Saturday, January 30, 2010

51 கறுநீல மலைமேலே தாய் நின்றால்இன்று தைபூசம் என் பிறந்த நாள் நட்சத்திரம் முருக கடவுள் மீது அதீத பற்று உண்டு. நேற்று மயிலிரகு நிகழ்ச்சியில் அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமனாதன் அவர்கள் தெய்வீக குரலோன் சீர்காழி கோவிந்த்ராஜன் அவர்களின் ஒலித்தொகுப்பு வழங்கினார்கள் சில பாடல்கள் தவிர அனைத்து பாடல்களூம் அதிகம் ஒலிப்பரப்பட்டவை தான் இருந்தாலும் அந்த அசாரீரி குரலோன் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாதவை மனதுக்கு நிம்மதி தருபவை இந்த காலகட்டத்தில் வேலை வேலை என்று அலையும் அன்பர்களூக்கு இது போன்ற பாடல்கள் மூலம் தான் கடவுளை சிறு மணி துளி நேரத்திலும் வாயார உச்சரிக்க முடிகிறது அந்த அற்புத சேவையை வழங்கியிருக்கிறார் சீர்காழியார். அந்த வகையில் என் மனதை கவர்ந்த பாடகர்களில் தெய்வீகமானவ்ர் இதோ இவரின் பல தொகுப்புக்கள் நானே பதிந்துள்ளேன் நேரம் கிடைக்கும் போது அசரிரீ குரலோன், இவற்றையும் கேளூங்கள். எல்லாம் வலல முருக கடவுள் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருவார். சிறப்பு நட்சத்திர மயிலிறகு அழகாக தொகுத்து வழங்கிய திருமதி.சாரதா ராமனாதன் அவர்களூக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.

CLIK HERE FOR DOWNLOAD

1.கலையாத கல்வியும்
2.வென்றிடுவேன் ஞானத்தால்
3.பாலாற்றில் தேராடுது
4.மாட்டுகாரவேலா உன் மாட்டு கொஞம்
5.சங்கே முழங்கு சங்கே முழங்கு
6.சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
7.குத்தால மலையிலே குளித்து வந்த
8.கறுநீல மலைமேலே தாய் நின்றால்
9.ஓடம் நடுவினிலே
10.மலைகளில் சிறந்த மலை மருதமலை
11.நமது சக்தியை நாளை சரித்திரம் சொல்லும்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, January 29, 2010

50 சீர்காழி சிவசிதம்பரம்
1.காதலிக்க நேரமில்லை >> 2.மாம்பலத் தோட்டம் >> 3.ஆத்துல தண்ணீ வர >> 4.உள்ளத்தில் நல்ல உள்ளம் >> 5.ஆடி அடங்கும் வாழ்க்கையடா >> 6.சிரிப்பவர் சில பேர் >> 7. அறுபடை வீடு கொண்ட >> 8.கோட்டையிலே ஒரு ஆலமரம் >> 9.தேவன் கோயில் மணியோசை

மேற்கண்ட பாடல்கள் அனைத்துமே தனது தந்தை சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்கள் தான் அவருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் உள்ள தொடர்பையும் சில சிறப்பான தகவல்களையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள். மேட்டு மகிழுங்கள் அன்பர்களே.நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அறிவிப்பாளர் திரு.டேவிட்ராஜா அவருக்கும் பாசப்பறவைகள் சார்பாக நன்றி.

for download

49 ஆசையினாலே மனம்.. ஓஹோ


ஜெமினி கனேசன் நடித்த படங்களில் இருந்து மனதை மயக்கும் பாடல் தொகுப்பு பாடகர்களில் கணீர் என்று பாடும் பாடகர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள் பேஸ் குரலில் பாடும் அற்புதமான பிரபல பாடகர்க்ளூம் இருக்கிறார்கள் இவர்கள் நடுவில் மெலோடியாக சாந்தமாக பாடக்கூடிய பாடகர்க்ளூம் இருந்தார்கள் இருக்கிறார்கள் உதாரணமாக ஏ.எம்.ராஜா போன்றோர் எல்லோர் மனதையும் கவர்ந்தவர்கள் இது பாடகர்களூக்கும் மட்டுமல்ல வானொலி அறிவிப்பாளர்களும் பொருந்தும் வானொலியில் அறிவிப்பாளர்கள் கடல் போல் குவிந்துள்ளார்கள். பாந்தமான குரலுக்கு என்றும் சொந்தக்காரர் திரு.ஏ.எம்.ராஜா அவர்களை போன்றே பாந்ததுடன் சாந்தமாக தன் குரலால் தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்கள். அவரின் இந்த ஸ்பெஷல் குரல் இந்த ஒலித்தொகுப்பிற்கு ஏற்றார் போல் அழகாக அமைந்திருக்கிறது அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

பதிவிறக்கம் இங்கே

1.பாட்டு பாடவா பார்த்து பேசவா
2.ஆயிரம் நினவு ஆயிரம் கனவு
3.காற்றுவெளியிடை கண்ணம்மா
4.பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
5.உன்னை கண் தேடுதே
6.மதுரையில் பறந்த மீன் கொடியை
7.ஆசையினாலே மனம்.. ஓஹோ
8.இன்பம் பொங்கும் வென்னிலா வீசுதே
9.இயற்கை எனும் இளைய கன்னி
10.மந்தார மலரே மந்தார மலரே

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, January 18, 2010

48 எம்.ஜி.ஆர்.ஓர் சகாப்தம் அறிதான தகவல்களுடன்எம்.ஜி.ஆர்.ஓர் சகாப்தம் - அறிதான தகவல்களுடன்இசையன்பர்களே இந்த பதிவில் முத்தான 2 ஒலித்தொகுப்புக்கள் உள்ளன கோப்பின் நீளம் கருதி இரண்டாக பிரித்து பதிந்துள்ளேன். முதல் தொகுப்பின் பாடல் பல்லவிகளை பாருங்கள் அதிகபட்சம் பிரபலமான ஹிட் பாடல்கள் தான். இதில் என்னவொரு வித்தியாசம் என்றால் புரட்சி தலைவரின் அறிதான தகவல்களுடன் பண்பலை அறிவிப்பாளர் ஐயா திரு.குடந்தை ஆர்.வெங்கிடபதி அவர்கள் தன் தெள்ளத்தெளிவான உச்சரிப்புடன் பாங்குடன் சாந்தமாக வழங்கியது அருமை. இவருடன் அறிவிப்பாளர்கள் திருமதி.ஷோபியா விஜயகுமார், திரு.ஜோசப் மற்றும் திரு.ரவி அவர்களூடன் ஒலிப்பரப்பு அறையில் ஒன்றாக கூடி அவரின் ஒலிப்பரப்பை நேரில் கேட்டு மகிழ்ந்தார்கள்.

1.செந்தமிழே வனக்கம் >> 2.எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் >> 3.அச்சம் என்பது மடைமையடா >> 4.தூங்காதே தம்பி தூங்காதே >> 5.ஏட்டிபிழைக்கும் தொழிலே சரிதானா >> 6.திருடாதே பாப்பா திருடாதே >> 7.கண்களும் காவடி சிந்தாடட்டும் >> 8.அன்னமிட்டகை என்னை ஆட்டுவித்த கை >>9.நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே >> 10.உன்னை அறிந்தால் நீ >> 11.தர்மம் தலைகாக்கும்.

Get this widget | Track details | eSnips Social DNA


இரண்டாவது ஒலித்தொகுப்பில் - முதல் தொகுப்பின் நிகழ்ச்சியை தொடர்ந்து தொலைபேசி நேயர்களின் நேரடி ஒலிப்பரப்பும் வந்தது இதை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.ஷோபியா விஜயகுமார் அவர்கள். பண்பலையின் ஆஸ்தான நேயர்களான இவர்களும் தங்கள் பங்களிப்பாக தங்கள் மரியாதையும் இதில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிற்ப்பித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

1.திரு.துரைராஜ்,நாடார் தெரு,திருப்பூர்,2.திரு.மோகனசுந்தரம்,திருப்பூர், 3.திரு. அவினாசியப்பன், திருப்பூர்,4.திரு.எஸ்.முத்துக்குமார்,வழக்கறிஞர்,பொள்ளாச்சி, 5.திரு.மெய்ஞானசாமி,பொள்ளாச்சி.

12.தங்கப்பதக்கத்தின் மேலே >> 13.இந்த பச்சைக்குழந்தைக்கு >>14.அதோ அந்த பறவை போல >>15.நீங்க நல்லாயிருக்கோனும் >> 16.மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும் >> 17.வானத்தில் வருவது ஓரு நிலவு >> 18.கொஞ்சும் கிளியான >>19.எங்கே போய்விடும் காலம் >> 20.தாயில்லாமல் நான் இல்லை.

இந்த இரு ஒலித்தொகுப்புக்களூம் 2 மணிநேரம் ஒலிப்பரப்பி அந்த பொன்மனை செம்மலுக்கு மரியாதை செய்து அறிதான பல தகவல்கள் தந்து உதவிய அறிவிப்பாளர் ஐயா திரு.குடந்தை ஆர்.வெங்கிடபதி அவர்களூக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, January 11, 2010

47 பா.விஜயின் விருப்பப் பாடல்கள்1.உள்ளம் என்பது ஆமை >> 2.படைத்தானே மனிதனை ஆண்டவன் >> 3.எந்த ஊரு என்றவனை >> 3.தொட்டால் பூ மலரும் >> 4.காற்று வாங்கப்போனேன் >> 5.அன்புள்ள மான் விழியே >> 6.ஞாயிறு என்பது கண்ணாக.

பதிவிறக்கம் இங்கே

மேலே உள்ள பாடல் பல்லவிகள் பலமுறை இந்த தளத்திலும், தேன் கிண்ணத்திலும் பதிந்துள்ளேன் நீங்களும் பலமுறை கேட்ட பாடல்கள் தான் வித்தியாசமான ரசனைகளுடன் இந்த பாடல்களை கேட்கும் போது எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாதவை ஆகவே, ரசிக கலைஞர்கள் (ஒரு நல்ல ரசிக்ன் அற்புத கலைஞன்) திரையிசை பாடல்களை ரசிப்பது ஒரு விதம் இவர்களூக்கு சாதாரணமான ஒரு விசயமும் அதிசமாக தெரியும். அந்த திரையிசை பாடல்களூக்கு வரிகள் எழுதுபவர்கள் ரசிப்பது வேறொரு விதம் அவர்கள் வரிகளை ஆழ்ந்து ரசிப்பார்கள் இதோ இந்த ஒலித்தொகுப்பில் பாடலாசிரியர் பா.விஜய் அவர்களின் விருப்பப்பாடல்களை தான் ரசித்ததை அழகாக விமர்சித்து வழங்கியிருக்கிறார். இந்த ஒலித்தொகுப்பு ஹலோ கிராம்போன் நிகழ்ச்சியில். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அண்ணாச்சி டேவிட் ராஜா அவர்கள் வழக்கம் போல் அமைதியுடன் தொகுத்து வழங்கியது அருமை. திரு.டேவிட் ராஜன் எனது நன்பர் அபாரமான திறமை கொண்டவர் வேறொரு பண்பலையில் சின்ன தம்பி பெரிய தம்பி நிகழ்ச்சியில் அண்ணாச்சி பாஷையில் வெளுத்து வாங்குவார் அதுமட்டுமல்லாமல் நன்றாக பாடக்கூடிய திறமை பெற்றவர். இவர் தினமும் அற்புதமான சினிமா தகவல்களூடன் சிறப்பாக வழங்குகிறார் அவரின் முதல் தொகுப்பாக இந்த தளத்தில் வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களூக்கும் பிடிக்கும் கேட்டு சந்தோசமாக இருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, January 8, 2010

46 எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ1.சித்திரமே சொல்லடி >> 2.என்ன என்ன வார்த்தைகளோ >> 3.ராமன் எத்தனை ராமனடி >> 4.இதோ எந்தன் தெய்வம் முன்னாலே >> 5.மலர்ந்தும் மலராத பாதி >> 6.எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ >> 7.அனுபவம் தானே வரவேண்டும் >> 8.அந்தப்பக்கம் வாழ்ந்தது ரோமியோ >> 9.பௌர்னமி நிலவில் பனி விழும் இரவில்.

மேலே உள்ள பாடல் பல்லவிகளை பார்த்தீர்களா எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேவ கானங்கள் தொகுப்பில் வழங்குபவர் திரைப்பட நடிகை திருமதி.வென்னீறாடை நிர்மலா அவர்கள். படங்களில் காட்சிகள் நடிக்கும் போது அவரின் குரல் மிகவும் நன்றாக இருக்கும். இதோ தனக்கு பிடித்த பாடல்களையும் மிகவும் தான் ரசித்த விதத்தையும் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் சுவைபட வழங்கியிருக்கிறார். இந்நிகழ்ச்சியின் ஊடே அதிகம் பேசாது சில கேள்விகள் மட்டும் கேட்டு மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.பால்ராஜ் அவர்கள். அவருக்கு பாசப் பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email