Thursday, February 11, 2010

54 நீ எங்கே உன் நினைவுகள்



இந்த ஒலித்தொகுப்பு வானொலியின் ஆஸ்தான நேயரின் அருமையான ஆக்கம். ரசூலே ரசூலே என்று துவக்கத்திலே தாஸண்ணாவின் பிட் பாடலை போட்டு கலக்கிவிட்டார் அறிவிப்பாளர் ரவி அவர்கள். பாடல்கள் தெரிவுகள் மிகவும் அருமை இந்த ஒலித்தொகுப்பில் துவக்கத்தில் திரு.சையத் ரசூல் அவர்களின் மனைவி பற்றி சில பாடல் துளிகள் ஒலிக்க விடும் போது எல்லோரையும் போல் நானும் ஏமாந்து தான் போனேன் ஓ இந்த தொகுப்பு மனைவியை போற்றி பாடுவதாக இருக்குமோ என்று நினைத்து கேட்டால். பாடல் தொகுப்பு வேறு பாதையில் பயணித்தது என்பது தான் உண்மை. இந்த தொகுப்பில் என் மனதை மிகவும் பாதித்த பாடல்கள் மலர்ந்து மலராத, நீ எங்கே உன் நினைவுகள், இசையில் வசமாகா, சின்ன கண்ணன் தோட்டத்தில், வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் போன்ற பாடல்கள் கேட்க மனதிற்க்கு இதமாக இருந்தன. ஆக்கத்தை உருவாக்கியவர் நல்ல தொரு திரையிசை ரசிகர் எனது நண்பர் திரு.சையத் ரசூல் அவர்கள். அவருக்கும் மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் ரவி அவர்களூக்கும் பாசப் பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

Click here for download

1.இறைவனிடம் கையேந்துங்கள்
2.மலர்ந்து மலராத
3.அங்கே மாலை மயக்கம்
4.இளவட்டம் இளவட்டம்தான்
5.நீ எங்கே உன் நினைவுகள்
6.இசையில் வசமாகா இதயமேது
7.நல்லவன் எனக்கு நானே
8.வசந்தத்தில் ஓர் நாள்
9.சின்ன கண்ணன் தோட்டத்தில்
10.ஒவ்வொரு
11.வரவேண்டும் வாழ்க்கையில்

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email