Thursday, November 3, 2011

202 அழகு நிலாவின் பவனியிலே








சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் தயாரிப்பில்
வெளிவந்த பிரபலமான படங்களின் பாடல்கள் தான் இந்த ஒலித்தொகுப்பில். இன்றைய இளைஞர்கள் டி.ஆர்.சுந்தரம் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏன் எனக்கே பல விசயங்கள் தெரியாது அவரைப்பற்றியும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார் தயாரித்த சில படங்களின் ஸ்வாரசியமான தகவல்களையும் நமக்காக சேகரித்து தன் இனிமையான குரலில் வழங்கியிருக்கிறார் அறிவிப்பளினி திருமதி சாரதா ராமானாதன் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

1.மனம் எனும் மேடை மீது
2.அழகு நிலாவின் பவனியிலே
3.சிலை செய்ய கைகள் உண்டு
4.பெண்ணாலே கண்பார்வை
5.பளிங்கு நாள் ஒரு மாளிகை
6.காட்டு மல்லி பூத்திருக்க
7.ஊசிப்பட்டாசே ஊசிப்பாட்டாசே
8.சலாம் பாபு சலாம் பாபு
9.துள்ளி துள்ளி அலைகள் எல்லாம்
10.கொஞ்சி கொஞ்சிப்பேசி மதிமயக்கும்
11.செந்தமிழ் நாட்டு சோலையினிலே
12.சின்ன சின்னக் கன்னனுக்கு
13.தென்றல் உறங்கிய போதும்


இங்கேயும் கேட்கலாம்

2 comments:

vijayan said...

தமிழ் திரையின் இணையில்லா நடிப்புசெல்வம் T .S .பாலையா அவர்களின் படத்தைபோட்டு T .R .சுந்தரம் என்று போட்டுவிட்டீர்களே வருங்கால தலைமுறைக்கு வரலாறை தவறாக தரலாமா. vijayan.

Covai Ravee said...

வாங்க விஜயன் அவர்களே.. படம் பதியும் போதே சந்தேகப்பட்டேன் பாலையா முகபாவம் இருக்கிறதே... இன்றைய இளைஞர்களூக்கு மட்டுமல்ல எனக்கே டி.ஆர்.சுந்த்ரம் பற்றி தகவல்கள் தெரியாததற்க்கு நானே சாட்சியாக இருந்துள்ளேன். படம் மாற்றிவிட்டேன் இவர் தானே? தவறை சுட்டிக்காட்டியதற்க்கு மிக்க நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் நன்றி. ஒலித்தொகுப்புக்களை கேட்டு மகிழுங்கள். உங்கள் தளமும் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Follow by Email