Wednesday, June 8, 2011

167கண்கள் இரண்டும் விடிவிளக்காக



சென்ற வாரம் என் மகன் படிப்பு விசயமாக சென்னை சென்றிருந்தேன் ஒரு நாள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது அன்று இரவு வழக்கம் போல் என் அலைபேசியில் வானொலி கேட்கும் போது நான் நேசிக்கும் யாழ் சுதாகர் அவர்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாயிற்று. நிதானமாக மிகவும் சொல் சுத்தமாக பேசும் அவரின் நிகழ்ச்சி கேட்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது. இதோ அவரின் பாடல் தெரிவுகளும் அவற்றின் ஊடே சென்னை வானொலி பிரியர்களின் குறுஞ்செய்திகளை படித்தும் காட்டினார். பழைய பாடல்கள் யாவும் இனிமையே நிகழ்ச்சியின் தலைப்பை போன்று அந்த நாள் ஞாபகம் வந்து வந்து என்னை மகிழ்ச்சிபடுத்தியது. என் குறுஞ்செய்தியின் பார்த்து அடையாளம் கண்டு கொண்டு அவர் சொன்னது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இனிய பாடல்களை நீங்களும் கேட்க வேண்டாமா? அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலுடன் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

வரிசையாக யாழ் சுதாகர் அவர்களின் தொகுப்பு தோரணம்

அறிவிப்பாளர் யாழ் சுதாகர்

1.எங்கே அவள் தேடுதே
2.நாம் ஒருவரை ஒருவர்
3.கண்கள் இரண்டும் விடிவிளக்காக
4.மின்மினியை கண்மனியாய்
5.பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
6.மெல்லப் மெல்லப்போ மெல்லியிடையாளே
7.நினைத்தேன் வந்தாய் நூறு வயது
8.நீயே தான் எனக்கு மணவாட்டி



Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email