Thursday, June 24, 2010

79 தமிழிசை மலர் மஞ்சரி

அய்யன் திருவள்ளுவர்

1.அகர முதல எழுத்தெல்லாம் >> 2.நல்ல பொன்னாள் இதுபோலே >> 3.பாடுகின்றேன் உன்னை பாடுகின்றேன் >> 4.பச்சை மாமலைப் போல் மேனி >> 5.ஏடு தந்தானடி தில்லையிலே >> 6.முத்தைத் தருபத்தி >> 7.செங்கையில் வண்டு >> 8.பொறுமையுடன் நினது திருமலரடி >> 9.சொல்லவன்னா கிளியே >> 10.ஒரு நாள் ஒரு பொழுதாகியும் >>11.செந்தமிழே வணக்கம்.

”தமிழிசை மலர் மஞ்சரி” இசையன்பர்களே பாடல் பல்லவிகளை பார்த்தீர்களா? எல்லாமே தமிழ்மணம் வீசும் தமிழிசையை வளர்த்த சான்றோர்களூக்கு வழங்கும் தமிழிசை மலர் மஞ்சரி தான் இது. செம்மொழி மாநாடு துவங்கிய கோவை மாநகரில் தமிழ் ஜுரம் எங்கும் தொற்றிக்கொண்டது அவை வானொலி நேயர்களின் மீதும் படர்ந்தது என்றால் மிகையாகாது அதன் வகையில் வானொலி நேயர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர் திருப்பூர் தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்து திரு.அகிலா விஜயகுமார் அவர்கள் மேலே உள்ள பாடல்களை தேடிப்பிடித்து சங்க காலத்தின் புத்தகங்களினுள் புழுவாய் புகுந்து தேடி எடுத்த தகவல்களை கேட்டால் ஆச்சரியபடுவீர்கள். அப்படி சேகரித்த தகவல்களை பாடல்களின் ஊடே வழங்கி ஒரு இனிமையான தமிழிசை தொகுப்பாக கோவை நேயர்களூக்காக 23ஆம் தேதி வானொலியில் மனதோடு தான் நிகழ்ச்சியில் வழங்கினார். எனக்கென்னமோ ஓரிரு நாட்களீல் எழுதிய தொகுப்பாக எனக்கு தெரியவில்லை பலநாட்கள் இதற்கு பல மணி நேரங்கள் செலவு செய்திருப்பார் போலும் அவரின் உழைப்பு தொகுப்பில் உணர்ச்சியுடன் பிரகாசிக்கிறது.

திரு.அகிலா விஜயகுமாரின் எழுத்துக்களை பல ஒலித்தொகுப்புகளில் நான் கேட்டு அதியப்பட்டிருக்கிறேன். அவரின் பல தொகுப்புக்கள் இந்த தளத்திலும் தேன்கிண்ணத்திலும் வந்துள்ளது. அவரின் அபார திறமைக்கு என் வாழ்த்துக்கள். அவரின் இந்த சேவை இணையதள நண்பர்களூக்கு என்றும் தேவை. இவரின் ஆக்கங்களை வாசிக்க அறிவிப்பாளர்கள் மிகவும் விருப்புவார்கள் ஏனென்றால் எழுத்துக்கள் எதுகை மோனையுடன் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அறிவிப்பாளர்கள் மிகவும் கவனமாகாகவும் பேச முயற்சிப்பார்கள். இந்த ஒலித்தொகுப்பில் கூட துள்ளல் குரல் தொகுப்பாளினி திருமதி. சோபியா விஜயகுமார் மிகவும் கவனத்துடன் தொகுத்து வழங்கியது மிகவும் அப்பட்டமாக தெரிந்தது. இவரின் ஒலித்தொகுப்புக்களூம் இந்த தளத்தில் வந்துள்ளன வளர்ந்து வரும் தொகுப்பாளினி அவருக்கும் ஆக்கத்தை இணைதள நண்பர்களூக்காக அனுப்பிவைத்த அகிலா விஜயகுமார் அவர்களூக்கும் பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

தமிழிசை மலர் மஞ்சரி பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, June 21, 2010

78 ஒரு கோப்பையிலே ஒரு குடியிருப்புசென்ற ஞாயிறு அன்று 20ஆம் தேதி கவிஞர் கண்ணதாசனின் நினைவுகள் என்ற தலைப்பில் வானொலியில் ஒரு ஒலித்தொகுப்பு நிகழ்ச்சியை அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் கணீர் என்ற தன் குரலில் தொகுத்து வழங்கினார். ஒலித்தொகுப்பில் பாடல்கள் யாவும் ஏற்கெனவே இந்த தளத்தில் கேட்டதுதான் என்றாலும் அணைத்தும் கேட்க சலிக்காத பாடல்கள் ஒவ்வொரு பாடல்களின் ஊடே பாடல் வரிகளின் விளக்கங்கள் மற்றும் கவிஞரின் பாடலுடன் சம்பந்தப்பட்ட தகவல்கள் ஏற்கெனவே பல இணையதளங்களில் குறிப்பிட்டிருந்தாலும் மீண்டும் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கவிஞரின் நினைவுகளை நம் மனக்கண் முன் நிழலாட வைத்து மட்டுமல்லாமல் இந்த ஒலித்தொகுப்பை ஒலிபரப்ப மிகவும் உதவியாக இருந்த அனைவருக்கும், அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவரகளுக்கும் நன்றி.

பதிவிறக்கம் இங்கே

1. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு >> 2. என்னதான் ரகசியமோ இதயத்திலே >.
3. பார்த்தா பசுமரம் >> 4. உன் கண்ணில் நீர்வழிந்தால் >> 5.உடலுக்கு உயிர் காவல் >>
6. அத்தை மகனே போய் வரவா >> 7. பார்த்தேன் சிரித்தேன் >>

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, June 15, 2010

77 காவிரி தாயே..காவிரி தாயேசமீபத்தில் வானொலி நேயர்கள் விரும்பி கேட்ட பாடல் தொகுப்பு இது. பாடல்கள் எல்லாம் கேட்பதற்க்கு மிகவும் இனிமையாக இருந்தது. நீங்களும் கேட்டு மகிழுங்கள் தொகுத்து வழங்கியவர் துள்ளல் குரல் தொகுபபளினி திருமதி.சோபியா விஜயகுமார். அவர்களுக்கு நன்றி.

1. ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலை விரும்பி கேட்டவர் திரு.மணீமுத்து, திருப்பூர்
2. உடுமலையில் இருந்து திரு.ஆனந்த் அவர்கள் கேட்ட பாடல் நினைப்பெதெல்லாம் நடந்துவிட்டால்
3. மீன்கடை பெருமாள் அவர்கள் விரும்பிய பாடல் கலைமகள் கைப்பொருளே பாடல்
4. திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்கள் வேண்டி விரும்பி கேட்ட வித்தியாசமான காவிரி தாயே என்ற பாடல்
5. ஆட்டு வித்தால் யாரொருவர் என்ற பாடலை விரும்பி கேட்டவர் காமநாயக்கன்பாளையம் சவுண்டப்பன்
6. மணி அவர்கள் விரும்பி கேட்ட பாடல் சின்ன சின்ன இதழ் விரித்து
7. நான் பெற்ற செல்வம் என்ற பாடலை விரும்பி கேட்டவர் சவுரிபாளையம் வின்செண்ட் அவர்கள்
8. திருப்பூர் சிறுமி சுபிக்‌ஷா விரும்பி கேட்டு பாடிய பாடல் எலந்தபயம் எலந்தபயம்
9. மஜித் அவர்க்ள் கேட்ட பாடல் பாழும் பழமும் கைகளீல் ஏந்தி
10. ஒரு நாள் யாரோ என்ற பாடலை விரும்பி கேட்டவர் நேயர்
11. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், என்ற பாடலை விரும்பி கேட்டவர்
12. திருப்பூர் மாவடார் நாடார் தெருவிலிருந்து திரு. செல்வராஜ் கேட்ட பாடல் ஆடலுடன் பாடலை கேட்டேன்

Get this widget | Track details | eSnips Social DNAfor download click here

Saturday, June 5, 2010

76 டாக்டர்எஸ்.பி.பி பிறந்த நாள் வாழ்த்து தொகுப்புடாக்டர் எஸ்.பி.பி பிறந்த நாள் வாழ்த்து தொகுப்பு

அகவையோ 64 + இனியகுரலோ 24 >> பாலுஜியின் கோவை வானொலியில் ஒலிபரப்பான சிறப்பு பிறந்த நாள் நிகழ்ச்சி 2.அகவையோ அறுபத்தி நான்கு
இனியகுரலோ இருபத்தி நான்கு
பொதிகை மலையில் இருந்து
காற்று இளம் தென்றலாகவும்
கடலின் மையத்தில் உருவாகும்
புழுதி பறக்கும் புயல் காற்றாகவும்
உருவெடுத்து நம் மனதை உருக்குலைக்கும்
உன்னதமான குரலுக்கு, உயர்வான குரலுக்கு
என்றுமே இருபத்தி நான்கு தான்
பாலுஜியே வாழ்க பல்லாண்டு
என்றென்றும் பலமுடன்! வளமுடன்!!

சரிங்க விசயத்துக்கு வருவோம் இதோ இந்த பதிவில் இருக்கும் ஒலித்தொகுப்பு கோவை வானொலியில் 2ஆம் தேதி நேயர் பங்கெடுக்கும் மனதோடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பட்ட எனது சிறப்பு பாலுஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சி. இதில் வரும் பாடல்கள் அனைத்தும் இந்த தளத்தில் வந்தவவை தான். பிரபலமான இடைக்கால பாடல்களின் தொகுப்பை தேர்ந்தெடுத்து எனது இனிய நினைவுகளுடன் கலந்து, எனது மனதில் உருவான உணர்ச்சியின் உந்துலால் நான் ரசித்ததை தங்களுக்கு பாலுஜியின் பிறந்த நாளில் உங்கள் முன் படைத்திருக்கிறேன் அதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறேன்.

1.அதாண்டா இதாண்டா >> 2.வெற்றிமீது வெற்றி வந்து >> 3.திருமகள் தேடி வந்தாள் >>
4.தங்க நிலவுக்குள் >> 5.சந்தனக் காற்றில் >> 6.நானொரு கோயில் நீயொரு தெய்வம் >>
7.பூவில் வண்டு வந்து >> 8.உன்னால் முடியும் தம்பி தம்பி >> 9.என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து கூறுங்கள். மேலும், இந்த ஒலித்தொகுப்பை இங்கே தரவிறக்கம் செய்து கேளுங்கள் நீங்கள் பாலுஜி ட்ரஸ்டுக்கு ஒரு துளி பங்கு இருக்கும்
ஆகிய மனதை கொள்ளைக்கொண்டு போகும் பாடல்களின் இடையிடையே நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? எல்லோரும் விரும்பும்படி அளவுடன் அடக்கி வாசித்திருக்கிறேன் அவ்வளவே. என்னைப்போலவே நிகழ்ச்சியை அறிவிப்பாளினி திருமதி சந்திரா அவர்கள் அலட்டல் இல்லாமல் அமைதியுடன் மிகவும் நேர்த்தியாக வழங்கி நிகழ்ச்சிக்கு மெருகேற்றினார் என்றுதான் சொல்லவேண்டும். கேட்பதற்க்கு மிகவும் மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. இரண்டு நாட்களில் எனது பிரதியை வானொலி நிலையத்தாருக்கு அனுப்பி வைத்தேன் உடனே தேர்ந்தெடுத்து மனதோடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பியது கண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதற்கு பெரிதும் துணை புரிந்து உதவிய எனது திருப்பூர் நண்பர் தண்ணீர் பந்தல் திரு.அகிலா விஜயகுமார் அவர்களுகும் என் மனமார்ந்த நன்றி.

இந்த ஒலித்தொகுப்பை பாலுஜி அவர்கள் 65 ஆம் ஆண்டு அகவையில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்கள் முன் படைக்கிறேன். உங்கள் உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளையும் பாலுஜியின் வாழ்த்துக்களையும் பாலுஜிக்கு இங்கேயும் தங்களின் கருத்துக்களை எனக்கு கீழே தெரிவியுங்கள் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

என் வானொலி ஒலிக்கோப்பு வேண்டுபவர்கள் எனது இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கப்படும் covairavee@gmail.com

Follow by Email