Saturday, June 5, 2010

76 டாக்டர்எஸ்.பி.பி பிறந்த நாள் வாழ்த்து தொகுப்பு



டாக்டர் எஸ்.பி.பி பிறந்த நாள் வாழ்த்து தொகுப்பு

அகவையோ 64 + இனியகுரலோ 24 >> பாலுஜியின் கோவை வானொலியில் ஒலிபரப்பான சிறப்பு பிறந்த நாள் நிகழ்ச்சி 2.















அகவையோ அறுபத்தி நான்கு
இனியகுரலோ இருபத்தி நான்கு
பொதிகை மலையில் இருந்து
காற்று இளம் தென்றலாகவும்
கடலின் மையத்தில் உருவாகும்
புழுதி பறக்கும் புயல் காற்றாகவும்
உருவெடுத்து நம் மனதை உருக்குலைக்கும்
உன்னதமான குரலுக்கு, உயர்வான குரலுக்கு
என்றுமே இருபத்தி நான்கு தான்
பாலுஜியே வாழ்க பல்லாண்டு
என்றென்றும் பலமுடன்! வளமுடன்!!

சரிங்க விசயத்துக்கு வருவோம் இதோ இந்த பதிவில் இருக்கும் ஒலித்தொகுப்பு கோவை வானொலியில் 2ஆம் தேதி நேயர் பங்கெடுக்கும் மனதோடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பட்ட எனது சிறப்பு பாலுஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சி. இதில் வரும் பாடல்கள் அனைத்தும் இந்த தளத்தில் வந்தவவை தான். பிரபலமான இடைக்கால பாடல்களின் தொகுப்பை தேர்ந்தெடுத்து எனது இனிய நினைவுகளுடன் கலந்து, எனது மனதில் உருவான உணர்ச்சியின் உந்துலால் நான் ரசித்ததை தங்களுக்கு பாலுஜியின் பிறந்த நாளில் உங்கள் முன் படைத்திருக்கிறேன் அதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறேன்.

1.அதாண்டா இதாண்டா >> 2.வெற்றிமீது வெற்றி வந்து >> 3.திருமகள் தேடி வந்தாள் >>
4.தங்க நிலவுக்குள் >> 5.சந்தனக் காற்றில் >> 6.நானொரு கோயில் நீயொரு தெய்வம் >>
7.பூவில் வண்டு வந்து >> 8.உன்னால் முடியும் தம்பி தம்பி >> 9.என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து கூறுங்கள். மேலும், இந்த ஒலித்தொகுப்பை இங்கே தரவிறக்கம் செய்து கேளுங்கள் நீங்கள் பாலுஜி ட்ரஸ்டுக்கு ஒரு துளி பங்கு இருக்கும்




ஆகிய மனதை கொள்ளைக்கொண்டு போகும் பாடல்களின் இடையிடையே நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? எல்லோரும் விரும்பும்படி அளவுடன் அடக்கி வாசித்திருக்கிறேன் அவ்வளவே. என்னைப்போலவே நிகழ்ச்சியை அறிவிப்பாளினி திருமதி சந்திரா அவர்கள் அலட்டல் இல்லாமல் அமைதியுடன் மிகவும் நேர்த்தியாக வழங்கி நிகழ்ச்சிக்கு மெருகேற்றினார் என்றுதான் சொல்லவேண்டும். கேட்பதற்க்கு மிகவும் மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. இரண்டு நாட்களில் எனது பிரதியை வானொலி நிலையத்தாருக்கு அனுப்பி வைத்தேன் உடனே தேர்ந்தெடுத்து மனதோடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பியது கண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதற்கு பெரிதும் துணை புரிந்து உதவிய எனது திருப்பூர் நண்பர் தண்ணீர் பந்தல் திரு.அகிலா விஜயகுமார் அவர்களுகும் என் மனமார்ந்த நன்றி.

இந்த ஒலித்தொகுப்பை பாலுஜி அவர்கள் 65 ஆம் ஆண்டு அகவையில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்கள் முன் படைக்கிறேன். உங்கள் உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளையும் பாலுஜியின் வாழ்த்துக்களையும் பாலுஜிக்கு இங்கேயும் தங்களின் கருத்துக்களை எனக்கு கீழே தெரிவியுங்கள் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

என் வானொலி ஒலிக்கோப்பு வேண்டுபவர்கள் எனது இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கப்படும் covairavee@gmail.com

2 comments:

நிலாமதி said...

இன்று தான் இதைக்கண்டு கொண்டேன். எஸ் பீ யின் பாடல்களால் மிகவும் ஈர்க்க பட்டவள் . பாடல் தெரிவும் இந்த பதிவும் மிகவும் பயனுள்ளவை. ரசித்தேன்...தேன்....மிகவும் நன்றி கோவை ரவி அவர்களே. ..

Covai Ravee said...

வருக வருக என்று மனதார மகிழ்ச்சியுடன் இந்த தளத்திற்க்கும் வரவேற்கிறேன். கோவை நேயர்களும் அறிவிப்பாளர்களும் வழங்கும் அற்புதமான நிகழ்ச்சி தொகுப்புக்களை கேட்க அடிக்கடி வாங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கோவை ரவி

Follow by Email