Friday, January 6, 2012

226 மேகம் மிதக்கும் வானம்



மேகம் மிதக்கும் வானம் -- இந்த பதிவை பற்றி சொல்லப்போனா இசை மேகம் மிதக்கும் மனம். 5.1.௨0௧௨ அன்று கோவைக்கு திரும்பும் போது இரவு வானொலியில் சென்னை வானொலி நிகழ்ச்சியை கேட்க நேர்ந்தது. மனதை ரம்மியமாக்கும் பாடல் தெரிவுகளூடன் அறிவிப்பாளர் திரு.ஸ்ரீனிவாஸ் அவர்கள் கடலில் மிதக்கும் ஓடம், படகு, கப்பல் ஆகிய தொடர்பான பாடல்களை மிக அற்புதமாக அமைதியான குரலில் தொகுத்து வழங்கினார். மேலே சொன்னது போல் ஓர் இசை மேகம் நம் மனதில் தவழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. பாடல் கேட்ட பாடல்களாக இருந்தாலும் ஒரு தொகுப்பாக கேட்பதற்கு ஓர் வித்தியாசமான அனுபவம் தான். கேட்டுதான் பாருங்களேன்.

1.பூங்காத்தே வீசு
2.சித்திர செவ்வானம்
3.பொங்கும் கடலோசை
4.ஓடம் நதியினிலே
5.அதோ அந்த பறவைபோல
6.மேகம் கருக்கையிலே
7.ஆசையே அலைபோலே
8.அம்மம்மா கேளடி தோழி
9.வசந்த கால நதிகளிலே
10.தங்கத்தோனியிலே

மேகம் மிதக்கும் வானம் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.

No comments:

Follow by Email