Monday, November 29, 2010

114 அடடா என்ன அழகு



பழம் பெரும் இயக்குனர் திரு.டி.ஆர்.ராமண்ணா இவரைப்பற்றி இணையத்தில் ஏகப்பட்ட தகவல்கள் இருந்தாலும் நாம் அதனுள் சென்று படித்து பார்ப்பதற்க்கு மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து செல்ல வேண்டும். அப்படியில்லை என்றால் நேரம் கிடைக்கும் போது இணையத்தில் உலாவரும் போது பார்க்கலாம். ஆனால் இந்த தளத்தில் ஒலித்தொகுப்புக்களாக பதியும் போது இணையத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் கணிணியே கதி என்று கட்டி புரளூபவர்களூக்கும் இதுபோன்ற ஒலித்தொகுப்புக்கள் கேட்டுக்கொண்டோ அல்லது பதிவிறக்கம் செய்து கேட்டுக்கொண்டோ தன் வேலைகளில் நமக்கு தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டே பணியாற்றலாம் இந்த நோக்கத்துடன் தான் பதியப்படுகிறது. சென்ற வாரம் நான் வானொலியில் கேட்ட இந்த ஒலித்தொகுப்பை அறீவிப்பாளினி திருமதி.சாரதா ராமாநாதன் அவர்கள் தனக்கே உரிதான கம்பீர குரலில் தொகுத்து வழங்கியது மெய்சிலிர்க்க வைக்கிறது. இதோ இயக்குநர் திரு.டி.ஆர்.ராமண்ணா அவர்களின் திரைப்படவாழ்க்கை வரலாறையும், அவரின் படப்பாடல்களையும் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் >> நாம் பிறந்த நாட்டுக்கு >> அடடா என்ன அழகு >> வில்லேந்தும் வீரரெல்லாம் >> பால் வண்ணம் பருவம் கண்டு >> கண் போன போக்கிலே கால் போகலாமா >> பூஞ்சிட்டு கண்ணங்கள் >> ஒன்று எங்கள் ஜாதியே >> அன்று வந்தது இதே நிலா. ஆகிய பாடல்களூடன் பதிவிறக்கம் இங்கே


Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email