Thursday, September 23, 2010

101 உன்னை நான் அறிவேன்
வெள்ளி மலை மன்னவா இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் மனது என்னையறியாமல் என் பள்ளிப் பருவத்திற்க்கு இட்டுச் சென்று விடும். ஒரு வித இனம் புரியாத, எழுத்துக்களால் விவரிக்க முடியாத வித்தியாசமான உணர்வு ஏற்படுவது உண்டு. அதனால் அந்த பாடலின் குரல் மீது இந்த தாக்கத்தால் தான் இந்த் பதிவு. மேலும், இந்த தளத்தின் 100 வது பதிவில் காலஞ்சென்ற பாடகி எஸ்.வரலட்சுமி நினைவுபடுத்தினோம். இதோ அதன் தொடர்ச்சியான 101 பதிவில் அவரைப்பற்றி கொஞ்சம் விரிவாக கேட்ப்போம். இந்த தளத்தில் அவரைப் பற்றிய தெரியாத தகவல்களூடன் அவர் பாடிய தெரிந்த பாடல்கள் சிலவற்றை இடைகால பாடல்களூடன் கேட்போம் இணயதள நேயர்களே. அவர் ஆன்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திப்போம். நிச்சயம் அவர் பாடிய சிறப்பான பாடல்கள் எப்போது கேட்டாலும் அவர் நினைவு வருவதை எந்த சக்தியாலும் நிறுத்திவிடமுடியாது. அவரைப் பற்றிய பல தகவல்களை தேடி பிடித்து வழங்கிய நமது அன்புகுரிய அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

1.ஆகாய கங்கை பூந்தேன் மலர்
2.வெள்ளி மலை மன்னவா
3.ஒரு தேவதை வந்தது
4.இந்த பச்சைக்குழந்தைக்கு
5.உன்னை நான் அறிவேன்
6.வா வா வஞ்சி இளமானே

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, September 22, 2010

100 பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவேபெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே

சோழ மன்னன் ராஜ ராஜ சோழன் கட்டிய ஆயிரமாவது ஆண்டு விழா காணும் தஞ்சை பெரிய கோயில் த்கவல்களூடன் சிறப்பு நிகழ்ச்சி தொகுப்பு தொகுத்து வழங்குபவர் திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள். அறிவிப்பாளனியின் அசத்தலான குரல் தொகுப்பில் பிரதானமாக விளங்குகிறது. நேயரிகள் மட்டுமல்ல வேலை பளூவில் ஈடுபடும் அணைத்து ரசிகர்களும் பாடல்களாகட்டும், கதையாகட்டும் காதில் கேட்பதற்க்குதான் அதிகம் விரும்புவார்கள். ஏன் இந்த தொகுப்பில் கூட அருமையான சில குட்டி கதைகள் வழங்குகிறார்.

அது மட்டுமல்ல, “ஏடு தந்தானடி தில்லையிலே” இந்த பாடலை கேட்டாலே ‘ இந்த பாடல் இந்த தொகுப்பில் இல்லை இருந்தாலும், இரண்டு விசயங்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் அதில் முதலில் வருவது இன்று ஆயிரமாவது ஆண்டு விழா காணும் தஞ்சை பெரிய கோயிலின் தோற்றம். இரண்டாவது அந்த பாடலை பாடிய பாடகி எஸ்.வரலட்சுமி அவர்கள். இன்று மறைந்த எஸ்.வரலட்சுமியின் முதலாவது நினைவு நாள். ஆகையால் இரண்டு படங்களையும் இந்த தளத்தில் சேர்த்தேன். அதிகம் நான் எழுதி தங்களை சோதனைக்குள்ளாவதை விட அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் குரலில்
தகவல்களூடன் இனிய பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து தங்கள் கருத்துக்களை எழுதுங்கள் அன்பர்களே.
1.செந்தமிழே வணக்கம் >> 2.தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்க >> 3.உன் அழகை வடிப்பதற்க்கு 4.சங்கரா சிவ சங்கரா << 5.சுமங்கலி பூஜை இது >> 6.சொல்லடிவன்னா கிளியே >> 7.அழகிய மேகங்கள் வானத்தில் >> 8.ஒரு குடும்பத்தின் கதை இது.

தஞ்சை பெரிய கோயிலின் 1000 வது ஆண்டு.
பாசப்பறவைகள் தளத்தின் 100 வது பதிவு
எஸ்.வரலட்சுமி நினவு தினம் 1 ஆம் ஆண்டு

இது எப்படி இருக்கு?

Get this widget | Track details | eSnips Social DNA

99 மலையோரம் வீசும் காற்றுஇந்த ஒலித்தொகுப்பு பல நாட்களாக பதிவிற்காக காத்திருந்தது இப்போது தான் பதிவதற்க்கு நேரம் அமைந்தது. தீவிர வானொலி நேயர்கள் மற்றும் கோவை அறிவிப்பாளர்கள் சிலரின் விருப்பப்பாடல்கள் ஐரோப்பிய தமிழ் வானொலியில் உலா வந்த தொகுப்பை அறிவிப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களின் கொஞ்சும் குரலில் வழங்கினார். மேடம், நான் மலர்ரொடு தனியாக, சில்லென்று பூத்த காட்டினிலே மற்றும் மயக்கமா தயக்கமா ஆகிய பாடல்கள் சில வரிகள் மேடம் உங்கள் மென்குரலில் அபாரம் அற்புதம் வாழ்த்துக்கள். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.வீடு நோக்கி ஓடுகின்ற - பகவதி
2.நானொரு கோயில்-கௌரி
3.சோலை இளங்கிளியே-அபிராமி,ஸ்விட்சர்லாந்த்
4.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ-மீனாட்சி,கோவை
5.காதலின் பொன் வீதியில் - சசிக்குமார், கோவை
6.நான் மலரோடு தனியாக - சந்துரு, கோவை
7.சில்லென்று பூத்த காட்டினிலே- எஸ்.ஏ.ஆனந்தா, கோவை
8.ஆறு மனமே ஆறு - ராஜா,.கோவை
9.மயக்கமா தயக்கமா, தேவகி, கோவை
10.என்னை முதன் முதலாக - சாரதா, கோவை
11.மலையோரம் வீசும் காற்று - பிச்சை முத்து, சென்னை
12.நடையா இது நடையா - ரவி,கோவை

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, September 21, 2010

98 நான் உன்னை நெனெச்சேன்1.இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் >> 2.பாட்டும் நானே பாவமும் நானே >> 3.பார்த்த ஞாபகம் இல்லையோ >> 4.உன்னைச் சொல்லி குற்றமில்லை >> 6.நான் பேச நினைப்பதெல்லாம் >> 7.நல்ல பேரை வாங்க வேண்டும் >> 8.நான் உன்னை நெனெச்சேன் >> 9.என் கேள்விக்கு என்ன பதில் >> 10.அழகே வா அருகே வா >> 11.ஆடி அடங்கும் வாழ்க்கையடா.

இசையன்பர்களே 11 பாடல்களின் பட்டியலை பார்த்தீர்கள் அல்லவா? மனதை மயக்கும் ரம்மியமான பாடல் தொகுப்பு தான் இவை பதிவி செய்து கேட்க விருப்பம் தானே இதோ பதிவிறக்கம் இங்கே அழுத்துங்கள். உங்களுக்காகவே நள்ளீரவில் 12 மணிக்கு பதிவு செய்து வழங்குகிறேன். நல்ல விசயங்கள் சொல்ல நேரம் காலமெல்லாம் பார்க்ககூடாது என்பார்கள் அது போல நல்ல பாடல்களை கேட்க இரவும் பகலும் பார்க்ககூடாது. அப்படித்தானெ இனியென்ன ஜமாயுங்கள். சின்ன விசயம் என்னவென்றால் அறிவிப்பாளர் மட்டும் இதை தொகுத்து தரவில்லை இடைவிடா தொகுப்பு.

Get this widget | Track details | eSnips Social DNA

97 மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ?திரையிசை உலகம் அன்புடன் மாமா அழைக்கும் ஸ்ரீ கே.வி.மஹாதேவன் அவரின் சிறப்பு
ஒலித்தொகுப்பு. வழங்குபவர் இத்தளத்தின் அன்பு அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள். இதோ கே.வி.எம் அவர்களின் சிறப்பான தகவல்களூடன் மனதை மயக்கும் பாடல் தெரிவுகள். காலம் வென்ற மெட்டுக்களை நம் காதோரங்களிலும், நம் மனதின் அடித்தளத்திலும் ரீங்காரமிடச் செய்தவர். அவர்தம் பாடல்களூடன் சில இடைக்கால பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.

பகுதி 1

1.ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
2.தூங்காத கண்ணென்று ஒன்று
3.தென்றல் வந்து என்னைத்தொடும்
4.நலந்தானா நலந்தானா
5.முகத்தை பார்க்கவில்லை

Get this widget | Track details | eSnips Social DNA


பகுதி 2

6.பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
7.பாட வந்ததோர் கானம்
8.மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, September 20, 2010

96 காற்றினிலே வரும் கீதம்
பத்மஸ்ரீ டாக்டர் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி பிறந்தநாள் வானொலி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் வானொலியில் கேட்டென் அதில் குறை ஒன்றும் இல்லை என்ற பாடலின் உள் அர்த்தம் என்ன? என்று ஒரு வானொலி நேயர் கேட்ட கேள்விக்கு அழகான விளக்கத்தை தேடிபிடித்து நமக்காக அருமையாக வழங்கியிருக்கிறார் இத்தளத்தின் ஆஸ்தான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயானா. முழுமையான நிகழ்ச்சியை என்னால் பதிவு செய்து தரயிலவில்லை. ஏனென்றால் நான் நிகழ்ச்சி பாதியில் இருந்து தான் கேட்கமுடிந்தது. இருந்தாலும் சில தகவல் தான் என்றாலும் இந்த தலமுறையினருடன் நானும் கேட்பதற்க்கு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் எப்போது திருப்பதி சென்றாலும் ஆந்திர திருப்பதி பேருந்து நிலையத்தில் இருக்கும் பத்மஸ்ரீ எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியம்மா அவர்களின் திருவுருவ சிலையை மானசீகமாக வணங்காமல் நான் வருவதில்லை அவர்தம் குரலில் தான் அவ்வளவு ஈர்ப்பு, இனிமை. இன்றைய இடைக்கால சில பாடல்கள் நடுவிலும் சில தகவல்கள் ஆகையால் தவிர்க்கமுடியாமல் இதோ இங்கே பசுஞ்சோலையாய் அன்றைய சுப்புலக்‌ஷ்மியம்மாவின் கீதங்கள் ஆமாம் அன்பர்களே அவை யாவும் என்றுமே காற்றினிலே வரும் கீதம் தான்.

1.சுகுமாரா என் தாகம்
2.ஆனந்தம் என் சொல்வேனே
3.கண்ணீல் என்ன ஈரமோ
4.குறை ஒன்றும் இல்லை
5.தேன் பூவே பூவே வா
6.என்னவென்று சொல்வதம்மா

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, September 16, 2010

95 அத்தை மகனே போய் வரவாஅமுத கானம் முத்துக்கள் பத்து

கீழே உள்ள பாடல் பட்டியலை பாருங்கள் அதில் எந்த பாடல் உங்க மனதில் முதலாக வரும் என்று தோன்றுகிறது. இந்த தளத்தை பார்க்கும் அதிக பட்ச நேயர்கள் மனதில் தோன்றும் ஒரே பாடல் நீங்கள் நினைத்ததே தான் இருக்கும். ஏன் வானொலி நேயர்களின் அபரிமிதமான தேர்வே அதே பாடல் தான் எது வென்று தெரிஞ்சுக்க ஆவலாக தானே இருப்பீர்கள்? இந்த வாரம் தொகுப்பு வழக்கம் போல் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர் எனது இனிய நண்பர் திரு.ரவி அவர்களூக்கு பதில் அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் தனக்கே உரிய ஸ்டைலில் மிகவும் அழகாக இனிமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் மிகவும் உற்சாகமாக வானொலி நேயர்கள் தங்களின் அலைபேசியிலிருந்து
வில்லிருந்து பாய்ந்து செல்லும் அம்பு போல் குறுந்தகவல்களை அனுப்பி அவரவருக்கு
பிடித்த பாடல்களை முதல் பாடலை முதன்மைக்கு கொண்டு வர எப்படி யற்சித்திருக்கிறார்கள் என்று கேட்டு தான் பாருங்களேன். பாடல்கள் தெரிவுகள் அருமை அதிலும் முதன்மை பாடல் எல்லோரும் மனதிலும் மலர் போல் பூத்துக்குலுங்கும் அதே பாடல் தான். நான் கேட்ட இந்த நிகழ்ச்சியை தங்களூக்கும் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

1.அடுத்தாத்து அம்புஜத்தை
2.நான் கவிஞனும் இல்லை
3.அத்தை மகனே போய் வரவா
4.எங்கிருந்தோ ஆசைகள்
5.சிட்டு குருவி சிட்டு குருவி சேதி
6.பூந்தோட்டக் காவல்காரா
7.ஜவ்வாது மேடையிட்டு
8.தங்கரதம் வந்தது
9.மலர்ந்தும் மலராத

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, September 14, 2010

94 ஸ்வரங்களின் சங்கமம் ஸ்வர்ணலதாஸ்வரங்களின் சங்கமம் ஸ்வர்ணலதா

ஆம் நேயர்களே தன் இனியகுரலால் நம் மனதோடு பேசிய திரைப்பட பின்ன்ணிப் பாடகி
ஸ்வர்ணலதா கடந்த வாரம் மாரடைப்பால் மறைந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இதோ அவரின் இனிய குரலில் இழைந்து ஓடும் மனதிற்க்கு ரம்மியமான சில பாடல்களை வானொலி நிகழ்ச்சியில் இத்தளத்தின் ஆஸ்தான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயாணா வழங்கினார். அவர் ஸ்வரணலதாவை பற்றிய அறிய தகவல்களை சேகரித்து நிகழ்ச்சியில் வழங்கியது மிகவும் ஆச்சரியம். தன் தொகுப்பில் அறிவிப்பாளர் ஓர் இடத்தில் மிகவும் ஆதங்கப்பட்டு சொன்ன வார்த்தை இணையத்தில் ஓர் நல்ல தரமான படம் கூட இல்லை அந்த அளவில் அவர் ஏன் பேசப்படவில்லை? என் கருத்து என்னவென்றால் சுசீலாம்மா, ஜானகியம்மா, வானீஜெயராம், சித்ரா போன்றோர் தன் குரலில் ஒரு வித தனி முத்திரை பதித்து வழக்கமாக தனக்கே உரிய பாணியில் பாடியிருந்தார்கள். அதுவே அவர்களூக்கு ஒரு பிரபலத்தை தேடி தந்தது இவர்கள் பாடிய பாடல்களில் சிரமமில்லாமல் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஸ்வர்ண்லதா இது போன்று தனி பட்ட முத்திரை பதிக்காமல் விட்டதுதான் காரணமாக இருக்குமோ என்னவோ? இருந்தாலும் அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதை மிகவும் பாதித்திருந்தன. உதார்ணத்திற்க்கு போறலே பொண்ணு தாயி பாடல் அவருக்கு தேசிய விருதை அள்ளிதந்தன. இதோ அவரின் மேலும் மனதை கவரும் பாடல் தொகுப்பு இங்கே. மிகவும் அழகாக பாடல்களை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் ஸ்வர்ணலதா பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழந்த அஞ்சலியை தெரிவியுங்கள்.

பகுதி 1

1. காலையில் கேட்டது கோவில் மணி
2. ஊரெல்லாம் உன் பாட்டு தான்
3. நீதானே நாள் தோறும் நான் பாட
4. நீ எங்கே என் அன்பே

Part 1

Get this widget | Track details | eSnips Social DNA
பகுதி 2

5. ஊரடங்கும் ஜாமத்திலே
6. நன்றி சொல்லவே உனக்கு
7. சொல்லி விடு வெள்ளி நிலவே
8. கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
9. மாலையில் யாரோ உன் மனதோடு பேச

Part 2

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, September 8, 2010

93 ஆடை கட்டி வந்த நிலவோஇந்த நிகழ்ச்சியும் வானொலி நேயர்களின் தேர்ந்தெடுத்த பாடல் தொகுப்பு வழக்கம் போல் அறிவிப்பாளர் தன் இனிய குரலால் ஜாலங்கள் காட்டி நிகழ்ச்சிக்கு ஆர்வத்தை தூண்டுகிறார். கேட்டு மகிழுங்கள் இனிமையான பாடல்களூடன்.

Get this widget | Track details | eSnips Social DNA


1.அழகே அமுதே
2.ஒரு நாள் இது ஒரு நாள்
3.உள்ளங்கள் ஒன்றாகி
4.யாரது யாரது தங்கமா
5.ஆடை கட்டி வந்த நிலவோ
6.உலகத்தில் பிறந்தது எது
7.மாசில்லா உன்னை காதலே
8.ஆகாய வீதியில் அழகான
9.ஆடாத மனமும் ஆடுதே
10.பம்பரக் கன்ணாலே காதல்

பதிவிறக்கம்

92 வானுக்கு தந்தை எவனோஎனது இனிய நண்பர் கோவை வானொலியின் தீவிர நேயர் செல்வபுரம் திரு.சையத் ரசூல் அவர்களின் விருப்பப்பாடல்களுடன் ரம்ஜான் நோம்பு ஸ்பெசல் நிகழ்ச்சி சென்ற வாரம் வானொலியில் கேட்டேன். பாடல்களீன் தெரிவு மற்றும் அவர் ரசித்த விதம் மிகவும் அழகாக இருந்தது. ரொம்ப நாட்கள் கழித்து பாடல்கள் கேட்கும் போது நம் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. இந்த இனிமையான நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி சுதா அவர்களூக்கும், இந்த ஒலித்தொகுப்பை உருவாக்கிய செல்வபுரம்
திரு.சையத் ரசூல் நேயர் அவர்களூக்கும் பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

1.வானுக்கு தந்தை எவனோ >> 2.நல்லவன் எனக்கு நானே >> 3.சின்னக்கண்னன் தோட்டத்து பூவாக 4. வசந்தத்தில் ஓர் நாள் >> 5.ஆசை ஆசையாய் >> 6.கவலை இல்லாத மனிதன் >>7.வெயிலோடு உறவாடி >> 8.மலர்ந்தும் மலராத பாதி மலர் >> 9.மானச சஞ்சரரே >> 10.இசைக்கேட்டால் புவி அசைந்தாடும். ஆகிய பாடல்கள் பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, September 6, 2010

91 பிருந்தாவனத்தில் பூவெடுத்துவாராவாரம் ஒலிபரப்பாகி வரும் அமுதகானங்கள் முத்துக்கள் பத்து நிகழ்ச்சியில் நான் ரசித்த நிகழ்ச்சி இதோ உங்கள் செவிகளூக்கும். வானொலி நேயர்களால் குறுந்தகவல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் வரிசையை மிகவும் அழாகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. ரவி அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


1.நேற்று நீ சின்ன பாப்பா
2.மெல்ல வரும் காற்று
3.ஜிலு ஜிலு குளூ குளூ
4.தாமரைக் கண்ணங்கள்
5.மாதமோ ஆவணி மங்கையோ
6.போகப் போகப் தெரியும்
7.உன்னை விட்டு ஓடிப்போக
8.பிருந்தாவனத்தில் பூவெடுத்து
9.பூஜைக்கு வந்த மலரே வா
10.உனது விழியில் எனது பார்வை

பதிவிறக்கம்

Follow by Email