Monday, February 28, 2011

130 கருத்தும் கானமும்பாட்டு வானத்தில் என்னை வெற்றி கொடி கட்டி பறக்கும் படி அறிவு கொடுத்த நல்லவர்கெல்லாம் வணக்கம்.


மேற்கண்ட வரிகள் தங்களூக்கு புரியவேண்டுமென்றால் ஒலிக்கோப்பின் ஊடே செல்ல வேண்டும். அதற்குமுன் கிரிக்கெட் உலக கோப்பின் ஜுரத்தில் இருக்கும் நம் கிரிக்கெட் பிரியர்களூக்காக இந்த ஒலித்தொகுப்பில் வரும் ஒரு அழகான சுறுசுறுப்பான பாடல். நம் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று உலக கோப்பையை நோக்கி முன்னேற வேண்டும் வாழ்த்தி இந்த கருத்தும் கானமும் தங்களூக்கு வழங்குவதில் பெருமையடைகிறேன். கேட்டு மகிழுங்கள்.

இந்த ஒலித்தொகுப்பை தன் காந்தக்குரலில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.சூரியாகாந்தன் அவர்களூக்கு கோவை வானொலி ரசிகரக்ள் சார்பாகவும் இணையதள நேயர்கள் சார்பாகவும் நன்றி.

படம்: தேடி வந்த மாப்பிள்ளை
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
வருடம்: 29.8.1970
நடிகர்: எம்.ஜி.ஆர், ஜெயலலித்தா
இயக்குநர்: பி.ஆர்.பந்துலு
தயாரிப்பு: பத்மணி பிக்சர்ஸ்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக்கண்டேன்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக்கண்டேன்

உண்னாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்

உண்னாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்

கற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அதை உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் தண்ணீராகும்

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் தண்ணீராகும்

ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால்தான் நனவுகளாகும்

ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால்தான் நனவுகளாகும்

அன்று தொட்டு நீ நினைத்த என்னம் என்னம்மா
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, February 24, 2011

129 மலர்களிலே ஆராதனைமறைந்த திரையிசைப்பாடகர் அமரர் மலேசியா வாசுதேன் அவர்களின் நினைவாக மேலும் மறக்கமுடியாத மனதை மயக்கும் சில பாடல்களை இணையத்தில் ஐரோப்பிய தமிழ் வானொலியில் கேட்க நேர்ந்தது,. இணையதளத்தில் மிகவும் பிரபலாமான வானொலி அறிவிப்பாளினி கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் குரலில் ஒலிப்பரபானது
கேட்டு மிகவும் பூரித்துப் போனேன். மலேசியா வாசுதேவன் மறைவு கடல் தாண்டியும் நேயர்களின் மனங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை இந்த ஒலித்தொகுப்பின் பாடல்
தெரிவுகள் மூலம் நான் காணமுடியும். திருமதி. ராகினி பாஸ்கரன் மிகவும் அற்புதமான
பாடல்களை தேர்ந்தெடுத்து அவரின் அன்பான ரசிகளூக்கும் வழங்கி அவருக்கு நினைவஞ்சலியாக செலுத்தியிருக்கிறார். இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மறக்கமுடியாதவையாகும். இந்த பாடல்களை ஐரோப்பிய தமில் வானொலியில் ஒலிப்பரப்பி எனக்கு தனியாக ஒலிக்கோப்பையும் அனுப்பி வைத்து உங்கள் வலைப்பூவுடன் அவருக்கு மரியாதை செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். ஒலிக்கோப்பை எனக்கு அனுப்பிவைத்த திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு நன்றி.

ஐரோப்பிய தமிழ் வானொலி நிலையத்தின் ஏழாவது ஆண்டு விழாவின் புகைப்படம் இங்கே. மேலும், இந்த ஒலித்தொகுப்பை ஒலிபரப்பியதற்க்கு நிலையத்தாருக்கும் நன்றிகள்.

பிரிவால் வாடும் அவரின் அன்பு உள்ளங்களூக்கு ஆறுதல் சொல்லும் வகையில் நாமும் இணைந்து இந்த பாடல்களை கேட்டு அவருக்கு மலர்களிலே ஆராதனை செய்து மரியாதை செய்வோம்.

1.பனி விழும் பூ நிலவில்
2.ஆட்டு குட்டி முட்டை இட்டு
3.மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
4.கோடைக்கால காற்றே
5.ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
6.காலங்கள் மழைக்காலங்கள்
7.மலர்களிலே ஆராதனை
8.குயிலே குயிலே பூங்குயிலே
9.எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
10.பூவே இளைய பூவே
11.வா வா வசந்தமே சுகம் தரும்

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, February 21, 2011

128 பாட்டும் பதமும்நெஞ்சுக்கு அழகான தெய்வீக அழகே அழகு பருவத்தில் உன்னை பார்த்தால் நீயே மேலும் அழகு.

என்ன இது ஒன்றுமே புரியவில்லை என்று நினக்கத்தோன்றுகிறதோ? ஒலிக்கோப்பின் ஊடே சென்றுதான் கேளுங்களேன்!..

பாட்டும் பதமும் - அறிவிப்பாளர் காந்தக்குரலோன் சூரியகாந்தன் அவர்களின் இனிய குரலில் பாட்டும் பதமும் இந்த இனிமையான நிகழ்ச்சி உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். கேட்டு இன்புறுங்கள் அன்பரகளே.

Get this widget | Track details | eSnips Social DNA

127 பூங்காற்று திரும்புமா? - அஞ்சலிபூங்காற்று திரும்புமா? - அஞ்சலி வானொலித்தொகுப்பு

இந்த பாடலை நாம் எப்போது கேட்டாலும் இரண்டு விசயங்கள் நம் கண் முன் வருவதை
யாராலும் தடுக்க முடியாது ஒன்று நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் அற்புத நடிப்பும்
அந்த நடிப்புக்கு அச்சாரம் தரும் வகையில் பிரபல பின்ணணி பாடகர் திருமலேசியா வாசுதேவன் அவர்களின் வித்தியாசமான குரலும் தான். நேற்று திரு. மலேசியா வாசுதேவன்அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி என் மனதையும் மட்டுமல்லாமல் இசையை விரும்பி கேட்கும் அனைத்து அன்பர்களூக்கும் வருத்தம் ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் ஒரு வித்தியாசமான குரலில் பல பிரபலாமான பாடல்களை நமக்காக தந்துள்ளார். இன்று காலை நான் கேட்ட இந்த ஒலித்தொகுப்பை வானொலியில் கேட்டேன் மனதுக்கு பாரமாக இருந்தது. உணமையிலே இந்த புங்காற்று குரல் எப்போது திரும்பும் ? என்ற ஏக்கத்துடன் நம் இணையதள நேயர்களூக்காக வழங்குகிறேன். இதில் வரும் பாடல்கள் அனைத்துமே அருமையானவை.

இவ்வுலகை விட்டு விண்ணில் மறைந்த மலேசியா வாசுதேவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். அவர் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தாருக்கும் அவரின் அபிமான ரசிகர்களூக்கும் கோவை எஸ்.பி.பாலசுப்ரமணீயம் ரசிகர்கள் சார்பாகவும் இந்த பாசப்பறவைகள் வானொலி நேயர்கள் மற்றும்
இணையதள நேயர்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

1.என்னோட ராசி நல்ல ராசி >> 2.விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிகிழமை >> 3.ஒதுங்கு ஒதுங்கு வாங்கடா வாங்க 4.பட்டுக்கோட்டை நம்மாளு >> 5.பூங்காற்று திரும்புமா???.

Get this widget | Track details | eSnips Social DNA


அண்ணாரின் பாடல்கள் ஒரு முறை கேட்டாலே அவருக்கும் நாம் செய்யும் அஞ்சலியாகும்.

இந்த தொகுப்பை மிகவும் இனிமையாகவும் மிகவும் சாந்தமாகவும் தொகுத்து வழங்கிய அறிவிபபாளர் திரு.ஐ.ஷியாம்பால் அவர்களுக்கு நன்றி.

Thursday, February 17, 2011

126 மலரே என்னென்ன கோபம்
சென்ற வாரம் பெஙகளூரில் பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி சார்பில் அவருடன் சந்திப்பு நிகழ்ந்தது அதில் அவருக்கு பத்மபூஷன் பட்டம் பெற்றதற்கான வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவும் அவரின் இனிமையான அமுதகானங்கள் இந்த தளத்தில் நீண்ட நாட்கள் கழித்து இந்த தளத்தில் கொஞ்சும் குரல்யாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களீன் இனிமையான கொஞ்சும் குரலில் பத்மபூஷன் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களி பத்மபூஷன் பெற்றதைப் பாராட்டி அவர் பாடிய இனிமையான டாப்க்ளாஸ் பாடல்களைன் தொகுப்பை தொகுத்து வழங்கியிருக்கிறார். பாடல்கள் பட்டியலை பாருங்கள் பலதடவை கேட்டாலும் தெவிட்டாத எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ஏன் உங்கள்
மனதையும் மய்கக்கவைக்கும் குரல் பாலுஜியின் குரல். பாலுஜியை மரியாதை செய்ய ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிப்பரப்பான தொகுப்புதான் இவை. அறிவிப்பாளினி நீண்ட நாட்களாக பாலுஜியுடன் தொலைப்பேசியில் உரையாட வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன்
இருந்தார் சமீபத்தில் அவருடன் உற்சாக உரையாடியும் உள்ளார். அதன் சந்தோசமான உணர்வுகளை இந்த ஒலித்தொகுப்பிலும் தெரிவித்துள்ளார். சந்தோசமாக் நீங்கள் அவரிடம் கதைக்கலாம் அந்த நாள் அமைந்ததற்கு என் வாழ்த்துக்கள்.

கேட்டு விட்டு உங்கள மனதில் தோன்றும் உன்னதமான உணர்வுகளை இங்கே பதியுங்களேன்.

1.மலரே என்னென்ன கோபம் >> 2.மலையோரம் வீசும் காற்று >> 3.மந்திரப்புன்னகை மின்னிடும் மேனகை >> 4.கண்மணியே பேசு மௌனம் என்ன >> 5.அரச்ச சந்தனம் மனக்கும் >> 6.பாடும் போது நான் தென்றல் காற்று 7.பாத கொழுசு பாட்டு பாடி வரும் >> 8.தென்றலோ தீயோ தீண்டியது >> 9.படைத்தானே பிரம்மன் >> 10.காலை நேரப் பூங்குயில் >> 11.நீலக்குயிலே உன்னோடு நான் >> 12.கண்மணியே காதல் என்பது.

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email