Monday, March 7, 2011

134 சில்லென பூத்து சிரிக்கிறகோவை வானொலிகளில் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒலிப்பரப்படும் என் நேரத்திற்க்கு தகுந்தார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகல் இரவு நேரங்களில் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிப்பேன் அவ்வாறு நான் ரசித்த ஒலித்தொகுப்புக்களில் என் மனதுக்கு பிடித்த சிறப்பாக இருக்கிறது மற்ற
நேயர்களும் ரசிப்பார்கள் என்று நினைத்து இணையத்ள அன்பர்களான தங்களூக்கும் தொடர்ந்து வழங்கி வருகின்றேன். சில நேரங்களில் வானொலி தீவிர நேயர்கள் சில பேர் என்னை தொடர்பு கொண்டு என் ஒலித்தொகுப்பு வருகிறது எனக்கு பதிவு செய்து தாருங்கள் என்று அன்பு கட்டளையிடுவார்கள் அந்த வகையில் நீண்ட நாள் எனது அருமை நண்பர் திரு.ஆனாந்தராஜ் அவர்களின் துணைவியார் செல்வி ஆனந்தராஜ் கைவண்ணத்தில் உருவான ஒலித்தொகுப்பு தான் இவை.இந்த தம்பதியரின் குழந்தைகள் நவின்ராஜ், மற்றும் சுபிக்‌ஷா தமிழ்நாடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார்கள். குறிப்பாக
கோவை வானொலிகளில் தினம் ஒரு முறையாவது நேயர் விருப்பங்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறாது இருக்காது. முழு குடும்பமே வானொலியின் தீவிர ரசிகர்கள். கீழ்கணட பாடல்கள் பட்டியலின் தேர்வை பார்த்தாலே அவர்களின் ரசிப்பு தன்மையை உணர்வீர்கள். சில பாடல்களை தவிர அனைத்துமே அறிதான பாடல்கள். எனக்கு மட்டுமல்ல இசைவிரும்பிகள் அனைவருக்கும் பிடித்த இனிமையான பாடல்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் சிறப்பாக எழுதி தன் ஆசைகளை பாடல்கள் மூலமாக கொட்டி தீர்த்து கொண்ட திருமதி.செல்வி ஆனந்தராஜ் அவர்களுக்கு இணையதள இசைப்பிரியர்கள் சார்பாக நன்றி.

மேலும் இவ்வார நேயர் நிகழ்ச்சியில் இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க அனைத்து விதத்திலும் உருதுனையாக இருந்தவர்களுக்கும். மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜே.கிருஷ்ணா அவர்களுக்கும் என் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இசையன்பர்களே பாடல் ஒலித்தொகுப்பை கேளூங்கள் உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை
ஒரு சேர்த்து வாழ்த்துக்களாக ஒலித்தொகுபை உருவாக்கிய நண்பர் திரு.ஆனந்தராஜ்
அவர்களின் அலைபேசி எண் (+91 9843048235) மூலம் குறுஞ்செய்தியாகவோ அல்லது அழைத்து பேசியோ தெரிவிக்கலாம்.

1.முத்தமிழில் பாட வந்தேன்
2.ஆனந்தம் விளையாடும் வீடு
3.மனமகளே உன் மனவறை கோலம்
4.சில்லென பூத்து சிரிக்கிற
5.சிறு விழி குறுநகை
6.சின்ன கன்னன் அழைக்கிறான்
7.பூவும் காற்றும் சேரும் போது
8.சோலைமலரே நெஞ்சை தாலாட்டும்
9.ம்னதில் உறுதி வேண்டும்
10.உலகம் சமநிலைப் பெற வேண்டும்

Get this widget | Track details | eSnips Social DNA

3 comments:

அ.இராமநாதன் said...

-----------------------
பாடல் ஒலித் தொகுப்புக்கு நன்றி
-----------------------------------------
படம்: மேல்நாட்டு மருமகள் - (1975)
இசை: குன்னக்குடி வைத்தயநாதன்
பாடகி: வாணி ஜெயராம்
=
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன

முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
சரணம்1:
-
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறுமுகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே

முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
-

சரணம்2:

பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே

முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன
_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

-- யூஜீன் said...

அருமையான தொகுப்பு நன்றி ஆனந்த ராஜ் ஐயா.. பகிர்வுக்கு நன்றி கோவை ரவி ஐயா.

-- யூஜீன்

Covai Ravee said...

வருகை தந்த இருவருக்கும் என் மன்மார்ந்த நன்றிகள். தங்களின் கருத்துக்கள் உருவாக்கியவருக்கு அனுப்பிவைக்கப்படும்.

Follow by Email