Monday, February 28, 2011

130 கருத்தும் கானமும்



பாட்டு வானத்தில் என்னை வெற்றி கொடி கட்டி பறக்கும் படி அறிவு கொடுத்த நல்லவர்கெல்லாம் வணக்கம்.


மேற்கண்ட வரிகள் தங்களூக்கு புரியவேண்டுமென்றால் ஒலிக்கோப்பின் ஊடே செல்ல வேண்டும். அதற்குமுன் கிரிக்கெட் உலக கோப்பின் ஜுரத்தில் இருக்கும் நம் கிரிக்கெட் பிரியர்களூக்காக இந்த ஒலித்தொகுப்பில் வரும் ஒரு அழகான சுறுசுறுப்பான பாடல். நம் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று உலக கோப்பையை நோக்கி முன்னேற வேண்டும் வாழ்த்தி இந்த கருத்தும் கானமும் தங்களூக்கு வழங்குவதில் பெருமையடைகிறேன். கேட்டு மகிழுங்கள்.

இந்த ஒலித்தொகுப்பை தன் காந்தக்குரலில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.சூரியாகாந்தன் அவர்களூக்கு கோவை வானொலி ரசிகரக்ள் சார்பாகவும் இணையதள நேயர்கள் சார்பாகவும் நன்றி.

படம்: தேடி வந்த மாப்பிள்ளை
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
வருடம்: 29.8.1970
நடிகர்: எம்.ஜி.ஆர், ஜெயலலித்தா
இயக்குநர்: பி.ஆர்.பந்துலு
தயாரிப்பு: பத்மணி பிக்சர்ஸ்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக்கண்டேன்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக்கண்டேன்

உண்னாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்

உண்னாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்

கற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அதை உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் தண்ணீராகும்

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் தண்ணீராகும்

ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால்தான் நனவுகளாகும்

ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால்தான் நனவுகளாகும்

அன்று தொட்டு நீ நினைத்த என்னம் என்னம்மா
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்



Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

பட்டாம்பூச்சி said...

உங்களது அத்தனை தொகுப்புகளும் பிரமாதமா இருக்கு.. உண்ணமியிலையே வியக்கீறேன்.. ரொம்ப அருமையா இருக்கு.. வாழ்த்த வார்த்தைகள் தான் வரல... இது போன்ற நிகழ்சிகளை நான் வேறு எங்கு கேட்டத்தில்லை இந்த வாய்ப்பை கொடுத்த தமிழ்த்தோட்டம் மற்றும் கோவை ரவி அனைவருக்கும் நன்றீ தொடர்ந்து உங்கள் தொகுப்புகளைத் தாருங்கள்.

- பட்டாம்பூச்சி

யூஜின் said...

பாடல் தொகுப்புக்கு நன்றி.. வேலைபளுவிலும் உங்கள் கடின உழைப்பால் நமது தோட்டத்து உறவுகளுக்கு இசைத் தென்றலை கொடுக்கிறீங்க.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியும்...

உறவுகளே... பாடல்களை தறவிறக்கம் செய்து கோட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

- யூஜின்

Follow by Email