Monday, November 22, 2010

109 பின்ணணி பாடகி கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்புஇந்த நவம்பர் மாதத்தில் தான் 2 வருடங்களூக்கு முன் திரையுலகை விட்டு விண்ணீல் மறைந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் அவரையும் நினைவுகூரும் விதமாகவும் அந்த படத்தில் “ஊசிப்பட்டாசே” என்ற பிரபல பாடலை பாடிய பழம் பெரும் பின்ணணி பாடகி கஜலக்‌ஷ்மி அவர்களைப் பற்றியும் தான் இந்த பதிவு. எம்.என்.நம்பியார் அவர்கள் திகம்பரசாமியார் என்ற படத்தில் 11 வேடங்களில் நடித்திருக்கிறார் என்று பலருக்கும் தெரியாது நன்றி செய்தி.காம்.

பழம் பெரும் திரைபடப் பின்ணணி டி.ஆர். கஜலக்‌ஷ்மி இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீறிர்களா? நிச்சயம் இருக்காது என்பது என் பதிலாக இருக்கும் ஏனென்றால் நானே இவர் பாடிய காலங்களின் பிறக்கவே இல்லை என்பது தான் உண்மை. இவருடைய காலம் 1957க்கு முன் பாடல்கள் பட்டியல் பாருங்கள் நான் சொல்ல வருவதை முற்றிலும் புரிந்து கொள்வீர்கள் திருமதி.கஜலக்‌ஷ்மி அவர்கள் குறைவாக பாடியிருந்தாலும் அவருக்கு அது பொக்கிஷம் தான் என்றாலும் ஏனென்றால் கலைஞர்களூக்கு தன் முதல் பாடல் மற்றும் அவர்களூடைய படைப்புக்கள் எல்லாமே பொக்கிஷங்கள் தான் என்பதில் ஐயமில்லை.

இதோ இந்த பதிவின் நோக்கமே இசையுலகில் ஜாம்பவான்களின் அனுபவங்களை நாம் கேட்க வேண்டுமென்பதேயாகும். அவர்களின் அனுபவங்களையும் அவர்களின் படைப்புக்களை கேட்டாலுமே நாம் அவ்ர்களுக்கு மரியாதை செய்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இனி வரும் தலமுறைகளூக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதே நம் கடமையில் ஒன்று. பழம் பெரும் பாடகி கஜலக்‌ஷ்மி அவர்களை அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் மிகவும் சிரமப்ப்ட்டு ஜெர்மனியில் இருந்து ஐரோப்பிய தமிழ் வானொலிக்காக தொலைப்பேசியில் பேட்டி கண்டு இணையத்ள ரசிகர்களூக்காக ஒலிபரப்பியதை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல முடிகிற்து. அவரின் உன்னதமான உழைப்பிற்க்கு வந்தனம் செய்வோம்.

கோவை மாநகர், தொண்டாமுத்தூரில் வசித்து வரும் திருமதி.கஜலக்‌ஷ்மி அவர்களின் அனுபவங்களையும் அதிகம் வானொலிகளில் கேட்க முடியாத அறிதான பாடல்களையும் கேட்டு
மகிழ்ந்து. தங்களின் கருத்துக்களை அவசியம் ஒருவரியில் தாருங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூக்கும் அவருக்கு உதவி புரிந்த எனது அன்புகுரிய திருப்பூர் நண்பர். திரு.அகிலா விஜயகுமார் அவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இதோ இந்த ஒலித்தொகுப்பில் உள்ள பாடல் பட்டியல்

1. சுயமுயற்சியாலே (சுதர்சன் - 1951) பி.யூ.சின்னப்பா, கண்ணம்மா உடன் கோரஸ்*
2. ஊசிபட்டாசே (திகம்பரசாமியார் - 1950)*
3. அண்ணா ஒரு பயத்தியமா (திகம்பரசாமியார் - 1950)*
4. பாப்பா எப்போதும் பயமே (நாம் - 1953) கே.ஆர்.செல்லமுத்து*
5. திருடாதே பொய் (நான் பெற்ற செல்வம் - 1956) ஏ.பி.கோமலா*
6. ஓடி விளையாடு பாப்பா (கப்பலோட்டிய தமிழன் - 1961) சீர்காழி கோவிந்தராஜன்,மீரா*

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலித்தொகுப்பில் இல்லாத பாடல்கள் பட்டியல் மற்றும் பாடல்கள்

1.ஓ தளுக்கு மாமா (வஞ்சம் - 1953)>> 2.எங்கே சொர்க்கம் (சொர்க்க வாசல் - 1954)>>
3.கோவலன் நாடகம் (நீதிபதி - 1955) கே.ஆர்.ராமசாமி பார்ட்டி >> 4. கைத்தல நிறைகனி (முல்லைவனம் - 1955) கிருஷ்ண முர்த்தி பிள்ளை >> 5.வஞ்சனையறியா வானம்பாடி (கோகுலவாணி - 1956) D.P. ராமசந்திரன் >> 6. அவசியம் அவசியம் (புது வாழ்வு- 1957) P.லீலா ?? 7.புதுப்பெண்ணே புதுப்பெண்ணே )நல்ல இடத்து சம்பந்தம் - 1958)D.L.ராஜேஸ்வரி, உருத்தா சர்ஜோஜினி, கஸ்தூரி >> 8. புறப்படுவோமே (கன்னியின் காதலி படத்தில் முதல் பாட்டு - ஹம்மிங்) >> 9. வாழ நினைப்பவர் நாமே - திகம்பரசாமியார் - 1950- ஏ.பி.கோமாளாவுடன்

Powered by eSnips.comகஜலக்‌ஷ்மி அவரக்ள் பாடிய வேற்று மொழி பாடல்களின் சில பட்டியல்

மலையாள பாடல்

Song - Ethinal Viminjitham
Picture- Manasakshi
Easwar Productions
Singer - Gajalakshmi
Lyrics - Abhayadev

Kannada

Song : Mallamoggu naneri
pic: Sree Saila Mahatme
Sree Saila Pictures
Lyrics: Ratnakar
Music T.A.Kalyanam
Singer: Rukmani & Gajalakshmi

Telugu

Song Takkari BayaFilm: Prathigna
Rohini Pictures
Music. T.A.Kalyana
Singer - Rohini & Gajalakshmi

No comments:

Follow by Email