Thursday, April 22, 2010

70 கதையும்,காதலும் கலந்தது கானம்



கதையும்,காதலும் கலந்தது கானம் - தீவிர நேயரின் ஆக்கம் பதிவிறக்கம் இங்கே, மேலும்,உங்கள் ஸ்பீக்கரின் ஒலி அளவை தேவைக் கேற்ப வைத்துக்கொள்ளூங்க.

கதையும், காதலும் இணைந்து அற்புத கானங்கள் வானொலியில் மனதோடு நிகழ்ச்சியில் வழங்கிய தீவிர வானொலி நேயர் திருப்பூர், தண்ணீர்பந்தல், திரு.அகிலா விஜயகுமார் அவர்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக அமைதியான முறையில் தொகுத்து வழங்கியவர் சாக்லேட் குரலோன் சசிக்குமார் அவர்கள். அகிலா விஜயகுமார் அவர்கள் அதி தீவிர வானொலி பக்தர் அவரின் ஆக்கங்கள் யாவும் யோசிக்கவைக்கும், அவரின் பாடல் தெரிவுகள் என்றுமே எதிர்ப்பாக்க வைக்கும் தெரிவுகள். நேற்று வானொலியில் ஒலி உலா வந்த அவரின் இந்த ஒலித்தொகுப்பு உடனே பதிவு செய்து உங்கள் காதுகளூக்கு விருந்து படைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த தொகுப்பை வழங்கிய எனது நண்பர்களான நேயர் திரு. அகிலா விஜயகுமார் அவர்களுக்கும், அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்களூக்கும் பாசப்பறவைகள் சார்பாக நன்றிகள் பல. கேட்டு மகிழுங்கள் அப்படியே உங்கள் கருத்துக்களை தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

1.ஆயிரம் கோடி ஆண்டுகளாக >> 2.சந்திர பிறை பார்த்தேன் >> 3.அழகிய விழிகளில் அறுபது கலைகளூம் >> 4.தெரியாதோ நோக்கு தெரியாதோ >> 5.கண்ணன் மனம் என்னவோ >> 6.என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு >> 7.ராசாவே உன்னை என்னி >> 8.மல்லிகையே தூதாகப் போ >> 9.ஓ ஜகமதி இன்பம் தான் வருவதும் >> 10.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email