Wednesday, December 22, 2010

115 மாற்றான் தோட்டத்து மல்லிகை



மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனக்கும் என்று அறிஞர்கள் சொல்லியுள்ளார்கள் அந்த வகையில் ஒரு வித்தியாசத்திற்க்காக நம் தமிழ்த்தோட்டத்திலும் மாற்றான் தோட்டத்து மல்லிகை இசைப்பூக்களூம் பூக்கவைக்கலாமே? சரி சரி விசயத்துக்கு வருகிறேன் என்னவென்றால் மற்ற மொழி திரைப்படப்பாடல்களும் பூக்க வைக்கலாமே என்று ஆசைப்பட்டேன். எல்லாமே கேட்ட பாடல்கள் தான் இப்பவும் கேட்க ஒரு வித வித்தியாசமான சுவையை தருகிறது. அத்துடன் இந்த வானொலித் பாடல்கள் தொகுப்பின்
இடையிடையே அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் அவர்களின் இனிமையான குரலில் பல பொது தகவல்களையும் மிகவும் அழகாக அவருக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கியுள்ளார். வானொலி நேயர்கள் விரும்பி கேட்ட பாடல்களுடன் தகவல்களும் சேர்ந்து வந்தாலே ஒரு வித புத்துணர்ச்சி தானே? கேட்டுத்தான் பாருங்களேன் உங்களூக்கு நிச்சயம் பிடிக்கும் உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளை எழுதுங்கள்
நிகழ்ச்சி தொகுத்தவருக்கு மகிழ்ச்சியைத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

மலையாள பாடல் >> ஒன்று, ஹிந்தி பாடல்கள் மூன்று >> தெலுங்கு, கன்னடம் தலா ஒன்று என கலக்குகிறது வித்தியாசமான கலவை தான் என்னவென்று கேட்டுடுங்களேன்..

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Devaki srinivasan said...

என்னுடைய நிகழ்ச்சியை தரவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி கோவை ரவி அவர்களே, இது மேலும் என்னை ஊக்கப் படுத்தும் விதமாக உள்ளது. தேவகி ஸ்ரீனிவாசன்

Covai Ravee said...

மிக்க நன்றி தேவகி மேடம் ஒரு வித்தியாசமான தொகுப்பை இணையதள நேயர்களூக்கு வழங்கலாமே என்ற ஆவலில் பதிந்தேன் நன்றாகதான் இருக்கு. தங்களின் தளத்திலும் தொடர்பு கொடுங்கள் அதிகம் பேர் கேட்க வாய்ப்பு இருக்கும்.

Follow by Email