Wednesday, May 18, 2011

164 பூப்போல உன் புன்னகையில்



இன்று மதியம் கோவை வானொலியில் புதிய நிகழ்ச்சி. அது வானொலி நேயர்கள் விரும்பி கேட்ட பாடல் நிகழ்ச்சி பொதுவாகவே நிகழ்ச்சி ஒலிபரப்பும் போது வரும் அழைப்புகளில் பாடல் கேட்டு ஒலிபரப்புவார்கள். அப்போது அறிவிப்பாளர்கள் படும் பாடு இருக்கே கடவுளுக்கே வெளிச்சம் எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு தடவையும் வானொலியின் ஒலி அளவை குறைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி சொல்லி மாளாது. இந்த நிகழ்ச்சி பதிவு செய்து ஒலிபரப்புவதால் நேயர்களின் குரலை அவர்களே கேட்டு ரசிக்க ஒரு வாய்ப்பு. இன்று முதல் புதிய நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் என்னவொரு இனிமையான ரசனைமிக்க பாடல்கள். பாடல் பெயரை தொடர்ந்து படம் பெயர் விரும்பி கேட்ட நேயரின் பெயரும் உள்ளது அதிகபட்சம் தினமும் வானொலியில் வரும் நேயர்களாக தான் இருக்கிறார்கள் அவரகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பாசப்பறவைகள் என்ற இந்த தளத்தில் நீண்ட நாள் கழித்து நேயர்களின் விருப்பங்களை ரசித்தேன் உடனே பதிவு செய்து உங்களூக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் இனிமையாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களூக்கு நன்றி.

1.அகரமுதல எழுத்தால்லாம் - முதல் பாடல் தேவகி ஸ்ரீனிவாசன்
2.பூப்போல உன் புன்னகையில் -கவரிமான் - திருமதி.விஜயலக்‌ஷ்மி கிருஷ்னசாமி,கோவை
3.இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்-மணிமேகலை, வரதராஜபுரம்,கோவை
4.இறைவன் என்றொரு கவிஞன் - ஏன் - சையத்ரசூல்,செல்வபுரம்,கோவை.
5.ஒரு நாளூம் உன்னை மறவாத -எஜமான்-சக்திவேல்,கோபாலபுரம்,கோவை
6.அள்ளி தந்த வானம் -ஆனந்தராஜ், திருப்பூர்
7.செந்தாழம் பூவில் - முள்ளூம் மலரும்-கே.சி.மணி
8.ஒரு பூங்காவனம் -அக்னி நட்சத்திரம் -ராஜேஸ்வரி
9.வாழ்க ராணி - அகிலா விஜயகுமார், திருப்பூர்

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க்க இதோ (0422 2317672 * 0422 2317673) இந்த எண்களில் ஒவ்வொரு சனிக்கிழமை 1மணி முதல் 3 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Follow by Email