Thursday, October 21, 2010

103 னம்தனம் னம்தனம் தாளம் வரும்னம்தனனம் னம்தனனம் தாளம் வரும்..

ஆம் நேயர்களே இதோ மறுமுறை ஜென்சி அவர்களின் அற்புத குரலை கேட்டாலே //னம்தனனம் னம்தனனம் தாளம் வரும்// அதுபோல .ஜென்சியின் ஒலித்தொகுப்பு இணையத்தில் ஐரோப்பிய தமிழ் வானொலியில் சென்ற வாரம் கேட்க நேர்ந்தது. பிரபலமான பாடகிகளின் பாடல்கள் நாம் அடிக்கடி அதிகம் கேட்டுகொண்டு வருகிறேம். அதிகம் பாடல்கள் பாடாத ஜென்சி அவர்களின் பாடல்கள் பல இன்னும் ரசிகர்களால் கேட்கப்படுகின்றன நேசிக்கப்படுகின்றன. ஏற்கெனவே தேன்கிண்ணம் தளத்தில் கோவை அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் ஒரு ஒலித்தொகுப்பு வழங்கினார். மற்றொன்று கோவை அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் குரலில் எனது அருமை நண்பர் சேலம் காசக்காரனூர் ராஜ்குமார் ஆக்கத்தில் ஒலிஉலா வந்த தொகுப்பு ஆகிய இரண்டிலும் ஜென்சி அவர்கள் அலைபேசியில் உரையாடி நம்மை மகிழவைத்தார். என்னைப்பொருத்த வரை அவர் பேசும் போது அதிகம் மலையாள வாடை வந்தாலும். பாடும் போது ஆஹா ஆஹா என்னவொரு கொஞ்சல் குரலினிமை பல மெலொடி பாடல்களில் நம்மை மெய்மறக்க வைத்துவிடுகிறார். இவர் தொடர்ந்து பாடாதது தமிழ் இசை ரசிகர்களூக்கு பெரும் இழப்பு தான். அதனால் என்ன அவர் பாடிய பாடல்களை பல தடவை கேட்டாலும் புத்தம் புதுசாக உள்ளது. சரி விசயத்துக்கு வருகிறேன். இந்த ஒலித்தொகுப்பில் கொஞ்சும் குரல்யாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் ஜென்சியுடன் உரையாடி பேசியபோது மகிழ்ச்சியான தன் அனுபவங்களை இந்த தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறார் இனிமையான பாடல்களுடன். இது போன்று சிரமப்பட்டு ஆச்சரியமான ஒலித்தொகுப்புக்களை மீண்டும் மீண்டும் பலவற்றை ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிபரப்பி மேன் மேலும் வளர வேண்டும் என்று கோவை வானொலி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கிறேன்.

1.கீதா... சங்கீதா.. >> 2. பூ மலர்ந்திட >> 3. தெய்வீக ராகம் தெவிட்டாத >> 4. என்னுயிர் நீ தானே >> 5.மயிலே மயிலே >> 6. என் வானிலே ஒரே வெண்ணிலா >> 7. ஓ காதல் ஓவியம் >> 8. ஆயிரம் மலர்களே மலருங்க்ள் >> 9.னம்தனம் னம்தனம் தாளம் வரும் >> 10. ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும்.


Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, October 12, 2010

102 கலையாத கல்வியும்சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சி

நேற்று ஐரோப்பிய வானொலியில் இசையின் மடீயில் நிகழ்ச்சியில் அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் தொகுத்து வழங்கிய நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக சரஸ்வதி பூஜை ஒலித்தொகுப்பு மிகவும் இனிமையாக இருந்தது. அவரின் கவிதை ஒலித்தொகுப்புக்களை அதிகம் கேட்டுள்ளேன். இது போன்ற தகவல்களூடன் கூடிய ஒலித்தொகுப்பை மிகவும் நிறுத்தி நிதானமாக, ஆசுவாசமாக கேட்பவர்களுக்கு நன்றாக புரியும் படி தகவல்களை பேசி வழங்கிய அவரின் பாணி என்னை மிகவும் பரவசப்படுத்தியது. சரஸ்வதி பூஜைக்காக இந்த தருணத்தில் நேயர்கள் கேட்கும் வகையில் தொகுத்து வழங்கிய அவரின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன். அவரின் தகவல்கள் சேகரிப்பின் உழைப்பை பாராட்ட எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஒரே வரியில் அபாரம் என்று சொல்ல தோன்றுகிறது. நீங்களும் தரவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் வாழ்வில் இல்லத்தில் சரஸ்வதியின் அருட்கடாட்சம் என்றும் நிறைந்து இருக்கும்.

பதிவிறக்கம் செய்ய பாடல்கள் பட்டியலை அழுத்துங்கள்.

1.ஆதிபராசக்தி >> 2.மதுரை அரசாளூம் >> 3.அகரமுதல எழுத்தெல்லாம் >> 4.ஓசை கொடுத்த நாயகியே >> 5.யார் தருவார் இந்த அரியாசனம் >> 6. அகிலாண்டேஸ்வரி இருக்கையில் >> 7.கலையாத கல்வியும் >> 8.ஜனனி ஜனனி >> 9.கொக்கு பறக்கும் >> 10.இன்னருள் தரும் அன்னபூரணி

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email