Tuesday, September 14, 2010

94 ஸ்வரங்களின் சங்கமம் ஸ்வர்ணலதாஸ்வரங்களின் சங்கமம் ஸ்வர்ணலதா

ஆம் நேயர்களே தன் இனியகுரலால் நம் மனதோடு பேசிய திரைப்பட பின்ன்ணிப் பாடகி
ஸ்வர்ணலதா கடந்த வாரம் மாரடைப்பால் மறைந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இதோ அவரின் இனிய குரலில் இழைந்து ஓடும் மனதிற்க்கு ரம்மியமான சில பாடல்களை வானொலி நிகழ்ச்சியில் இத்தளத்தின் ஆஸ்தான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயாணா வழங்கினார். அவர் ஸ்வரணலதாவை பற்றிய அறிய தகவல்களை சேகரித்து நிகழ்ச்சியில் வழங்கியது மிகவும் ஆச்சரியம். தன் தொகுப்பில் அறிவிப்பாளர் ஓர் இடத்தில் மிகவும் ஆதங்கப்பட்டு சொன்ன வார்த்தை இணையத்தில் ஓர் நல்ல தரமான படம் கூட இல்லை அந்த அளவில் அவர் ஏன் பேசப்படவில்லை? என் கருத்து என்னவென்றால் சுசீலாம்மா, ஜானகியம்மா, வானீஜெயராம், சித்ரா போன்றோர் தன் குரலில் ஒரு வித தனி முத்திரை பதித்து வழக்கமாக தனக்கே உரிய பாணியில் பாடியிருந்தார்கள். அதுவே அவர்களூக்கு ஒரு பிரபலத்தை தேடி தந்தது இவர்கள் பாடிய பாடல்களில் சிரமமில்லாமல் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஸ்வர்ண்லதா இது போன்று தனி பட்ட முத்திரை பதிக்காமல் விட்டதுதான் காரணமாக இருக்குமோ என்னவோ? இருந்தாலும் அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதை மிகவும் பாதித்திருந்தன. உதார்ணத்திற்க்கு போறலே பொண்ணு தாயி பாடல் அவருக்கு தேசிய விருதை அள்ளிதந்தன. இதோ அவரின் மேலும் மனதை கவரும் பாடல் தொகுப்பு இங்கே. மிகவும் அழகாக பாடல்களை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் ஸ்வர்ணலதா பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழந்த அஞ்சலியை தெரிவியுங்கள்.

பகுதி 1

1. காலையில் கேட்டது கோவில் மணி
2. ஊரெல்லாம் உன் பாட்டு தான்
3. நீதானே நாள் தோறும் நான் பாட
4. நீ எங்கே என் அன்பே

Part 1

Get this widget | Track details | eSnips Social DNA
பகுதி 2

5. ஊரடங்கும் ஜாமத்திலே
6. நன்றி சொல்லவே உனக்கு
7. சொல்லி விடு வெள்ளி நிலவே
8. கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
9. மாலையில் யாரோ உன் மனதோடு பேச

Part 2

Get this widget | Track details | eSnips Social DNA

8 comments:

நிலாமதி said...

ஊரெல்லாம்,உன்பாட்டுதான்..மாலையில் யாரோ மன்தோடுபேச....என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள்.

உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி . சில் காலம் என் கணனி செயல் இழந்துவிட்டது அதனால் வர முடியவில்லை.

Anonymous said...

Dear Ravi,
Thanks for the link.

Maraka mudiyadha Kural.............

3 naatkalga aarambitha azhugai - Nirkavillai...

Kadavuluku Karunai ilai.

With Love,
Usha Sankar.

gopalv1958 said...

Dear Ravee Sir,

Thanks for posting in the blog. Migavum negizhndhu poenein.

Dr. SPBji udan pala hit songs koduththullaar Swarnalathaji.

Swarnalatha Avargaludaya aanmaa shanthi adaya iraivanai prarththikkindrein.

Anban,
V. Gopalakrishnan.

Prasanna said...

Dear Ravi
It's a great loss to all music lovers. Tnx for the beautiful link.

Luv and Live with Music
Prasan

Anonymous said...

Dear Mr. Ravi

Thanks for posting in remembrance of Swarnalatha. It was touching to note the lines as mentioned by the RJ in the blog

தன் தொகுப்பில் அறிவிப்பாளர் ஓர் இடத்தில் மிகவும் ஆதங்கப்பட்டு சொன்ன வார்த்தை இணையத்தில் ஓர் நல்ல தரமான படம் கூட இல்லை அந்த அளவில் அவர் ஏன் பேசப்படவில்லை?

Thats really surprising.

Rgds

Vijayakrishnan

Jagadeesh said...

ஸ்வர்ணலதா ! இவரது மறைவு சமீபத்தில் என்னை
மிகவும் பாதித்த ஒன்று. மறக்கவே இயலாத இனிமை குரல்!

அந்திமந்தாரை : ஒருநாள் ஒருபொழுது
கருத்தம்மா :
போறாளேபொன்னுத்தாயி
சத்ரியன் : மாலையில்
யாரோ மனதோடு
பாஞ்சாலங்குறிச்சி : ஆத்தோரம்
தோப்புக்குள்ளே அத்தான சந்திக்கத்தான் ஆசவச்சேன்!
அலைபாயுதே : எவனோ ஒருவன் வாசிக்கிறான்.

மேற்கண்ட இவரது தனிப்பாடல்கள் கேட்பவரை உருக்கிவிடும்.
இன்னும் எத்தனையோ பாடல்கள் !
ஸ்வர்ணலதா ! ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் உள்ளத்த உருக்குது!
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது உன்குரல் !
நண்பர் கோவை ரவிக்கு நன்றி!

ஜெகதீஷ்,
கோயம்புத்தூர் - 24

அருண் குமார் said...

சுவர்ணலதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்புதான்.. மல்லிசை மன்னரின் கண்டுபிடிப்பல்லவா...
முதல் பாடாலான “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாடல் தொடங்கி ரஹ்மானின் இசையில் பாடிய “போறாலே பொன்னுதாயி “ பாடலுக்கு
கிடைத்த தேசிவிருது உள்பட “ஆட்டமா தேரோட்டமா, ராக்கமா கையத்தட்டு, உசிலம்பட்டிபென்குட்டி”.. பாடல் அணைத்துமே வெற்றிப் பாடல்தான்...

நம் பாலுஜியுடன் இணைந்து பாடிய ”போவோமா ஊர்கோலம்” என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது.. அந்த குரல் இப்பொழுது மின்னிமறைந்து விட்டது..

”மாலையில் யாரோ மனதோடு” பாட இனி யார் வருவார்கள்..

மதுரை அருண்குமார்.

Anonymous said...

பின்னனி பாடகி சுவர்னலாதாவின் மரணம் தாங்க முடியாத வருத்தம்.. அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரன்னலை
தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சத்யா

Follow by Email