Thursday, June 24, 2010

79 தமிழிசை மலர் மஞ்சரி

அய்யன் திருவள்ளுவர்

1.அகர முதல எழுத்தெல்லாம் >> 2.நல்ல பொன்னாள் இதுபோலே >> 3.பாடுகின்றேன் உன்னை பாடுகின்றேன் >> 4.பச்சை மாமலைப் போல் மேனி >> 5.ஏடு தந்தானடி தில்லையிலே >> 6.முத்தைத் தருபத்தி >> 7.செங்கையில் வண்டு >> 8.பொறுமையுடன் நினது திருமலரடி >> 9.சொல்லவன்னா கிளியே >> 10.ஒரு நாள் ஒரு பொழுதாகியும் >>11.செந்தமிழே வணக்கம்.





”தமிழிசை மலர் மஞ்சரி” இசையன்பர்களே பாடல் பல்லவிகளை பார்த்தீர்களா? எல்லாமே தமிழ்மணம் வீசும் தமிழிசையை வளர்த்த சான்றோர்களூக்கு வழங்கும் தமிழிசை மலர் மஞ்சரி தான் இது. செம்மொழி மாநாடு துவங்கிய கோவை மாநகரில் தமிழ் ஜுரம் எங்கும் தொற்றிக்கொண்டது அவை வானொலி நேயர்களின் மீதும் படர்ந்தது என்றால் மிகையாகாது அதன் வகையில் வானொலி நேயர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர் திருப்பூர் தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்து திரு.அகிலா விஜயகுமார் அவர்கள் மேலே உள்ள பாடல்களை தேடிப்பிடித்து சங்க காலத்தின் புத்தகங்களினுள் புழுவாய் புகுந்து தேடி எடுத்த தகவல்களை கேட்டால் ஆச்சரியபடுவீர்கள். அப்படி சேகரித்த தகவல்களை பாடல்களின் ஊடே வழங்கி ஒரு இனிமையான தமிழிசை தொகுப்பாக கோவை நேயர்களூக்காக 23ஆம் தேதி வானொலியில் மனதோடு தான் நிகழ்ச்சியில் வழங்கினார். எனக்கென்னமோ ஓரிரு நாட்களீல் எழுதிய தொகுப்பாக எனக்கு தெரியவில்லை பலநாட்கள் இதற்கு பல மணி நேரங்கள் செலவு செய்திருப்பார் போலும் அவரின் உழைப்பு தொகுப்பில் உணர்ச்சியுடன் பிரகாசிக்கிறது.

திரு.அகிலா விஜயகுமாரின் எழுத்துக்களை பல ஒலித்தொகுப்புகளில் நான் கேட்டு அதியப்பட்டிருக்கிறேன். அவரின் பல தொகுப்புக்கள் இந்த தளத்திலும் தேன்கிண்ணத்திலும் வந்துள்ளது. அவரின் அபார திறமைக்கு என் வாழ்த்துக்கள். அவரின் இந்த சேவை இணையதள நண்பர்களூக்கு என்றும் தேவை. இவரின் ஆக்கங்களை வாசிக்க அறிவிப்பாளர்கள் மிகவும் விருப்புவார்கள் ஏனென்றால் எழுத்துக்கள் எதுகை மோனையுடன் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அறிவிப்பாளர்கள் மிகவும் கவனமாகாகவும் பேச முயற்சிப்பார்கள். இந்த ஒலித்தொகுப்பில் கூட துள்ளல் குரல் தொகுப்பாளினி திருமதி. சோபியா விஜயகுமார் மிகவும் கவனத்துடன் தொகுத்து வழங்கியது மிகவும் அப்பட்டமாக தெரிந்தது. இவரின் ஒலித்தொகுப்புக்களூம் இந்த தளத்தில் வந்துள்ளன வளர்ந்து வரும் தொகுப்பாளினி அவருக்கும் ஆக்கத்தை இணைதள நண்பர்களூக்காக அனுப்பிவைத்த அகிலா விஜயகுமார் அவர்களூக்கும் பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

தமிழிசை மலர் மஞ்சரி பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Covai Ravee said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்பது அவனுடைய படைப்புக்கள் பாராட்டபடுகின்றபொழுதுதான் திரு. அகிலா விஜயகுமார் வானொலி மூலமாக வழங்கிய இனிமையான பாடல்களை ருசித்து அனுபவித்து பாராட்டியிருக்கிறீர்கள் ஒருவரின் படைப்புக்களை பாராட்டி பெருமைக்கொள்வதில் தமிழனுக்கு ஈடு தமிழன் தானே.

Udhaya Nila, Soudhi Arabia

Follow by Email