Sunday, March 21, 2010

61 எம்.கே.டி.பாகவதர் நூற்றாண்டு சிறப்பு வானொலி நிகழ்ச்சி பகுதி-1



எம்.கே.டி.பாகவதர் (1910 - 2010) நூற்றாண்டு சிறப்பு வானொலி நிகழ்ச்சி பகுதி-1



1.அம்பாள் மனம் திறந்து >> 2.ராதை உனக்கு கோபம் ஆகாதடி >> 3.சொல்லு பாப்பா சொல்லு பாப்பா >> 4.பூமியில் மானிட ஜென்மம் அடைந்து >> 5.தீன கருணாகரனே நடராஜா >> 6.கிருஷ்னா முகுந்தா முராரே >> மன்மத லீலையை வென்றோர். ஆகிய பிரபல பாடல்கள் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்



இசைப்பிரியர்களே மேலே கண்ட பிரபல பாடல்கள் கண்டு மிரண்டு விடாதீர்கள். இன்றைய இசைப் பிரியர்கள் அவசியம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய ஒலித்தொகுப்பு இது. இந்த ஒலித்தொகுப்பை நீங்கள் கேட்டாலே போதும் மானசீகமாக அந்த பாடலைப் பாடிய பாகவதர் ஸ்ரீ எம்.கே.டி அவர்களூக்கு மரியாதை செய்தது போல் இருக்கும். ஆகவே விசயத்துக்கு வருகிறேன் இசை ஜாம்பவான் எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு வானொலி சிறப்பு நிகழ்ச்சியின் பகுதி 1 சென்ற வாரம் சனிக்கிழமை வானொலியில் ஒலிப்பரப்ப கேட்டேன். பாடல்கள் எல்லாமே இன்றளவும் அறிவிப்பாளர் குடந்தை ஆர் வேங்கிடபதி ஐயா சொன்னது போல் சுப்பார் ஹிட் பாடல்கள் தான் அதில் சந்தேகமே இல்லை. கோவை வாழ் மக்களுக்கே தெரியாத சில ஸ்வாரசியமான தகவல்களை பாகவதர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து பாடல்களூக்கு இடையேயும் பாடல்கள் பிறந்த தகவல்களையும் மிகவும் பொருத்தமாக பொருத்தி அற்புதமாக தன் கவர்ச்சிக்குரலில் தொகுத்து வழங்கியது அசத்தல். அவருடன் சேர்ந்து துள்ளல் குரல்தொகுப்பாளினி திருமதி சோபியா விஜயகுமார் அவர்களின் கேள்விகளும் ஸ்வாரசியமாக இருந்தது கேட்பவர்களுக்கு ஒரு வித மனதிருப்தி ஏற்பட்டது என்பது முற்றிலும் சரி. நீங்களும் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே உங்கள் வாழ்த்துக்களையும் தொக்குப்பாளருக்கு தெரிவியுங்கள்.

பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இருவருக்கும் தெரிவித்துக்கொண்டு அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். -- கோவை ரவி

6 comments:

gopalv1958 said...

Ravee Sir, A fitting tribute to Sri.M.K.T. Ayya. Hats off to you for your timely remembrance.
Anban,
V. Gopalakrishnan.

Covai Ravee said...

வாங்க கோபலகிருஷ்னன் சார் உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகத்தை தருகிறது. உங்கள் பாராட்டு அறிவிப்பாளர் திரு.குடந்தை ஆர்.வெங்கிடபதி ஐயா அவர்களை போய் சேரும். வருகைக்கு நன்றி.

Anonymous said...

Dear Ravee Sir,


Thanks for sharing. But it was sad thing that such a famous singer / actor suffered lot during his final years.
--
Lets create a better tomorrow.

With best regards,
Ramanathan Sundaram.

Covai Ravee said...

Dear Ramanathan sir.

I warm welcome to this blog.

//Thanks for sharing. But it was sad thing that such a famous singer / actor suffered lot during his final years.//

Yes you are correct I hope Mr.Kudanthai Venkatapathi sir will include these details also in next post.

Thanks for coming and ur valubale comments.

covai ravee

Anonymous said...

vanakkam covai ravee avargalee ungalathu pathivinai naan ketten migavum arumai nandri vazhuthukkal engal pathivinai vadivamaitha tarkku nandrigal pala

-Shophiya Vijayakumar RJ,RFM

Covai Ravee said...

வருக வருக உங்கள் ஊக்கம் உற்சாகம் தருகிறது இது போல் வித்தியாசமான ஒலிபரப்புகள் தொடரும். வருகைக்கு நன்றி.

Follow by Email