Monday, November 28, 2011

212 சொல்லத்தான் நினைக்கிறேன் - 4சித்திரைப் பூவினில்

கீழ்கண்ட வானொலி நேயர்கள் இதில் உள்ள பாடல்களை யார் யார் என்னென்ன பாடல்களை பாடினார்கள் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடி அறிவிபாளினி திருமதி சாரதாராமநாதன் அவர்களின் பாராட்டுக்களை பெற்றார்கள். ஸ்வாரசியமான இந்த ஒலித்தொகுப்பை நீங்களும் பதிவிறக்கம் செய்து கேட்டு பாருங்கள் இசைப் பிரியர்களே.

சிவகங்கை ஆறுமுகம், மதுரை புஷ்பலதா,பழனி சன்முகப்பிரியா, அசாம் மோதிலால், கனியூர் விஸ்வநாதன், திருப்பூர் மோகனசுந்தரம், செல்வபுரம் சையத் ரசூல், செல்வபுரம் சிங்காரவேல், பூக்கடை மணி.

1.நீ வரவேண்டும் என
2.ஆனிமுத்து வாங்கிவந்தேன்
3.தங்கபதக்கத்தின் மேலே
4.கன்னி வேண்டுமா கவிதை
5.சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
6.சித்திரைப் பூவினில்
7.பொட்டு வைத்த முகம்
8.வசந்ததில் ஓர் நாள்
9.என்றும் பதினாறு

சொல்லத்தான் நினைக்கிறேன் கேட்க மற்றும் பதிவிறக்கம் இங்கே

Tuesday, November 22, 2011

211 அலங்காரம் அலங்காரம் நீயே
அறிவிப்பாளர் திரு.கிருஷ்னா அவர்களின் அமைதியான குரலில் வானொலி தீவிர ரசிகர்கள் பங்கு கொண்டு வேண்டி விரும்பிய பாடல் தொகுப்பு தான் இவை.
நாமும் கேட்டு மகிழ்வோம். இனிமையான பழைய பாடல்களை எங்களையும் கேட்க வைத்த வானொலி ரசிகர்கள் அனைவருக்கும் மற்றும் அறிவிப்பாளர் கிருஷ்னா அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.கனவின் மாயா லோகத்திலே - தாராபுரம் தமிழாசிரியர் பழனிசாமி
2.பூவரையும் பூங்கொடியே - சிவகங்கை தேவகோட்டை கல்யாணி
3.அலங்காரம் அலங்காரம் நீயே - திருப்பூர் - மோகனசுந்தரம்
4.மோஹன புன்னகை ஊர்வலமே - திருப்பூர் தேவகி
5.வேட்டையாடு விளையாடு - மதுரை - எல்.ஆர்.சுப்ரமணியம்
6.பொன்னு விளையற பூமியடா - உடுமலை - கனிமுத்து
7.இந்த மன்றத்தில் ஓடிவரும் - காந்திபுரம் - பொன்னுசாமி
8.காக்கை சிறகினிலே நந்தலாலா

Monday, November 21, 2011

210 ஊரார் உறங்கையிலேபிரபல குணசித்திர நடிகை பண்டரிபாய் அவர்கள் பற்றிய தகவல்களுடன் அவர் தோன்றிய படங்களின் இனிய பாடல்களின் தொகுப்பு இங்கே. படத்தில் பண்டரிபாய் திரையில் பார்த்தாலே அம்மா பாத்திரத்துக்கு ஒரு மரியாதை வரும் அந்த அளவுக்கு வெகுளியாகவும் பாவமாகவும் தோன்றுவார் எனக்கு பிடித்த குணசித்திர நடிகை அவர்கள் இவரைப்பற்றிய அறிய தகவல்களூடன் சென்ற வாரம் வானொலியில் நான் கேட்டு ரசித்த நிகழ்ச்சி இது. இதோ உங்கள் செவிகளுக்கும் கொண்டு வந்திருக்கிறேன். நிகழ்ச்சியை மிகவும் அபாரமாக வழக்கம் போல் ஸ்வாரசியமாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களுக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. உங்கள் கத்துக்களையும் தெரிவியுங்கள்.

1.என்கை இனிமேல் ஏமாற்றினால்
2.புது பெண்ணின் மனதை தொட்டுவிட்டு
3.பட்டுப்பூச்சி போலே ராணி
4.நான் உன்னை நினைக்காத
5.கன்னியரின் வெள்ளை மனம் போல்
6.ஊரார் உறங்கையிலே
7.தாயில்லாமல் நான் இல்லை
8.கேட்டது கொடுப்பவனே கிருஷ்னா
9.வாழ்க்கையின் பாடம் தேடிடும்
10.துள்ளி துள்ளி விளையாட
11.மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
12.பாலூட்டி வளர்த்த கிளி
13.வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது

பண்டரிபாய் அவர்களின் தகவல்களுடன் இனிய பாடல் தொகுப்பு இங்கே

Friday, November 18, 2011

209 கனவா இல்லை காற்றா


1.ஊலல்லா உலல்லா 2.அடி நீ எங்கே & 3.ஆப்பிள் பெண்ணே நீ யாரோ 4மின்சாரப்பூவே பெண் பூவே & 5.குறுக்கு சிறுத்தவளே & 6.கனவா இல்லை காற்றா &ஒரு பொய்யாவது சொல் கண்ணே.

இது போன்ற பிரபலமான சில பாடல்களை நாம் ஒரு தடவை கேட்டு விட்டு சென்று விடுவோம், சில நேரங்களில் அடடே இந்த பாட்டு மெட்டு நன்றாக இருக்கிறதே யாருடைய குரல் இனிமையாக பாடியிருக்கிறாரே என்று மீண்டும் கேட்க தூண்டும். இது போன்ற எண்ணங்கள் எனக்கு பல தடவை வந்ததுண்டு. பாடல் பட்டியல் பாடல்கள் பாருங்கள் நான் நினைத்தது போன்றே உங்களுக்கு தோன்றியிருக்கக்கூடும். அந்த வகையில் “ஏங்கே நிம்மதி பாடலில் சிவாஜி அவர்கள் இரண்டு கைகளையும் பரப்பியவாறு உணர்ச்சிவசப்பட்டு எங்கே நிம்மதி என்று பாடுவாரே” அதே போல தொலைக்காட்சியிலும் மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் மிகவுன் அனுபவித்து பாடும் பாடகர் திரு.ஸ்ரீன்வாஸ் அவர்கள் பாடிய பாடல்கள் சிலவற்றை ஏன் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த பாடல் தொகுப்பை தான் ஒரு மாலை பொழுதினில் கேட்டு இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளேன். பாடல்கள் மட்டுமல்ல அவரைப்பற்றிய ஸ்வாரசியமான தகவல்களூடன் கேட்க இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.உதயா அவர்கள். அவருக்கு இணைய தள நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் இனிய பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Thursday, November 17, 2011

208 கோழி ஒரு கூட்டிலே

அறிதான பழைய பாடல்கள் கேட்பதில் ஒரு அலாதியான இன்பம் மனம் எங்கும் மகிழ்ச்சி வெள்ளமாக பாயும். இதோ இந்த ஒலித்தொகுப்பில் அனைத்து பல பாடல்களூம் நாம் பல சந்தர்பங்களில் கேட்டு மகிழ்ந்திருப்போம் இருந்தாலும் இந்த தொகுப்பில் பாடல்களின் இடையில் அறிவிப்பாளினி திருமதி சாரதாராமானாதன் அவர்களின் இனிய குரலால் அறிதான தகவல்களூடன் தொகுத்து வழங்கும் பாணியே தனி அழகு தான். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றிகள் பல. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.சந்திரோதயம் இதிலே காணுவது - பி.யூ.சின்னப்பா
2.மல்லிகைப்பூ -ஆர்.பாலசரஸ்வதி
3.சங்கத்து புலவர் பாட - என்.எஸ்.கிருஷ்னன்
4.மங்கலம் பார்ப்பாள் - எஸ்-வரலட்சுமி
5.கோழி ஒரு கூட்டிலே -எம்.எஸ்.ராஜேஸ்வரி
6.சின்னஞ்சிறு சிட்டே - எஸ்.சி.கிருஷ்னன,ஜிக்கி
7.சங்கநாதம் வந்து சேரும் - சி.வி.ரத்தினம்
8.சொல்லத்தான் நினைக்கிறேன் - எம்.எஸ்.விஸ்வநாதன்
9.சுந்தரி சவுந்தரி - டி.எம்.சவுந்தரராஜன்,லீலா, ஏ.பி.கோமளா
10.தங்கரதம் வந்தது - பாலமுரளி கிருஷ்னா,சுசீலா

ஒலித்தொக்குப்பு கேட்க மற்றும் பதிவிறக்கம் இங்கே

Tuesday, November 15, 2011

207 சொல்லத்தான் நினைக்கிறேன் 3சொல்லத்தான் நினைக்கிறேன் ஒலித்தொகுப்பு - 3

இந்த ஒலித்தொகுப்பில் பாடல்கள் பட்டியல் இல்லையே ஏன் என்று உங்களூக்கு நினைக்கத் தோன்றலாம். நிகழ்ச்சியின் சாராம்சமே அதுதான். கீழே உள்ள பெயர் பட்டியலில் உள்ளவர்கள் எல்லோருமே கோவை வானொலியின் தீவிர ரசிகர்கள். பாடலில் இருந்து ஏதாவது ஒரு இடத்தில் இருந்து 2 வரிகள் அல்லது இசை ஒலிபரப்புவார்கள் நேயர்கள் சரியான பாடலை பாடிக்காண்பிக்க வேண்டும் அதுவும் சில வினாடிகளில் சொல்லவேண்டும் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. வாரம் தோறும் தவறாமல் நான் கேட்கும் நிகழ்ச்சி சில நேயர்கள் எப்படி திணறுகிறார்கள் என்று கேட்கவும் நிகழ்ச்சி ஸ்வாரசியமாக இருக்கும். இப்படிபட்ட வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குபவர் எனது அருமை நண்பர் கோவை அரசன் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் திரு.விஜயகுமார் அவர்கள் (இவருடைய ஒரு ஒலித்தொகுப்பு தளத்தின் முதல் பதிவாக வந்துள்ளது அது இங்கே) அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியை மிகவும் துள்ளலுடன் தொகுத்து வழங்குபவர் வழக்கம் போல் அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் இவரின் குரலுக்கும் அறிவிப்பாளினி திருமதி சாரதா ராமானாதன் அவர்கள் குரலும் ஒரு நூழிழை வித்தியாசம் தான் குறிப்பாக அவர்களின் தொகுத்து வழங்கும் பாணியை உன்னிபாக கேட்டால் ஒழிய நான்அடையாளம் கண்டு கொள்வது சிரமம். மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கும் சரியான பாடலை சொல்லிய அனைத்து நேயர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றியும் பாராட்டுக்களூம்.ஆழியார் சுப்ரமணியம், டெய்ஸ்ராணி,பூக்கடைமணி, தாராபுரம் குண்டுகாளி,தென்னரசு, உத்தரவின்றி உள்ளேவா, திருப்பூர் மோகனசுந்தரம், சேரன்மாநகர் ராஜேஸ், அருணகிரி, அருணாசலம், சுந்தரராஜ்,மற்றும் டாடாபாத் விமலா ஆகியோர் சரியாக சொன்ன நேயர்கள்.

குறிப்பு: இணையதள நேயர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறலாம் வாரம் தோறும் சனிக்கிழமை இரவு இந்திய நேரபடி இரவு 10 மணி முதல் 11 மணி வரை கீழ்கண்ட தொலைபேசிகளில் பேசாலாம். இணையதள நேயர்கள் பங்குபெறுபவர்கள் எனக்கு முன்கூட்டியே என் மின்னஞ்சலுக்கு தெரியபடுத்தினால் பதிவு செய்து இந்த தளத்தில் ஏற்றப்படும்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0422-2317672 & 0422-2317673 (தங்களுக்கு தொடர்பு உடனடியாக கிடைக்க என் வாழ்த்துக்கள்.)

சொல்லத்தான் நினைக்கிறேன் பதிவிறக்கம் இங்கே

Monday, November 14, 2011

206 கல்யாண சமையல் சாதம்

பிரபல குணசித்திர நடிகர் திரு.எஸ்.வி.ரங்காராவ் அவர்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் இனிய பழைய பாடல்களுடன் இந்த ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் திருமதி.சாரதாராமநாதன். கேட்டு மகிழுங்கள்.

1.எங்கிந்தோ வந்தான்
2.வாராயோ வென்னிலாவே
3.குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
4.நீ வரவேண்டும் என்று எதிர்பார்தேன்
5.மெல்ல மெல்ல மெல்ல
6.என்னை ஆளூம்
7.பக்கும் பக்கும் மாடப்புறா
8.இந்த கைகள் இரண்டில் ஆடும்
9.கல்யாண சமையல் சாதம்
10.நாராயண பந்தம்
11.கண்ணா கருமை நிறக்கண்ணா
12.நான் கவிஞனும் இல்லை


ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Thursday, November 10, 2011

205 கொஞ்சும் புறாவே நெஞ்சோடு
பிரபல பழைய பாடகர்களின் குரல்களில் இனிமையான பாடல் தொகுப்பு இது மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி. சாரதா ராமானாதன்

1.என்னை முதன் முதலாக பார்த்தபோது - டி.எம்.எஸ். எஸ்.ஜானகி
2.அம்பாள் மனம் கனிந்து - எம்.கே.தியாகராஜ பாகவதர்
3.வென்னிலாவே வென்னிலாவே கன்னித்தமிழ் - கே.பி.சுந்தராம்பாள்
4.காவியமா நெஞ்சில் ஓவியமா - சி.எஸ்.ஜெயரமன்
5.காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி
6.பாட்டு வேணுமா ஒரு பாட்டு - டி.ஆர்.மகாலிங்கம்
7.கொஞ்சும் புறாவே நெஞ்சோடு - எம்.எல்.வசந்த குமாரி
8.வாசமிகும் சோலையிலே - ஏ.எம்.ராஜா, ஜிக்கி
9.ராஜாமகள் ரோஜா மலர் - பி.லீலா
10.கல்லிலே கலை வண்ணம் - சீர்காழி கோவிந்தராஜன்
11.தாரா தாரா வந்தாரா - ஜமுனா ராணி
12.என்னை தெரியவில்லையா - சந்திரபாபு
13.அழகான பொன்னு நான் - பானுமதி
14.பாப்பா கதை கேளு - ஏ.எல்.ராகவன்.

பாட்டு ஒன்னு மட்டுமல்ல பல பாட்டு கொத்தாக கேட்டு மகிழுங்கள்


பதிவிறக்கம் இங்கே

Tuesday, November 8, 2011

204 இன்று போய் நாளை வாராய்
காலத்தால் மறக்க முடியாத பிரபல பாடல்களை நமக்கு வழங்கியவர் கவிஞர் மருதகாசி அவர்கள். இதோ இந்த ஒலித்தொகுப்பில் வந்த பாடல்கள் பல தடவை இந்த தளத்தில் நாம்
கேட்டிருந்தாலும் தற்போது கேட்டாலும் பரவசமடையவைக்கும் பாடல்கள் அதற்கு அத்தாட்சி கவிஞரின் கவித்துவமான வரிகள் அதுவும் அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களின் சுவையான குரலில் கேட்க கவிஞர் மருதகாசியின் தகவல்களூடன் கேட்க கேட்க இன்னும் இனிமை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.காவியமா நெஞ்சில் ஓவியமா
2.முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு
3.ஈடு இணை நமக்கு ஏது
4.உலவும் தென்றல் காற்றினிலே
5.இன்பமே எங்குமே இல்லா
6.துள்ளாத மனமும் உண்டோ
7.மாசிலா உண்மை காதலே
8.மணப்பாறை மாடு கட்டி
9.இன்று போய் நாளை வாராய்
10.மனுசனை மனுசனை சாப்பிடறாண்டா
11.கண்கள் உறங்கிய போதும்
12.பொறுத்து பார் பார் பார் என் அன்பை

ஒலித்தொகுப்பை கேட்க இன்றே இதில் சென்று பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

Friday, November 4, 2011

203 நாளை பொழுது உந்தன்
இதே தளத்தில் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் இசையமைப்பாளர் திரு.கோவர்த்தனம் பற்றி தகவல்களையும் அவர் இசையமைத்த இனிமையான பாடல்களையும் கேட்டோம். இதோ இசையமைப்பாளர் கோவர்த்தனம் அவர்களின் மற்றுமொரு தொகுப்பு. அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் குரலில் அறிதான தகவல்கள் பிரபலமான பாடல்களுடன் ஒலித்தொகுப்பு எத்தனை முறை ருசித்தாலும் திகட்டாத தேன் சொட்டுக்கள்.
1.உலகத்தில் சிறந்தது எது
2.திருமகன் என் வீட்டை தேடிவந்தான்
3.பணநாதா எங்க குணநாதா
4.அன்புள்ள அத்தான் வணக்கம்
5.அந்த சிவகாமி மகனிடம்
6.உன் அழகை கண்டு கொண்டால்
7.பத்து பதினாறு முத்தம் முத்தம்
8.நாளை பொழுது உந்தன்

ஒலிக்கோப்பு பதிவிறக்கம் இங்கே

Thursday, November 3, 2011

202 அழகு நிலாவின் பவனியிலே
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் தயாரிப்பில்
வெளிவந்த பிரபலமான படங்களின் பாடல்கள் தான் இந்த ஒலித்தொகுப்பில். இன்றைய இளைஞர்கள் டி.ஆர்.சுந்தரம் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏன் எனக்கே பல விசயங்கள் தெரியாது அவரைப்பற்றியும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார் தயாரித்த சில படங்களின் ஸ்வாரசியமான தகவல்களையும் நமக்காக சேகரித்து தன் இனிமையான குரலில் வழங்கியிருக்கிறார் அறிவிப்பளினி திருமதி சாரதா ராமானாதன் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

1.மனம் எனும் மேடை மீது
2.அழகு நிலாவின் பவனியிலே
3.சிலை செய்ய கைகள் உண்டு
4.பெண்ணாலே கண்பார்வை
5.பளிங்கு நாள் ஒரு மாளிகை
6.காட்டு மல்லி பூத்திருக்க
7.ஊசிப்பட்டாசே ஊசிப்பாட்டாசே
8.சலாம் பாபு சலாம் பாபு
9.துள்ளி துள்ளி அலைகள் எல்லாம்
10.கொஞ்சி கொஞ்சிப்பேசி மதிமயக்கும்
11.செந்தமிழ் நாட்டு சோலையினிலே
12.சின்ன சின்னக் கன்னனுக்கு
13.தென்றல் உறங்கிய போதும்


இங்கேயும் கேட்கலாம்

Wednesday, November 2, 2011

201 வானொலி நட்சத்திரம் திருப்பூர் சுபிக்‌ஷாவளரும் குழந்தை வானொலி நட்சத்திரம் திருப்பூர் சுபிக்‌ஷாவின் குரல் மற்றும் படம் சக்தி விகடனில்.குழந்தை நட்சத்திரங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

இதோ இதே தளத்தில் வந்துள்ள திருப்புர் சுபிக்‌ஷா அவர்கள் வானொலி நேயர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒலித்தொகுப்புகள் உங்கள் செவிக்கு இங்கே கேட்டு மகிழ்ந்து உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே.

குழந்தைகள் அனைவருக்கும் பாசப்பறவைகள் இணைய தளத்தின் நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

இந்த பதிவு பதிந்தவுடன் வானொலியில் சுபிக்‌ஷா விரும்பி கேட்ட பாடல் ஆசைப்பட்ட எல்லத்தையும் வாங்கலாம் கேட்டேன் இதோ அவரின் குரலுடன் அந்த பாடலும். இதன் தொடர்ச்சியாக 200 பதிவின் ஆக்கத்தை உருவாக்கியவர் திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்கள் விரும்பி கேட்ட பாடல் சந்திரபோஸ் குரலில் “ஏண்டி முத்தமா” பாடல் என்னவொரு குரல் ஹைபிச்சே பிச்சை வாங்கவேண்டும் சூப்பர் செலக்‌ஷன் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன். பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்


எலந்த பயம் எலந்த பயம் விரும்பி கேட்ட பாடல்

நான் மலரோடு தனியாக விரும்பி கேட்ட பாடல்


ஆனந்த விகடன் பக்கம்

Follow by Email