Thursday, November 26, 2009

41 கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடுரொம்ப நாள் கழித்து இரவின் மடியில் ஒலித்தொகுப்பு பதிகின்றேன் இந்த தொகுப்பின் உருவாக்கியவர் கோவை விஜயகுமார் அவரின் பாடல் தெரிவுகள் தான் கீழே உள்ளவை இனிமையான தெரிவுகள் அவரின் ரசிப்புதிறனை அறிவிப்பாளர் அமைதிகுரலோன் திரு.கே.எஸ்.நாதன் மிகவும் சாந்தமாக தொகுத்து வழங்குகிறார். அறிவிப்பாளர் திரு.கே.எஸ்.நாதன் அவர்களுக்கும் ஆக்கத்தை உருவாக்கிய கோவை விஜயகுமார் அவர்களுக்கும் பாசப்பறவைகள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பு உள்ளங்களே.பதிவிறக்கம் இங்கே

1.வித்தக விநாயகா >> 2.கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு >> 3.ஊறெங்கும் தேடும் ஒருவரை கண்டேன் >> 4.எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் >> 5.ஆயிரம் இரவுகள் வருவதுண்டு >> 6.சொர்க்கம் பக்கத்தில் >> 7.கொண்டை ஒரு புறம் சரிய >> 8.ஒருவர் மனதை ஒருவர்.

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, November 20, 2009

40 பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்இந்த தேன்கிண்ணம் ஒலித்தொகுப்பு முதன் முறையாக நமது தளத்தில் பதிவாகிறது. இந்த ஒலித்தொகுப்பில் என்ன ஒரு சிறப்பு என்றால் ஒவ்வொரு பாடலிலும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் இசைக்கருவிகளைப்பற்றி அறிய தகவல்களை அறிவிப்பாளர் திருமதி பொற்கொகொடி செல்வராஜ் அவர்கள் ஒவ்வொரு பாடல்களில் இடையிலும் அழகாக தொகுத்து வழங்கியிருப்பார். பாடல்களின் பல்லவிகளை பாருங்கள் எல்லாமே பிரபலமானவை அதிகம் கேட்பவைதான் அதனாலென்ன எத்துனை முறை கேட்டாலும் தெவிட்டாத கானங்களாயிற்றே கேட்டு மகிழுங்கள்.

அறிவிப்பாளர் திருமதி.பொற்கொடி செல்வராஜ் அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

பதிவிறக்கம் இங்கே அழுத்துங்கள்

1.நீயே உனக்கு என்றும் >> 2.கண் போன போக்கிலே >> 3.எல்லோரும் நலம் வாழ
4.கொஞ்சி கொஞ்சிப்பேசி >> 5.நீண்ட கொடியுடைய வேந்தனே >> 6.நலந்தானா நலந்தானா
7.ஆடாத மனமும் உண்டோ >> 8.அம்மம்மா தம்பி என்று >> 9.பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் >> 10.கலைமகள் கைப்பொருளே.

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, November 12, 2009

39 சத்தியம் சிவம் சுந்தரம்1.சத்தியம் சிவம் சுந்தரம் >> 2.நீரோடும் வைகையிலே >> 3.வெற்றி மீது வெற்றி வந்து >>
4.மலர்ந்தும் மலராத பாதிமலர் >> 5.அனுபவம் புதுமை அவனிடம் >> 6.மயக்கமென்ன இந்த மௌனமென்ன >> 7.பார் மகளே பார் நீ இல்லாத >> 8.காலம் இது காலம் இது.

மேற்கண்ட பாடல் பல்லவிகளை பார்த்தீர்களா அன்பர்களே என் மனதை மட்டுமல்ல கோடிக்கனக்கான அன்பர்களின் மனதிலும் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் காலத்தால் மறைக்கமுடியாத பாடல்களின் ஒலித்தொகுப்பு தான் இவை. ரொம்ப நாள் கழித்து
இரவின் மடியில் நிகழ்ச்சியை பதிவு செய்து இந்த தளத்தில் சேர்த்திருக்கிறேன். இந்த அழகான ஒலித்தொகுப்பை உருவாக்கிய நேயர் கோவை இனியா என்ற அன்பு நேயர். அவரின் தெரிவுகள் தான் மேலே உள்ளவை. இனியாவின் ஒலித்தொகுப்பை அவரின் ரசனைகளை அச்சரம் பிசகாமல் அமைதி குரலோன் நாதன் அவர்களின் அற்புதக்குரலில் ஒலித்தொகுப்பு நம் மனதை மிகவும் மகிழ்ச்சியின் ஆழ்கடலில் அமுக்குகிற உணர்வு ஏற்படுத்துகிறது. அறிவிப்பாளர் திரு.கே.எஸ்.நாதன் அவர்களுக்கும் நேயர் இனியா அவர்களூக்கும் பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி

Get this widget | Track details | eSnips Social DNA


for download clik here

Wednesday, November 11, 2009

38 ஓடம் நதியிலே ஒருத்தி மட்டும்அசரீரி குரலோன் சீர்காழி கோவிந்தராஜன்.

இந்த தளத்தின் ஆஸ்தான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாயாணா அவர்களுக்கு அடுத்து என் மனதை மிகவும் கவர்ந்த அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள் நிறுத்தி நிதானமாக கவனத்துடன் நிகழ்ச்சியை வழங்கும் இவரின் பாணி என்னை மிகவும் கவர்ந்தது. இதோ அற்புதமான இசை ஜாம்பவான்களில் ஒருவர் இசைமாமணி அசரரீ குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் திரையிசை வரலாற்று தகவலகளை ரத்தின சுருக்கமாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அத்துடன் இசைமாமணியின் குரல் நம் மனதை தெய்வலோகத்துக்கு கொண்டு செல்லும் அதிஅற்புத திரையிசை பாடல்களுடன் வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர். நான் அதிகம் எழுதி உங்களை சோதிக்காமல் அழுத்துங்கள் ஒலிப்பேழையின் அமுக்கானை தேன் அருவியில் குளித்த அனுவத்தை உணர்வீர்கள் இங்கே. அப்படியே அந்த உணர்வுகளை
ஒரு வரியில் எழுதி விடுங்கள் அவை அறிவிப்பாளருக்கு அதிகம் உற்சாகத்தை ஏற்படுத்தும், மகிழ்ச்சியடைவார் அதனுடன் இன்னும் இதுபோன்ற அதிகம் ஒலித்தொகுப்புக்களை
நமக்கு வழங்குவார். அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

1.நவக்கிர நாயகியே கருமாரி >> 2.மாட்டுகார வேலா உன் மாட்ட கொஞம் >> 3.மலைகளில் சிறந்தமலை மருதமலை >> 4.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் >> 5.உன் மேலே கொண்ட ஆசை >> 6.ஓடம் நதியிலே ஒருத்தி மட்டும் >> 7.அமுதும் தேனும் எதற்கு நீ அருகில் >> 8.மதுரை அரசாளும் மீனாட்சி >> 9.திருப்பதி சென்று வந்தாள் திருப்பம்
10.தேவன் கோவில் மணியோசை.

Get this widget | Track details | eSnips Social DNA


அசரீரி குரலோன் பாடல்கள் தரவிறக்க்ம இங்கே

Follow by Email