Friday, December 30, 2011

225 அழகே வா அருகே வா
இணையதள நேயர்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.

கண்கள் மூலம் பார்த்தாலே இயற்கை காட்சிகளின் அழகை ரசிக்க முடியும். இருந்தாலும் இசையின் அழகை ரசிக்க சுசிலாம்மாவின் சுந்தரகுரலிலும் மனதை கரைக்கும் கானங்கள் தொகுப்பின் அழகை ரசிக்க நம் காதுகளாலும் முடியும்
அந்த அழகை அருகே வரவேற்று அள்ளி வழங்குபவர் யவ்வன குரலின் சொந்தக்காரர் யாழ் சுதாகரின் தொகுப்பு. சுசில்லாம்மாவின் பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அவரின் பாடல்களின் ஒலித்தொகுப்பை ரசிகர்களின் ரசணைகளூடன் சேர்த்து வழங்கிய அறிவிப்பாளர் யாழ் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.உன்னை ஒன்று கேட்பேன்
2.மானாட்டம் தந்த மயிலாட்டம்
3.ஆலயமணியின் ஓசையை
4.தென்றல் வரும் சேதி வரும்
5.மாலை சூடும் மணநாள்
6.யாருக்கு மாப்பிள்ளை யாரோ
7.பார்த்தால் பசி தீரும்
8.அழகே வா அருகே வா
9.வா அருகில் வா
10.நானே வருவேன்


அழகே வா அருகே வா தலைப்பில் யாழ் குரலில் பாமாலை தொகுப்பு இங்கே.

Thursday, December 29, 2011

224 சிரிப்போ இல்லை நடிப்போசிரிப்போ இல்லை நடிப்போ - சிரிப்பின் சிறப்பை பற்றிய பாடல் தொகுப்பை
மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி.சந்திரா.
இணையதள நேயர்கள் சார்பாக அறிவிப்பாளினிக்கு நன்றி.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் >>> கோவை ரவி >> பாசப்பறவைகள் தளம்.


1.ஆண்டவன் தோட்டத்திலே
2.இந்த புன்னகை என்ன விலை
3.சிரிப்பு வருது சிரிப்பு வருது
4.புன்னகையில் ஒரு பொருள் வந்தது
5.சின்ன சின்ன கன்னணுக்கு
6.சிரிப்போ இல்லை நடிப்போ
7.செங்கனிவாய் திறந்து சிரிக்கின்றாய்
8.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
9.சிரிப்பு இதை சீர்தூக்கி பார்ப்பதே
10.ஒரு பக்கம் பார்க்கிறா ஒரு கண்ணை
11.சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டே

சிரிப்போ இல்லை நடிப்போ என்ற தலைப்பில் பாகொத்து இங்கே.

Tuesday, December 27, 2011

223 தோடியில் பாடுகின்றேன்நீண்ட இடைவெளிக்கு பிறகு அறிவிப்பாளர் திரு.கா.சுந்தரராஜன் அவர்களின் கணத்த குரலில் அற்புதாமான இசைத்தொகுப்பு மற்றும் குன்னக்குடியாரின் அதீத தகவல்களூடன். கேட்டு மகிழுஙகள் அன்பர்களே.

1.ஏடுதந்தானடி தில்லையிலே
2.நடந்தாய் வாழி காவேடி
3.திருப்பதி மலை வாழும்
4.முத்தமிழில் பாடவந்தேன்
5.திருச்செந்தூரில் கடலோரத்தில்
6.வைகைக்கரையோரம் மங்கையின்
7.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்
8.இறைவன் படைத்த உலகிலெல்லாம்
9.கலையாத கல்வியும் குறையாத நட்பும்
10.தோடியில் பாடுகின்றேன்


தோடியில் பாடுகிறேன் பாடலுடன் ஒலித்தொகுப்பு இங்கே

Thursday, December 22, 2011

222 அழகை பாடவந்தேன் தமிழில்
மீண்டும் அமைதியான யாழ் குரலில் அற்புத பாடல்கள் தொகுப்பு கேட்டு மகிழுங்கள்.

1.அல்லித்தண்டு காலெடுத்து
2.மெல்ல மெல்ல அருகில் வந்து
3.இரவினில் ஆட்டம் பகலினில் கூட்டம்
4.பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா
5.நவராத்திரி சுப ராத்திரி
6.இருக்கும் இடத்தை விட்டு
7.காலத்தில் அழியாத காவியம்
8.ஆண்டவன் உலகத்தின் முதலாளி
9.மனம் கனிவான அந்த கன்னியை
10.அழகை பாடவந்தேன் தமிழில்
11.பத்து பதினாறு முத்தம் முத்தம்
12.உலகத்தில் சிறந்தது எது
13.நாடோடி போகவேண்டும் ஓடோடி


அழகை பாடவந்தேன் தமிழில்

Thursday, December 15, 2011

221 இதயத்தில் இருந்து இதழ்கள்

அறிவிப்பாளர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் அமைதியான கவிதை குரல்களில் மனதை கவ்வும் பாடல் தொகுப்பு கேட்டு பாருங்கள். நிச்ச்யம் இதயத்தில் இருக்கும் பாடல்கள் உங்கள் இதழ்கள் வரை வரும்.

1.ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
2.இன்பமே உந்தன் பேர் பென்மையோ
3.நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
4.கல்யாண வளையோசை கொண்டு
5.வாறேன் வழி காத்திருப்பேன்
6.பொன்மனச்செம்மலின் புண்படசெய்வது
7.கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
8.இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
9.கண்ணழகு சிங்காரிக்கு
10.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
11.உனது விழியில் எனது பார்வை
12.பொன்னந்தி மாலை பொழுது
13.ஆனந்தம் இன்று ஆரம்பம்
14.நான் அளவோடு ரசிப்பவன்


இதயத்தில் இருந்து இதழ்கள் வரை யாழ் சுதாகரின் கவிதைகுரலுடன் ஒலித்தொகுப்பு கேட்க இங்கே..

220 ஜிலு ஜிலு ஜொலிக்கும் மிட்டாய்
பலவித பரிணாம குரல்களில் பிரபல பாடகர்களின் பரவசப்படுத்தும்
பாடல் தொகுப்பு மிகவும் அழகாககவும் இனிமையாகவும் அறிதான
தகவல்களூடன் தொகுத்து வழங்குபவர் அறிவிப்பாளினி திருமதி.சாராதா
ராமானாதன் அவர்கள். பரவச குரல்களை வாரி வழங்கிய அறிவிப்பாளினி
அவர்களுக்கு பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.ராதை உனக்கு கோபம் ஆகாதடி- எம்.கே.தியாகராஜபாகவதர்
2.வாழ்க்கை எனும் ஓடம் - கே.பி.சுந்தரம்பாள்
3.ஜிலு ஜிலு ஜொலிக்கும் மிட்டாய் - கே.ஆர்.ராமசாமி
4.சிங்காரகண்ணே உன் தேனூறும் - எஸ்.வரலட்சுமி
5.சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா - எம்.எல்.வசந்தகுமாரி,
6.எங்கே தேடுவேன் பணத்தை - என்.எஸ்.கிருஷ்னன்,டி.ஏ.மதுரம்
7.கண்ணாமூச்சி ஆட்டம் - ஆர்.பாலசரஸ்வதி
8.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - சீர்காழி கோவிந்தராஜன்
9.ராதா அவர் தருவாரா - எஸ்.ஜானகி
10.சின்ன சின்ன கண்மணி - ஏ.எம்.ராஜா. பி.சுசிலா
11.ஜாம் பேட்டா ஜக்கு - மனோரமா
12.இனிதாய் நாமே இணைந்திருப்போமே - திருச்சி லோகநாதன்


ஜிலு ஜிலு ஜொலிக்கும் மிட்டாய் தலைப்பில் ஒலித்தொகுப்பு கேட்க இங்கே.

Wednesday, December 14, 2011

219 தேவி ஸ்ரீ தேவி உன்னை
எனது இனிய அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் சார் அவர்களின் தொகுப்பை மீண்டும் நடுஇரவில் கேட்க முடிந்தது. இனிமையான பழைய பாடல்கள் தொகுப்பு வழக்கம் போல் அவரின் குட்டி குட்டி கவிதை குரலுடன். கேட்டு மகிழுங்கள். அறிவிப்பாளருக்கு பாசப்பறவைகள் தளம் நேயர்கள் சார்பாக நன்றி.

1.யார் யார் யார் அவள்
2.நீயும் ஒரு பெண் ஆனால்
3.பார்த்தேன் சிரித்தேன்
4.நிலவே என்னிடம் நெருங்காதே
5.இன்று சேர்ந்த அன்பு மாறுமா
6.நெஞ்சம் மறப்பதில்லை
7.நான் வணங்கும் இன்பமே
8.அழகுக்கும் மலருக்கும்
9.தேவி ஸ்ரீ தேவி உன்னை
10.கண் படுமே சிலர்
11.காற்று வந்தால் தலைசாயும்
12.வளர்ந்த கலை மறந்துவிட்டால்
13.இன்பம் பொங்கும் வென்னிலா
14.உன்னழகை கண்டு கொண்டால்
15.மாலையில் மலர் சோலையில்

தேவி ஸ்ரீ தேவி என்ற பாடலின் தலைப்பில் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.

Tuesday, December 13, 2011

218 அருவிமகள் அலையோசை
அறிதான குரல்களில் அழகான பாடல்கள் தொகுப்பு மிகவும் இனிமையாக
தகவல்களுடன் தொகுத்து வழங்குபவர் அறிவிப்பாளினி திருமதி. சாரதா ராமானாதன். அதிகம் கேட்ட பாடல் தான் இருந்தாலும். எத்தனை தடவை கேட்டாலும் மனதிற்கு மகிழ்ச்சியை தருவது இந்த ஒலித்தொகுப்பு கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.

1.காலத்தில் அழியாத - கே.பி.சுந்தராம்பாள்
2.ஆசையே அலைபோலே - திருச்சி லோகநாதன்
3.கலையோடு கலந்தது - எம்.எல்.வசந்தகுமாரி
4.தாகமும் சோகமும் -ஜமுனா ராணி
5.நினைத்தால் போதும் - எஸ்.ஜானகி
6.அருவிமகள் அலையோசை - கே.ஜே.யேசுதாஸ்,சூலமங்களம் ராஜலக்‌ஷ்மி

அருவிமகள் அலையோசை - அறிதான குரல்களில் அழகான பாடல்கள் தொகுப்பு

217 பூஜ்ஜியத்திலே ஆண்டு வந்தவானவில் பண்பலையில் முத்திரை பதித்த வித்தகராக போன்ற பலவித வித்தியாசமான நிகழ்ச்சிகளை வாரந்தோறும் ஒலிப்பரப்பிவருகிறார்கள் சென்ற சனிக்கிழமையன்று எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.எஸ்.ஏ.ஆனந்தா அவர்கள் தொகுத்துவழங்கிய முத்திரை பதித்த வித்தகராக பங்குகொண்டவர் திரு. ரமணி அவர்கள் ரசித்த பாடல் பட்டியல் தான் கீழே உள்ளது. பாடல்களுக்கு அவரின் விளக்கம் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. நீங்களும் கேளுங்கள் பல அறிதான விளக்கங்களை கேட்க இயலும்.


1.சென்றுவா மகனே சென்றுவா
2.அத்தான் என் அத்தான்
3.வடிவேலும் மயிலும் துணை (டி.எம்.எஸின் மூச்சுவிடாத பாடல் பகுதி உள்ளது)
4.சிரிப்புத்தான் வருகுதய்யா (சீர்காழியின் முதல் பாடல்)
5.பெண்ணில்லாத ஊரிலே பிறந்து
6.பேசுலாவுதே தேன் மலர்தானே??
7.பூஜ்ஜியத்திலே ஆண்டு வந்த


முத்திரை பதித்த வித்தகர்கள் திரு.ரமணி அவர்களின் அற்புதமான ரசணை கீதங்களின் தொகுப்பு இங்கே

Monday, December 12, 2011

216 யார் சொல்லுவார் நிலவே


இந்த ஒலித்தொகுப்பில் இடம் பெறும் பாடல்கள் பிரபல திரையிசை பின்னணி பாடகர் சி.எச்.ஜெயராமன் குரலில் வந்த பாடல்கள் அவரின் தகவலக்ளூடன் தொகுத்து வழங்கியவர் திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்
2.வண்ணமயில் வா மயிலே
3.நீலக்கொடியுடைய வேந்தனே
4.யார் சொல்லுவார் நிலவே
5.அன்பினாலே உண்டாகும் அன்புநிலை
6.ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
7.விண்ணோடும் முகிலோடும்
8.வாழ்க்கையில் நிம்மதி
9.காவியமா நெஞ்சில் ஓவியமா
10.பேசும் ஞானமும் கல்வி
11.அன்பாலே தேடிய என்

பிரபல திரையிசை பாடகர் சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் தொகுப்பு இங்கே

Thursday, December 8, 2011

215 இதய ஊஞ்சல் ஆடவாஇன்றைய தலைமுறையினருக்கு பிரபலங்களின் அனுபவங்கள் தான் வெற்றியின் படிக்கட்டுகள் அந்த வகையில் நேற்று நான் கேட்டு ரசித்த நிகழ்ச்சி இது. இதோ உங்களுக்காகவும் வழங்குகிறேன். இயக்குநர் திலகம் திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் இனிய தகவல்களூடன் மேல் கண்ட இனிய பாடல் தொகுப்பு பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். வழக்கம் போல் இனிமையாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி. சாரதா ராமானாதன். அறிவிப்பளினிக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.வருகவே வருகவே இறைவா
2.பார்த்தாலும் பார்த்தேன் நான்
3.அன்பாலே தேடிய என் அறிவுசெல்வம்
4.உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
5.சவாளே சமாளி
6.கண்ணானால் இமையாவேன்
7.அத்தையடி மெத்தையடி
8.சிந்துநதியின்மிசை நிலவினிலே
9.சந்திப்போமா இன்று சந்திப்போமா
10.இதய ஊஞ்சல் ஆடவா
11.மாறியது நெஞ்சம்
12.என்னை விட்டு ஓடிப்போகமுடியுமா

இதய ஊஞ்சல் ஆடவா

Wednesday, December 7, 2011

214 அழகு தெய்வம் மெல்ல மெல்ல

அழகு தெய்வம் மெல்ல மெல்ல நடந்து வருவது போல் இருக்கும் இந்த ஒலித்தொகுப்பின் பாடல் பட்டியல் கேட்க இனிமையாக இருக்கும் அதுவும் நாட்டிய பேரொளி பத்மிணி அவர்களின் ஸ்வாரசியமான தகவல்களூடன் . அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.மாதவி பொன்மயிலாள்
2.எல்லாம் இன்பமயம்
3.மன்னவன் வந்தானடி
4.அழகு தெய்வம் மெல்ல மெல்ல
5.இன்றென்ன மதுர உள்ளமே
6.கலங்கமில்லா காதலிலே
7.நாடகம் எல்லாம் கண்டேன்
8.வென்னிலவே தன்மடியே
9.முல்லை மலர் மேலே
10.ஆடாத மனமும் உண்டோ
11.கலைமகள் துணை கொண்டு

பத்மிணி அவர்களின் சிறப்பு ஒலித்தொகுப்பு

Thursday, December 1, 2011

213 நானா பாடுவது நானா


பிரபல பின்னணி பாடகி திருமதி.வாணிஜெயராம் அவரகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். - இணையதள ரசிகர்கள். ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்தும் இங்கே கேட்கலாம்.

அறிவிப்பாளர் திரு.பிரசாத் அவர்கள் வழங்கிய நேற்றைய தொகுப்பு 30.11.2011 அன்று பின்னணி பாடகி திருமதி. வாணிஜெயராம் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு ஒலித்தொகுப்பு நடுஇரவில் கேட்டேன். பாடல்கள் அனைத்தும் பலதடவை கேட்டாலும் அந்த இரவில் வாணியம்மாவின் குரலில் இருக்கும் ஓர் இனிமை நம்மை எங்கெங்கோ கொண்டு சென்றுவிடும் பாடல் பட்டியலை பாருங்கள் நீங்களே கேட்கதூண்டும் பட்டியல். திருமதி. வாணிஜெயராம் அவர்களூக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கூற ஒரு வாய்ப்ப ஏற்படுத்தி கொடுத்த அறிவிப்பாளர் திரு.பிரசாத் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

1.மல்லிகை என் மன்னன் மயங்கும் , 2.அந்த மானை பாருங்கள் அழகு,நாள் நல்ல நாள் &, 4.மல்லிகை முல்லை பூப்பந்தல், 5.நானா பாடுவது நானா ,வசந்த கால நதிகளிலே &, 7.தங்கத்தில் முகமெடுத்து , 8.ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ,நினைவாலே சிலை செய்து 10.கங்கை யமுனை இங்கு &, 11.திருமாலின் திருமார்பில் &, இலக்கணம் மாறுதோ.

Monday, November 28, 2011

212 சொல்லத்தான் நினைக்கிறேன் - 4சித்திரைப் பூவினில்

கீழ்கண்ட வானொலி நேயர்கள் இதில் உள்ள பாடல்களை யார் யார் என்னென்ன பாடல்களை பாடினார்கள் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடி அறிவிபாளினி திருமதி சாரதாராமநாதன் அவர்களின் பாராட்டுக்களை பெற்றார்கள். ஸ்வாரசியமான இந்த ஒலித்தொகுப்பை நீங்களும் பதிவிறக்கம் செய்து கேட்டு பாருங்கள் இசைப் பிரியர்களே.

சிவகங்கை ஆறுமுகம், மதுரை புஷ்பலதா,பழனி சன்முகப்பிரியா, அசாம் மோதிலால், கனியூர் விஸ்வநாதன், திருப்பூர் மோகனசுந்தரம், செல்வபுரம் சையத் ரசூல், செல்வபுரம் சிங்காரவேல், பூக்கடை மணி.

1.நீ வரவேண்டும் என
2.ஆனிமுத்து வாங்கிவந்தேன்
3.தங்கபதக்கத்தின் மேலே
4.கன்னி வேண்டுமா கவிதை
5.சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
6.சித்திரைப் பூவினில்
7.பொட்டு வைத்த முகம்
8.வசந்ததில் ஓர் நாள்
9.என்றும் பதினாறு

சொல்லத்தான் நினைக்கிறேன் கேட்க மற்றும் பதிவிறக்கம் இங்கே

Tuesday, November 22, 2011

211 அலங்காரம் அலங்காரம் நீயே
அறிவிப்பாளர் திரு.கிருஷ்னா அவர்களின் அமைதியான குரலில் வானொலி தீவிர ரசிகர்கள் பங்கு கொண்டு வேண்டி விரும்பிய பாடல் தொகுப்பு தான் இவை.
நாமும் கேட்டு மகிழ்வோம். இனிமையான பழைய பாடல்களை எங்களையும் கேட்க வைத்த வானொலி ரசிகர்கள் அனைவருக்கும் மற்றும் அறிவிப்பாளர் கிருஷ்னா அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.கனவின் மாயா லோகத்திலே - தாராபுரம் தமிழாசிரியர் பழனிசாமி
2.பூவரையும் பூங்கொடியே - சிவகங்கை தேவகோட்டை கல்யாணி
3.அலங்காரம் அலங்காரம் நீயே - திருப்பூர் - மோகனசுந்தரம்
4.மோஹன புன்னகை ஊர்வலமே - திருப்பூர் தேவகி
5.வேட்டையாடு விளையாடு - மதுரை - எல்.ஆர்.சுப்ரமணியம்
6.பொன்னு விளையற பூமியடா - உடுமலை - கனிமுத்து
7.இந்த மன்றத்தில் ஓடிவரும் - காந்திபுரம் - பொன்னுசாமி
8.காக்கை சிறகினிலே நந்தலாலா

Monday, November 21, 2011

210 ஊரார் உறங்கையிலேபிரபல குணசித்திர நடிகை பண்டரிபாய் அவர்கள் பற்றிய தகவல்களுடன் அவர் தோன்றிய படங்களின் இனிய பாடல்களின் தொகுப்பு இங்கே. படத்தில் பண்டரிபாய் திரையில் பார்த்தாலே அம்மா பாத்திரத்துக்கு ஒரு மரியாதை வரும் அந்த அளவுக்கு வெகுளியாகவும் பாவமாகவும் தோன்றுவார் எனக்கு பிடித்த குணசித்திர நடிகை அவர்கள் இவரைப்பற்றிய அறிய தகவல்களூடன் சென்ற வாரம் வானொலியில் நான் கேட்டு ரசித்த நிகழ்ச்சி இது. இதோ உங்கள் செவிகளுக்கும் கொண்டு வந்திருக்கிறேன். நிகழ்ச்சியை மிகவும் அபாரமாக வழக்கம் போல் ஸ்வாரசியமாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களுக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. உங்கள் கத்துக்களையும் தெரிவியுங்கள்.

1.என்கை இனிமேல் ஏமாற்றினால்
2.புது பெண்ணின் மனதை தொட்டுவிட்டு
3.பட்டுப்பூச்சி போலே ராணி
4.நான் உன்னை நினைக்காத
5.கன்னியரின் வெள்ளை மனம் போல்
6.ஊரார் உறங்கையிலே
7.தாயில்லாமல் நான் இல்லை
8.கேட்டது கொடுப்பவனே கிருஷ்னா
9.வாழ்க்கையின் பாடம் தேடிடும்
10.துள்ளி துள்ளி விளையாட
11.மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
12.பாலூட்டி வளர்த்த கிளி
13.வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது

பண்டரிபாய் அவர்களின் தகவல்களுடன் இனிய பாடல் தொகுப்பு இங்கே

Friday, November 18, 2011

209 கனவா இல்லை காற்றா


1.ஊலல்லா உலல்லா 2.அடி நீ எங்கே & 3.ஆப்பிள் பெண்ணே நீ யாரோ 4மின்சாரப்பூவே பெண் பூவே & 5.குறுக்கு சிறுத்தவளே & 6.கனவா இல்லை காற்றா &ஒரு பொய்யாவது சொல் கண்ணே.

இது போன்ற பிரபலமான சில பாடல்களை நாம் ஒரு தடவை கேட்டு விட்டு சென்று விடுவோம், சில நேரங்களில் அடடே இந்த பாட்டு மெட்டு நன்றாக இருக்கிறதே யாருடைய குரல் இனிமையாக பாடியிருக்கிறாரே என்று மீண்டும் கேட்க தூண்டும். இது போன்ற எண்ணங்கள் எனக்கு பல தடவை வந்ததுண்டு. பாடல் பட்டியல் பாடல்கள் பாருங்கள் நான் நினைத்தது போன்றே உங்களுக்கு தோன்றியிருக்கக்கூடும். அந்த வகையில் “ஏங்கே நிம்மதி பாடலில் சிவாஜி அவர்கள் இரண்டு கைகளையும் பரப்பியவாறு உணர்ச்சிவசப்பட்டு எங்கே நிம்மதி என்று பாடுவாரே” அதே போல தொலைக்காட்சியிலும் மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் மிகவுன் அனுபவித்து பாடும் பாடகர் திரு.ஸ்ரீன்வாஸ் அவர்கள் பாடிய பாடல்கள் சிலவற்றை ஏன் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த பாடல் தொகுப்பை தான் ஒரு மாலை பொழுதினில் கேட்டு இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளேன். பாடல்கள் மட்டுமல்ல அவரைப்பற்றிய ஸ்வாரசியமான தகவல்களூடன் கேட்க இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.உதயா அவர்கள். அவருக்கு இணைய தள நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் இனிய பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Thursday, November 17, 2011

208 கோழி ஒரு கூட்டிலே

அறிதான பழைய பாடல்கள் கேட்பதில் ஒரு அலாதியான இன்பம் மனம் எங்கும் மகிழ்ச்சி வெள்ளமாக பாயும். இதோ இந்த ஒலித்தொகுப்பில் அனைத்து பல பாடல்களூம் நாம் பல சந்தர்பங்களில் கேட்டு மகிழ்ந்திருப்போம் இருந்தாலும் இந்த தொகுப்பில் பாடல்களின் இடையில் அறிவிப்பாளினி திருமதி சாரதாராமானாதன் அவர்களின் இனிய குரலால் அறிதான தகவல்களூடன் தொகுத்து வழங்கும் பாணியே தனி அழகு தான். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றிகள் பல. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.சந்திரோதயம் இதிலே காணுவது - பி.யூ.சின்னப்பா
2.மல்லிகைப்பூ -ஆர்.பாலசரஸ்வதி
3.சங்கத்து புலவர் பாட - என்.எஸ்.கிருஷ்னன்
4.மங்கலம் பார்ப்பாள் - எஸ்-வரலட்சுமி
5.கோழி ஒரு கூட்டிலே -எம்.எஸ்.ராஜேஸ்வரி
6.சின்னஞ்சிறு சிட்டே - எஸ்.சி.கிருஷ்னன,ஜிக்கி
7.சங்கநாதம் வந்து சேரும் - சி.வி.ரத்தினம்
8.சொல்லத்தான் நினைக்கிறேன் - எம்.எஸ்.விஸ்வநாதன்
9.சுந்தரி சவுந்தரி - டி.எம்.சவுந்தரராஜன்,லீலா, ஏ.பி.கோமளா
10.தங்கரதம் வந்தது - பாலமுரளி கிருஷ்னா,சுசீலா

ஒலித்தொக்குப்பு கேட்க மற்றும் பதிவிறக்கம் இங்கே

Tuesday, November 15, 2011

207 சொல்லத்தான் நினைக்கிறேன் 3சொல்லத்தான் நினைக்கிறேன் ஒலித்தொகுப்பு - 3

இந்த ஒலித்தொகுப்பில் பாடல்கள் பட்டியல் இல்லையே ஏன் என்று உங்களூக்கு நினைக்கத் தோன்றலாம். நிகழ்ச்சியின் சாராம்சமே அதுதான். கீழே உள்ள பெயர் பட்டியலில் உள்ளவர்கள் எல்லோருமே கோவை வானொலியின் தீவிர ரசிகர்கள். பாடலில் இருந்து ஏதாவது ஒரு இடத்தில் இருந்து 2 வரிகள் அல்லது இசை ஒலிபரப்புவார்கள் நேயர்கள் சரியான பாடலை பாடிக்காண்பிக்க வேண்டும் அதுவும் சில வினாடிகளில் சொல்லவேண்டும் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. வாரம் தோறும் தவறாமல் நான் கேட்கும் நிகழ்ச்சி சில நேயர்கள் எப்படி திணறுகிறார்கள் என்று கேட்கவும் நிகழ்ச்சி ஸ்வாரசியமாக இருக்கும். இப்படிபட்ட வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குபவர் எனது அருமை நண்பர் கோவை அரசன் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் திரு.விஜயகுமார் அவர்கள் (இவருடைய ஒரு ஒலித்தொகுப்பு தளத்தின் முதல் பதிவாக வந்துள்ளது அது இங்கே) அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியை மிகவும் துள்ளலுடன் தொகுத்து வழங்குபவர் வழக்கம் போல் அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் இவரின் குரலுக்கும் அறிவிப்பாளினி திருமதி சாரதா ராமானாதன் அவர்கள் குரலும் ஒரு நூழிழை வித்தியாசம் தான் குறிப்பாக அவர்களின் தொகுத்து வழங்கும் பாணியை உன்னிபாக கேட்டால் ஒழிய நான்அடையாளம் கண்டு கொள்வது சிரமம். மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கும் சரியான பாடலை சொல்லிய அனைத்து நேயர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றியும் பாராட்டுக்களூம்.ஆழியார் சுப்ரமணியம், டெய்ஸ்ராணி,பூக்கடைமணி, தாராபுரம் குண்டுகாளி,தென்னரசு, உத்தரவின்றி உள்ளேவா, திருப்பூர் மோகனசுந்தரம், சேரன்மாநகர் ராஜேஸ், அருணகிரி, அருணாசலம், சுந்தரராஜ்,மற்றும் டாடாபாத் விமலா ஆகியோர் சரியாக சொன்ன நேயர்கள்.

குறிப்பு: இணையதள நேயர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறலாம் வாரம் தோறும் சனிக்கிழமை இரவு இந்திய நேரபடி இரவு 10 மணி முதல் 11 மணி வரை கீழ்கண்ட தொலைபேசிகளில் பேசாலாம். இணையதள நேயர்கள் பங்குபெறுபவர்கள் எனக்கு முன்கூட்டியே என் மின்னஞ்சலுக்கு தெரியபடுத்தினால் பதிவு செய்து இந்த தளத்தில் ஏற்றப்படும்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0422-2317672 & 0422-2317673 (தங்களுக்கு தொடர்பு உடனடியாக கிடைக்க என் வாழ்த்துக்கள்.)

சொல்லத்தான் நினைக்கிறேன் பதிவிறக்கம் இங்கே

Monday, November 14, 2011

206 கல்யாண சமையல் சாதம்

பிரபல குணசித்திர நடிகர் திரு.எஸ்.வி.ரங்காராவ் அவர்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் இனிய பழைய பாடல்களுடன் இந்த ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் திருமதி.சாரதாராமநாதன். கேட்டு மகிழுங்கள்.

1.எங்கிந்தோ வந்தான்
2.வாராயோ வென்னிலாவே
3.குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
4.நீ வரவேண்டும் என்று எதிர்பார்தேன்
5.மெல்ல மெல்ல மெல்ல
6.என்னை ஆளூம்
7.பக்கும் பக்கும் மாடப்புறா
8.இந்த கைகள் இரண்டில் ஆடும்
9.கல்யாண சமையல் சாதம்
10.நாராயண பந்தம்
11.கண்ணா கருமை நிறக்கண்ணா
12.நான் கவிஞனும் இல்லை


ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Thursday, November 10, 2011

205 கொஞ்சும் புறாவே நெஞ்சோடு
பிரபல பழைய பாடகர்களின் குரல்களில் இனிமையான பாடல் தொகுப்பு இது மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி. சாரதா ராமானாதன்

1.என்னை முதன் முதலாக பார்த்தபோது - டி.எம்.எஸ். எஸ்.ஜானகி
2.அம்பாள் மனம் கனிந்து - எம்.கே.தியாகராஜ பாகவதர்
3.வென்னிலாவே வென்னிலாவே கன்னித்தமிழ் - கே.பி.சுந்தராம்பாள்
4.காவியமா நெஞ்சில் ஓவியமா - சி.எஸ்.ஜெயரமன்
5.காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி
6.பாட்டு வேணுமா ஒரு பாட்டு - டி.ஆர்.மகாலிங்கம்
7.கொஞ்சும் புறாவே நெஞ்சோடு - எம்.எல்.வசந்த குமாரி
8.வாசமிகும் சோலையிலே - ஏ.எம்.ராஜா, ஜிக்கி
9.ராஜாமகள் ரோஜா மலர் - பி.லீலா
10.கல்லிலே கலை வண்ணம் - சீர்காழி கோவிந்தராஜன்
11.தாரா தாரா வந்தாரா - ஜமுனா ராணி
12.என்னை தெரியவில்லையா - சந்திரபாபு
13.அழகான பொன்னு நான் - பானுமதி
14.பாப்பா கதை கேளு - ஏ.எல்.ராகவன்.

பாட்டு ஒன்னு மட்டுமல்ல பல பாட்டு கொத்தாக கேட்டு மகிழுங்கள்


பதிவிறக்கம் இங்கே

Tuesday, November 8, 2011

204 இன்று போய் நாளை வாராய்
காலத்தால் மறக்க முடியாத பிரபல பாடல்களை நமக்கு வழங்கியவர் கவிஞர் மருதகாசி அவர்கள். இதோ இந்த ஒலித்தொகுப்பில் வந்த பாடல்கள் பல தடவை இந்த தளத்தில் நாம்
கேட்டிருந்தாலும் தற்போது கேட்டாலும் பரவசமடையவைக்கும் பாடல்கள் அதற்கு அத்தாட்சி கவிஞரின் கவித்துவமான வரிகள் அதுவும் அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களின் சுவையான குரலில் கேட்க கவிஞர் மருதகாசியின் தகவல்களூடன் கேட்க கேட்க இன்னும் இனிமை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.காவியமா நெஞ்சில் ஓவியமா
2.முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு
3.ஈடு இணை நமக்கு ஏது
4.உலவும் தென்றல் காற்றினிலே
5.இன்பமே எங்குமே இல்லா
6.துள்ளாத மனமும் உண்டோ
7.மாசிலா உண்மை காதலே
8.மணப்பாறை மாடு கட்டி
9.இன்று போய் நாளை வாராய்
10.மனுசனை மனுசனை சாப்பிடறாண்டா
11.கண்கள் உறங்கிய போதும்
12.பொறுத்து பார் பார் பார் என் அன்பை

ஒலித்தொகுப்பை கேட்க இன்றே இதில் சென்று பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

Friday, November 4, 2011

203 நாளை பொழுது உந்தன்
இதே தளத்தில் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் இசையமைப்பாளர் திரு.கோவர்த்தனம் பற்றி தகவல்களையும் அவர் இசையமைத்த இனிமையான பாடல்களையும் கேட்டோம். இதோ இசையமைப்பாளர் கோவர்த்தனம் அவர்களின் மற்றுமொரு தொகுப்பு. அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் குரலில் அறிதான தகவல்கள் பிரபலமான பாடல்களுடன் ஒலித்தொகுப்பு எத்தனை முறை ருசித்தாலும் திகட்டாத தேன் சொட்டுக்கள்.
1.உலகத்தில் சிறந்தது எது
2.திருமகன் என் வீட்டை தேடிவந்தான்
3.பணநாதா எங்க குணநாதா
4.அன்புள்ள அத்தான் வணக்கம்
5.அந்த சிவகாமி மகனிடம்
6.உன் அழகை கண்டு கொண்டால்
7.பத்து பதினாறு முத்தம் முத்தம்
8.நாளை பொழுது உந்தன்

ஒலிக்கோப்பு பதிவிறக்கம் இங்கே

Thursday, November 3, 2011

202 அழகு நிலாவின் பவனியிலே
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் தயாரிப்பில்
வெளிவந்த பிரபலமான படங்களின் பாடல்கள் தான் இந்த ஒலித்தொகுப்பில். இன்றைய இளைஞர்கள் டி.ஆர்.சுந்தரம் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏன் எனக்கே பல விசயங்கள் தெரியாது அவரைப்பற்றியும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார் தயாரித்த சில படங்களின் ஸ்வாரசியமான தகவல்களையும் நமக்காக சேகரித்து தன் இனிமையான குரலில் வழங்கியிருக்கிறார் அறிவிப்பளினி திருமதி சாரதா ராமானாதன் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

1.மனம் எனும் மேடை மீது
2.அழகு நிலாவின் பவனியிலே
3.சிலை செய்ய கைகள் உண்டு
4.பெண்ணாலே கண்பார்வை
5.பளிங்கு நாள் ஒரு மாளிகை
6.காட்டு மல்லி பூத்திருக்க
7.ஊசிப்பட்டாசே ஊசிப்பாட்டாசே
8.சலாம் பாபு சலாம் பாபு
9.துள்ளி துள்ளி அலைகள் எல்லாம்
10.கொஞ்சி கொஞ்சிப்பேசி மதிமயக்கும்
11.செந்தமிழ் நாட்டு சோலையினிலே
12.சின்ன சின்னக் கன்னனுக்கு
13.தென்றல் உறங்கிய போதும்


இங்கேயும் கேட்கலாம்

Wednesday, November 2, 2011

201 வானொலி நட்சத்திரம் திருப்பூர் சுபிக்‌ஷாவளரும் குழந்தை வானொலி நட்சத்திரம் திருப்பூர் சுபிக்‌ஷாவின் குரல் மற்றும் படம் சக்தி விகடனில்.குழந்தை நட்சத்திரங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

இதோ இதே தளத்தில் வந்துள்ள திருப்புர் சுபிக்‌ஷா அவர்கள் வானொலி நேயர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒலித்தொகுப்புகள் உங்கள் செவிக்கு இங்கே கேட்டு மகிழ்ந்து உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே.

குழந்தைகள் அனைவருக்கும் பாசப்பறவைகள் இணைய தளத்தின் நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

இந்த பதிவு பதிந்தவுடன் வானொலியில் சுபிக்‌ஷா விரும்பி கேட்ட பாடல் ஆசைப்பட்ட எல்லத்தையும் வாங்கலாம் கேட்டேன் இதோ அவரின் குரலுடன் அந்த பாடலும். இதன் தொடர்ச்சியாக 200 பதிவின் ஆக்கத்தை உருவாக்கியவர் திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்கள் விரும்பி கேட்ட பாடல் சந்திரபோஸ் குரலில் “ஏண்டி முத்தமா” பாடல் என்னவொரு குரல் ஹைபிச்சே பிச்சை வாங்கவேண்டும் சூப்பர் செலக்‌ஷன் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன். பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்


எலந்த பயம் எலந்த பயம் விரும்பி கேட்ட பாடல்

நான் மலரோடு தனியாக விரும்பி கேட்ட பாடல்


ஆனந்த விகடன் பக்கம்

Monday, October 31, 2011

200 அறிந்த முருகன் அறியாத தகவல்கள்அறிந்த முருகன் அறியாத தகவல்கள்

திருப்பூரில் இருந்து இடம் பெயர்ந்து சென்னைக்கு சென்று வேலைபார்க்கும் எனது இனிய நண்பர் அதிதீவிர வானொலி ரசிகர் திரு.அகிலா விஜயகுமார் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் கை வண்ணத்தில் வழங்கிய கந்தசஷ்டி சிறப்பு நிகழ்ச்சியாக “அறிந்த முருகன் அறியாத தகவல்கள்” என்ற தலைப்பில் வானொலி தொகுப்பாக இன்று காலை வழங்கினார். தமிழ் கடவுள் முருகன் புகழ் பாடும் இனிய பாடல்களையும் முருகனைப் பற்றி அறியாத தகவல்களையும் சேகரித்து இணையதள நேயர்களான நமக்காக வழங்கியுள்ளார். இந்த ஒலித்தொகுப்ப்பை தன் இளமையான இனிமையான குரலில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருப்பவர் அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் மிகவும் சிரமப்பட்டு தகவல்களை சேகரித்து வழங்கிய வானொலி நேயர் திரு.அகிலா விஜயகுமார் அவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கந்தசஷ்டி விழா செல்லும் இந்த வாரத்தில் உங்கள் பங்காக நீங்களூம் கேட்டு மகிழுங்கள் தமிழ் கடவுள் முருகன் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குவார்.

1.நம்பிக்கை வைத்தவர்கள்
2.எழுதி எழுதி பழகிவந்தேன்
3.ஆறுமுகமான பொருள்
4.குன்றக்குடி கொண்ட வேலா
5.பாட்டுக்கு தலைவன் வருகின்றான்
6.சிந்தனையில் மேடை கட்டி
7.மனமே முருகனின் மயில்வாகனம்
8.நாடறியும் கூறும் மலை
9.சொல்லச் சொல்ல இனிக்குதடா
10.திருத்தணி முருகா
11.வேல் வண்ணம் செந்தூர் கண்டேன்
12.குன்றத்திலே குமரனக்கு கொண்டாட்டம்
13.வெற்றிவேல் வெல்லுமடா
14.கந்தன் காலடியை வணங்கினால்
15.பழம் நீயப்பா ஞானப்பழம்

அறிந்த முருகன் அறியாத தகவல்கள் பதிவிறக்கம் இங்கே

199 மணிமேகலையின் -ஒலித்தொகுப்பு
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வானொலி நேயரின் ஒலித்தொகுப்பு இது. பதிவிற்க்காக ரொம்ப நாட்கள் காத்திருந்தது. கோவை வரதராஜபுரத்தில் வசிக்கும் திருமதி.மணிமேகலை என்ற தீவிர வானொலி நேயர் இவர். இவர் பங்குபெறாத வானொலி நிகழ்ச்சிகள் அறிது எனலாம். இதோ இந்த ஒலித்தொகுப்பில் அவர் விரும்பிய பாடல் தொகுப்பு. தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவரின் கணீர் குரலில் தொகுப்பு மிகவும் அருமை. தொகுப்பாளருக்கும் நிகழ்ச்சி உருவாக்கிய வானொலி நேயருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். என்னென்ன பாடல்கள் என்பதை நீங்களே ஓடவிட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 27, 2011

198 வேறென்ன நினைவு உன்னைத்தவிர
நேற்று இரவு ஏ.எல்.ராகவன் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சி கேட்டேன் உடனே உங்களும் விருந்தாக தருகிறேன்.எல்லாமே அதிகம் கேட்கமுடியாத இனிமையான பாடல்கள் தொகுப்பு இடையிடையே பாடல் உருவான விதம் பற்றி திரு.ஏ.எல்.ராகவன் அவர்களே குறிப்பிடுகிறார் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.பால்ராஜ் அவர்கள். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.வாழ்க்கை என்பது ஜாலி
2.இல்லாத சோலையே
3.வேறென்ன நினைவு உன்னைத்தவிர (இந்த பாடல் இப்போது கேட்டாலும் சிறிய வயதில் எஸ்.பி.பி குரல் போன்று தோன்றும் எனக்கு மட்டும்.. உங்களுக்கு தோன்றுகிறதா?)
4.ஒன்ஸ் பாப்பா
5.அடிச்சிருக்கு நல்லதொரு சான்ஸ்
6.காலம் மாறுது கருத்தும் மாறுது
7.முல்லைப்பூவு மணக்குது
8.காதல் என்றால் ஆணும் பெண்ணும்
9.வாடா மச்சான் வாடா
10.போடச்சொன்னால் போட்டுக்கறேன்

பதிவிறக்கம் இங்கே

Tuesday, October 25, 2011

197 வேலாலே விழிகள்
மீண்டும் அறிவிப்பாளர் யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலில் நேயர்கள் ரசித்த பாடல் ரசனைகளை அவருக்குரிய பாணியில் தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்துமே அமர்க்களமான பாடல்கள். இந்த டி.எம்.எஸ் அய்யா பாடல்கள் இணையத்தில் கேட்டு எத்துனை வருடங்களாயிற்று. சென்னை தவிர மற்ற ஊர்களின் நேயர்களின் கடிதங்களையும் வாசித்து வாழ்த்து கூறுகிறார் அறிவிப்பாளர். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.ஆகாய பந்தலிலே
2.கல்யான ஆசை வந்த
3.இனியவளே என்று பாடி வந்தேன்
4.பொன்னுக்கென்ன அழகு
5.தேவன் வந்தாண்டி
6.இலங்கையின் இளம் குயில்
7.செந்தமிழ் பாடும்
8.வேலாலே விழிகள்
9.மதன மாளிகையில்

ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

196 நாதகலா ஜோதி ராசய்யா-2நாதகலா ஜோதி ராசய்யா-2 வது ஒலித்தொகுப்புதான் இவை அறிவிப்பாளர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலில் ராகங்களின் அடிப்படையில் நாதகலா ஜோதி ராசய்யா அவர்களின் இசையமைப்பில் மீண்டும் ஒரு இனிமையான தொகுப்பு. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.தென்றல் வந்து என்னை தொடும் - ராகம்: ஹம்சநாதம்
2.பாடு நிலாவே தேன் கவிதை - ராகம் :வாசந்தி
3.தூங்காத விழிகள் ரெண்டு - ராகம் : அமிர்தவர்ஷனி
4.சின்ன சின்ன மொட்டு மீதிலே - ராகம்:சுத்ததன்யாசி
5.கலகலக்கும் மணியோசை - ராகம்:சுத்ததன்யாசி
6.ஆயிரம் தாமரை மொட்டுகளே - ராகம்:சுகபந்துவராளி
7.மலர்களில் ஆடும் இளமை - ராகம்: சுத்தசாவேரி
8.இது ஒரு காதல் மயக்கம் - ராகம்: சுத்தசாவேரி
9.கங்கை கரை மன்னனடி - ராகம்: தோடி
10.கலைவாணியே உன்னைத்தானே - ராகம்: கல்யாணி


நாதகலா ஜோதி ராசய்யா-2 ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Wednesday, October 19, 2011

195 அங்கும் இங்கும் பாதை உண்டு17.10.2011 அன்று கவிஞர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாளன்று வானொலியில் ஓர் இனிமையான ஒலித்தொகுப்பு கேட்க முடிந்தது. மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள். பாடல்கள் நாம் பலதடவை கேட்டாலும் இன்றும் நம் மனதை பதமாக வருடி கொடுக்கின்றன. அறிவிப்பாளரின் நிதானமான அவரைப்பற்றிய அறிதான தகவல்களுடன் கேட்டு தான் பாருங்களேன்.

1. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
2. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
3. அதிசய ராகம் ஆனந்த ராகம்
4. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
5. காலங்களில் அவள் வசந்தம்
6. உன் கண்ணில் நீர்வழிந்தால்
7. அன்பு நடமாடும் கலைக்கூடமே
8. அங்கும் இங்கும் பாதை உண்டு

ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Friday, October 14, 2011

194 வெள்ளை காக்கா மல்லாக்குதினமும் நான் விரும்பி கேட்கும் இந்த நிகழ்ச்சி வானொலி நேயர்கள் தன் விருப்பங்களை அறிவிப்பாளர் திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களிடம் குதுகலத்துடன் கேட்டு வாங்கி நமக்காக வழங்குகிறார்கள். இதோ அவர்களூடன் உற்சாக குதுகலத்துடன் நீங்களூம் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1. தேன் சிந்துதே வானம் >> 2. இதத்தான் ரொம்ப ரசிச்சேன் >> 3. சாமிக்கிட்ட சொல்லி வெச்ச 4. வானுயர்ந்த சோலையிலே >> 5. வெள்ளை காக்கா மல்லாக்கு பறக்குது >> 6. என் காதல் தேவி >> 7. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.

பதிவிறக்கம் இங்கே

Thursday, September 22, 2011

193 நாதகலா ஜோதி ராசய்யா
அறிவிப்பாளர் யாழ் சுதாகர் இனிய குரலில் நாதகலா ஜோதி ராசய்யா அவர்களின் மெய்மறக்கும் மெட்டுக்களில் உதயமான பாடல் தொகுப்பு தான் இவை. ராகங்களின் அடிப்படையில் உருவான பாடல் தொகுப்பு புதிய இசைப்பிரியர்களூக்கு அற்புதமான தொகுப்பு. சென்னை ரசிகர்கள் மட்டும் கேட்டு ரசித்து வந்த வானொலி பிரியர்களுடன் கோவை வானொலி ரசிகர்களும் ரசிக்க வாய்ப்பு கிடைத்தது இதோ இணைதள நேயர்கள் உங்கள் செவிக்கும்.

1.ஆசை நூறு வகை
2.நேத்து ராத்திரி யம்மா
3.வானிலே தேனிலா
4.வனிதாமணி வனமோகினி
5.சிங்களத்து சின்னக்குயிலே
6.ஆள அசத்து மல்லியே
7.நின்னு கோரி வரணும்
8.ஏபிசி நீ வாசி
9.கஸ்தூரி மானே கல்யாண தேதே
10.வான் போலே வண்ணம்
11.வளையோசை கலகலவென
12.ஆசை அதிகம் வெச்சு

ஒலிக்கோப்பு மற்றும் பதிவிறக்கம் இங்கே

Tuesday, September 20, 2011

192 என்னை விட்டால் யாரும் இல்லை

கானகந்தரவன் திரு.கே.ஜே.யேசுதாஸண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களூக்கு பாடீய இனிய கானங்கள் எத்தனை முறை கேட்டாலும் தித்திகாது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் சென்னை வானொலி ரசிகர்கள் மட்டும் ரசித்து வந்த வானொலி அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் அழகிய கவிதை தொகுப்புக்கள் கோவை வானொலி ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அவரின் தொகுப்புக்களை இங்கேயும் ஒலிபரப்புகிறார்கள் இதோ நான் நேற்று ரசித்த தொகுப்பு நீண்ட நாள் கழித்து அவரின் கவிதை
தொகுப்புகளூடன் இனிய பாடல்களையும் கேட்டேன் இதோ இணையதள ரசிகர்கள் உங்கள் செவிக்கும் விருந்து. கேட்டு மகிழுங்கள் உங்கள் உன்னதமான உணர்வுகளையும் எழுதுங்கள். இந்த ஒலித்தொகுப்பை திறம்பட வழங்கிய அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி.

1.என்னை விட்டால் யாரும் இல்லை
2.நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு
3.போய்வா நதியலையே
4.இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
5.என்ன சுகம் என்ன சுகம்
6.விழியே கதை எழுது
7.தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
8.அழகெனும் ஓவியம் இங்கே
9.இதுதான் முதல் ராத்திரி

Tuesday, September 13, 2011

191 கண்கள் இரண்டும் உன்னை கண்டு
முத்திரை பதித்த வித்தகர் வரிசையில் இந்த ஒலித்தொகுப்பில் கீழ்கண்ட பாடல்களை வேண்டி விரும்பி கேட்டு வானொலி நிகழ்ச்சியில் இனிமையாக வழங்கியவர் பேராசிரியர் திரு.டி.கே.மனோஹரன் இவரைப்பற்றிய முழுவிவரங்கள் இந்த ஒலித்தொகுப்பில் மேலும் அவர் விரும்பிய பாடல்களின் விளக்கங்களும் ஸ்வரசியமாக உள்ளன. இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் திரு. எஸ்.ஏ.ஆனந்தா அவர்கள். இவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.பெற்று எடுத்த தெய்வம்
2.நான் உன்னை வாழ்த்தி
3.பகலிலே சந்திரனை பார்க்கப்போனேன்
4.மூத்தவள் நீ கொடுத்தாள்
5.சொன்னது நீதானா
6.தாய் தந்த பிச்சையிலே
7.கண்கள் இரண்டும் உன்னை கண்டு
8.மனிதன் நினைப்பதுன்டு


Get this widget | Track details | eSnips Social DNA

Monday, September 12, 2011

190 இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
இசையமைப்பாளர்கள் டி.ஆர்.பாப்பா அவர்களின் ஸ்வாரசியமான பல தகவல்களூடன் அவர் இசையமைத்த சிறப்பான பாடல் தொகுப்பு இவை. மிகவும் அழகாக இனிமையான பாடல்களை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன். அன்பர்களே கேட்டு இன்புறுங்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதுங்கள்.

1.ஆடவேண்டும் மயிலே >> 2.இறைவன் என்றொரு கவிஞன் >> 3.அம்மா என்பது தமிழ் வார்த்தை >> 4.யார் சொல்லுவார் நிலவே >> 5.வெள்ளி நிலா வானத்திலே >> 6. அழகே உனக்கு குணம் இரண்டு >> 7. ஏடி பூங்கொடி ஏன் இந்த பார்வை >> 8. என்ன என்ன இன்பமே >> 9. ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் >> 10. இரு மாங்கனி போல் இதழ் ஓரம் >> 11.கண் பாடும் பொன் வண்ணமே.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Monday, September 5, 2011

189 சொல்லத்தான் நினைக்கிறேன் 2
இந்த தளத்தின் கோவை வானொலி பாசப்பறவைகள் பங்கு பெற்ற சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் தொகுப்பு இதோ நேயர்களிடம் குஷியாக பாடல் பிட்களை ஒலிபரப்பி அவர்களை பாடச்சொல்லி நமக்காக வழங்குகிறார் அறிவிப்பாளினி திருமதி சாரதா ராமனாதன் அவர்கள் அவருக்கு இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள்.

1.நான் பாடிய முதல் பாட்டு
2.கொஞ்சும் புறாவே
3.ஒரு பெண்ணின் மனதை விட்டு
4.கனியோ பாலோ கற்கண்டோ
5.சிலை செய்ய கைகள் உண்டு
6.வாழ்க்கையின் பாடம்
7.காதலெனும் வடிவம் கண்டேன்
8.கூவாமல் கூவும் கோகிலம்
9.அன்பால தேடிய என் அறிவு செல்வம்
10.இன்றென மது உள்ளமே
11.பஞ்சாயி காதல் பறவைகள்

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email