Wednesday, May 25, 2011

166 அன்பே அமுதா நீ பால் அமுதா
இந்த தொகுப்பில் இனிமையான கதம்பமாலை பாடல்களைத்தான் கேட்கப்போறீங்க. அறிவிப்பாளர் எனது இனிய நண்பர் திரு.கா.சுந்தரராஜன் அவர்களின் கணீர் குரலில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.அன்பே அமுதா நீ பால் அமுதா
2.தென்றலுக்கு இன்றொரு வயது
3.காதோடு தான் நான் பாடுவேன்
4.எண்ணப் பறவை சிறகடித்து
5.இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
6.காற்றினிலே வரும் கீதம்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Tuesday, May 24, 2011

165 வெண்ணிலா வானில் வரும்


;


சுப்ரமணியம் சங்கர் இந்த பெயர் எவ்வளவு பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை? ஆமாம் அன்பர்களே இந்த ஒலித்தொகுப்பில் தென்னக ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கபட்ட மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பற்றிய அவருடைய தகவல்களூடன் இனிமயான அவரின் படப்பாடல்களை தான் கேட்கப்போறீங்க மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தாருங்கள் தாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

1.கல்யாண ராமனுக்கும்
2.கண்டேன் கல்யாண பெண்
3.பார்வை ஒன்றே போதுமே
4.நான் நன்றி சொல்வேன்
5.நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
6.மேடையில் ஆடிடும் மெல்லிய
7.வெண்ணிலா வானில் வரும் வேளையில்
8.கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
9.அடி சர்தான் போடி வாயாடி
10.ஆகாயத்தில் தொட்டில் கட்டி
11.நல்ல நாள் பார்க்கவோ
12.சுகமான சிந்தனையில்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Wednesday, May 18, 2011

164 பூப்போல உன் புன்னகையில்இன்று மதியம் கோவை வானொலியில் புதிய நிகழ்ச்சி. அது வானொலி நேயர்கள் விரும்பி கேட்ட பாடல் நிகழ்ச்சி பொதுவாகவே நிகழ்ச்சி ஒலிபரப்பும் போது வரும் அழைப்புகளில் பாடல் கேட்டு ஒலிபரப்புவார்கள். அப்போது அறிவிப்பாளர்கள் படும் பாடு இருக்கே கடவுளுக்கே வெளிச்சம் எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு தடவையும் வானொலியின் ஒலி அளவை குறைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி சொல்லி மாளாது. இந்த நிகழ்ச்சி பதிவு செய்து ஒலிபரப்புவதால் நேயர்களின் குரலை அவர்களே கேட்டு ரசிக்க ஒரு வாய்ப்பு. இன்று முதல் புதிய நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் என்னவொரு இனிமையான ரசனைமிக்க பாடல்கள். பாடல் பெயரை தொடர்ந்து படம் பெயர் விரும்பி கேட்ட நேயரின் பெயரும் உள்ளது அதிகபட்சம் தினமும் வானொலியில் வரும் நேயர்களாக தான் இருக்கிறார்கள் அவரகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பாசப்பறவைகள் என்ற இந்த தளத்தில் நீண்ட நாள் கழித்து நேயர்களின் விருப்பங்களை ரசித்தேன் உடனே பதிவு செய்து உங்களூக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் இனிமையாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களூக்கு நன்றி.

1.அகரமுதல எழுத்தால்லாம் - முதல் பாடல் தேவகி ஸ்ரீனிவாசன்
2.பூப்போல உன் புன்னகையில் -கவரிமான் - திருமதி.விஜயலக்‌ஷ்மி கிருஷ்னசாமி,கோவை
3.இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்-மணிமேகலை, வரதராஜபுரம்,கோவை
4.இறைவன் என்றொரு கவிஞன் - ஏன் - சையத்ரசூல்,செல்வபுரம்,கோவை.
5.ஒரு நாளூம் உன்னை மறவாத -எஜமான்-சக்திவேல்,கோபாலபுரம்,கோவை
6.அள்ளி தந்த வானம் -ஆனந்தராஜ், திருப்பூர்
7.செந்தாழம் பூவில் - முள்ளூம் மலரும்-கே.சி.மணி
8.ஒரு பூங்காவனம் -அக்னி நட்சத்திரம் -ராஜேஸ்வரி
9.வாழ்க ராணி - அகிலா விஜயகுமார், திருப்பூர்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க்க இதோ (0422 2317672 * 0422 2317673) இந்த எண்களில் ஒவ்வொரு சனிக்கிழமை 1மணி முதல் 3 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, May 17, 2011

163 ஏட்டில் எழுதிவைத்தேன்இனிய பாடல்களூடன் அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன் அவரகளின் அற்புதமான குரலில் இதயத்தை ஆக்ரமிக்கும் ஒலித்தொகுப்பு இவை கேட்டு மகிழுங்கள்.

1.அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்
2.அழகு தெய்வம் மெல்ல மெல்ல
3.பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
4.பெண் ஒருத்தி என் அருகில் வந்தாள்
5.காலையும் நீயே மாலையும் நீயே
6.ஏட்டில் எழுதிவைத்தேன் (ஆஹா ஆஹா என்னவொரு அருமையான பாடல்)
7.கொடுக்க கொடுக்க இன்பம் பெருகுமே
8.பவள கொடியிலே முத்துக்கள்
9.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
10.வருச மாசம் தேதி பார்த்து
11.காதல் காதல் என்று பேசி
12.வசந்தகாலம் வருமோ

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, May 16, 2011

162 வசந்த வானம் பிரிய கானங்கள்வசந்த வானம் பிரிய கானங்கள்

எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் நீண்ட நாட்களூக்கு பிறகு சென்ற சனிக்கிழமை காலை வானொலி நிகழ்ச்சியில் வருகை புரிந்தார். அவர் எப்போது நிகழ்ச்சிக்கு வந்தாலும் தலையை பிச்சிகிற குறுஞ்செய்தி கேள்வியுடன் வருவார் அதுவும் அதிகபட்சம் மலையாள படத்தின் சம்பந்த பட்ட படங்களின் கேள்விகளாகவே கேட்பார் அதனாலே பாலக்காடு நேயர்கள் அதிகம் இவரின் நிகழ்ச்சியில் இடம் பிடிப்பார் நமக்கு கேளிவிக்கு பதில் தெரிஞ்சாலும் தெரியாவிட்டாலும் அனுப்பிய குறுஞ்செதிகளை நிகழ்ச்சியில் வாசிப்பார் இதனாலேயே வானொலிப் பிரியர்களிடம் இவருக்கு தனி மரியாதை எப்போதும் இருக்கும்.
நீங்களும் என்ன கேள்வி என்று கேட்டுத்தான் பாருங்களேன் அதுவும் இரண்டு மிக்சிங் பாடல்களின் இனிமையை நீங்களூம் சுவையுங்க:.

1. ஹே ராஜாவே >> 2.தேன் கொண்டு சென்றவன் >> 3.கண்ணே உன் கண்கள் தான் >>4.அழகிய கார்த்திகை தீபங்கள்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Saturday, May 14, 2011

161 கனவுகளே உன் கோலம் எங்கேஒரு நாள் மாலையில் கேட்டது 12 இனிமையான பொன்மாலை கீதங்கள் தொகுப்பு மனதுக்கு உற்சாக இருக்கிறது அதை நீங்களூம் உணர்வீர்கள். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.நினைப்பது நிறைவேறும்
2.தாழம்பூவே வாசம் வீசு
3.மதனோற்சவம் ரதியோடுதான்
4.கனவுகளே உன் கோலம் எங்கே
5.அடியேனை பாரும்மா
6.மானிக்க மாமணிமாலை
7.செண்டுமல்லிப்பூப்போல் பந்து
8.ஆகாயம் தானே அழகான கூறை
9.இந்த மல்லிகை பூவுக்கு
10.இன்று வென்னிலா ஈரமானது
11.ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
12.ஆரம்பகாலம் ஒரு பக்க தாளம்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Tuesday, May 10, 2011

160 முத்து முத்தா பேஞ்ச மழை

,,,,


பலகுரலில் மிமிக்கரி பேசுறவங்களை நிறையபேரை தொலை காட்சியிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பார்த்து கேட்டிருப்போம் அது அவர்களின் திறமை. அதே போல் பல குரலில் பாடும் ஒரு பின்ணணி பாடகி எனக்கு தெரிந்தவரை திருமதி. மாலதி அவர்கள் தான் இவர் அவருடைய கணவர் திரு.லக்‌ஷ்மணன் அவர்கள் நடத்தும் பிரபலமான லக்‌ஷ்மி ஸ்ருதி இசை குழுவில் பல வருடங்களாக பாடிவருகிறார். பொதுவாகவே ஒரு குரலில் ஸ்ருதி பிசகாமல் பாடி சினிமாவில் ஜெயிப்பது என்பது குதிரை கொம்பாகும். அதுவும் இவர்
தன்னுடைய தனித்திறமையை வைத்து பிரபலமான பின்ணணி பாடகிளான ே.பி.சுந்தராம்பாள். எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் பாடல்களை பாடியே பிரபலமானவர். அப்படி ஒரு அழுத்தமான குரல். இது போன்ற திறமைசாலிகளின்
அனுபவங்களை கேட்பதே ஒரு ஆனந்தம். அவர்களின் அனுபவங்கள் புதியதாக பாடுபவர்களுக்கு ஒரு உந்துதலாக கூட அமையும். இந்த ஒலித்தொகுப்பில் அவருடைய திரையுலக பிரவேசம் பற்றியும், தன் அனுப்வங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இது மேதினதன்று ஒலிபரப்பாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய வானொலியில் மாலை ஒலிபரப்பாயிருந்தது. தவறாமல் கேட்கும் வானொலிப்பிரியர்கள் அதிகம் பேர் கேட்டிருப்பார்கள். இதோ இணையதள நேயர்களின் செவிக்காக நான் எடுத்து வந்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். நீங்களூம் மாலதி அவர்களின் திறமையை
நிச்சயம் வாழ்த்துவீர்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் பிடித்த பாடகர் செல்லம் எஸ்.பி.பியாம், அவர் அதிகம் மேடை நிகழ்ச்சியில் பாடிய பாடகி கே.பி.சுந்தராம்பாள் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர். இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய அகில இந்திய சென்னை வானொலி நிலையாத்தாருக்கும், நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அனைத்து அறிவிப்பாளர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.சென்பகமே சென்பகமே
2.முத்து முத்தா பேஞ்ச மழை
3.ஒரே ஒரு ராத்திருக்கு
4.ஏதே ஏதோ என் எண்ணம் வளர்த்தேன்
5.உழைப்பாளி இல்லாத நாடுதான்

Get this widget | Track details | eSnips Social DNAஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Thursday, May 5, 2011

159 கே.பி. ஒரு காவியம்


கே.பி. ஒரு காவியம்

இயக்குநர் கே. பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

கோவை கொங்குமண்டலம் வானொலி நேயர்களுடன் இணையதள நேயர்களூம் இணைந்து தன் வாழ்த்துக்களை இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களூக்கு தெரிவித்துக் கொள்கிறார்கள்.

முதலில் இந்த ஒலித்தொகுப்புக்களை நேற்று இரவு சிறப்பாக தொகுத்து வழங்கிய கோவை அகில இந்திய வானொலி அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமானாதன் அவர்களூக்கும். மேலும், நேற்று மாலை சென்னை மற்றும் தமிழ்நாடெங்கும் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் உள்ள நெட்வொர்க் நிகழ்ச்சியில் கே.பி.ஒரு காவியம் கேட்டு ரசித்த நேயர்களில் நானும் ஒருவர்ன். சென்னை வானொலி அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் கோவை வானொலி நேயர்களூம், இணையதள நேயர்களூம் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

பாடல்கள் எல்லாம் பழசு தான் சந்தேகமே இல்லை. மறுபடியும் மறுபடியும் கேட்கும் போது அந்த பாடல்கள் மீது ஒரு மரியாதை வருவது உண்டு. அதை உருவாக்கியவர்களின் மீது இன்னும் அதிகமான மரியாதை ஏற்படும். அந்த வகையில் பால்கே பாபா சாகிப் உயர் விருதை பெற்ற இயக்குநர் சிகரத்துக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த பதிவு. அவசியம் கேளூங்கள் உங்கள் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

இயக்குநர் சிகரம் நீடுழி வாழ்ந்து இன்னும் பல வெற்றிப்படைப்புக்களை ரசிகர்களூக்கு தரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

இனிய பாடல்களுடன் இயக்குநர் சிகரத்தின் பேட்டியும் அவரால் உருவானவர்கள் சிலபேரின் பேட்டியும் வாழ்த்துக்களையும் இரண்டாவது ஒலித்தொகுப்பில் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. இரண்டையும் பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

ஒலித்தொகுப்பு 1 பதிவிறக்கம் இங்கே

1.வெற்றி வேண்டுமா போட்டுபாரடா
2.பிள்ளை மனம் கொண்ட
3.ஆண்டவன் தோட்டத்திலே அழகு
4.வண்ணக்கிளி சொன்ன மொழி
5.உன்னை ஊர் வந்து அழைக்க
6.தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு
7.வின்னுக்கு மேலாடை
8.கல்யாண சாப்பாடு போடவா
9.என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு
10.நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய
11.அதிசய ராகம் ஆனந்த ராகம்

Get this widget | Track details | eSnips Social DNAஒலித்தொகுப்பு 2 : பதிவிறக்கம் இங்கே


1.தேமேரே பீச்சுமே
2.வெற்றி நிச்சயம்
3.காதோடு தான் நான் பாடுவேன்
4.நஞ்சையுண்டு புஞ்சையுண்டு
5.காதல் ரோஜாவே
6.நினைத்தாலே இனிக்கும்

Get this widget | Track details | eSnips Social DNA


இயக்குநர் சிகரத்தின் படைப்புகளை பற்றி இணையத்தில் பலவகையான கருத்துக்கள விமர்சனங்கள் இருந்தாலும் அது ஒரு புறம் இருக்கட்டும். அவரைப் போன்று படம் எடுக்க ஒரு துணிவு வேண்டும். என்னைப்பொருத்த வரையில் அந்த துணிவுக்கு கிடைத்த விருதாகதான் நான் நினைக்கிறேன்.

Monday, May 2, 2011

158 சேட்டை>> இது குறும்படம்

சேட்டை>> இது குறும்படம் சென்னையில் எனது மகனுடன் மல்டிமீடியாவில் படிக்கும் மாணவர்களால் எடுக்கப்பட்டது வழக்கம் போல் கல்லூரி மாணவர்கள் லூட்டி அடிக்கும் படம் தான் நல்லாதான் அடிவாங்க்குறாங்க. நல்ல முயற்சி இசையும் நன்றாக உள்ளது. இதை உருவாக்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே?நன்றி: யூட்யூப்.காம்

பார்த்து விட்டு இங்கேயும் தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே?

Follow by Email