Thursday, July 22, 2010

87 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதுஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது - நடிகர் திலகம் நினைவு நாள்

1.யார் அந்த நிலவு >> 2.செல்லக்கிளிகளா பள்ளியிலே >> 3.மெழுகு வர்த்தி எரிகின்றது >> 4.வந்த நாள் முதல் இந்த நாள் வரை >> 5.உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

ரொம்ப நாள் கழித்து அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்களின் ஒலித்தொகுப்பு நேற்று கேட்க நேர்ந்தது அதில் சில பகுதிகளை இங்கே தங்களிடம் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். பல வானொலிகள் நடிகர் திலகத்தின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் பல வழங்கினாலும். எனக்கு இரவு நேரத்தில் இந்த நிகழ்ச்சி தான் அமைதியாக கேட்க முடிந்தது. அதுவும், கீழ்கண்ட பாடல்கள் அனைத்தும் இந்தே தளத்தில் பல பதிவுகளில் வந்தவை தான். இருந்தாலும் நடிகர் திலகத்தின் சில தகவல்களூடன்
இடையிடையே அவரின் பாடல்களை கேட்டால் நம் மனதிற்கு ஆத்மார்த்தமான அமைதி ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மனதார நம் அஞ்சலியையும் செலுத்தும் உணர்வு ஏற்படுகிறது. அதிகம் எழுதி நேரத்தை வீணடிக்காமல் பாடலுக்குள் செல்லுங்கள் அறிவிப்பாளர் லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் கம்பீர குரலில் சில தகவல்களை தந்துள்ளார் இவரின் சிறப்பே தகவல்களை சிரமம் பாராமல் தேடிப் பிடித்து நமக்காக வழங்கியிருக்கிறார். எதிர் வரும் புதிய தலைமுறை அறிந்து கொள்ள இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேலும், பாலைவனத்தின் நடுவே சோலையை கண்டதும் மனது துள்ளிக் குதித்து கும்மாளம் அடிப்பது போல் சமீபகாலமாக இடைக்கால பாடல்களையே ஒலிபரப்பி வந்த லக்‌ஷ்மி நாராயாணா அவர்களுக்கு இந்த பழைய பாடல்கள் தொகுப்பு அதுவும் டி.எம்.எஸ். அண்ணாவின் பாடல்களை தொகுத்து இந்த நிகழ்ச்சிகாக பாடல்களை ர்ந்தெடுத்ததிலிருந்தே அவரின் உள்ளத்தின் உயிரோட்டமான உற்சாகத்தை பார்க்கமுடிகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த அற்புதமான ஒலித்தொகுப்பிற்க்கு தேவையான தகவல்களை சேகரித்து வழங்கியதற்காக
அவர்களூக்கு பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்களூம் கேட்டு இன்புறுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, July 19, 2010

86 உறவு என்ற வானத்திலே
பொதுவாகவே ஒவ்வொரு வானொலி அறிவிப்பாளருக்கும் தனித்திறமை இருக்கும் அப்படி இருந்தால் தான் ஊடங்களில் நிலைத்து நிற்கமுடியும் அதுவும் வானொலிகளில் நிகழ்ச்சியை குறித்த நேரத்துக்குள் நிகழ்ச்சியை தொகுத்து தரும் விதம் என்னை பலதடவை ஆச்சரியபடுத்தியிருக்கிறது. உதாரணத்திற்க்கு பல நிகழ்ச்சிகள் இந்த தளத்திலே உள்ளன இதற்கு முன் பதிந்த அமுதகானம் முத்துக்கள் பத்து நிகழ்ச்சியின் தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது அதில் அறிவிப்பாளரின் உன்னதமான உழைப்பு வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியிலும் மற்ற நிகழ்ச்சிகளில் துள்ளி குதித்து குதுகலத்துடன்
தொகுத்து வழங்கும் துள்ளல் குரல் தொகுப்பாளினி திருமதி.சோபியா விஜயகுமார் அவர்கள் மயிலிறகு நிகழ்ச்சிக்கு எப்போது வந்தாலும் நிகழ்ச்சியின் தலைப்பிற்க்கு ஏற்றார் போல் அமைதியாக அடக்கி வாசிப்பது மிகவும் அழகாக இருந்தது. இவர் நேயர்களுடன் கனிவாக பேசி பாடல் கேட்டு ஒலிப்பரப்புவது இவரின் சிறப்பு. தொகுப்பாளினி திருமதி.சோபியா விஜயகுமார் அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக வாழ்த்துக்களூம், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். கீழ்கண்ட பாடல் தொகுப்பை கேட்டு மகிழுங்கள்.

பதிவிறக்கம் இங்கே

1.வழக்கறிஞர் திரு.முத்துகுமார் விரும்பிய பாடல் வாழ்வுக்கொரு மனம் மனம்.
2.என் ஆருயிரே என்ற பாடலை வேண்டி விரும்பி கேட்ட நேயர் திருப்பூர் திரு.பி.ஆர்.மோஹனசுந்தரம்.
3.பத்மாவதி என்ற நேயரின் விருப்பப்பாடல் அன்றொரு நாள் அவனுடைய.
4.உடுமலை பேட்டை திரு.ஆனந்த் அவர்களின் விருப்பப்பாடல் நான் பேச நினைப்பதெல்லாம்.
5.நாகராஜ் அவர்கள் கருமத்தம்ப்பட்டியில் இருந்து விரும்பி கேட்ட பாடல் வீடு நோக்கி ஓடுகின்ற.6.தாராபுரம் ஆசிரியர் திரு.பழனிசாமி அவர்களின் விருப்பப்பாடல் மலருக்கு தென்றல் பகையானால்.
7.குன்னத்தூர் போட்டோகிராபர் திரு.மூர்த்தி அவர்கள் விரும்பிய பாடல் வசந்ததில் ஓர் நாள்
8.தாராபுரத்திலிருந்து திரு.எம்.துரைராஜ் அவர்களின் விருப்பப்பாடல் உறவு என்ற வானத்திலே.9.திரு.அரங்கநாதன் அவர்கள் கோவை புதூரில் இருந்து விரும்பிய பாடல் இதய வானிலே உதயமானதே.
10.திரு.கிளாரினெட் காளிமுத்து அவர்கள் திருப்பூரில் இருந்து கேட்ட பாடல் இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு.11.பொள்ளாச்சியில் இருந்து திருமதி.பாரதி விரும்பிய பாடல் இறைவன் படைத்த உலகில் எல்லாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, July 18, 2010

85 அமுதகானம் முத்துக்கள் பத்துஅன்புடையீர், வணக்கம் முதலில் இந்த நிகழ்ச்சியை வழங்கிய கோவை அரசன் ஆப்டிக்கல்ஸ் நிறுவனத்தாருக்கும். ஒலித்தொகுப்பை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கிய எனது அருமை நண்பர் அறிவிப்பாளர் ரம்மியமான குரலுடைய திரு.ரவி அவர்களூக்கு நன்றி.

அமுதகானம் முத்துக்கள் பத்து என்ற நிகழ்ச்சி கடந்த பத்து வாரங்களாக வானொலியில் கிட்டத்தட்ட சுமார் 100 பழைய பாடல்கள் ஒலிபரப்பி வானொலி நேயர்கள் மூலம்
குறுந்தகவல்கள் மூலம் ஒவ்வொரு வாரமும் பத்து பாடல்களை ஒலிப்பரப்பி ஒன்றை தேர்ந்தெடுத்து கடந்த பத்து வாரங்கள் மூலம் முதல் இடம் பெற்ற அந்த பத்து
பாடல்களையும் திரட்டி சென்ற சனிக்கிழமை ஒலிப்பரப்பினார்க்ள். கோவை வானொலியில் மயிலிறகு என்ற் நிகழ்ச்சிக்கு ஒரு பெருங்கூட்டமே இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்ததில் வியப்பு ஏதும் இல்லை. கீழ்கண்ட பாடல்களின் பட்டியல் தான் இந்த நிகழ்ச்சியில் போட்டிக்காக ஒலிப்பரப்பட்டது.
ஒவ்வொரு பாடல்களூக்கும் வானொலி நேயர்கள் குறுந்தகவல்கள் அனுப்பி தான் விரும்பிய பாடல் இந்த வாரம் இடம் பெறுமா என்று ஒரு வித பரவசத்துடன் காத்திருந்தார்கள்.
அவர்கள் தேந்தெடுத்த பாடல்களின் பட்டியல் வரிசைபடி குறுந்தகவல்கள் பெற்ற அடிப்படையில் தேர்ந்தெடுத்து. ஒவ்வொன்றாக ஒலிப்ப்ரப்பி அதிகம் வோட்டுக்கள் பெற்ற பாடலை ஒலிப்பரப்பினார் அறிவிப்பாளர். நிகழ்ச்சி கேட்பதற்க்கு ஒரு வித புதுவித அனுபவமாக இருந்தது என்பது தான் உண்மை.

பொன்னை விரும்பும் பூமியிலே >> மாதவி பொன்மயிலால் தோகை >>
நாளை இந்த வேளை காண >> காதோடுதான் நான் பேசுவேன் >> ஓர்ராயிரம் பார்வையிலே >>செந்தமிழ் தேன் மொழியால் >> அழகிய தமிழ்மகள் இவள் >> பொன் ஒன்று கண்டேன் >> எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் >> நிலவு ஒரு பெண்ணாகி.


மேலும், அறிவிப்பாளர் ஒவ்வொரு பாடல்களுக்கு இடையையேயும் அந்தந்த பாடல் பெற்ற வோட்டுக்களை மிகவும் ஸ்வாரசியமாக தொகுத்து சில நேயர்களின் பெயர்களையும்
வாசித்தது கேட்ட நேயர்களூக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்றால் மிகையல்ல. நாம் அதிகம் விளக்க விரும்பவில்லை ஏனென்றால் அறிவிப்பாளர் ரம்மியமான குரலுடைய திரு.ரவி அவர்களின் தொகுப்பு மிகவும் இனிமையாக நிகழ்ச்சிக்கும் பெருமை சேர்த்தது. இதோ கேட்க ஆரம்பித்து விடுங்கள் இசைப்பிரியர்களே அபப்டியே உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளையும் எழுதிவிடுங்கள் சரீங்களா?

அதுவெல்லாம் சரிப்பா... நீங்கள் எந்த பாட்டுக்கு வோட்டு போட்டீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. உண்மையை சொன்னால் நான் எந்த பாடலுக்கும் வோட்டு போடவில்லை ஏனென்றால் நிகழ்ச்சியே முத்துக்கள் பத்து. பொதுவாகவே முத்த்க்கள் எல்லாமே மிக அழகாக இருக்கும். அதே போல் அணைத்து பாடல்களும் என்னை கவர்ந்தவை தான் அதனை பிரித்து வரிசை படுத்த என் மனம் ஒப்பவில்லை மேலும் ஒவ்வொரு பாடலும் ஒரு விதத்தில் சிறப்பானது என்பது தான் என் கருத்து. ஆகையால், முத்துக்கள் பத்து எல்லாமே என் சொத்து. ஓகே. (யப்ப்ப்ப்ப்பா...எஸ்கேப்!).

நிகழ்ச்சி கேட்க ஸ்வார்சியம் வேண்டுமென்றால் முதலிலிருந்தே கேளூங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, July 16, 2010

84 எதற்கும் ஒரு காலம் உண்டுஎதற்கும் ஒரு காலம் உண்டு நேயர் விருப்பம் நேரடி தொலைபேசி நிகழ்ச்சி.

துவக்கத்திலே என் அபிமான பாடகர் பாலுஜி அவர்கள் சிறப்பான முன்னுரையுடன்
ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சி வானொலி நேயர்களின் விருப்பப் பாடல்களுடன் சிறப்பாக
தொகுத்து வழங்கியிருக்கிறார் எனது அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.சந்துரு அவர்கள்.
அவர் அமைதியை ஆட்கொண்டவர் போலும் அவர் எப்போது நிகழ்ச்சியை தொகுத்து
வழங்கினாலும் ஆரவாரம் இல்லமல் ஆழ்கடல் அமைதி போன்று இருக்கும் அவரின் குரல்
மனதிற்க்கு ஒரு வித ந்ம்மதியை தரும் என்பதில் சந்தேகமில்லை. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவருக்கு பாசப்பறவைகள் இணைய நேயர்கள் சார்பாக வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

பதிவிறக்கம் இங்கே

1.சொன்ன பேச்சை கேட்கனும் என்ற பாடலை விரும்பி கேட்டவர் திருப்பூர்.கஜேந்திரன் அவர்கள்.
2.நவீன் அவர்கள் போத்தனூரிலிருந்து ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் என்ற பாடல்
3.எம்.துரைராஜ் அவர்கள் திருப்பூரிலிருந்து சிறப்பான பாடலை வேண்டி விரும்பி கேட்ட பாடல் நெஞ்சினிலே நினைவு முகம்.
4.ரகுபதி அவர்கள் கேட்ட பாடல் எதற்கும் ஒரு காலம் உண்டு என்ற இனிமையான பாடல்
5.திரு.முத்துசாமி அவர்களின் விருப்பப்பாடல் மதனமாளிகையில் மந்திர மாலைகளா

Get this widget | Track details | eSnips Social DNA

83 இயற்கை அன்னை தந்ததெல்லாம்எழில் கொஞ்சும் இயற்கையின் அன்னை என்ற தலைப்பில் சில இனிமையான
பாடல்களை தெரிவு செய்து மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.
தொகுப்பாளினி திருமதி.சாராதா ராமானாதன் அவரகள். ஒவ்வொரு பாடல்களில்
இடையிலும் தன் சிறப்பான குரலில் அழகான வார்த்தைகளால் நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார். அவரின் இந்த தொகுப்பை சமீபத்தில் கேட்டேன் தங்களூடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கேட்டு மகிழுங்கள் இசையன்பர்களே. நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

பதிவிறக்கம் இங்கே

1.நீலச்சேலை கட்டிக்கொண்ட >> 2. காட்டு ராணி கோட்டையிலே >> 3.கறுநீல மலை மேலே தாயிருந்தால் >> 4.அருவி மகள் அலையோசை >> 5.குறிஞ்சியிலே பூ மலர்ந்து >> 6.மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே >> 7.உலகம் பிறந்தது எனக்காக >> 8. இயற்கை அன்னை தந்ததெல்லாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, July 13, 2010

82 தங்கத்தில் முகம் எடுத்துமேலே உள்ள அழகிய சில படங்களை பார்க்கும் போதே நம்மை அறியாமல் கவிதை எம்.ரிஷான் ஷெரீப் கவிதை போன்று (படம்: நன்றி ரிஷான் ஷெரிப் தளம்) வர்ணனை கொட்டும். பழைய பாடல்களின் வரிகளில் கேட்கவும் வேண்டுமோ? இதோ கீழே உள்ள பாடல் தெரிவுகள் உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை தூண்டும் என்பதில் சந்தேகமேயில்லை.

1. பேசுவது கிளியா இல்லை >> 2.பொன் ஒன்று கண்டேன் >> 3. மான் அல்லவோ கண்கள் >> 4. மதுரையில் பறந்த மீன் கொடியை >> 5. தங்கத்தில் முகம் எடுத்து.

பதிவிறக்கம் இங்கே

இந்த ஒலித்தொகுப்பில் பாடல்கள் யாவும் பலதடவை இதே தளத்தில் கேட்டவை தான்
இருந்தாலும்,அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமனாதன் அவர்களின் அழகான இனிமையான குரலில் வர்ணிக்கும் பாடல் தெரிவுகள் நம் மனதுக்கு ஒரு வித்தியாச உணர்வை ஏற்படுத்துகிறது. திருமதி. சாரதா ராமானாதன் அவர்கள் எப்போதும் தித்திக்கும் குரலில் அலட்டல் இல்லாமல் அமைதியாக தெள்ளத்தெளிவாக பாடல்களை தொகுத்து தருவது அவரின் அபார திறமை. அவரின் ஒலித்தொகுப்புக்களை நான் எப்போதும் குதுகலத்துடன் கேட்பேன். இதோ என் உணர்வுகளை உங்களூடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, July 9, 2010

81 ரஜினிகாந்த் 1: ஸ்ரீவித்யா 5
ரஜினிகாந்த் 1: ஸ்ரீவித்யா 5

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்க்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன? இது தான் இந்த ஒலித்தொகுப்பின் பிரதான கேள்வி. அறிவிப்பாளர் இந்த தளத்தின் ஆஸ்தான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷிமி நாராயானா அவர்கள் நேயர்களிடையே இனிமையாக கேள்வி கேட்டு திரும்ப பெறும் பதில்களை பாருங்கள் ஸ்வாரசியமாக இருக்கும். அப்படி என்ன கேள்வி என்று உங்களூக்கு கேட்க தோன்றுகிறது தானே? ரஜினிகாந்துடன் ஸ்ரீவித்யா அவர்கள் ஐந்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். திரை
உலகிலே இந்த ஒரு ஜோடி தான் சேர்ந்து நடித்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அந்த ஐந்து கதாபாத்திரம் என்னென்ன அந்த படங்களின் பெயர்கள் தான் என்ன? இதை தான் நீங்களும் கண்டு பிடிக்க வேண்டும் இணைய நண்பர்களே. ஒலித்தொகுப்பை முடுக்கி விட்டும் கேட்கலாம் அல்லது தரவிறக்கம் செய்தும் கேட்கலாம் இறுதியில் கேட்டு விட்டு அப்புறம் துவக்கத்தில் வராதீர்கள் ஒலித்தொகுப்பின் ஸ்வாரசியம் குறைந்து போய்விடும்
எனபது என் தாழ்மையான கருத்து.

மேலும், அறிவிப்பாளர் ஒரு காலத்தில் டி.எம்.எஸ் அண்ணா அவர்களின் தீவிர பிரியரான அவர் 40 வயதுக்கும் மேற்பட்ட வானொலி நேயர்களை தன் இனிமையான குரலால் தன் வசம் வைத்திருந்தார். சமீபகாலமாக வேறொரு பண்பலையில் பணியாற்றி இடைக்கால பாடல்கள் அனைத்தையும் ஒலிபரப்பி 20ல் இருந்து 40 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களையும் இழுத்து வைத்துள்ளார். கீழ்கண்ட இடைக்கால பாடல்களில் அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா இடையிடையே சேர்த்து லேசான
குரலில் பாடுவார் (ஏன் சார் முழுப்பாடலே பாடலாமே? நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம்) அதையும் கேட்டு மகிழுங்கள். மூன்று பாடல்களூக்கு இடையிடையே நேயர்களூடன் தொலைபேசியில் பேசி தொகுப்பிற்க்கு உற்சாகம் தருவது அவரின் இயல்பு.

for download

1.கற்பூர பொம்மை ஒன்று >> 2.நான் ஒரு சிந்து >> 3.வா வா வஞ்சி இளமானே
4.காற்றில் எந்தன் கீதம் >> 5.நலம் வாழ என் நாளூம் >> 6.குருவாயூரப்பா குருவாயூரப்பா
7.கலை வாணியே உன்னை தானே >> 8.தாலாட்டு மாறிப்போனதே >> 9.செவ்வந்திப் பூவெடுத்தேன் >> 10.மயங்கினே சொல்ல தயங்கினேன் >> 11.ஆராரோ..ஆராரோ நீவோறோ.நான் வேறோஒ.. >> 12.பாடவந்ததோர் கானம்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 8, 2010

80 மயிலிறகு சிறப்பு நிகழ்ச்சி.மயிலிறகு 8ஆம் ஆண்டு அறிவிப்பாளர் மற்றும் நேயர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் சிறப்பு நிகழ்ச்சி.

இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் திரு.குடந்தை வெங்கிடபதி அவர்கள். ஏற்கெனவே இவர் சிறப்பான ஒலித்தொகுப்பான எம்.கே.தியாகராஜபாகவதரின் சிறப்பு நிகழ்ச்சி இந்த தளத்தில் பதியப்பட்டுள்ளது.

துவக்க முன்னுரை வழங்கியவர் கோவை வானவில் பண்பலையின் இயக்குநர் திரு.கமலநாதன் ஐயா அவர்கள் அவரின் விருப்பமாக நான் பேச நினைப்பதெல்லாம் ஒலிப்பரப்பப்பட்டது.

அடுத்து மயிலிறகில் தன் குரலால் அனைவரையும் காந்தமாக கவர்ந்து தன் அருகில் வைத்திருப்பவர் அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்கள். இவரின் பேட்டி மிகவும் இனிமையாக இருந்தது இவரின் கவிதைகளுக்காகவே நான் விரும்பி கேட்பேன். அழகு தெய்வம் மெல்ல மெல்ல பாடல். இவரின் இவரின் ஒலித்தொகுப்புக்கள் இந்த தளத்தில் பதியப்பட்டுள்ளன இன்னும் ஏகப்பட்ட ஒலித்தொகுப்புக்கள் பதியப்படவேண்டியது உள்ளது.
அடுத்த அறிவிப்பாளர் திருமதி. பாக்யலக்‌ஷ்மி அவர்கள். இவரின் விருப்பப்பாடல் காண வந்த காட்சி என்ன என்ற பாடல்.

முதல் தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்து வந்த அறிவிப்பாளர் திரு.தாமரை சந்திரன் அவர்கள் இவரின் விருப்பப் பாடல் உன்னை அறிந்தால் என்ற பாடல். வேலூர் ஹரிஹரன் அவர்களின் விருப்பப்பாடல் மயக்கமா கலக்கமா...நேயர் பேரவை எஸ்.விஜயகுமார் அவர்களின் விருப்பப்பாடல் பெண்னொருத்தி என் அருகில் வந்தாள். தொகுப்பாளினி சித்ரலேகா சுகுமாரன் அவர்களின் விருப்பப்பாடல் மாதவி பொன்மயிலால் தோகை விரித்தாள், காலங்களில் அவள் வசந்தம் ஆகிய பாடல்கள்.
அறிவிப்பாளர் திரு.ராமகிருஷ்னன் அவர்களின் விருப்பப்பாடல் அமைதியான நதியினிலே ஓடம். தொகுப்பாளின் பேட்டி எடுத்த குடந்தை வெங்கிடபதி அவர்களின் விருப்பபாடல் கண்ணன் என்னும் மன்னன் பெயரை சொல்லச் சொல்ல என்ற பாடல்.

2ஆவது தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNA


அலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஒலிக்கோப்பு சுமாராக இருக்கும் விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கம் செய்து இங்கே கேட்கலாம்.

முதல் தொகுப்பு தரவிறக்கம் இங்கே

2ஆவது தொகுப்பு த்ரவிறக்கம் இங்கே

Follow by Email