Tuesday, March 30, 2010

64 கோவை வானொலி ரசிகர்கள் ஐரோப்பிய வானொலியில்கோவை வானொலி ரசிகர்கள் ஐரோப்பிய வானொலியில்

அன்பு உள்ளங்களே...

இன்று மதியம் ஐரோப்பிய வானொலியில் கோவை பாலுஜி ரசிகர்கள் விருப்பப் பாடல்கள் ஒலிப்பரப்பப் பட்டன வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களின் இனிமை தவழும் குரலில் கோவை பாலுஜி ரசிகர்களின் விருப்பப் பாடல்கள் அனைத்தும் பாலுஜியின் பரவச பாடல்களே நீங்களூம் கேட்டு மகிழுங்கள். எங்களை பரவசத்தில் ஆழ்த்திவிட்ட திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு கோவை ரசிகர்கள் சார்பாக நன்றி நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


இரண்டாவது பாகம் ஒலித்தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNAமுதல் பாடலை விரும்பி கேட்டவர்

தண்ணீர்பந்தல் திருப்பூர்அகிலா விஜயகுமார்.
படம் என்னதவம் செய்தேன்
பாடல்- ஏதோ ஒரு நதியில்....
பாடயவர்கள்- எஸ். பி.பி பி.சுசிலா.

இசையின் மடியில் நிகழ்சியில் அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.
வரதராஜபுரம்.கீதா நாராயணன்
படம்.அவள்.
பாடல் - கீதா..ஒருநாள் பழகும்...
பாடியவர். எஸ்:பி.பி பி.சுசிலா.

ராமணாதன் ரமணாதபுரத்தில் இருந்து விரும்பி கேட்டபாடல்
படம் காலங்களில் அவள் வசந்தம்.
பாடல் முதல் முதல் வரும் சுகம்.....
பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.

அடுத்தபாடல் காற்றலையில் மிதந்து வரும்போது உங்கள் மனதில் உற்சாகம்.பொங்கி வழியும்
காரணம் என்ன படியது யார் எங்கள் எஸ். பி.பி யோடு எஸ் ஜானகி

அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.பூக்கடை மணி
படம் எங்கம்மா சபதம்.
பாடல் -அன்பு மேகமே இங்கு ஓடிவா..
பாடியவர்கள்.-எஸ். பி.பி பி.சுசிலா

காற்றலையில் உங்கள் உள்ளதை அள்ளிசெல்ல உலாவரும் பாடலை விரும்பி கேட்டவர்.
கோவை ரவி அவர்கள்.

என்காதலி யார் என்று கேட்கின்றார்கள். எஸ் பி.பி கே ஜே ஜேசுதாஸ்

இன்றைய நிகழ்சியை நிறைவு செய்யும் பாடலை கேட்கின்றார்.
பட்டேலஇ றோடு கோவையில் இருந்து ஆத்மாஸ் ஆனந்த்
படம் திக்கு தெரியாத காட்டில்
பாடல்..கேட்டதெல்லாம் நான்தருவேன்....

பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.
விடைபெறுகின்றார்
ராகினி பாஸ்கரன் ஜேர்மனியில் இருந்து

நன்றி அன்பு நேயர்களே

பதிவிறக்கம் இங்கே அழுத்துங்கள்

இரண்டாவது பாகம் ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Sunday, March 28, 2010

63 எம்.கே.டி.பாகவதர் (1910 - 2010) நூற்றாண்டு சிறப்பு வானொலி நிகழ்ச்சி பகுதி-2
சென்ற வாரம் முதல் பகுதியாக எம்.கே.தியாகராகபாகவதர் அவர்களின் நூற்றாண்டு விழா வானொலி ஒலித்தொகுப்பு இணையத்தில் பதிந்திருந்தேன். இதோ அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பகுதியாக மேலும் சில ஆச்சரியமூட்டும் தகவல்களுடன் பாடல் தொகுப்பு இவை. நம் த்லைமுறைக்கு தெரிந்திராத எம்.கே.டி அவர்கள் எவ்வாறு சிறை சென்றார் எப்படி விடுதலையானார் என்ற ஸ்வாரசியமான தகவலளுடன் அசரவைத்தார் அறிவிப்பாளர் குடந்தை வேங்கிடபதி ஐயா அவர்கள் இவருடன் சேர்ந்து சாந்தகுரல் தொகுப்பாளீனி சரஸ்வதி அவர்கள் கேள்வியை கேட்டு அவரிடம் இருந்து அழகான பதில்கள் மற்றும் பாடல்களுடன பெற்று நமக்காக வானொலியில் ஒலிபரப்பசெய்தார்.

.தீன கருனாகரனே >> 2. சத்வ குண போதன் >> 3.வள்ளகை பாடும் வாயால் >> 4.மானிட ஜென்மம் மீண்டும் >> 5.என்னுடல்தனில் ஒரு.பாடல்கள் பதிவிறக்கம் இங்கே அழுத்துங்கள்


துவக்கத்தில் சென்ற வாரத்தில் ஒலிப்பர்பபட்ட தகவலகளையே திரும்ப சொல்லப்பட்டதால் வானொலி நேயர்கள் எல்லோருக்கும் அயர்ச்சி ஏற்பட்டிருக்கும் 2 பாடல்கள் முடிந்ததும். எம்.கே.டி அவர்களின் திருச்சி நன்பரின் பேட்டியையும் அவருடைய நெருங்கிய நண்பர்களின் பேட்டியையும் சேர்த்து இந்த ஒலித்தொகுப்பில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. முடிவில் ஒலித்தொகுப்பு கேட்ட அனைவருக்கும் மனம் கனத்து போவது நிச்சயம்.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, March 24, 2010

Sunday, March 21, 2010

61 எம்.கே.டி.பாகவதர் நூற்றாண்டு சிறப்பு வானொலி நிகழ்ச்சி பகுதி-1எம்.கே.டி.பாகவதர் (1910 - 2010) நூற்றாண்டு சிறப்பு வானொலி நிகழ்ச்சி பகுதி-11.அம்பாள் மனம் திறந்து >> 2.ராதை உனக்கு கோபம் ஆகாதடி >> 3.சொல்லு பாப்பா சொல்லு பாப்பா >> 4.பூமியில் மானிட ஜென்மம் அடைந்து >> 5.தீன கருணாகரனே நடராஜா >> 6.கிருஷ்னா முகுந்தா முராரே >> மன்மத லீலையை வென்றோர். ஆகிய பிரபல பாடல்கள் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்இசைப்பிரியர்களே மேலே கண்ட பிரபல பாடல்கள் கண்டு மிரண்டு விடாதீர்கள். இன்றைய இசைப் பிரியர்கள் அவசியம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய ஒலித்தொகுப்பு இது. இந்த ஒலித்தொகுப்பை நீங்கள் கேட்டாலே போதும் மானசீகமாக அந்த பாடலைப் பாடிய பாகவதர் ஸ்ரீ எம்.கே.டி அவர்களூக்கு மரியாதை செய்தது போல் இருக்கும். ஆகவே விசயத்துக்கு வருகிறேன் இசை ஜாம்பவான் எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு வானொலி சிறப்பு நிகழ்ச்சியின் பகுதி 1 சென்ற வாரம் சனிக்கிழமை வானொலியில் ஒலிப்பரப்ப கேட்டேன். பாடல்கள் எல்லாமே இன்றளவும் அறிவிப்பாளர் குடந்தை ஆர் வேங்கிடபதி ஐயா சொன்னது போல் சுப்பார் ஹிட் பாடல்கள் தான் அதில் சந்தேகமே இல்லை. கோவை வாழ் மக்களுக்கே தெரியாத சில ஸ்வாரசியமான தகவல்களை பாகவதர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து பாடல்களூக்கு இடையேயும் பாடல்கள் பிறந்த தகவல்களையும் மிகவும் பொருத்தமாக பொருத்தி அற்புதமாக தன் கவர்ச்சிக்குரலில் தொகுத்து வழங்கியது அசத்தல். அவருடன் சேர்ந்து துள்ளல் குரல்தொகுப்பாளினி திருமதி சோபியா விஜயகுமார் அவர்களின் கேள்விகளும் ஸ்வாரசியமாக இருந்தது கேட்பவர்களுக்கு ஒரு வித மனதிருப்தி ஏற்பட்டது என்பது முற்றிலும் சரி. நீங்களும் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே உங்கள் வாழ்த்துக்களையும் தொக்குப்பாளருக்கு தெரிவியுங்கள்.

பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இருவருக்கும் தெரிவித்துக்கொண்டு அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். -- கோவை ரவி

Thursday, March 18, 2010

60 செங்கனிவாய் திறந்து சிரித்திடுவாய்

,

சாண்டோ சின்னப்ப தேவர் புகழ் பெற்ற தயாரிப்பாளர் முரட்டுத் தோற்றம் கொண்ட இவர் முருக கடவுள் மீது அலாதியான பிரியம் வைத்திருப்பவர். தன் சினிமா தொழிலில் மிகவும் கண்டிப்பும் கறாரகவும் இருக்கும் ஒரே தயாரிப்பாளர் என்னைக்கவர்ந்த தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். இவரின் அறிதான தகவல்களூடன் அறிவிப்பாளினி வித்தியாச தகவல் சுரங்கம் ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களின் அற்புத ஒலித்தொகுப்பு கேட்டு மகிழுங்கள். இதோ, தீவிர வானொலியின் நேயரின் வியப்பில் ஆழ்த்தும் விமர்சனம். அற்புத ஒலித்தொகுப்பை பாசப்பறவைகள் இணைய தள நேயர்களூக்காக வழங்கிய அறிவிப்பாளினிக்கு வாழ்த்துக்கள்.

-கோவை ரவி.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சாண்டோ சின்னப்ப தேவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளுடன் அவற்றுக்கு ஏற்றவாறு, அவர்தம் தயாரிப்பில், நடிப்பில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற திரை இசைப் பாடல்களூடன் கோவை வானவில் பண்பலையில் நட்சத்திர மயிலிறகு சுகமாய் வலம் வந்தது.

அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதாராஜன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியது அற்புதம், நட்சத்திரத்தின் அறிமுகபடலம் யார் அந்த நட்சத்திரம்? என்று ஆர்வத்தை தூண்டும் வண்ணம் இருந்தது. கலை வந்த விதம் கேளு கண்ணே, என்ற பாடலை ஒலிபரப்பும் முன் கலையுலகில் தேவர் காலடி எடுத்து வைத்த நிகழ்ச்சியினை குறிப்பிட்டது, மிகவும் பொருத்தம்.

இதேபோன்று திருமணம், திரைப்பட தயாரிப்பு, பக்தி நிலை எம்.ஜி.ஆருடன் நட்பு என்று பலதரப்பட்ட தகவல்களை ரத்தின சுருக்கமாக மனதில் பதியும் வகையில் அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன் அளித்திருந்தார். அவரது உழைப்பு மிகவும் அதிகம் என்பது நிகழ்ச்சியின் ஒலிகோப்பினை நேயர்கள் கேட்டால், தெரிந்து கொள்வர். நிச்சயம் அவர்தம் உழைப்பிற்கு மனம் உவந்த பாராட்டுக்கள். அவரிடமிருந்து, மேன்மேலும் இதேபோன்று பிரபலமான இசை ஜாம்பவான்களின் அறிய தகவல்களூடன் வழங்குவார் என்று எதிர்ப்பார்ப்போம்.

-அகிலா விஜயகுமார், தண்ணீர்பந்தல்,அனுப்பர்பாளையம், திருப்பூர்

தரவிறக்கம் இங்கே அழுத்துங்கள்

1.மலைகளில் சிறந்த மலை மருதமலை
2.கலை வந்த விதம் கேளூ கண்ணே
3.செங்கனிவாய் திறந்து சிரித்திடுவாய்
4.கட்டான கட்டழகு கண்ணா
5.காட்டுகுள்ளே திருவிழா
6.அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
7.ஆசை அன்பு இலைகளினாலே
8.ஆண்டவன் உலகத்தின் முதலாளி
9.அன்பு தெய்வம் நீ
10.நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
11.கோடி மலைகளிலே கொடுக்கும் மலை

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, March 17, 2010

59 ஐரோப்பாவிலிருந்து இருந்து நேயர் விருப்பம்ஐரோப்பாவிலிருந்து நேயர் விருப்பம் - வழங்குபவர் திருமதி ராகினி பாஸ்கரன்.

ஆமாம் இசையன்பர்களே சென்ற வாரம் முதல் அறிவிப்பாளினி கொஞ்சும் குரல்யாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களின் ஐரோப்பாவிலிருந்து வானொலியில் ஒலிபரப்பட்ட தன் ஒலித்தொகுப்புக்களை நேயர் விருப்பமாக இணையதளத்தில் பதிய ஆரம்பித்திருக்கிறார்கள். பாசப்பறவைகள் தளத்தின் நேயர்களூம் தாங்கள் விரும்பி கேட்கும் பாடல்களை அவருடைய நேயர் விருப்பமான இந்த தளத்தில் சென்று பார்த்து அவருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உங்களூடைய விருப்பங்களையும் நிறைவேற்றுவார் உங்கள் பெயர்களூடன் வான்வெளியில் உலா வர நல்லதொரு வாய்ப்பு தளத்திற்க்கு சென்று உங்கள் வாழ்த்துகக்ளையும் தெரிவியுங்கள்.

Follow by Email