Wednesday, August 26, 2009

27 மர்மத்தின் மத்தியில் சுழலும் எண் ஏழு..


ஏழு உலக அதிசயங்கள்..


மர்மத்தின் மத்தியில் சுழலும் எண் ஏழு..

என்ன இது தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதோ? ஏதாவது விளங்குகிறதா? புரிந்துகொள்ள சிறிது சிரமம் தான். ஆமாம் அன்பர்களே, எண் ஏழு இதைப்பற்றி விரிவான விளக்கங்களை நான் எழுதுவதை விட ஸ்வாரசியமாக நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயனா தன் இனிய குரலால் இனிய இரவு நேயர்களூக்கு இனிமையான மனதை கொள்ளைக்கொண்டு போகும் பாடல்களுடன் வழங்குகிறார். பாடல்கள் துவக்கமே ஆஹா..ஆஹா..அருமை அருமை இனிய இரவு நேயர்கள் இடைக்கால பாடல்களீலும் தன் மனதினால்மயங்கிவிடுகிறார்கள் என்பது உண்மை. நீங்களூம் கேட்டுதான் பாருங்களேன்.

இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க உதவியாக இருந்த அனைத்து வானொலி அறிவிப்பாளர்களூக்கும் இந்த ஒலித்தொகுப்பை கேட்கும் அனைவருக்கும் நன்றி.

பாடல்களின் பல்லவிகளூம் ஏழு ஆஹா.. ஆஹா.. இது எப்புடி..?...?

இளங்கிளியே...விளங்களியே >> மேகமே தூதாகவா >> ஓ மைனா மைனா >> ஓ நெஞ்சே நீதான் >> தெய்வம் தந்த வீடு >> அன்னக்கிளி உன்னை தேடுதே >> சிலோன் ரீட்டா ஐ லவ் யூ.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே.. இங்கே..

Thursday, August 6, 2009

26 மாதன்னை படைத்தான் உனக்காக311 ஆவது வார இரவின் மடியில் ஆக்கத்தை உருவாக்கியவர் திரு.சையத் ரசூல், கோவை அவரின் அறிவிப்பாளர் துவக்கத்தில் சொன்னது போல் பாடல் தேடி அனுப்புங்கள் என்றால் இசைக்கடலில் மூழ்கி முத்தல்லவா எடுத்திருக்கிறார். முதல் பாடல் தெரிவே நம்மை மாயாஜால உலகத்திற்க்கு நேயர்களையும் கொண்டு செல்கிறது அடுத்த இரண்டாவது பாடல் பச்சிளம் குழந்தையை வர்ணித்து துவங்கும் அறிதான பாடல் தெரிவு, அடுத்த மூன்றாவது தெரிவு நேயர்களின் உள்ளமும் கொள்ளைப்போனதே ஜிவ்வென ஜிக்கியின் குரலில், நான்காவது பழைய பாடல் பிரியர்கள் கூத்தாடி கூத்தாடி பாடலை கேட்டு பாசவலையில் விழுந்து விடுகிறார்கள், ஐந்தாவது பாடல் ராஜராஜ சோழன் படத்தில் ஏடு தந்தானடி தில்லையிலே என்ற இந்த பாடலைதான் அநேகம் பேர் வரலட்சுமியின் குரலில் அசரீரியாக கேட்டு அசந்திருப்பார்கள் இதோ ஒரு அற்புதமான பாடல் தமிழ் மாதங்களை அழுத்தமுடன் மனதிலே பதியவைக்கும் நால்வர் கூட்டணி பாடல் ரசிக்கும் படி அற்புதமான தெரிவு உள்ளது என்று அறிவிப்பாளர் கேட்டு சிலாகித்து ரசித்து ரொம்பவும் மெய் மறந்து போனது அவர் மட்டுமல்ல நேயர்களூம் தான் நிச்சயம் மாதங்களினால் மட்டுமல்ல நாத மழையிலும் நனைந்தோம் நாங்கள். ஆறாவதாக காதல் கரையோரம் என்ற இந்த பாடல் தாளம் வேறு பாடல்களை நினைவுபடுத்தினாலும் வித்தியாசமான உணர்வு இந்த பாடலில், ஏழாவதாக இந்த பாடல் நமக்கு வெயிலுக்கேற்ற நிழல் இருக்கிறதோ இல்லையோ, இரவினிலே வீசும் காற்றில் இனிமையான இன்னிசையுண்டு என்பது உண்மை, எட்டவதாக எட்டு திக்கும் ஒலித்த பிரபல பாடல் தெரிவு நாடகமெல்லாம் கண்டேன் அருமையான தெரிவு, நிறைவேறுமா என்னம் நிறைவேறுமா என்ற இறுதியான பாடல் தெரிவு நேயரின் ஆசை நிச்சயம் நிறைவேறி விட்டது ஆழ்ந்த ரசனை அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் சையத் ரசூல் அவர்களே தொடரட்டும் உங்கள் இசைபணி.

1.மறவேனே எந்த நாளூம்,மாயமோகினி,டி.எம்.எஸ்.
2.செவந்திப்பூ செண்டு போல,முரடன் முத்து,சூலமங்கலம் ராஜலக்‌ஷ்மி,
3.உள்ளம் கொள்ளை போகுதே,நீலமலைத்திருடன்,ஜிக்கி
4.கூத்தாடி கூத்தாடி கூக்குரல்,பாசவலை,சி.எஸ்.ஜெயராமன்
5.மாதன்னை படைத்தான்,ராஜ ராஜ சோழன், டி.எம்.எஸ், எஸ்.பி.பி, எம்.ஆர்.விஜயா, எல்.ஆர்.ஈஸ்வரி
6.காதல்கடல் கரையோரமே,குறவஞ்சி,சி.எஸ்,ஜெயராமன்,பி.லீலா
7.வெயிலுக்கேற்ற நிழலுண்டு,கள்வனின் காதலி,கண்டசாலா,பானுமதி
8.நாடகமெல்லாம் கண்டேன்,மதுரை வீரன்
9.நிறைவேறுமா என்னம் நிறைவேறுமா, டி.எம்.எஸ்,பி.சுசீலா

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Follow by Email