Tuesday, November 23, 2010

110 ஓ ஜகமதி இன்பம் வருவது



எஸ்.வரலக்‌ஷ்மி இனிமையான பின்ணணி பாடகி, அமர்க்களமான நடிகை இவரின் சிறப்பு ஒலித்தொகுப்பைத் தான் இன்று கேட்க போகிறோம். இவரின் ஒலித்தொகுப்பு சில வற்றை தேன்கிண்ணம் தளத்திலும், பாசப்பறவைகள் தளத்திலும் பதிந்துள்ளேன். இருந்தாலும் இந்த ஒலித்தொகுப்பின் பதிவுதான் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனென்றால் எஸ்.வரலக்‌ஷ்மி அவர்களின் வாழ்வில் சுகம், சோகம் அணைத்தும் அடங்கிவிடுகிறது இந்த ஒரு மணி நேர தொகுப்பில். எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்கள் தன் சாந்தமான குரலில் எந்த ஒரு இடத்திலும் அதிரவைக்கும் படி பேசாமல் மிகவும் சாந்தமாகவும் அழகாகவும் மற்றும் அளவாகவும் திறம்பட் பேசி தொகுப்புக்கு மேலும் மெருகூட்டியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. எஸ்.வரலக்‌ஷ்மி அவர்களின் பாடல்களை மிகவும் கச்சிதமாக தேர்ந்தெடுத்து அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவஙக்ளுக்கு ஏற்றபடி வழங்கியது
அபாரம்.

இணையதள நேயர்கள் சார்பாக அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்களூக்கும் இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க உதவிபுரிந்த அனைத்து நண்பர்களூக்கும் நன்றியை
தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

1, நீலநிற மேகம் எல்லாம் நீயே கண்ணா >> 2.இந்த பச்சைக் கிளிக்கொரு >> 3சொல்லவன்னா கிளியே >> 4.சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே >> 5.வாழ்வினிலே நம் நாளிதுவே >> 6.இதிலே காதலர் வாழ்வினில் >> 7. ஓ ஜகமதி இன்பம் வருவது >> 8.முத்து புகழ் படைத்து >> 9.கண்ணே கண்மணியே கருமாரி >> 10. ஏடு தந்தானடி தில்லையிலே >> 11. ஏமாற்றம் காணா என் வாழ்விலே >> 12. உமையவள் நீயே மாரியம்மா.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email