Wednesday, March 2, 2011

131 வெள்ளி மலை மன்னவா



இணையதள அன்பர்களே இதோ சிறப்பு நிகழ்ச்சியாக மஹாசிவராத்திரி காலை வானொலியில் கேட்ட அற்புதமான நிகழ்ச்சி. எனது அருமை அன்பர் திரு.அகிலா விஜயகுமார் திருப்பூர் அவரின் கைவண்ணத்தில் உருவான இந்த ஒலித்தொகுப்பு மிகவும் மனதிற்க்கு சாந்தியை தருவதாக இருந்தது. இவர் எனது பாசப்பறவைகள் தளத்தில் பல நிகழ்ச்சிகளை வானொலியின் மூலம் வழங்கியுள்ளார்.

வழக்கம் போல் வேலையின் ஊடே இந்த நிகழ்ச்சியை வானொலியில் கேட்க நேர்ந்தது சிவனை இங்கே வானொலி மூலம் தரிசித்த திருப்தி கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை கேளூங்கள் என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களூக்கு நன்றி. மேலும் , அவரின் அபிமான பாடகி எஸ்.வரலட்சுமி பாடிய பாடலின் தலைப்பே வைத்தது என் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. வெள்ளிமலை மன்னவா அந்த கணீர் குரலை எத்தனை முறை கேட்டலும் சலிப்பதில்லை.

இந்த இனிமையான தெய்வீக ஒலித்தொகுப்பை தனக்கே உரிய பாணியில் மிகவும் சிறப்பாக வாசித்து பாடல்களை தொகுத்து வழங்கிய இனிய அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீ வித்யா வரதராஜன் அவர்களூக்கு கோடானு கோடி நன்றிகள். இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பி கேட்கும் இணையதள நேயர்களூக்கும் சிவனின் அருள் கிடைக்க பெற உதவிய அகிலா விஜயகுமார் அவர்களுக்கும் வானொலி நிலையத்தாருக்கும் அறிவிப்பாளினி வித்யா வரதராஜன் அவரகளுக்கும் மீண்டும் நன்றி.

நிகழ்ச்சியை கேட்டு விட்டு உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை இந்த அலைபேசிக்கு அகிலா விஜயகுமார் திருப்பூர் 09994571467 ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் நிகழ்ச்சியை உருவாக்கியவர் இந்நாளில் மிக்க மகிழ்ச்சியடைவார்.

1.அற்புத லீலைகளை
2.நாத வினோதங்கள்
3.லிங்காஷ்டகம்
4.ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
5.இன்னிசையாய் செந்தமிழாய்
6.தாயும் நீ தந்தையும் நீ
7.வெள்ளி மலை மன்னவா
8.காதலாகி கசிந்து
9.தில்லையம்பல நடராஜா
10.ஒரு நாள் ஒரு பொழுதேனும்

Get this widget | Track details | eSnips Social DNA


music glitters
More music | Forward this Graphic

No comments:

Follow by Email