Thursday, October 21, 2010

103 னம்தனம் னம்தனம் தாளம் வரும்



னம்தனனம் னம்தனனம் தாளம் வரும்..

ஆம் நேயர்களே இதோ மறுமுறை ஜென்சி அவர்களின் அற்புத குரலை கேட்டாலே //னம்தனனம் னம்தனனம் தாளம் வரும்// அதுபோல .ஜென்சியின் ஒலித்தொகுப்பு இணையத்தில் ஐரோப்பிய தமிழ் வானொலியில் சென்ற வாரம் கேட்க நேர்ந்தது. பிரபலமான பாடகிகளின் பாடல்கள் நாம் அடிக்கடி அதிகம் கேட்டுகொண்டு வருகிறேம். அதிகம் பாடல்கள் பாடாத ஜென்சி அவர்களின் பாடல்கள் பல இன்னும் ரசிகர்களால் கேட்கப்படுகின்றன நேசிக்கப்படுகின்றன. ஏற்கெனவே தேன்கிண்ணம் தளத்தில் கோவை அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் ஒரு ஒலித்தொகுப்பு வழங்கினார். மற்றொன்று கோவை அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் குரலில் எனது அருமை நண்பர் சேலம் காசக்காரனூர் ராஜ்குமார் ஆக்கத்தில் ஒலிஉலா வந்த தொகுப்பு ஆகிய இரண்டிலும் ஜென்சி அவர்கள் அலைபேசியில் உரையாடி நம்மை மகிழவைத்தார். என்னைப்பொருத்த வரை அவர் பேசும் போது அதிகம் மலையாள வாடை வந்தாலும். பாடும் போது ஆஹா ஆஹா என்னவொரு கொஞ்சல் குரலினிமை பல மெலொடி பாடல்களில் நம்மை மெய்மறக்க வைத்துவிடுகிறார். இவர் தொடர்ந்து பாடாதது தமிழ் இசை ரசிகர்களூக்கு பெரும் இழப்பு தான். அதனால் என்ன அவர் பாடிய பாடல்களை பல தடவை கேட்டாலும் புத்தம் புதுசாக உள்ளது. சரி விசயத்துக்கு வருகிறேன். இந்த ஒலித்தொகுப்பில் கொஞ்சும் குரல்யாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் ஜென்சியுடன் உரையாடி பேசியபோது மகிழ்ச்சியான தன் அனுபவங்களை இந்த தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறார் இனிமையான பாடல்களுடன். இது போன்று சிரமப்பட்டு ஆச்சரியமான ஒலித்தொகுப்புக்களை மீண்டும் மீண்டும் பலவற்றை ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிபரப்பி மேன் மேலும் வளர வேண்டும் என்று கோவை வானொலி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கிறேன்.

1.கீதா... சங்கீதா.. >> 2. பூ மலர்ந்திட >> 3. தெய்வீக ராகம் தெவிட்டாத >> 4. என்னுயிர் நீ தானே >> 5.மயிலே மயிலே >> 6. என் வானிலே ஒரே வெண்ணிலா >> 7. ஓ காதல் ஓவியம் >> 8. ஆயிரம் மலர்களே மலருங்க்ள் >> 9.னம்தனம் னம்தனம் தாளம் வரும் >> 10. ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும்.


Get this widget | Track details | eSnips Social DNA

4 comments:

நிலாமதி said...

அழகான சுவையான பாடல் தெரிவுக்கு நன்றி

Covai Ravee said...

வாங்க வாங்க நிலா மதி மேடம் உங்கள் வாழ்த்துக்கள் ராகினி மேடத்துக்கே செல்லும். நன்றி.

Anonymous said...

நண்பர் கோவை ரவி ...
பாச பறவைகள் மற்றும் பாடும் நிலா பாலு தளங்களில்; உங்களது ஒவ்வொரு இடுகையும் பார்த்தும் கேட்டும் வருகிறேன்...கைம்மாறு கருதாது தாங்கள் செய்யும் சேவை போற்றத்தக்கது ...மிக்க மகிழ்ச்சி.....தொடர்க,...
இவன்
ரவி வர்மா..

Covai Ravee said...

என் அன்பு நன்பர் ரவி வர்மா அவர்களூக்கு.. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பிரியமான் அன்பிற்க்கும் நன்றி. என் சேவை என்றும் தொடரும் அதற்கு காலமு நேரமும் எனக்கு துணை புரிய வேண்டும் இது தான் நான் கடவுளிடம் வேண்டுவது.

Follow by Email