Thursday, February 24, 2011

129 மலர்களிலே ஆராதனை



மறைந்த திரையிசைப்பாடகர் அமரர் மலேசியா வாசுதேன் அவர்களின் நினைவாக மேலும் மறக்கமுடியாத மனதை மயக்கும் சில பாடல்களை இணையத்தில் ஐரோப்பிய தமிழ் வானொலியில் கேட்க நேர்ந்தது,. இணையதளத்தில் மிகவும் பிரபலாமான வானொலி அறிவிப்பாளினி கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் குரலில் ஒலிப்பரபானது
கேட்டு மிகவும் பூரித்துப் போனேன். மலேசியா வாசுதேவன் மறைவு கடல் தாண்டியும் நேயர்களின் மனங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை இந்த ஒலித்தொகுப்பின் பாடல்
தெரிவுகள் மூலம் நான் காணமுடியும். திருமதி. ராகினி பாஸ்கரன் மிகவும் அற்புதமான
பாடல்களை தேர்ந்தெடுத்து அவரின் அன்பான ரசிகளூக்கும் வழங்கி அவருக்கு நினைவஞ்சலியாக செலுத்தியிருக்கிறார். இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மறக்கமுடியாதவையாகும். இந்த பாடல்களை ஐரோப்பிய தமில் வானொலியில் ஒலிப்பரப்பி எனக்கு தனியாக ஒலிக்கோப்பையும் அனுப்பி வைத்து உங்கள் வலைப்பூவுடன் அவருக்கு மரியாதை செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். ஒலிக்கோப்பை எனக்கு அனுப்பிவைத்த திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு நன்றி.

ஐரோப்பிய தமிழ் வானொலி நிலையத்தின் ஏழாவது ஆண்டு விழாவின் புகைப்படம் இங்கே. மேலும், இந்த ஒலித்தொகுப்பை ஒலிபரப்பியதற்க்கு நிலையத்தாருக்கும் நன்றிகள்.

பிரிவால் வாடும் அவரின் அன்பு உள்ளங்களூக்கு ஆறுதல் சொல்லும் வகையில் நாமும் இணைந்து இந்த பாடல்களை கேட்டு அவருக்கு மலர்களிலே ஆராதனை செய்து மரியாதை செய்வோம்.

1.பனி விழும் பூ நிலவில்
2.ஆட்டு குட்டி முட்டை இட்டு
3.மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
4.கோடைக்கால காற்றே
5.ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
6.காலங்கள் மழைக்காலங்கள்
7.மலர்களிலே ஆராதனை
8.குயிலே குயிலே பூங்குயிலே
9.எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
10.பூவே இளைய பூவே
11.வா வா வசந்தமே சுகம் தரும்

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

யூஜின் said...

பாடல் தொகுப்பு அருமை, மிக்க நன்றி அருமைஇயான பகிர்வுக்கு.

- யூஜின்

Follow by Email