Tuesday, November 15, 2011

207 சொல்லத்தான் நினைக்கிறேன் 3



சொல்லத்தான் நினைக்கிறேன் ஒலித்தொகுப்பு - 3

இந்த ஒலித்தொகுப்பில் பாடல்கள் பட்டியல் இல்லையே ஏன் என்று உங்களூக்கு நினைக்கத் தோன்றலாம். நிகழ்ச்சியின் சாராம்சமே அதுதான். கீழே உள்ள பெயர் பட்டியலில் உள்ளவர்கள் எல்லோருமே கோவை வானொலியின் தீவிர ரசிகர்கள். பாடலில் இருந்து ஏதாவது ஒரு இடத்தில் இருந்து 2 வரிகள் அல்லது இசை ஒலிபரப்புவார்கள் நேயர்கள் சரியான பாடலை பாடிக்காண்பிக்க வேண்டும் அதுவும் சில வினாடிகளில் சொல்லவேண்டும் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. வாரம் தோறும் தவறாமல் நான் கேட்கும் நிகழ்ச்சி சில நேயர்கள் எப்படி திணறுகிறார்கள் என்று கேட்கவும் நிகழ்ச்சி ஸ்வாரசியமாக இருக்கும். இப்படிபட்ட வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குபவர் எனது அருமை நண்பர் கோவை அரசன் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் திரு.விஜயகுமார் அவர்கள் (இவருடைய ஒரு ஒலித்தொகுப்பு தளத்தின் முதல் பதிவாக வந்துள்ளது அது இங்கே) அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியை மிகவும் துள்ளலுடன் தொகுத்து வழங்குபவர் வழக்கம் போல் அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் இவரின் குரலுக்கும் அறிவிப்பாளினி திருமதி சாரதா ராமானாதன் அவர்கள் குரலும் ஒரு நூழிழை வித்தியாசம் தான் குறிப்பாக அவர்களின் தொகுத்து வழங்கும் பாணியை உன்னிபாக கேட்டால் ஒழிய நான்அடையாளம் கண்டு கொள்வது சிரமம். மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கும் சரியான பாடலை சொல்லிய அனைத்து நேயர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றியும் பாராட்டுக்களூம்.



ஆழியார் சுப்ரமணியம், டெய்ஸ்ராணி,பூக்கடைமணி, தாராபுரம் குண்டுகாளி,தென்னரசு, உத்தரவின்றி உள்ளேவா, திருப்பூர் மோகனசுந்தரம், சேரன்மாநகர் ராஜேஸ், அருணகிரி, அருணாசலம், சுந்தரராஜ்,மற்றும் டாடாபாத் விமலா ஆகியோர் சரியாக சொன்ன நேயர்கள்.

குறிப்பு: இணையதள நேயர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறலாம் வாரம் தோறும் சனிக்கிழமை இரவு இந்திய நேரபடி இரவு 10 மணி முதல் 11 மணி வரை கீழ்கண்ட தொலைபேசிகளில் பேசாலாம். இணையதள நேயர்கள் பங்குபெறுபவர்கள் எனக்கு முன்கூட்டியே என் மின்னஞ்சலுக்கு தெரியபடுத்தினால் பதிவு செய்து இந்த தளத்தில் ஏற்றப்படும்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0422-2317672 & 0422-2317673 (தங்களுக்கு தொடர்பு உடனடியாக கிடைக்க என் வாழ்த்துக்கள்.)

சொல்லத்தான் நினைக்கிறேன் பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email