Friday, August 13, 2010

90 பிரமதவனம் வேண்டும் இசைக்கு மொழியேது ?பிரமதவனம் வேண்டும் - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - பாசப்பறவைகள் நேயர்கள்.

இசையன்பர்களே நேற்று வானொலியில் ஓர் இனிமையான நிகழ்ச்சி கேட்டேன். பாலைவனத்தில் காணல் நீர் கண்டது போல் உணர்வுகள் ஏற்பட்டது. ஆமாம் நண்பர்களே பலவருடங்களூகு முன் எப்பவோ நாம் கேட்ட பிற மொழிப் பாடல்கள் கேட்கும் போது ப்ரூட் சாலட்டில் தேன் ஊற்றி உண்டது போல் தித்திக்கும் தேன் சுவை நிகழ்ச்சியாக இருந்தது. பாடல் பட்டியலை பாருங்கள் பாடல்களை கேளூங்க ஏன் இந்த பில்டப் கொடுக்கிறேன்
என்று தெரிந்து கொள்வீர்கள். அது மட்டுமல்லாமல் அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் இனையான குரலில் பாடல்களின் நடுவே மத்திய பிரதேஷ் மாநிலத்தின் தகவல்களை திரட்டி நமக்காக வழங்கியிருக்கிறார் பாடல்களூடன் கேட்பதற்க்கு ஸ்வாரசியமாகவும் இருந்தது. அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

1.முப்பெந்தி கோதாவரி >> 2.நின்னன்ததே நின்னன்ததே >> 3.தில் க்யா கரே >> 4.பிரமதவனம் வேண்டும் >> 5.ஆயேனோ ப்யார்கே >> 6..யே ஷாம் மஸ்தானி >> 7.ஏக்குமானா

Wednesday, August 11, 2010

89 ஐரோப்பிய வானொலியில் கோவை நேயர் பூக்கடை மணி

ஐரோப்பிய வானொலியில் கோவை நேயர் பூக்கடை மணி அவர்களின் பாடல் தொகுப்பை அலங்கரித்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள்.
இதோ அவரின் அபரிமிதமான அழகான இனிமையான கொஞ்சும் குரலில் மணி அவர்களின் குடும்பத்தார் விரும்பிய பாடல்களை தாய், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், தன் கோவை வானொலி நண்பர்கள் மற்றும் தனக்கு ப்ரியமான கோவை வானொலி அறிவிப்பாளர்களூக்கும் பொருத்தமாக பாடல்களை தெரிவு செய்து தொகுப்பை அனுபவித்து ரசித்து வழங்கியிருக்கிறார். மணி அவர்களின் தீவிர வானொலி ரசிகதன்மைக்கு
கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது. இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கி ஐரோப்பிய வானொலி நேயர்களின் உள்ளங்களில் உலாவரவழைத்த உன்னதமான உதவியை வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளின் ராகினி அவர்கள். எனது இனிய நண்பர் மணி அவர்களின் சார்பாக ஐரோப்பிய வானொலி உரிமையாளர் ரவீந்திரன் அவர்களூக்கும் அறிவிப்பாளினி ராகினி அவர்களூக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை
அவருக்கு அனுப்பி அவரின் அன்பு மடலையும் வாங்கி ஐரோப்பிய வானொலிக்கு அனுப்பிவைக்கிறேன். எனது நன்பர் பூக்கடை மணி அவர்களின் இந்த இனிமையான சந்தோசமான நிகழ்ச்சியை பாசப்பறவைகளின் நேயர்களாகிய உங்களீடம் பகிர்ந்து கொள்வதில் நானும் மகிழ்ச்சிடைகிறேன்.

பூக்கடை மணி அவர்களின் தேன்சுவை தெரிவு பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

பாடல் பட்டியல் மற்றும் விரும்பியவர்கள்.

1.யார் அந்த நிலவு என்ற பாடலை விரும்பி கேட்டவர் மனைவி ஜெயந்தி
2.சின்னப்பயலே சின்னப்பயலே என்ற பாடலை தன் மகன் சுர்ஜித்க்காக
3.நிலாவே வா என்ற பாடலை தன் மகன் சுர்யாவுக்காக
4.நானாக நானில்லை தாயே என்ற பாடலை தன் தாய் பானுமதிக்காக
5.அம்மா என்று அழைக்காத என்ற பாடலை தன் சகோதரர்கள் ரவி, ஆனந்த் ஆகியோருக்காக
6.பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை தன் சகோதரர் பாஸ்கரனுக்காக
7.நீயே எனக்கு என்றும் என்ற பாடலை என்ற பாடலை தன் சகோதரர் பாலகிருஷ்னன அவர்களுக்காக.
8.பொண்ணு ஒன்று கண்டேன் என்ற பாடலை தன் சகோதரி சாந்தி அவர்களூக்காக
9.இயற்க்கை என்னும் இளையகன்னி என்ற பாடலை தன் நண்பர் எனக்காக (கோவை ரவி) அவர்களூக்காக
10.ஆலயமாகும் மங்கை மனது என்ற பாடலை தன் நண்பர் திருப்பூரில் இருந்து மோகனசுந்தரம் அவர்களுக்காக
11.பனிவிழும் மலர் வனம்.என்ற பாடலை தன் நண்பர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திருப்புர் அகிலா விஜயகுமார், திருப்புர் ஆனந்தராஜ், கணபதி எஸ். பாலசந்தர், தொண்டாமுத்துர்ர் ரவி, சந்த்ரு, சந்தீப், சாரதா, தேவகி, ஸ்ரீவித்யா மற்றும் சசிக்குமார் ஆகியோருக்காகவும்.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, August 4, 2010

88 நடந்தாய் வாழி காவேரி.மாதத்தில் ஒரு சிறப்பு நாள் வந்துடகூடாதுங்க வானொலி அறிவிப்பாளர்களுகு ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். சிறப்பு நாளில் எப்படி வானொலி நிகழ்ச்சி என்ன பாடல்கள் ஒலிபரப்பலாம் என்று தோண்டி துருவி பாடல்களை எடுத்து போட்ருங்கப்பா. நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் என்ன நிகழ்ச்சி என்று கேட்டால் அறிவிப்பாளர் திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் காவேரி என்ற பெயரில் பல பழைய பாடல்களை தேடிபிடித்து கலக்கிட்டாங்க. அறிவிப்பாளரின் அலட்டல் இல்லாத அமைதியான பேச்சு அனைவரையும் கவர்ந்து இழுக்கும். இதோ கீழேகண்ட பழைய பாடல்கள் தான் இந்த ஒலித்தொகுப்பில் வருபவை கேட்டு மகிழுங்கள் இணைய நண்பர்களே. பாடல் அலைபேசியில் பதிவுசெய்யப்பட்டதால் இறுதியில் சுமாராக இருக்கும் பரவாயில்லை கேட்டு மகிழுங்கள். அப்படியே அறிவிப்பாளரின் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள் மேடம்

பதிவிறக்கம் இங்கே

1.ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி
2.அன்னையின் அருளே வா வா
3.காவேரி பெண்ணே வாழ்க
4.ஆடத்தான் பசும்காவிரி வெள்ளம்
5.திங்கள் மாலை செங்குடையால்
6.மலை மீது மீன் விளையாடும்
7.இது பொங்கி வரும் புதுவெள்ளம்
8.கன்னியின் பெண்மை போற்றுங்கடி
9.ஆறோடும் மண்ணில் எங்கும்
10.காவேரிக் கரையிருக்கு
11.அன்னைப் போல மண்ணைக்காக்கும்
12.காவிரிப்பாயும் கன்னித்தமிழ்நாடு
13.நடந்தாய் வாழி காவேரி.

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email