Friday, March 4, 2011

133 அந்த சிவகாமி மகனிடம்




இந்த ஒலித்தொகுப்பில் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயானா அவர்கள் சொன்னது போல மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் சீடர் இசையமைப்பாளர் திரு.கோவர்த்தனம் யார் இவர் என்று தான் இப்போதைய ரசிகர்கள் கேட்க தோன்றும். அவர் குறிப்பிட்டது ரொம்ப சரியே எவ்வளவு பேருக்கு அவரைப்பற்றி தெரியும்? மேலும், அவர் குறிப்பிட்ட பாடல்கள் பட்டியல் நாம் கேட்டால் அட இவரா இசையமைத்தது என்று நம் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்வதை தடுக்க முடியாது. அவர் இசையமைத்த பாடல்கள் அவ்வளவு இனிமை. உதாரனத்துக்காக துவக்கத்திலேயே ஒரு அற்புதமான பாடல் கேட்டு மகிழுங்கள். மேலும் இந்த ஒலித்தொகுப்பில் இனிமையான பிரபலமான மற்ற பாடல்கள் இடையிடையே அவரின் ஸ்வாராசியமான தகவல்களூடன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் லக்‌ஷ்மி நாராயானா. நிச்சயம் திரு.கோவர்த்தனம் அவர்களின் இனிமையான பாடல்களையும் மறக்கமாட்டோம் திரு.கோவர்த்தனம் அவர்களூக்கும்இந்த ஒலித்தொகுப்பை மிக அழகாக தன் பாணீயில் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளருக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

1.அந்த சிவகாமி மகனிடம்
2.அட அட மாமரக்கிளியே
3.செந்தாழம் பூவின்
4.ஜெர்மனியின் செந்தேன் மலரே
5.வெள்ளி கொலுசு மணி
6.காலை நேரப் பூங்குயில்

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

யூஜின் said...

மீண்டும் ஒரு அருமையான தொகுப்பு என் வேலை நேரங்களில் பாடல் தொகுப்புகளை கேட்டு கொண்டே வேலை செய்கிறேன் தொட்குப்புக்கு மிக்க நன்றி

--யூஜின்

Follow by Email