Friday, July 16, 2010

84 எதற்கும் ஒரு காலம் உண்டு



எதற்கும் ஒரு காலம் உண்டு நேயர் விருப்பம் நேரடி தொலைபேசி நிகழ்ச்சி.

துவக்கத்திலே என் அபிமான பாடகர் பாலுஜி அவர்கள் சிறப்பான முன்னுரையுடன்
ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சி வானொலி நேயர்களின் விருப்பப் பாடல்களுடன் சிறப்பாக
தொகுத்து வழங்கியிருக்கிறார் எனது அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.சந்துரு அவர்கள்.
அவர் அமைதியை ஆட்கொண்டவர் போலும் அவர் எப்போது நிகழ்ச்சியை தொகுத்து
வழங்கினாலும் ஆரவாரம் இல்லமல் ஆழ்கடல் அமைதி போன்று இருக்கும் அவரின் குரல்
மனதிற்க்கு ஒரு வித ந்ம்மதியை தரும் என்பதில் சந்தேகமில்லை. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவருக்கு பாசப்பறவைகள் இணைய நேயர்கள் சார்பாக வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

பதிவிறக்கம் இங்கே

1.சொன்ன பேச்சை கேட்கனும் என்ற பாடலை விரும்பி கேட்டவர் திருப்பூர்.கஜேந்திரன் அவர்கள்.
2.நவீன் அவர்கள் போத்தனூரிலிருந்து ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் என்ற பாடல்
3.எம்.துரைராஜ் அவர்கள் திருப்பூரிலிருந்து சிறப்பான பாடலை வேண்டி விரும்பி கேட்ட பாடல் நெஞ்சினிலே நினைவு முகம்.
4.ரகுபதி அவர்கள் கேட்ட பாடல் எதற்கும் ஒரு காலம் உண்டு என்ற இனிமையான பாடல்
5.திரு.முத்துசாமி அவர்களின் விருப்பப்பாடல் மதனமாளிகையில் மந்திர மாலைகளா

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

நிலாமதி said...

அத்தனை பாடல்களும் முத்துக்கள் போல மாலை யாக தொகுத்து முத்து மாலை தந்து இருக்கிறீர்கள். பாடல்களுக்கும் அறிவிபாளருக்கும் தங்களுக்கும் என் நன்றிகள்.

Covai Ravee said...

நிலாமதி அவர்களே வருக வருக.. தங்களைப் போன்ற கதாசிரியர்களின் வாழ்த்துக்கள் எனக்கும் வானொலி நேயர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை தருகிறது. அடிக்கடி வாங்க இன்னும் நிறைய பதிவிற்க்கு காத்திருக்கிறது.

Follow by Email