Monday, October 31, 2011

200 அறிந்த முருகன் அறியாத தகவல்கள்அறிந்த முருகன் அறியாத தகவல்கள்

திருப்பூரில் இருந்து இடம் பெயர்ந்து சென்னைக்கு சென்று வேலைபார்க்கும் எனது இனிய நண்பர் அதிதீவிர வானொலி ரசிகர் திரு.அகிலா விஜயகுமார் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் கை வண்ணத்தில் வழங்கிய கந்தசஷ்டி சிறப்பு நிகழ்ச்சியாக “அறிந்த முருகன் அறியாத தகவல்கள்” என்ற தலைப்பில் வானொலி தொகுப்பாக இன்று காலை வழங்கினார். தமிழ் கடவுள் முருகன் புகழ் பாடும் இனிய பாடல்களையும் முருகனைப் பற்றி அறியாத தகவல்களையும் சேகரித்து இணையதள நேயர்களான நமக்காக வழங்கியுள்ளார். இந்த ஒலித்தொகுப்ப்பை தன் இளமையான இனிமையான குரலில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருப்பவர் அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் மிகவும் சிரமப்பட்டு தகவல்களை சேகரித்து வழங்கிய வானொலி நேயர் திரு.அகிலா விஜயகுமார் அவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கந்தசஷ்டி விழா செல்லும் இந்த வாரத்தில் உங்கள் பங்காக நீங்களூம் கேட்டு மகிழுங்கள் தமிழ் கடவுள் முருகன் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குவார்.

1.நம்பிக்கை வைத்தவர்கள்
2.எழுதி எழுதி பழகிவந்தேன்
3.ஆறுமுகமான பொருள்
4.குன்றக்குடி கொண்ட வேலா
5.பாட்டுக்கு தலைவன் வருகின்றான்
6.சிந்தனையில் மேடை கட்டி
7.மனமே முருகனின் மயில்வாகனம்
8.நாடறியும் கூறும் மலை
9.சொல்லச் சொல்ல இனிக்குதடா
10.திருத்தணி முருகா
11.வேல் வண்ணம் செந்தூர் கண்டேன்
12.குன்றத்திலே குமரனக்கு கொண்டாட்டம்
13.வெற்றிவேல் வெல்லுமடா
14.கந்தன் காலடியை வணங்கினால்
15.பழம் நீயப்பா ஞானப்பழம்

அறிந்த முருகன் அறியாத தகவல்கள் பதிவிறக்கம் இங்கே

199 மணிமேகலையின் -ஒலித்தொகுப்பு
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வானொலி நேயரின் ஒலித்தொகுப்பு இது. பதிவிற்க்காக ரொம்ப நாட்கள் காத்திருந்தது. கோவை வரதராஜபுரத்தில் வசிக்கும் திருமதி.மணிமேகலை என்ற தீவிர வானொலி நேயர் இவர். இவர் பங்குபெறாத வானொலி நிகழ்ச்சிகள் அறிது எனலாம். இதோ இந்த ஒலித்தொகுப்பில் அவர் விரும்பிய பாடல் தொகுப்பு. தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவரின் கணீர் குரலில் தொகுப்பு மிகவும் அருமை. தொகுப்பாளருக்கும் நிகழ்ச்சி உருவாக்கிய வானொலி நேயருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். என்னென்ன பாடல்கள் என்பதை நீங்களே ஓடவிட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 27, 2011

198 வேறென்ன நினைவு உன்னைத்தவிர
நேற்று இரவு ஏ.எல்.ராகவன் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சி கேட்டேன் உடனே உங்களும் விருந்தாக தருகிறேன்.எல்லாமே அதிகம் கேட்கமுடியாத இனிமையான பாடல்கள் தொகுப்பு இடையிடையே பாடல் உருவான விதம் பற்றி திரு.ஏ.எல்.ராகவன் அவர்களே குறிப்பிடுகிறார் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.பால்ராஜ் அவர்கள். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.வாழ்க்கை என்பது ஜாலி
2.இல்லாத சோலையே
3.வேறென்ன நினைவு உன்னைத்தவிர (இந்த பாடல் இப்போது கேட்டாலும் சிறிய வயதில் எஸ்.பி.பி குரல் போன்று தோன்றும் எனக்கு மட்டும்.. உங்களுக்கு தோன்றுகிறதா?)
4.ஒன்ஸ் பாப்பா
5.அடிச்சிருக்கு நல்லதொரு சான்ஸ்
6.காலம் மாறுது கருத்தும் மாறுது
7.முல்லைப்பூவு மணக்குது
8.காதல் என்றால் ஆணும் பெண்ணும்
9.வாடா மச்சான் வாடா
10.போடச்சொன்னால் போட்டுக்கறேன்

பதிவிறக்கம் இங்கே

Tuesday, October 25, 2011

197 வேலாலே விழிகள்
மீண்டும் அறிவிப்பாளர் யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலில் நேயர்கள் ரசித்த பாடல் ரசனைகளை அவருக்குரிய பாணியில் தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்துமே அமர்க்களமான பாடல்கள். இந்த டி.எம்.எஸ் அய்யா பாடல்கள் இணையத்தில் கேட்டு எத்துனை வருடங்களாயிற்று. சென்னை தவிர மற்ற ஊர்களின் நேயர்களின் கடிதங்களையும் வாசித்து வாழ்த்து கூறுகிறார் அறிவிப்பாளர். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.ஆகாய பந்தலிலே
2.கல்யான ஆசை வந்த
3.இனியவளே என்று பாடி வந்தேன்
4.பொன்னுக்கென்ன அழகு
5.தேவன் வந்தாண்டி
6.இலங்கையின் இளம் குயில்
7.செந்தமிழ் பாடும்
8.வேலாலே விழிகள்
9.மதன மாளிகையில்

ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

196 நாதகலா ஜோதி ராசய்யா-2நாதகலா ஜோதி ராசய்யா-2 வது ஒலித்தொகுப்புதான் இவை அறிவிப்பாளர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலில் ராகங்களின் அடிப்படையில் நாதகலா ஜோதி ராசய்யா அவர்களின் இசையமைப்பில் மீண்டும் ஒரு இனிமையான தொகுப்பு. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.தென்றல் வந்து என்னை தொடும் - ராகம்: ஹம்சநாதம்
2.பாடு நிலாவே தேன் கவிதை - ராகம் :வாசந்தி
3.தூங்காத விழிகள் ரெண்டு - ராகம் : அமிர்தவர்ஷனி
4.சின்ன சின்ன மொட்டு மீதிலே - ராகம்:சுத்ததன்யாசி
5.கலகலக்கும் மணியோசை - ராகம்:சுத்ததன்யாசி
6.ஆயிரம் தாமரை மொட்டுகளே - ராகம்:சுகபந்துவராளி
7.மலர்களில் ஆடும் இளமை - ராகம்: சுத்தசாவேரி
8.இது ஒரு காதல் மயக்கம் - ராகம்: சுத்தசாவேரி
9.கங்கை கரை மன்னனடி - ராகம்: தோடி
10.கலைவாணியே உன்னைத்தானே - ராகம்: கல்யாணி


நாதகலா ஜோதி ராசய்யா-2 ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Wednesday, October 19, 2011

195 அங்கும் இங்கும் பாதை உண்டு17.10.2011 அன்று கவிஞர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாளன்று வானொலியில் ஓர் இனிமையான ஒலித்தொகுப்பு கேட்க முடிந்தது. மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள். பாடல்கள் நாம் பலதடவை கேட்டாலும் இன்றும் நம் மனதை பதமாக வருடி கொடுக்கின்றன. அறிவிப்பாளரின் நிதானமான அவரைப்பற்றிய அறிதான தகவல்களுடன் கேட்டு தான் பாருங்களேன்.

1. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
2. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
3. அதிசய ராகம் ஆனந்த ராகம்
4. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
5. காலங்களில் அவள் வசந்தம்
6. உன் கண்ணில் நீர்வழிந்தால்
7. அன்பு நடமாடும் கலைக்கூடமே
8. அங்கும் இங்கும் பாதை உண்டு

ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Friday, October 14, 2011

194 வெள்ளை காக்கா மல்லாக்குதினமும் நான் விரும்பி கேட்கும் இந்த நிகழ்ச்சி வானொலி நேயர்கள் தன் விருப்பங்களை அறிவிப்பாளர் திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களிடம் குதுகலத்துடன் கேட்டு வாங்கி நமக்காக வழங்குகிறார்கள். இதோ அவர்களூடன் உற்சாக குதுகலத்துடன் நீங்களூம் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1. தேன் சிந்துதே வானம் >> 2. இதத்தான் ரொம்ப ரசிச்சேன் >> 3. சாமிக்கிட்ட சொல்லி வெச்ச 4. வானுயர்ந்த சோலையிலே >> 5. வெள்ளை காக்கா மல்லாக்கு பறக்குது >> 6. என் காதல் தேவி >> 7. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.

பதிவிறக்கம் இங்கே

Follow by Email