிக்கவில்லை ஏனென்றால் அறிவிப்பாளரே ஒலித்தொகுப்பில் வார்த்தை ஜாலத்தால் நேயர்களை கதிகலங்க வைக்கிறார் எப்படி என்று கேட்டு தான் பாருங்களேன். வழக்கம் போலே இரண்டு பாடல்களிலே நீங்கள் அந்த வார்த்தையை கண்டு பிடித்து விட்டால் அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை “நீங்களூம் அசகாய சூரர் தான்”. நம் வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அழகாக என் ஆதர்ஸ் பாடகர் பாலுஜியின் பாடல்களாக அதிக பட்சம் தேர்ந்தெடுத்து வழங்கிய அறிவிப்பாளருக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றி.

என்ன சொல் என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் ஒலித்தொகுப்பின் இறுதியில் சென்று கேட்டு விடாதீர்கள் ஒலித்தொகுப்பின் ஸ்வாரசியம் இல்லமல் போய்விடும். தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். சரியான பதிலை முதலில் குறுஞ்செய்தியாக அனுப்பிய அசகாய சூரர் திரு. ஆண்டோனி, ஈரோடு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அதுசரிங்க ஒலித்தொகுப்பில் வருகின்ற அந்த “வார்த்தையை” விட தாஜ்மஹால் எல்லாம் எதுக்குங்க?

Tuesday, July 7, 2009

20 உலகம் பிறந்தது நமக்காக!உலகம் பிறந்தது நமக்காக!

முந்தைய பதிவில் உலகம் பிறந்தது எனக்காக என்ற பாடலுடன் பதிவு துவங்கியது அல்லவா?. இதோ இந்த பதிவில் சிறு மாற்றத்துடன் உலகம் பிறந்தது நமக்காக என்ற கதையுடன் ஆமாம் அன்பர்களே உலகம் பிறந்த கதை என்ற ஒரு கற்பனை கலந்த நிஜக்கதையுடன் அமர்க்களமான திரையிசை பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள். தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.நாரயணர் அவர்கள் சொல்வது போல் உலகம் பிறந்த கதை என்ற கற்பனை கலந்த நிஜம், கடவுள் எப்படி உலகை படிப்படியாக படைத்தார் என்ற அழகான ஒரு கற்பனை அறிவிப்பாளரின் குரலில் அசத்தலாக இருக்கிறது. வானொலியில் நான் இதை இரண்டு நிகழ்ச்சிகளில் கேட்டுருந்தாலும் இனிய இரவில் மறுபடியும் ஒலிப்பரப்பிய போது நம் இணைய நண்பர்களுக்காக கொண்டு செல்லலாமே ஓர் ஆசையின் உந்துதலில் பதிந்தேன். கதையின் நடு நடுவே இடைக்கால பாடல்கள் காதுகளில் தேனிசை கீதமாக ஒலிக்கிறது. அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷுமி நாராயாணா அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

பாடல் பட்டியல்

1.குருவாயுரப்பா குருவாயுரப்பா >> 2.வராத வந்த நாயகன் >>3.பொத்தி வச்ச மல்லிகை மொட்டு >> 4.ராதா அழைக்கிறாள் >> 5.கொடியிலே மல்லைகைப்பூ
>> 6.உன்னை நெனச்சேன் >> 7.ஊரு சனம் தூங்கிடுச்சு >> 8.உனக்கென்ன மேலே நின்றாய்.

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, July 6, 2009

19 கோடி கோடி இன்பம்
திரு.பேச்சிமுத்து, கோவை அவர்களின் ஆக்கம் 4.7.09 அன்று வானொலியில் இரவின் மடியில் நிகழ்ச்சிகாக ஒலிப்பரப்பட்டது. பாடல்கள் பட்டியலை பாருங்கள் எல்லாமே அதிகம் கேட்டவை பிரபலமானவை என்ன ஆக்கத்தை உருவாக்கியவரின் ரசனை தான் அபாரம். இதோ இரண்டு பகுதிகளாக இங்கே. நீங்களே கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பகுதி -1ல்
1.உலகம் பிறந்தது எனக்காக,பாசம்,டி.எம்.எஸ்
2.மாசிலா உண்மை காதலே,அலிபாபாவும் 40 திருடர்களூம்,ஏ.எம்.ராஜா, பானுமதி
3.கண்ணும் கண்ணும் கலந்து,
4.இன்பம் எங்கே இன்பம் எங்கே,மனமுள்ள மருதாரம்,சீர்காழி கோவிந்தராஜன்
5.துள்ளாத மனமும் துள்ளூம்,கல்யானபரிசு,ஜிக்கி

Get this widget | Track details | eSnips Social DNA


பகுதி-2ல்
6.கோடி கோடி இன்பம் தருவே,ஆடவந்த தெய்வம்,டி.ஆர்.மகாலிங்கம்
7.இன்பம் பொங்கும் வென்னிலா,பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா
8.மனதில் உறுதி வேண்டும்,
9.சிந்து நதியின்,

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 2, 2009

18 பயணம் தொடரட்டும் கவித்தொகுப்புஅறிவிப்பாளர் திரு.அருனாச்சலம், சென்னை


பயணம் தொடரட்டும் கவித்தொகுப்பு - கவிஞர் முத்துலிங்கம்

பயணம் தொடரட்டும் என்ற தலைப்பில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் கவிதை தொகுப்பிலிருந்து அழகான கவிதைகளை தேர்ந்தெடுத்து எனது அன்பு நண்பர் வானொலி அறிவிப்பாளர் அருணாச்சலம் அவர்கள் தன் அசரவைக்கும் குரலால் தொகுத்தும் இடையிடையே பிரபல திரையிசை பாடல் பின்னணி இசையினை சரியாக சேர்த்து அமெரிக்கா தமிழ் வானொலிக்காக ஐந்து நிமிட தொகுப்பாக தயாரித்து இருந்தாலும் தன்னம்பிக்கையூட்டும் கவிதைகளை அற்புதமாக வழங்கியிருக்கிறார். இதோ உங்கள் செவிகளூக்கும் விருந்தாகட்டும். அருண் பிங்கி என்று அன்புடன் அழைக்கப்படும் அறிவிப்பாளர் அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக அவருக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email