Wednesday, March 30, 2011

150 கை விரலில் பிறந்தது நாதம்



அன்பு உறவுகளே என் பதிவுகள் அதிக பட்சம் கோவை வானொலியில் நான் விரும்பி கேட்டு ரசித்த நிகழ்ச்சிகளை மிகவும் சிரமப்பட்டு கேட்டுருப்பீர்கள். இதோ இந்த ஒலித்தொகுப்பு வழக்கத்துக்கு மாறாக ஐரோப்பிய தமிழ் வானொலியில் டி.எம்.எஸ் ஐயாவின் பிறந்த நாள் சிறப்பு ஒலித்தொகுப்பாக ஒலிப்ப்ரப்பட்டது. இந்த தொகுப்பை மிகவும் ரசித்து தொகுத்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அழகாக தொகுத்து வழங்கி உங்கள் தளத்தில் பதியுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதை நம் தமிழ்த்தோட்டத்தில் உறவுகளூக்காக கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை இங்கே கவிதைக்குயில் ராகினி அனுப்புங்கள் அன்பு உள்ளங்களே. இவரின் மற்ற ஒலித்தொகுப்புக்களை இங்கே கேட்டு மகிழலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலித்தொகுப்பினுள் செல்லும் முன் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன்
அவர்கள் பிறந்த நாள் அன்று திரு.டி.எம்.எஸ் ஐயாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய
ஸ்வாரசியமான தொகுப்பை கேட்டு மகிழுங்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்
அவருக்கு வாழ்த்த சொல்லத்தான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ஆணால்
சவுந்திரராஜன் ஐயாவோ வரிக்கு வரி நேயர்கள் எந்த வித நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு நீடுழி வாழவேண்டும் மனம் திறந்து பாராட்டியது ஐரோப்பிய வானொலிக்கு மட்டுமல்ல, அனைத்துலக வானொலி நேயர்களூக்கும், ஏன் இணையதள நேயர்களூக்கும் தனித்தனியாக சொன்னது போல் மகிழ்ச்சியடைந்தேன். இந்த ஒலித்தொகுப்பை வழங்கி என்னையும் உங்களையும் கேட்க வைத்த திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூககு என் உள்ளார்ந்த நன்றிகள் பல... பல.... வாழ்த்துக்கள் ராகினி மேடம்.

1.நான் பாடும் பாடல் நலமாக
2.இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்
3.மண் ஆனாலும் திருச்செந்தூரில்
4.கற்பக வள்ளியின் பொற்பதங்கள்
5.கை விரலில் பிறந்தது நாதம்
6.இரண்டு மனம் வேண்டும்
7.யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
8.நான் பாடிய முதல் பாட்டு
8.கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
9.இரவினில் ஆட்டம் பகலினில் கூட்டம்

Get this widget | Track details | eSnips Social DNA

6 comments:

யூஜின் said...

தொகுப்புக்கு நன்றி ஐயா... கேட்டுவிட்டு பதில் எழுதுறேன்.

-யூஜின்

அ.இராமாநாதன் said...

இளையராஜாவின் முதல் படமான இதில் அவரது இசையை பற்றி ஒரு வார்த்தை கூட விகடன், விமர்சனத்தில் இல்லாதது வியப்பளிக்கிறது..!-
நன்றி:
http://awardakodukkaranga.wordpress.com/2010/09/28

- அ.இராமநாதன்

ஆரோனி said...

தலைப்பைப் பார்த்ததுமே, இப்பாட்டாகத்தான் இருக்குமென நினைத்து உள்ளே வந்தேன்.... அதேதான் சூப்பர்... அன்னக்கிளிப்பாடலை எப்போ கேட்டாலும் அலுக்காதே... எனக்கு மிகப் பிடித்த பாடல்களோடு ஏனைய பாடல்களையும் ன்றிணைத்திருக்கும் தொகுப்பு அருமை.

ஊசிக்குறிப்பு:
இன்று முயற்சித்தேன்.. ஃபோவேர்ட், ரிவைண்ட் பண்ண முடிகிறது.

ஆரோனி

Covai Ravee said...

அன்பு ஆரோனி அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அன்னக்கிளிப்பாடல் படம் வந்த புதிதில் எல்லோரும் கேட்டிருப்பார்கள் இது சோகப்பாடல் அதிகம் கேட்டிருக்கமாட்டார்கள். மற்ற பாடல்களூம் அருமையாக இருக்கும். அடிக்கடி வாங்க.

தோழி பிரஷா said...

தொகுப்பிற்கும் பகிரவக்கும் நன்றி..

தோழி பிரஷா

Rahini said...

kalaiyarkalaimun..koduvaruvathi.parapacham..paarathu..nilai..niruthuvathil..raviyai..vida-...yaarum..ilai.
nanri..solli..thirrurumaa?

raahini baskaran -germany

Follow by Email