Friday, February 12, 2010

55 அருள் புரியும் ஆதிசிவன்அருள் புரியும் ஆதிசிவன் - சாரதா ராமானாதன்

அமர்க்களமான மங்கல இசையுடன் எப்போதும் துவங்கும் அறிவிப்பாளினி அவர்களின் அசத்தலான ஒலித்தொகுப்பு இது. ஆமாம் இசையன்பர்களே அருள் புரியும் ஆதிசிவன் என்ற அருமையான தலைப்பில் மஹாசிவாரத்திரி நாளில் தெய்வீக ஒலித்தொகுப்பு வழங்கியிருக்கிறார் திருமதி.சாராதா ராமானாதன் அவர்கள்.

மஹா சிவராத்திரி ஸ்பெசல் பக்தி பொன்மாலை பொழுது யாத்திரை செல்லும் காற்றலை பயணத்திற்க்கு இங்கே அழுத்துங்கள் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்
எல்லாம் வல்ல இறைவன் சிவன் உங்களூக்கு அருள் புரியட்டும்.

1.ஆண்டவன் தரிசனமே >> 2.ஆடல் காணீரோ திருவிளையாடல் >> 3.சித்தமெல்லாம்
4.இசையாய் தமிழாய் இருப்பவனே >> 5.ஓதுவார் உன் பெயர் ஓதுவார் >> 6.அருணாச்சாலேசா >> 7.அருள் ஜோதி தெய்வம் என்னை >> 8.தக தகவென ஆடவா சக்தி சக்தியென >> 9.தயாபர மகேஸ்வரா அருள் தர வேண்டும் >> 10.மகாபிரான தீபம்
11.வெள்ளிமலை மன்னவா >> 12.சம்போ மஹாதேவா.

பாடல் பல்லவிகளை பார்த்தீர்களா அன்பர்களே.?..?..அவசரம் வேண்டாம் அன்பர்களே ஒலித்தொகுப்பை ஓட விட்டு அல்லது (மேலே உள்ள சுட்டியில் பதிவிறக்கம் செய்தோ கேட்டுக்கொண்டே) மேற்கொண்டு படியுங்கள்.

பொதுவாகவே, இந்த அவசர உலகத்தில் அவரவர் வேலைகளை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை ஒரு மானிடன் தன் வாழ்நாளில் கடமைகளை சரிவர செய்யவும், பொருள் ஈட்டவுமே நேரம் போதவில்லை. இவ்வுலகில் 100 சதவீத மக்களில் 80 சதவீதம் தெய்வீக நம்பிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது என் நம்பிக்கை, மீதி 20 சதவீதம் சுத்தமாக தெய்வீக நிந்தனையே இல்லாதவருக்காகவே இந்த ஒலித்தொகுப்பை பதிவு செய்து இந்த நல்ல நாளில் பதிந்திருக்கிறேன். ஆமாம் அன்பர்களே அந்த 20 சதவீத மக்கள் தெய்வீக நாமம் உச்சரிக்க்கூட நேரமிலலாதவருக்காகவே இந்த ஒலித்தொகுப்பு, கேட்டாலே தொகுப்பை போதும் அவர்கள் உதடு ”ஓம் சிவாய நமஹ” என்று தன்னாலே உதடு உச்சரிக்க வைத்துவிடும் இந்த ஒலித்தொகுப்பு தெய்வத்தை போற்றிய புன்னியமும் கிடைக்கும். இதனால் ஒலித்தொகுப்பை கேட்டவர்களும் பூரண புன்னியம் பெறுவார்கள் என்று என் நம்பிக்கை. அந்த புன்னியத்தை கோவை மாநகர் மக்களின் வானொலி பிரியர்களின் ஒவ்வொரு உதட்டிலும் உச்சரிக்க வைத்த புன்னியம் சேர்த்திருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி.சாராதா ராமனாதன் அவர்களுக்கு என் நன்றி.

இந்த நிகழ்ச்சி பதிந்து உடனே இணையத்தில் ஏற்ற வேண்டும் என்ற பேராவலால் வழங்கியிருக்கிறேன். நிகழ்ச்சியின் தலைப்பை போன்ற இந்த ஒலித்தொகுப்பை கேட்ட
எனது அருமை இணைய இசையன்பர்களூக்கும் இந்த தெய்வீக அருள் கிடைக்கட்டும் அவர்களின் குடும்பங்கள் நோய் நொடி எதுவுமின்றி சுபீட்சமாக இருக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். இணைய நண்பர்களே எந்த வேலையிருந்தாலும் ஒரு மணி நேரம் ஒதுக்கி கேட்டு இசையுடன் இளைப்பாருங்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்களுக்கு புகழ் பெற்ற சிவதளங்கள் சுற்றுலா யாத்திரை சென்ற அனுபவம் கிட்டுவது நிச்சயம். இந்த அகில உலக புகழ் பெற விருக்கும் ஒலித்தொகுப்பை மிகவும் சிறப்பாக உருவாக்க அறிவிப்பாளினிக்கு உதவியாக இருந்த மறைமுக பணியாற்றியவர்களுக்கும் தெய்வ திருத்தளங்கள் தகவல்கள் தொகுத்து வழங்கியவர் யாராக இருந்தாலும், அற்புதமான தெய்வீக திரையிசை பாடல்களையும் தேர்ந்தெடுத்தவர் யாராக இருந்தாலும், ஆவர்களுக்கும் இந்த புன்னியம் கிட்டட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். மேலும், சுயநலமாக என் குடும்பத்தாருக்கும் சீரும் சிறப்புடன் வாழ புன்னியத்தையும் சேர்த்தது என்றால் மிகையாகாது. பொருமையாக நேரம் ஒதுக்கி கேட்ட அனைத்து இணைய நேயர்களூக்கும் அந்த சிவன் அருள் புரியட்டும் என்று நன்றியுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

ஓம் சிவாய நமஹ!

Get this widget | Track details | eSnips Social DNA

5 comments:

Anonymous said...

இந்த அவசர உலகத்தில் அவரவர் வேலைகளை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை ஒலித்தொகுப்பை பதிந்த உங்களுக்கும் ஒலித்தொகுப்பை வழங்கிய திருமதி.சாராதா ராமனாதன் அவர்களுக்கும். அந்த சிவன் அருள் புரியட்டும் என்று நன்றியுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
பிரபா

Anonymous said...

Dear Mr. Ravee,
Thanks for your dedication and contents. If you don't receive comments for your posts, think that we are mesmerized on your posts and forgot to comment.

And friends like our Ravee sir, there is one more FM group from US doing remarkable work. Pls check the site http://www.itsdiff.com/. It is a non-commercial FM station inside the Stanford University campus in United States. It has lot of useful contents about Mastero Ilayaraja, Audio version of Kalki's Ponniyin Selvan and so on..............
All the contents are downloadable and free. Only thing the team expect from us is our valuable comments and thanks.
Check these sites also
http://ashaheer.blogspot.com/ - Has lot of interlude works of Mastero.
http://raviaditya.blogspot.com/search/label/இளையராஜா - Rare informations about Ilayaraja.........
Don'f forget to visit and you'll be happy for visiting. Pls share information about similar works.
-
Lets create a better tomorrow.
With best regards,
Ramanathan Sundaram and (Saratha Ramanathan)

jagadeesh said...

அற்புதமான பக்தி தொகுப்பு இது. அதுவும் சிவராத்திரி அன்று சிவனை பற்றியும் சிவதலங்களை பற்றிய விவரங்களுடனும் "பா"மாலைகளால் சூட்டி, பக்தி மழையில்ஒருமணிநேரம்
நனைந்தோம். "வானவில்" பண்பலைக்கும் அருமையாய் தொகுத்து வழங்கிய
திருமதி சாரதா ராமநாதன் அவர்களுக்கும் நன்றி! இணையதளத்தில் பதித்த நண்பர்
ரவி சாருக்கும் நன்றிகள் !

Anonymous said...

arul puriyum athi sivan valangiya saratha ramanathan siva rathiriku arputhamana murayil valangiyullar migavum parattuthalaku uriyathu naratha ganathil arambithu naratha ganathil mudithamai, sthalangaluku uriya thirai padalgal oliparapiyamai, thennadu vadanadu ulaga nadugal sivarathiri thalangal pattri karuthukal therivithu kailasathil mudithamai endru nigalchiyinai bakthargaluku valangiullar. avarum avar kudumbatharum pallandu vala valthukinren meendum ithu ponra nigalchigalai valangaveandum enru keatu kolgirean nandrigal pala mrs. saratharamanathan avargaluku
by
akilavijayakumar

Covai Ravee said...

வாங்க திரு அகிலா விஜயகுமார் அவர்களே மதுரையில் இருந்து பின்னூட்டம் தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.

Follow by Email