Wednesday, December 22, 2010

116 ஒரு நாள் ஒரு பொழுதாகினும்ஆருத்ரா தரிசன சிதம்பர ரகசியம்

இன்றைய ஸ்பெஷல் ஒலிபரப்பில் காலை இல்லம் சங்கீதம் என்ற ஒரு நிகழ்ச்சி சிதம்பர ரகசியம் தலைப்பில் வானொலித்தொகுப்பு மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமானாதன் அவர்கள். அவரின் தெய்வீக தகவல்கலுடன் இடையிடையே பாடல்கள் வருகின்றன. மனதிற்க்கு ஆறுதல் தரும் ஆருத்ரா தரிசன ஸ்பெசல் தான் இந்த ஒலித்தொகுப்பு. தொகுப்பை கேட்டாலே போதும் வழக்கம் போல் உங்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும் உங்களின் உணர்வுகளை வழங்குங்கள்.

1.தக தகவென ஆடவா >> 2.உன் திருவடி மலர் >> 3. தில்லை அம்பல நடராஜா >> 4. ஓம் மஹாபவ சிவம் >> 5.ஓம் நமசிவாயா >> 6.அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே >> 7.சிவகாமி ஆட வந்த >> 8.ஒரு நாள் ஒரு பொழுதாகினும்.

Get this widget | Track details | eSnips Social DNA

115 மாற்றான் தோட்டத்து மல்லிகைமாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனக்கும் என்று அறிஞர்கள் சொல்லியுள்ளார்கள் அந்த வகையில் ஒரு வித்தியாசத்திற்க்காக நம் தமிழ்த்தோட்டத்திலும் மாற்றான் தோட்டத்து மல்லிகை இசைப்பூக்களூம் பூக்கவைக்கலாமே? சரி சரி விசயத்துக்கு வருகிறேன் என்னவென்றால் மற்ற மொழி திரைப்படப்பாடல்களும் பூக்க வைக்கலாமே என்று ஆசைப்பட்டேன். எல்லாமே கேட்ட பாடல்கள் தான் இப்பவும் கேட்க ஒரு வித வித்தியாசமான சுவையை தருகிறது. அத்துடன் இந்த வானொலித் பாடல்கள் தொகுப்பின்
இடையிடையே அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் அவர்களின் இனிமையான குரலில் பல பொது தகவல்களையும் மிகவும் அழகாக அவருக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கியுள்ளார். வானொலி நேயர்கள் விரும்பி கேட்ட பாடல்களுடன் தகவல்களும் சேர்ந்து வந்தாலே ஒரு வித புத்துணர்ச்சி தானே? கேட்டுத்தான் பாருங்களேன் உங்களூக்கு நிச்சயம் பிடிக்கும் உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளை எழுதுங்கள்
நிகழ்ச்சி தொகுத்தவருக்கு மகிழ்ச்சியைத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

மலையாள பாடல் >> ஒன்று, ஹிந்தி பாடல்கள் மூன்று >> தெலுங்கு, கன்னடம் தலா ஒன்று என கலக்குகிறது வித்தியாசமான கலவை தான் என்னவென்று கேட்டுடுங்களேன்..

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, November 29, 2010

114 அடடா என்ன அழகுபழம் பெரும் இயக்குனர் திரு.டி.ஆர்.ராமண்ணா இவரைப்பற்றி இணையத்தில் ஏகப்பட்ட தகவல்கள் இருந்தாலும் நாம் அதனுள் சென்று படித்து பார்ப்பதற்க்கு மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து செல்ல வேண்டும். அப்படியில்லை என்றால் நேரம் கிடைக்கும் போது இணையத்தில் உலாவரும் போது பார்க்கலாம். ஆனால் இந்த தளத்தில் ஒலித்தொகுப்புக்களாக பதியும் போது இணையத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் கணிணியே கதி என்று கட்டி புரளூபவர்களூக்கும் இதுபோன்ற ஒலித்தொகுப்புக்கள் கேட்டுக்கொண்டோ அல்லது பதிவிறக்கம் செய்து கேட்டுக்கொண்டோ தன் வேலைகளில் நமக்கு தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டே பணியாற்றலாம் இந்த நோக்கத்துடன் தான் பதியப்படுகிறது. சென்ற வாரம் நான் வானொலியில் கேட்ட இந்த ஒலித்தொகுப்பை அறீவிப்பாளினி திருமதி.சாரதா ராமாநாதன் அவர்கள் தனக்கே உரிதான கம்பீர குரலில் தொகுத்து வழங்கியது மெய்சிலிர்க்க வைக்கிறது. இதோ இயக்குநர் திரு.டி.ஆர்.ராமண்ணா அவர்களின் திரைப்படவாழ்க்கை வரலாறையும், அவரின் படப்பாடல்களையும் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் >> நாம் பிறந்த நாட்டுக்கு >> அடடா என்ன அழகு >> வில்லேந்தும் வீரரெல்லாம் >> பால் வண்ணம் பருவம் கண்டு >> கண் போன போக்கிலே கால் போகலாமா >> பூஞ்சிட்டு கண்ணங்கள் >> ஒன்று எங்கள் ஜாதியே >> அன்று வந்தது இதே நிலா. ஆகிய பாடல்களூடன் பதிவிறக்கம் இங்கே


Get this widget | Track details | eSnips Social DNA

Friday, November 26, 2010

113 மனிதரை மனிதர் சரிநிகர்
இடையிடையே இனிமையான இடைக்காலப்பாடல்களும் சேர்ந்து பட்டுக்கோட்டையார் கல்யாணசுந்தரம் அவர்களின் பாட்டுக்கோட்டையில் இருந்து சில பாடல்கள். எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா குரலில் கேட்டு மகிழுங்கள். (ஆர்.ஜி.எல் சார். உங்கள் நிகழ்ச்சியில் தேவையானவற்றை மட்டும் வைத்துள்ளேன். நிச்சயம் மீண்டும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.) எத்தனியோ முறை கேட்டப்பாடல்கள் தான் இருந்தாலும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்காக தொகுப்பாக சேகரித்து வழங்கியுள்ளேன். அப்பவே விசயங்கள் நிறைய இருக்குல...?...?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்த்ரம் பற்றி நான் எழுதுவதை விட அவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் ஏகப்பட்டது கொட்டி கிடந்தாலும் உதாரணத்துக்கு இங்கே ஊற்றில் உள்ளது அள்ளி பருகுங்கள் அன்பர்களே. படம், தகவல் உதவி நன்றி ஊற்று.காம்

என்னென்னவோ எதிர்ப்பார்த்து கோப்புள்ளே வந்துட்டீங்க குழப்பமாக இருக்கிறதா? ஒரு வித்தியாசத்திற்காக இந்த பாடல் காம்பினேசன் எப்படின்னு சொல்லுங்க? இந்த ஒலித்தொகுப்பில் பட்டுக்கோட்டையாரின் முத்தான கருத்துக்கள் டோஸ் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்குங்க அதனால் இடைக்கால பாடல்கள் செருகல்கள் உள்ளன. இது ஒரு வித்தியாசமான கலவை சுவை அப்படித்தானே?

பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு >> உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் >> சின்னப்பயலே சின்னப்பயலே >> மனிதம் ஆரம்பவது பெண்ணுக்குள்ள >> நிலவு ஒன்று கண்டேன் >> மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய் >> பாடு நிலாவே தேனகவிதை >> பொறக்கும் போது பொறந்த குணம் >> கண்ணில் என்ன ஈரமோ போன்ற பாடல்கள் பதிவிறக்கம் இங்கே இங்கே இங்கே..

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, November 25, 2010

112 என் நாதமே வாஆஆஆஆ
மறக்க முடியுமா? இந்த பதிவில் பாடல்களை மறக்க முடியாதுங்க ஆமாங்க, இந்த ஒலித்தொகுப்பை நேற்று இரவு கேட்டேன் சில பாடல்களை இங்கே உங்கள் செவிகளுக்கு வழக்கம் போல் எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவருக்கே உரிய பாணியில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியுள்ளார். இதில் வருகிற பழைய படகு, குதிரை பாடல்களை அலசி ஆராய்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறார் கவிதைகளுடன். அது என்ன படகு, குதிரை பாடல்கள் என்று யோசிக்க தோன்றுகிறதோ?.. அப்படியே ஒலித்தொகுப்பை கேளுங்கள் புரியுமே உங்களுக்கு.

இது மௌனமான நேரம் >> அமைதியான நதியினிலே ஓடம் >> என் நாதமே வாஆஆஆஆ >>
முல்லை மலர் மேலே >> தென்றல் வந்து என்னை தொடும் >> கீரவாணி இரவிலே கனவிலே >> அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை >>ஏதே ஏதோ எண்ணம் வளர்த்தேன் >> ஆகாய கங்கை பூந்தேன் மலர் >> ராஜாவின் பார்வை ராணீயின் பக்கம் >>

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, November 23, 2010

111 சும்மா இருக்காதுங்க கையும் காலும்
அந்த கால நகைச்சுவை வள்ளல் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நான் என்ன சொல்லப்போகிறேன். அவரின் திரைப்படப்பாடல்களை கேட்டாலே நாம் வாழ்ந்து விடலாம் நம் வாழ்க்கையில் பலவற்றை உணர்ந்துவிடலாம். அவரின் பாடல்களை இணையதளங்களில் எவ்வளவோ கேட்டிருப்பீர்கள் தனித்தனியாகவும் ஒட்டு மொத்தமாகவும் கேட்டுருப்பீர்கள் இதோ இந்த ஒலித்தொகுப்பில் மிகவும் கம்பீரமுடன் தன் குரலால் எல்லாருடைய மனதையும் கவர்கிறார் அன்பு நண்பர் அறிவிப்பாளர் திரு.கா.சுந்தரராஜன் அவர்கள் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. ஹாயாக கலைவாணரின் ஹாஸ்ய பாடல்களை கேட்டு மகிழுங்கள் சந்தோசமாக இருங்கள் சாரே...

1. சும்மா இருக்காதுங்க கையும் காலும் >> 2.ஆசையாக பேசிப் பேசி >> 3. கண்ணே உன்னால் நான் அடையும் >> 4.காசிக்குப் போனால் கரு உண்டாகும் >> 5. நாலு கால் குதிரை நல்லதொரு பாதையில் >> 6. சரியில்லை மெத்த சரியில்ல >> 7. ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் >> 8. ஆசைகொண்ட மனது >> 9. எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன் >> 10. அதிக தூரக்கடல் தாண்டி போவோம் >> 11. அன்னசத்திரம் இருப்பதும் எதனாலே >> 12. பிடிவாதம் வம்பு பன்னக்கூடாது. ஆகிய பாடல்களின் பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

110 ஓ ஜகமதி இன்பம் வருவதுஎஸ்.வரலக்‌ஷ்மி இனிமையான பின்ணணி பாடகி, அமர்க்களமான நடிகை இவரின் சிறப்பு ஒலித்தொகுப்பைத் தான் இன்று கேட்க போகிறோம். இவரின் ஒலித்தொகுப்பு சில வற்றை தேன்கிண்ணம் தளத்திலும், பாசப்பறவைகள் தளத்திலும் பதிந்துள்ளேன். இருந்தாலும் இந்த ஒலித்தொகுப்பின் பதிவுதான் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனென்றால் எஸ்.வரலக்‌ஷ்மி அவர்களின் வாழ்வில் சுகம், சோகம் அணைத்தும் அடங்கிவிடுகிறது இந்த ஒரு மணி நேர தொகுப்பில். எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்கள் தன் சாந்தமான குரலில் எந்த ஒரு இடத்திலும் அதிரவைக்கும் படி பேசாமல் மிகவும் சாந்தமாகவும் அழகாகவும் மற்றும் அளவாகவும் திறம்பட் பேசி தொகுப்புக்கு மேலும் மெருகூட்டியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. எஸ்.வரலக்‌ஷ்மி அவர்களின் பாடல்களை மிகவும் கச்சிதமாக தேர்ந்தெடுத்து அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவஙக்ளுக்கு ஏற்றபடி வழங்கியது
அபாரம்.

இணையதள நேயர்கள் சார்பாக அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்களூக்கும் இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க உதவிபுரிந்த அனைத்து நண்பர்களூக்கும் நன்றியை
தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

1, நீலநிற மேகம் எல்லாம் நீயே கண்ணா >> 2.இந்த பச்சைக் கிளிக்கொரு >> 3சொல்லவன்னா கிளியே >> 4.சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே >> 5.வாழ்வினிலே நம் நாளிதுவே >> 6.இதிலே காதலர் வாழ்வினில் >> 7. ஓ ஜகமதி இன்பம் வருவது >> 8.முத்து புகழ் படைத்து >> 9.கண்ணே கண்மணியே கருமாரி >> 10. ஏடு தந்தானடி தில்லையிலே >> 11. ஏமாற்றம் காணா என் வாழ்விலே >> 12. உமையவள் நீயே மாரியம்மா.

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, November 22, 2010

109 பின்ணணி பாடகி கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்புஇந்த நவம்பர் மாதத்தில் தான் 2 வருடங்களூக்கு முன் திரையுலகை விட்டு விண்ணீல் மறைந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் அவரையும் நினைவுகூரும் விதமாகவும் அந்த படத்தில் “ஊசிப்பட்டாசே” என்ற பிரபல பாடலை பாடிய பழம் பெரும் பின்ணணி பாடகி கஜலக்‌ஷ்மி அவர்களைப் பற்றியும் தான் இந்த பதிவு. எம்.என்.நம்பியார் அவர்கள் திகம்பரசாமியார் என்ற படத்தில் 11 வேடங்களில் நடித்திருக்கிறார் என்று பலருக்கும் தெரியாது நன்றி செய்தி.காம்.

பழம் பெரும் திரைபடப் பின்ணணி டி.ஆர். கஜலக்‌ஷ்மி இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீறிர்களா? நிச்சயம் இருக்காது என்பது என் பதிலாக இருக்கும் ஏனென்றால் நானே இவர் பாடிய காலங்களின் பிறக்கவே இல்லை என்பது தான் உண்மை. இவருடைய காலம் 1957க்கு முன் பாடல்கள் பட்டியல் பாருங்கள் நான் சொல்ல வருவதை முற்றிலும் புரிந்து கொள்வீர்கள் திருமதி.கஜலக்‌ஷ்மி அவர்கள் குறைவாக பாடியிருந்தாலும் அவருக்கு அது பொக்கிஷம் தான் என்றாலும் ஏனென்றால் கலைஞர்களூக்கு தன் முதல் பாடல் மற்றும் அவர்களூடைய படைப்புக்கள் எல்லாமே பொக்கிஷங்கள் தான் என்பதில் ஐயமில்லை.

இதோ இந்த பதிவின் நோக்கமே இசையுலகில் ஜாம்பவான்களின் அனுபவங்களை நாம் கேட்க வேண்டுமென்பதேயாகும். அவர்களின் அனுபவங்களையும் அவர்களின் படைப்புக்களை கேட்டாலுமே நாம் அவ்ர்களுக்கு மரியாதை செய்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இனி வரும் தலமுறைகளூக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதே நம் கடமையில் ஒன்று. பழம் பெரும் பாடகி கஜலக்‌ஷ்மி அவர்களை அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் மிகவும் சிரமப்ப்ட்டு ஜெர்மனியில் இருந்து ஐரோப்பிய தமிழ் வானொலிக்காக தொலைப்பேசியில் பேட்டி கண்டு இணையத்ள ரசிகர்களூக்காக ஒலிபரப்பியதை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல முடிகிற்து. அவரின் உன்னதமான உழைப்பிற்க்கு வந்தனம் செய்வோம்.

கோவை மாநகர், தொண்டாமுத்தூரில் வசித்து வரும் திருமதி.கஜலக்‌ஷ்மி அவர்களின் அனுபவங்களையும் அதிகம் வானொலிகளில் கேட்க முடியாத அறிதான பாடல்களையும் கேட்டு
மகிழ்ந்து. தங்களின் கருத்துக்களை அவசியம் ஒருவரியில் தாருங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூக்கும் அவருக்கு உதவி புரிந்த எனது அன்புகுரிய திருப்பூர் நண்பர். திரு.அகிலா விஜயகுமார் அவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இதோ இந்த ஒலித்தொகுப்பில் உள்ள பாடல் பட்டியல்

1. சுயமுயற்சியாலே (சுதர்சன் - 1951) பி.யூ.சின்னப்பா, கண்ணம்மா உடன் கோரஸ்*
2. ஊசிபட்டாசே (திகம்பரசாமியார் - 1950)*
3. அண்ணா ஒரு பயத்தியமா (திகம்பரசாமியார் - 1950)*
4. பாப்பா எப்போதும் பயமே (நாம் - 1953) கே.ஆர்.செல்லமுத்து*
5. திருடாதே பொய் (நான் பெற்ற செல்வம் - 1956) ஏ.பி.கோமலா*
6. ஓடி விளையாடு பாப்பா (கப்பலோட்டிய தமிழன் - 1961) சீர்காழி கோவிந்தராஜன்,மீரா*

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலித்தொகுப்பில் இல்லாத பாடல்கள் பட்டியல் மற்றும் பாடல்கள்

1.ஓ தளுக்கு மாமா (வஞ்சம் - 1953)>> 2.எங்கே சொர்க்கம் (சொர்க்க வாசல் - 1954)>>
3.கோவலன் நாடகம் (நீதிபதி - 1955) கே.ஆர்.ராமசாமி பார்ட்டி >> 4. கைத்தல நிறைகனி (முல்லைவனம் - 1955) கிருஷ்ண முர்த்தி பிள்ளை >> 5.வஞ்சனையறியா வானம்பாடி (கோகுலவாணி - 1956) D.P. ராமசந்திரன் >> 6. அவசியம் அவசியம் (புது வாழ்வு- 1957) P.லீலா ?? 7.புதுப்பெண்ணே புதுப்பெண்ணே )நல்ல இடத்து சம்பந்தம் - 1958)D.L.ராஜேஸ்வரி, உருத்தா சர்ஜோஜினி, கஸ்தூரி >> 8. புறப்படுவோமே (கன்னியின் காதலி படத்தில் முதல் பாட்டு - ஹம்மிங்) >> 9. வாழ நினைப்பவர் நாமே - திகம்பரசாமியார் - 1950- ஏ.பி.கோமாளாவுடன்

Powered by eSnips.comகஜலக்‌ஷ்மி அவரக்ள் பாடிய வேற்று மொழி பாடல்களின் சில பட்டியல்

மலையாள பாடல்

Song - Ethinal Viminjitham
Picture- Manasakshi
Easwar Productions
Singer - Gajalakshmi
Lyrics - Abhayadev

Kannada

Song : Mallamoggu naneri
pic: Sree Saila Mahatme
Sree Saila Pictures
Lyrics: Ratnakar
Music T.A.Kalyanam
Singer: Rukmani & Gajalakshmi

Telugu

Song Takkari BayaFilm: Prathigna
Rohini Pictures
Music. T.A.Kalyana
Singer - Rohini & Gajalakshmi

Thursday, November 18, 2010

108 உலக நாயகனின் டைரி வானொலி தொகுப்பு

50 வருடங்களுக்கு மேல் திரையுலகில் நடித்து வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் தகவல்கள் சமீபத்தில் வானொலியில் நான் கேட்டது. கமல்ஹாசனின் டைரி இந்த் ஒலித்தொகுப்பை ஒரு தனியார் வானொலியில் தமிழகம் முழுவதும் அவரின் ரசிகர்கள் கேட்டிருப்பார்கள் அப்படி கேட்காதவர்களுக்கும் பாசப்பறவைகள் இணையதள இசைப் பிரியர்களுக்கும். கமல்ஹாசனின் ஆச்சரியமான பகிர்வுகளும். மேலும், அவரைப்பற்றி புகழ்ந்து பேசிய திரையுலக ஜாம்பவான்களின் பேட்டியும் இதில் உள்ளன. நிச்சயம் இதை
நீங்கள் ரசிப்பீர்கள் என்ற நோக்கத்தோடு இங்கே பதிகின்றேன். கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்புக்கள் அணைத்தும் பெரிய ஒலித்தொகுப்புக்கள். ஆக ஒலித்தொகுப்பு 1ல் உள்ள பாடல்கள் மற்றும் அனைத்து ஒலித்தொகுப்பிலும் ப்ளேயரில் உள்ள ஐகான் கீழே உள்ள TRACK DETAILS அழுத்தி பதிவிறக்கம் செய்யலாம் அப்படி பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் ஒலித்தொகுப்பு தேவைப்பட்டவர்கள் எனது இங்கே
மின்னஞ்சல் தனியாக கடிதம் அனுப்பினால் உடனே அனுப்பிவைக்கப்படும்.

1. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
2. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்
3. நீயொரு காதல் சங்கீதம்

ஒலிக்கோப்பு 1ஒலிக்கோப்பு 2

கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்பு 2

1.மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்
2.சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
3.வலையோசை கல கலவென
4.பூ வாசம் புறப்படும் பெண்ணே
5.நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
6.சிங்களத்து சின்னக்குயிலே..ஜிங்கள ஜிங்கள
7.உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
8.பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலிக்கோப்பு 3

கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்பு 3

1.பொன் மானே கோபம் ஏனோ
2.சகலகலா வல்லவனே

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலிக்கோப்பு 4

கமல்ஹாசனின் டைரி ஒலித்தொகுப்பு 4

1.தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில் சென்பக தோட்டத்திலே
2.எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
3.கண்மணியே பேசு மௌனம் கூறு
4.புஞ்சையுண்டு நஞ்சையுண்டு பொங்கிவரும் கங்கையுண்டு
5.உலகமெங்கிலும் உன்னை வென்றிட

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, November 12, 2010

107 சம்போ மஹாதேவா>>பேரூர் பட்டீஸ்வரர்
இன்று கோவை மாநகரின் பழங்கால கோயிலான பேரூர் பட்டீஸ்வரருக்கு குடமுழுக்கு கும்பாபிகேஷ திருவிழா நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று காலை கோவை வானொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கோவை வானொலி நேயர்களின் மனதை ஆக்ரமித்து அவதாரம் புரியும் அறிவிப்பாளினி திருமதி. சாராதா ராமானாதன் அவர்கள். அவருக்கே உரிய பாணியில் சுவற்றில் ஆணி அடித்தார் போல் தகவல்களை சேகரித்து வானொலி பிரியர்களூக்காக வழங்கியது கேட்டு மிக ஆனந்தம். நாம் போய் தான் பட்டீஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும் என்பது இல்லை இதோ இந்த ஒலித்தொகுப்பை மனமுருகி இனிய பாடல்களுடன் கேட்டு மகிழ்ந்தால் இத்திருக்கோயிலின் பிறவா வரம் தரும் சிவபெருமானை வழிபட்டு அருள்கிடைக்கும்.

ஆண்டவன் தரிசனமே >> உலகின் முழு முதலே >> உன் திருவடி மலர் தொழுவேன் >> கோமாத எங்கள் குலமாதா >> ஒரு நாள் ஒரு சொல் >> ஆதிசிவன் தாழ் பணிந்து >> அருள் ஜோதி தெய்வம் என்னை >> சம்போ மஹாதேவா >> இனி பிறவாத வரம் வேண்டும். ஆகிய பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே


Get this widget | Track details | eSnips Social DNA


படம் மற்றும் இணையதள தகவல்கள் நன்றி >> திரு.நந்தா, ஆலயம் தளம், ஆன்மாக்கள் லயிக்கும் இடம்

Thursday, November 11, 2010

106 மலை நின்ற திருக்குமரா
எனது அருமை அன்பர் தீவிர வானொலி ரசிகர் திரு.அகிலா விஜயகுமாரின் கைவண்ணத்திலும், அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களின் குரல் வண்ணத்திலும் உருவாக்கப்பட்ட கந்தசஷ்டி ஒலித்தொகுப்பு 11.11.2010 காலை கோவை வானொலியில் ஒலிபரப்பட்டது. முருகன் பாடல்களை எத்தனை தடவை கேட்டாலும் கேட்பவருக்கு ஒருவித மன நிம்மதியை தேடித்தரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை கந்தசஷ்டி துவக்க நாளான நவம்பர் ஆறாம் தேதி ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிபரப்பட்டு துவக்கிவைத்த கந்தசஷ்டி விழா இன்று சூரம்சம்ஹாரத்தின் தின விழாவில் கோவை வானொலியில் முடிக்கப்படுவது கேட்ட இணைதள நேயர்களுக்கு முருக கடவுள் பேரருள் அடைவார்கள் என்பதில் முற்றிலும் உண்மை. இந்த ஒலித்தொகுப்பை மிகவும் சரளமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் தொகுத்து வழங்கிய கோவை வானொலியின் முன்னோடி அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

கீழே உள்ள பாடல்கள் பட்டியல் பதிவிறக்கம் இங்கே.

வெற்றிவேல் வீரவேல் >> முத்தமிழில் பாட வந்தேன் >> மலை நின்ற திருக்குமரா >> சிந்தனைச் செய்மனமே >> தந்தைக்கு மந்திரத்தை >> பழம் நீயப்பா ஞானப்பழம் >> சிந்தனையில் மேடைக் கட்டி >> முத்தை தருபத்தி திருநகை >> >> ஆறுமுகமான பொருள் வான்மகிழ >> தந்தைக்கு மந்திரத்தை >> திருசெந்தூரில் போர் புரிந்து >> திருச்செந்தூரின் கடலோரத்தில்.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, November 9, 2010

105 என்னடா தமிழ் குமரா?

,

கந்த சஷ்டி சென்று கொண்டிருக்கும் இந்த வாரத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பில் வந்த பிரபலமான பாடல்களின் தொகுப்பு மற்றும் அவரைப்பற்றிய அறிதான விளக்கங்களுடன் வழங்கிய அறிவிப்பாளர் திரு.கா.சுந்தரராஜன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

மேலும், நாளை 11.11.2010 அன்று சிறப்பு கந்தசஷ்டி ஒலித்தொகுப்பு பதிவு கொஞ்சும் குரல்யாளினி அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் வழங்கிய ஐரோப்பிய தமிழ் வானொலியில் வான்வெளியில் ஒலி உலா வந்தவை காத்திருங்கள் அன்பர்களே.

1.ஏடு தந்தானடி தில்லையிலே >> 2.நடந்தாள் வாழி காவேரி >> 3.வானம் ஓடி வரலாம் >>
4.மதுரை அரசாளும் மீனாட்சி >> 5.முத்தமிழில் பாட வந்தேன் >> 6.திருசெந்துரின் கடலோரத்தில் >> 7.என்கெங்கும் காணும் சக்தியடா >> 8.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்
9.இறைவன் படைத்த உலகில் எல்லாம் >> 10.என்னடா தமிழ் குமரா?. பதிவிறக்கம் இங்கேGet this widget | Track details | eSnips Social DNA

104 உருவத்தை காட்டிடும் கண்ணாடிமனதை வருடும் மயிலிறகு அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்களின் காந்தக்குரலில் அற்புதமான ஓர் ஒலித்தொகுப்பில் உள்ள பாடல் பட்டியல்களை பார்த்தாலே. மீண்டும் மீண்டும் நம்மை கேட்கத்தூண்டும். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக வர்ணித்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. நீங்களும் கேட்டுமகிழுங்கள்.

1. ஆலயமணியின் ஓசையை >> 2. நவராத்திரி சுபராத்திரி >> 3. பறவைகள் பலவிதம் 4. கதவு திறந்ததா காட்சி >> 5. நான் பாடிய முதல் பாட்டு >> 6. உருவத்தை காட்டிடும் கண்ணாடி >> 7. அன்பே உன் பேர் அன்னை >> 8. பார்த்த ஜாபகம் இல்லையோ >> 9. சித்திரை மாத நிலவினிலே >> 10.பருவம் எனது பாடல் >> 11.வாய்மையே வெல்லுமடா. ஆகிய பாடல்கள் பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 21, 2010

103 னம்தனம் னம்தனம் தாளம் வரும்னம்தனனம் னம்தனனம் தாளம் வரும்..

ஆம் நேயர்களே இதோ மறுமுறை ஜென்சி அவர்களின் அற்புத குரலை கேட்டாலே //னம்தனனம் னம்தனனம் தாளம் வரும்// அதுபோல .ஜென்சியின் ஒலித்தொகுப்பு இணையத்தில் ஐரோப்பிய தமிழ் வானொலியில் சென்ற வாரம் கேட்க நேர்ந்தது. பிரபலமான பாடகிகளின் பாடல்கள் நாம் அடிக்கடி அதிகம் கேட்டுகொண்டு வருகிறேம். அதிகம் பாடல்கள் பாடாத ஜென்சி அவர்களின் பாடல்கள் பல இன்னும் ரசிகர்களால் கேட்கப்படுகின்றன நேசிக்கப்படுகின்றன. ஏற்கெனவே தேன்கிண்ணம் தளத்தில் கோவை அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் ஒரு ஒலித்தொகுப்பு வழங்கினார். மற்றொன்று கோவை அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் குரலில் எனது அருமை நண்பர் சேலம் காசக்காரனூர் ராஜ்குமார் ஆக்கத்தில் ஒலிஉலா வந்த தொகுப்பு ஆகிய இரண்டிலும் ஜென்சி அவர்கள் அலைபேசியில் உரையாடி நம்மை மகிழவைத்தார். என்னைப்பொருத்த வரை அவர் பேசும் போது அதிகம் மலையாள வாடை வந்தாலும். பாடும் போது ஆஹா ஆஹா என்னவொரு கொஞ்சல் குரலினிமை பல மெலொடி பாடல்களில் நம்மை மெய்மறக்க வைத்துவிடுகிறார். இவர் தொடர்ந்து பாடாதது தமிழ் இசை ரசிகர்களூக்கு பெரும் இழப்பு தான். அதனால் என்ன அவர் பாடிய பாடல்களை பல தடவை கேட்டாலும் புத்தம் புதுசாக உள்ளது. சரி விசயத்துக்கு வருகிறேன். இந்த ஒலித்தொகுப்பில் கொஞ்சும் குரல்யாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் ஜென்சியுடன் உரையாடி பேசியபோது மகிழ்ச்சியான தன் அனுபவங்களை இந்த தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறார் இனிமையான பாடல்களுடன். இது போன்று சிரமப்பட்டு ஆச்சரியமான ஒலித்தொகுப்புக்களை மீண்டும் மீண்டும் பலவற்றை ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிபரப்பி மேன் மேலும் வளர வேண்டும் என்று கோவை வானொலி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கிறேன்.

1.கீதா... சங்கீதா.. >> 2. பூ மலர்ந்திட >> 3. தெய்வீக ராகம் தெவிட்டாத >> 4. என்னுயிர் நீ தானே >> 5.மயிலே மயிலே >> 6. என் வானிலே ஒரே வெண்ணிலா >> 7. ஓ காதல் ஓவியம் >> 8. ஆயிரம் மலர்களே மலருங்க்ள் >> 9.னம்தனம் னம்தனம் தாளம் வரும் >> 10. ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும்.


Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, October 12, 2010

102 கலையாத கல்வியும்சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சி

நேற்று ஐரோப்பிய வானொலியில் இசையின் மடீயில் நிகழ்ச்சியில் அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் தொகுத்து வழங்கிய நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக சரஸ்வதி பூஜை ஒலித்தொகுப்பு மிகவும் இனிமையாக இருந்தது. அவரின் கவிதை ஒலித்தொகுப்புக்களை அதிகம் கேட்டுள்ளேன். இது போன்ற தகவல்களூடன் கூடிய ஒலித்தொகுப்பை மிகவும் நிறுத்தி நிதானமாக, ஆசுவாசமாக கேட்பவர்களுக்கு நன்றாக புரியும் படி தகவல்களை பேசி வழங்கிய அவரின் பாணி என்னை மிகவும் பரவசப்படுத்தியது. சரஸ்வதி பூஜைக்காக இந்த தருணத்தில் நேயர்கள் கேட்கும் வகையில் தொகுத்து வழங்கிய அவரின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன். அவரின் தகவல்கள் சேகரிப்பின் உழைப்பை பாராட்ட எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஒரே வரியில் அபாரம் என்று சொல்ல தோன்றுகிறது. நீங்களும் தரவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் வாழ்வில் இல்லத்தில் சரஸ்வதியின் அருட்கடாட்சம் என்றும் நிறைந்து இருக்கும்.

பதிவிறக்கம் செய்ய பாடல்கள் பட்டியலை அழுத்துங்கள்.

1.ஆதிபராசக்தி >> 2.மதுரை அரசாளூம் >> 3.அகரமுதல எழுத்தெல்லாம் >> 4.ஓசை கொடுத்த நாயகியே >> 5.யார் தருவார் இந்த அரியாசனம் >> 6. அகிலாண்டேஸ்வரி இருக்கையில் >> 7.கலையாத கல்வியும் >> 8.ஜனனி ஜனனி >> 9.கொக்கு பறக்கும் >> 10.இன்னருள் தரும் அன்னபூரணி

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, September 23, 2010

101 உன்னை நான் அறிவேன்
வெள்ளி மலை மன்னவா இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் மனது என்னையறியாமல் என் பள்ளிப் பருவத்திற்க்கு இட்டுச் சென்று விடும். ஒரு வித இனம் புரியாத, எழுத்துக்களால் விவரிக்க முடியாத வித்தியாசமான உணர்வு ஏற்படுவது உண்டு. அதனால் அந்த பாடலின் குரல் மீது இந்த தாக்கத்தால் தான் இந்த் பதிவு. மேலும், இந்த தளத்தின் 100 வது பதிவில் காலஞ்சென்ற பாடகி எஸ்.வரலட்சுமி நினைவுபடுத்தினோம். இதோ அதன் தொடர்ச்சியான 101 பதிவில் அவரைப்பற்றி கொஞ்சம் விரிவாக கேட்ப்போம். இந்த தளத்தில் அவரைப் பற்றிய தெரியாத தகவல்களூடன் அவர் பாடிய தெரிந்த பாடல்கள் சிலவற்றை இடைகால பாடல்களூடன் கேட்போம் இணயதள நேயர்களே. அவர் ஆன்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திப்போம். நிச்சயம் அவர் பாடிய சிறப்பான பாடல்கள் எப்போது கேட்டாலும் அவர் நினைவு வருவதை எந்த சக்தியாலும் நிறுத்திவிடமுடியாது. அவரைப் பற்றிய பல தகவல்களை தேடி பிடித்து வழங்கிய நமது அன்புகுரிய அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

1.ஆகாய கங்கை பூந்தேன் மலர்
2.வெள்ளி மலை மன்னவா
3.ஒரு தேவதை வந்தது
4.இந்த பச்சைக்குழந்தைக்கு
5.உன்னை நான் அறிவேன்
6.வா வா வஞ்சி இளமானே

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, September 22, 2010

100 பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவேபெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே

சோழ மன்னன் ராஜ ராஜ சோழன் கட்டிய ஆயிரமாவது ஆண்டு விழா காணும் தஞ்சை பெரிய கோயில் த்கவல்களூடன் சிறப்பு நிகழ்ச்சி தொகுப்பு தொகுத்து வழங்குபவர் திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள். அறிவிப்பாளனியின் அசத்தலான குரல் தொகுப்பில் பிரதானமாக விளங்குகிறது. நேயரிகள் மட்டுமல்ல வேலை பளூவில் ஈடுபடும் அணைத்து ரசிகர்களும் பாடல்களாகட்டும், கதையாகட்டும் காதில் கேட்பதற்க்குதான் அதிகம் விரும்புவார்கள். ஏன் இந்த தொகுப்பில் கூட அருமையான சில குட்டி கதைகள் வழங்குகிறார்.

அது மட்டுமல்ல, “ஏடு தந்தானடி தில்லையிலே” இந்த பாடலை கேட்டாலே ‘ இந்த பாடல் இந்த தொகுப்பில் இல்லை இருந்தாலும், இரண்டு விசயங்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் அதில் முதலில் வருவது இன்று ஆயிரமாவது ஆண்டு விழா காணும் தஞ்சை பெரிய கோயிலின் தோற்றம். இரண்டாவது அந்த பாடலை பாடிய பாடகி எஸ்.வரலட்சுமி அவர்கள். இன்று மறைந்த எஸ்.வரலட்சுமியின் முதலாவது நினைவு நாள். ஆகையால் இரண்டு படங்களையும் இந்த தளத்தில் சேர்த்தேன். அதிகம் நான் எழுதி தங்களை சோதனைக்குள்ளாவதை விட அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் குரலில்
தகவல்களூடன் இனிய பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து தங்கள் கருத்துக்களை எழுதுங்கள் அன்பர்களே.
1.செந்தமிழே வணக்கம் >> 2.தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்க >> 3.உன் அழகை வடிப்பதற்க்கு 4.சங்கரா சிவ சங்கரா << 5.சுமங்கலி பூஜை இது >> 6.சொல்லடிவன்னா கிளியே >> 7.அழகிய மேகங்கள் வானத்தில் >> 8.ஒரு குடும்பத்தின் கதை இது.

தஞ்சை பெரிய கோயிலின் 1000 வது ஆண்டு.
பாசப்பறவைகள் தளத்தின் 100 வது பதிவு
எஸ்.வரலட்சுமி நினவு தினம் 1 ஆம் ஆண்டு

இது எப்படி இருக்கு?

Get this widget | Track details | eSnips Social DNA

99 மலையோரம் வீசும் காற்றுஇந்த ஒலித்தொகுப்பு பல நாட்களாக பதிவிற்காக காத்திருந்தது இப்போது தான் பதிவதற்க்கு நேரம் அமைந்தது. தீவிர வானொலி நேயர்கள் மற்றும் கோவை அறிவிப்பாளர்கள் சிலரின் விருப்பப்பாடல்கள் ஐரோப்பிய தமிழ் வானொலியில் உலா வந்த தொகுப்பை அறிவிப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களின் கொஞ்சும் குரலில் வழங்கினார். மேடம், நான் மலர்ரொடு தனியாக, சில்லென்று பூத்த காட்டினிலே மற்றும் மயக்கமா தயக்கமா ஆகிய பாடல்கள் சில வரிகள் மேடம் உங்கள் மென்குரலில் அபாரம் அற்புதம் வாழ்த்துக்கள். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.வீடு நோக்கி ஓடுகின்ற - பகவதி
2.நானொரு கோயில்-கௌரி
3.சோலை இளங்கிளியே-அபிராமி,ஸ்விட்சர்லாந்த்
4.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ-மீனாட்சி,கோவை
5.காதலின் பொன் வீதியில் - சசிக்குமார், கோவை
6.நான் மலரோடு தனியாக - சந்துரு, கோவை
7.சில்லென்று பூத்த காட்டினிலே- எஸ்.ஏ.ஆனந்தா, கோவை
8.ஆறு மனமே ஆறு - ராஜா,.கோவை
9.மயக்கமா தயக்கமா, தேவகி, கோவை
10.என்னை முதன் முதலாக - சாரதா, கோவை
11.மலையோரம் வீசும் காற்று - பிச்சை முத்து, சென்னை
12.நடையா இது நடையா - ரவி,கோவை

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, September 21, 2010

98 நான் உன்னை நெனெச்சேன்1.இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் >> 2.பாட்டும் நானே பாவமும் நானே >> 3.பார்த்த ஞாபகம் இல்லையோ >> 4.உன்னைச் சொல்லி குற்றமில்லை >> 6.நான் பேச நினைப்பதெல்லாம் >> 7.நல்ல பேரை வாங்க வேண்டும் >> 8.நான் உன்னை நெனெச்சேன் >> 9.என் கேள்விக்கு என்ன பதில் >> 10.அழகே வா அருகே வா >> 11.ஆடி அடங்கும் வாழ்க்கையடா.

இசையன்பர்களே 11 பாடல்களின் பட்டியலை பார்த்தீர்கள் அல்லவா? மனதை மயக்கும் ரம்மியமான பாடல் தொகுப்பு தான் இவை பதிவி செய்து கேட்க விருப்பம் தானே இதோ பதிவிறக்கம் இங்கே அழுத்துங்கள். உங்களுக்காகவே நள்ளீரவில் 12 மணிக்கு பதிவு செய்து வழங்குகிறேன். நல்ல விசயங்கள் சொல்ல நேரம் காலமெல்லாம் பார்க்ககூடாது என்பார்கள் அது போல நல்ல பாடல்களை கேட்க இரவும் பகலும் பார்க்ககூடாது. அப்படித்தானெ இனியென்ன ஜமாயுங்கள். சின்ன விசயம் என்னவென்றால் அறிவிப்பாளர் மட்டும் இதை தொகுத்து தரவில்லை இடைவிடா தொகுப்பு.

Get this widget | Track details | eSnips Social DNA

97 மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ?திரையிசை உலகம் அன்புடன் மாமா அழைக்கும் ஸ்ரீ கே.வி.மஹாதேவன் அவரின் சிறப்பு
ஒலித்தொகுப்பு. வழங்குபவர் இத்தளத்தின் அன்பு அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள். இதோ கே.வி.எம் அவர்களின் சிறப்பான தகவல்களூடன் மனதை மயக்கும் பாடல் தெரிவுகள். காலம் வென்ற மெட்டுக்களை நம் காதோரங்களிலும், நம் மனதின் அடித்தளத்திலும் ரீங்காரமிடச் செய்தவர். அவர்தம் பாடல்களூடன் சில இடைக்கால பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.

பகுதி 1

1.ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
2.தூங்காத கண்ணென்று ஒன்று
3.தென்றல் வந்து என்னைத்தொடும்
4.நலந்தானா நலந்தானா
5.முகத்தை பார்க்கவில்லை

Get this widget | Track details | eSnips Social DNA


பகுதி 2

6.பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
7.பாட வந்ததோர் கானம்
8.மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, September 20, 2010

96 காற்றினிலே வரும் கீதம்
பத்மஸ்ரீ டாக்டர் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி பிறந்தநாள் வானொலி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் வானொலியில் கேட்டென் அதில் குறை ஒன்றும் இல்லை என்ற பாடலின் உள் அர்த்தம் என்ன? என்று ஒரு வானொலி நேயர் கேட்ட கேள்விக்கு அழகான விளக்கத்தை தேடிபிடித்து நமக்காக அருமையாக வழங்கியிருக்கிறார் இத்தளத்தின் ஆஸ்தான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயானா. முழுமையான நிகழ்ச்சியை என்னால் பதிவு செய்து தரயிலவில்லை. ஏனென்றால் நான் நிகழ்ச்சி பாதியில் இருந்து தான் கேட்கமுடிந்தது. இருந்தாலும் சில தகவல் தான் என்றாலும் இந்த தலமுறையினருடன் நானும் கேட்பதற்க்கு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் எப்போது திருப்பதி சென்றாலும் ஆந்திர திருப்பதி பேருந்து நிலையத்தில் இருக்கும் பத்மஸ்ரீ எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியம்மா அவர்களின் திருவுருவ சிலையை மானசீகமாக வணங்காமல் நான் வருவதில்லை அவர்தம் குரலில் தான் அவ்வளவு ஈர்ப்பு, இனிமை. இன்றைய இடைக்கால சில பாடல்கள் நடுவிலும் சில தகவல்கள் ஆகையால் தவிர்க்கமுடியாமல் இதோ இங்கே பசுஞ்சோலையாய் அன்றைய சுப்புலக்‌ஷ்மியம்மாவின் கீதங்கள் ஆமாம் அன்பர்களே அவை யாவும் என்றுமே காற்றினிலே வரும் கீதம் தான்.

1.சுகுமாரா என் தாகம்
2.ஆனந்தம் என் சொல்வேனே
3.கண்ணீல் என்ன ஈரமோ
4.குறை ஒன்றும் இல்லை
5.தேன் பூவே பூவே வா
6.என்னவென்று சொல்வதம்மா

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, September 16, 2010

95 அத்தை மகனே போய் வரவாஅமுத கானம் முத்துக்கள் பத்து

கீழே உள்ள பாடல் பட்டியலை பாருங்கள் அதில் எந்த பாடல் உங்க மனதில் முதலாக வரும் என்று தோன்றுகிறது. இந்த தளத்தை பார்க்கும் அதிக பட்ச நேயர்கள் மனதில் தோன்றும் ஒரே பாடல் நீங்கள் நினைத்ததே தான் இருக்கும். ஏன் வானொலி நேயர்களின் அபரிமிதமான தேர்வே அதே பாடல் தான் எது வென்று தெரிஞ்சுக்க ஆவலாக தானே இருப்பீர்கள்? இந்த வாரம் தொகுப்பு வழக்கம் போல் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர் எனது இனிய நண்பர் திரு.ரவி அவர்களூக்கு பதில் அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் தனக்கே உரிய ஸ்டைலில் மிகவும் அழகாக இனிமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் மிகவும் உற்சாகமாக வானொலி நேயர்கள் தங்களின் அலைபேசியிலிருந்து
வில்லிருந்து பாய்ந்து செல்லும் அம்பு போல் குறுந்தகவல்களை அனுப்பி அவரவருக்கு
பிடித்த பாடல்களை முதல் பாடலை முதன்மைக்கு கொண்டு வர எப்படி யற்சித்திருக்கிறார்கள் என்று கேட்டு தான் பாருங்களேன். பாடல்கள் தெரிவுகள் அருமை அதிலும் முதன்மை பாடல் எல்லோரும் மனதிலும் மலர் போல் பூத்துக்குலுங்கும் அதே பாடல் தான். நான் கேட்ட இந்த நிகழ்ச்சியை தங்களூக்கும் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

1.அடுத்தாத்து அம்புஜத்தை
2.நான் கவிஞனும் இல்லை
3.அத்தை மகனே போய் வரவா
4.எங்கிருந்தோ ஆசைகள்
5.சிட்டு குருவி சிட்டு குருவி சேதி
6.பூந்தோட்டக் காவல்காரா
7.ஜவ்வாது மேடையிட்டு
8.தங்கரதம் வந்தது
9.மலர்ந்தும் மலராத

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, September 14, 2010

94 ஸ்வரங்களின் சங்கமம் ஸ்வர்ணலதாஸ்வரங்களின் சங்கமம் ஸ்வர்ணலதா

ஆம் நேயர்களே தன் இனியகுரலால் நம் மனதோடு பேசிய திரைப்பட பின்ன்ணிப் பாடகி
ஸ்வர்ணலதா கடந்த வாரம் மாரடைப்பால் மறைந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இதோ அவரின் இனிய குரலில் இழைந்து ஓடும் மனதிற்க்கு ரம்மியமான சில பாடல்களை வானொலி நிகழ்ச்சியில் இத்தளத்தின் ஆஸ்தான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயாணா வழங்கினார். அவர் ஸ்வரணலதாவை பற்றிய அறிய தகவல்களை சேகரித்து நிகழ்ச்சியில் வழங்கியது மிகவும் ஆச்சரியம். தன் தொகுப்பில் அறிவிப்பாளர் ஓர் இடத்தில் மிகவும் ஆதங்கப்பட்டு சொன்ன வார்த்தை இணையத்தில் ஓர் நல்ல தரமான படம் கூட இல்லை அந்த அளவில் அவர் ஏன் பேசப்படவில்லை? என் கருத்து என்னவென்றால் சுசீலாம்மா, ஜானகியம்மா, வானீஜெயராம், சித்ரா போன்றோர் தன் குரலில் ஒரு வித தனி முத்திரை பதித்து வழக்கமாக தனக்கே உரிய பாணியில் பாடியிருந்தார்கள். அதுவே அவர்களூக்கு ஒரு பிரபலத்தை தேடி தந்தது இவர்கள் பாடிய பாடல்களில் சிரமமில்லாமல் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஸ்வர்ண்லதா இது போன்று தனி பட்ட முத்திரை பதிக்காமல் விட்டதுதான் காரணமாக இருக்குமோ என்னவோ? இருந்தாலும் அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதை மிகவும் பாதித்திருந்தன. உதார்ணத்திற்க்கு போறலே பொண்ணு தாயி பாடல் அவருக்கு தேசிய விருதை அள்ளிதந்தன. இதோ அவரின் மேலும் மனதை கவரும் பாடல் தொகுப்பு இங்கே. மிகவும் அழகாக பாடல்களை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் ஸ்வர்ணலதா பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழந்த அஞ்சலியை தெரிவியுங்கள்.

பகுதி 1

1. காலையில் கேட்டது கோவில் மணி
2. ஊரெல்லாம் உன் பாட்டு தான்
3. நீதானே நாள் தோறும் நான் பாட
4. நீ எங்கே என் அன்பே

Part 1

Get this widget | Track details | eSnips Social DNA
பகுதி 2

5. ஊரடங்கும் ஜாமத்திலே
6. நன்றி சொல்லவே உனக்கு
7. சொல்லி விடு வெள்ளி நிலவே
8. கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
9. மாலையில் யாரோ உன் மனதோடு பேச

Part 2

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, September 8, 2010

93 ஆடை கட்டி வந்த நிலவோஇந்த நிகழ்ச்சியும் வானொலி நேயர்களின் தேர்ந்தெடுத்த பாடல் தொகுப்பு வழக்கம் போல் அறிவிப்பாளர் தன் இனிய குரலால் ஜாலங்கள் காட்டி நிகழ்ச்சிக்கு ஆர்வத்தை தூண்டுகிறார். கேட்டு மகிழுங்கள் இனிமையான பாடல்களூடன்.

Get this widget | Track details | eSnips Social DNA


1.அழகே அமுதே
2.ஒரு நாள் இது ஒரு நாள்
3.உள்ளங்கள் ஒன்றாகி
4.யாரது யாரது தங்கமா
5.ஆடை கட்டி வந்த நிலவோ
6.உலகத்தில் பிறந்தது எது
7.மாசில்லா உன்னை காதலே
8.ஆகாய வீதியில் அழகான
9.ஆடாத மனமும் ஆடுதே
10.பம்பரக் கன்ணாலே காதல்

பதிவிறக்கம்

92 வானுக்கு தந்தை எவனோஎனது இனிய நண்பர் கோவை வானொலியின் தீவிர நேயர் செல்வபுரம் திரு.சையத் ரசூல் அவர்களின் விருப்பப்பாடல்களுடன் ரம்ஜான் நோம்பு ஸ்பெசல் நிகழ்ச்சி சென்ற வாரம் வானொலியில் கேட்டேன். பாடல்களீன் தெரிவு மற்றும் அவர் ரசித்த விதம் மிகவும் அழகாக இருந்தது. ரொம்ப நாட்கள் கழித்து பாடல்கள் கேட்கும் போது நம் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. இந்த இனிமையான நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி சுதா அவர்களூக்கும், இந்த ஒலித்தொகுப்பை உருவாக்கிய செல்வபுரம்
திரு.சையத் ரசூல் நேயர் அவர்களூக்கும் பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

1.வானுக்கு தந்தை எவனோ >> 2.நல்லவன் எனக்கு நானே >> 3.சின்னக்கண்னன் தோட்டத்து பூவாக 4. வசந்தத்தில் ஓர் நாள் >> 5.ஆசை ஆசையாய் >> 6.கவலை இல்லாத மனிதன் >>7.வெயிலோடு உறவாடி >> 8.மலர்ந்தும் மலராத பாதி மலர் >> 9.மானச சஞ்சரரே >> 10.இசைக்கேட்டால் புவி அசைந்தாடும். ஆகிய பாடல்கள் பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, September 6, 2010

91 பிருந்தாவனத்தில் பூவெடுத்துவாராவாரம் ஒலிபரப்பாகி வரும் அமுதகானங்கள் முத்துக்கள் பத்து நிகழ்ச்சியில் நான் ரசித்த நிகழ்ச்சி இதோ உங்கள் செவிகளூக்கும். வானொலி நேயர்களால் குறுந்தகவல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் வரிசையை மிகவும் அழாகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. ரவி அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


1.நேற்று நீ சின்ன பாப்பா
2.மெல்ல வரும் காற்று
3.ஜிலு ஜிலு குளூ குளூ
4.தாமரைக் கண்ணங்கள்
5.மாதமோ ஆவணி மங்கையோ
6.போகப் போகப் தெரியும்
7.உன்னை விட்டு ஓடிப்போக
8.பிருந்தாவனத்தில் பூவெடுத்து
9.பூஜைக்கு வந்த மலரே வா
10.உனது விழியில் எனது பார்வை

பதிவிறக்கம்

Friday, August 13, 2010

90 பிரமதவனம் வேண்டும் இசைக்கு மொழியேது ?பிரமதவனம் வேண்டும் - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - பாசப்பறவைகள் நேயர்கள்.

இசையன்பர்களே நேற்று வானொலியில் ஓர் இனிமையான நிகழ்ச்சி கேட்டேன். பாலைவனத்தில் காணல் நீர் கண்டது போல் உணர்வுகள் ஏற்பட்டது. ஆமாம் நண்பர்களே பலவருடங்களூகு முன் எப்பவோ நாம் கேட்ட பிற மொழிப் பாடல்கள் கேட்கும் போது ப்ரூட் சாலட்டில் தேன் ஊற்றி உண்டது போல் தித்திக்கும் தேன் சுவை நிகழ்ச்சியாக இருந்தது. பாடல் பட்டியலை பாருங்கள் பாடல்களை கேளூங்க ஏன் இந்த பில்டப் கொடுக்கிறேன்
என்று தெரிந்து கொள்வீர்கள். அது மட்டுமல்லாமல் அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் இனையான குரலில் பாடல்களின் நடுவே மத்திய பிரதேஷ் மாநிலத்தின் தகவல்களை திரட்டி நமக்காக வழங்கியிருக்கிறார் பாடல்களூடன் கேட்பதற்க்கு ஸ்வாரசியமாகவும் இருந்தது. அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

1.முப்பெந்தி கோதாவரி >> 2.நின்னன்ததே நின்னன்ததே >> 3.தில் க்யா கரே >> 4.பிரமதவனம் வேண்டும் >> 5.ஆயேனோ ப்யார்கே >> 6..யே ஷாம் மஸ்தானி >> 7.ஏக்குமானா

Wednesday, August 11, 2010

89 ஐரோப்பிய வானொலியில் கோவை நேயர் பூக்கடை மணி

ஐரோப்பிய வானொலியில் கோவை நேயர் பூக்கடை மணி அவர்களின் பாடல் தொகுப்பை அலங்கரித்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள்.
இதோ அவரின் அபரிமிதமான அழகான இனிமையான கொஞ்சும் குரலில் மணி அவர்களின் குடும்பத்தார் விரும்பிய பாடல்களை தாய், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், தன் கோவை வானொலி நண்பர்கள் மற்றும் தனக்கு ப்ரியமான கோவை வானொலி அறிவிப்பாளர்களூக்கும் பொருத்தமாக பாடல்களை தெரிவு செய்து தொகுப்பை அனுபவித்து ரசித்து வழங்கியிருக்கிறார். மணி அவர்களின் தீவிர வானொலி ரசிகதன்மைக்கு
கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது. இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கி ஐரோப்பிய வானொலி நேயர்களின் உள்ளங்களில் உலாவரவழைத்த உன்னதமான உதவியை வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளின் ராகினி அவர்கள். எனது இனிய நண்பர் மணி அவர்களின் சார்பாக ஐரோப்பிய வானொலி உரிமையாளர் ரவீந்திரன் அவர்களூக்கும் அறிவிப்பாளினி ராகினி அவர்களூக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை
அவருக்கு அனுப்பி அவரின் அன்பு மடலையும் வாங்கி ஐரோப்பிய வானொலிக்கு அனுப்பிவைக்கிறேன். எனது நன்பர் பூக்கடை மணி அவர்களின் இந்த இனிமையான சந்தோசமான நிகழ்ச்சியை பாசப்பறவைகளின் நேயர்களாகிய உங்களீடம் பகிர்ந்து கொள்வதில் நானும் மகிழ்ச்சிடைகிறேன்.

பூக்கடை மணி அவர்களின் தேன்சுவை தெரிவு பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

பாடல் பட்டியல் மற்றும் விரும்பியவர்கள்.

1.யார் அந்த நிலவு என்ற பாடலை விரும்பி கேட்டவர் மனைவி ஜெயந்தி
2.சின்னப்பயலே சின்னப்பயலே என்ற பாடலை தன் மகன் சுர்ஜித்க்காக
3.நிலாவே வா என்ற பாடலை தன் மகன் சுர்யாவுக்காக
4.நானாக நானில்லை தாயே என்ற பாடலை தன் தாய் பானுமதிக்காக
5.அம்மா என்று அழைக்காத என்ற பாடலை தன் சகோதரர்கள் ரவி, ஆனந்த் ஆகியோருக்காக
6.பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை தன் சகோதரர் பாஸ்கரனுக்காக
7.நீயே எனக்கு என்றும் என்ற பாடலை என்ற பாடலை தன் சகோதரர் பாலகிருஷ்னன அவர்களுக்காக.
8.பொண்ணு ஒன்று கண்டேன் என்ற பாடலை தன் சகோதரி சாந்தி அவர்களூக்காக
9.இயற்க்கை என்னும் இளையகன்னி என்ற பாடலை தன் நண்பர் எனக்காக (கோவை ரவி) அவர்களூக்காக
10.ஆலயமாகும் மங்கை மனது என்ற பாடலை தன் நண்பர் திருப்பூரில் இருந்து மோகனசுந்தரம் அவர்களுக்காக
11.பனிவிழும் மலர் வனம்.என்ற பாடலை தன் நண்பர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திருப்புர் அகிலா விஜயகுமார், திருப்புர் ஆனந்தராஜ், கணபதி எஸ். பாலசந்தர், தொண்டாமுத்துர்ர் ரவி, சந்த்ரு, சந்தீப், சாரதா, தேவகி, ஸ்ரீவித்யா மற்றும் சசிக்குமார் ஆகியோருக்காகவும்.

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email