Friday, March 25, 2011

148 உன் கண்ணில் நீர் வழிந்தால்



ஏழிசை வேந்தன் திரு.டி.எம்.எஸ் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி நேற்று (24.03.2011) வானொலியில் ஒலிஉலா வந்தது. வழங்கியவர் அவரின் ப்ரியமான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா. எப்படி உணர்ச்சியுடன் டி.எம்.எஸ் ஐயா பாடுவாரோ அது போல அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.என் அவர்களூம் உணர்ச்சியமாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட வருடங்களூக்கு பிறகு ஏழிசை வேந்தனின் நிகழ்ச்சி வழங்குவது அவருக்கு மட்டும் மகிழ்ச்சியை தருவதல்ல எனக்கும் தான். ஆமாம் அன்பர்களே அவரின் அற்புத பாடல்களை எப்போது கேட்டாலும் நம் எல்லோரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்துவிடும். அது தான் உண்மை. நம் இணையதள நேயர்கள் சார்பாக ஏழிசை வேந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து மரியாதை செய்வோம் அவரின் அழியா பாடலை என்றும் கேட்டு ரசிப்போம்.

1.உலகம் பிறந்தது எனக்காக
2.கடவுள் நினைத்தான் மனநாள்
3.அந்த நாள் முதல் இந்த நாள் வரை
4.நாடு அதை நாடு
5.உன் கண்ணில் நீர் வழிந்தால்
6.ஒரு முல்லைப் பூவிடம்
7.ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
8.பூ மாலையில் ஓர் மல்லிகை

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Arony said...

இதில் 1,5ம் பாடல் சூப்பரோ சூப்பர்... எனக்கு மிகவும் ...மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... இப்போ நேரமில்லை, பின்னேரம் வந்து அனைத்தையும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் அருமையான பகிர்விற்கு நன்றி.

Arony

Rahni said...

keetteen...avarukku..vaalthai..therivikkavum.

rahini-germany

Follow by Email