Friday, January 13, 2012

229 எங்கள் பாரத தேசம்




நேற்று விவேகானந்தர் 150 ஆவது பிறந்தநாள் இதன் தொடர்பாக வானொலியில் நான் கேட்ட இனிமையான உன்னதமான நிகழ்ச்சி. இன்றைய இளைஞர்கள் நாளைய என்ற தலைப்பில் எனது அருமை அன்பர் அறிவிப்பாளர் திரு.சந்துரு அவர்கள் மிகவும் அழகாக தொகுத்து வழங்கினார். இளஞர்களுக்கு உத்வேகம் தரும் வகையில் தெரிவுகளூம். ஸ்வாமி விவேகானந்தர் அவர்களின் பொன்மொழிகள் அவரைப் பற்றிய தகவல்களை நாம் நம் பள்ளிப்பருவத்தில் படித்து தெரிந்திருந்தாலும் அப்போது நம் படிக்க வேண்டிய கட்டாயத்தில் படித்திருப்போம் அப்போது இருக்கும் சூழ்நிலையில் படித்தது இப்போது நம் மனதின் ஆழத்தில் இருந்தாலும் அதை மேலே கொணர்ந்து ஒலித்தொகுப்பாக கேட்கவும் வித்தியாசமான உணர்வுகளை நம்மனதிலும் உருவாக்குகிறது இந்த ஒலித்தொகுப்பு அந்த வகையில் ஸ்வாமியின் அற்புத தகவல்களூம், அவரின் பொன்மொழிகளூம் ஒருங்கிணைத்து இனிய பாடல்களூடன் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் கோவை வானொலி ஜாம்பவான் நேயர்கள்
(காந்திபுரம், பூக்கடை மணி, திருப்பூர் டி.கே.சங்கர், திருப்பூர்.மனவை கா.சந்திரசேகர், கொடுக்காபட்டி ஜெயகுமார், செல்வபுரம் சிங்காரவேலன், வரதராஜபுரம் விஜயகுமார், காரப்பன், வெள்ளிங்கிரி,ஹரிஹரன்,தங்கராஜ், கன்னிமுத்து , சுகம் ராஜா, பொன்னுசாமி) ஆகியோரின் கருத்துக்களூம் இடம் பெற்றது கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியடைகிறது. லட்சக்கணக்கில்
கேட்ட இந்த ஒலித்தொகுப்பை 100 இளைஞர்கள் வேண்டாம் ஒருவர் உணர்ந்து ஸ்வாமியின் பின்னால் சென்றாலே போதும் இந்தியா முன்னேற்ற பாதையில் சென்றுவிடும். எழுமின், விழுமின், உழைமின் என்ற தாரக மந்திரத்தை எழுந்திரு, விழித்திரு மற்றும் என்றும் உழைத்திரு என்ற காரணத்தை உணர்ந்தாலே போதும்
இளைஞர்களில் வாழ்வில் நலம் சேர்த்து இந்தியாவிற்கு வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஒலித்தொகுபை உருவாக்கி வழங்கிய அறிவிப்பாளர் திரு.சந்துரு அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டுவிட்டு நேயர்கள் சொன்னது போல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களையும் இங்கே நீங்களூம் சொல்லலாமே?

1.எங்கள் பாரத தேசம்
2.நாளை நமதே இந்த நாளூம்
3.பூட்டிய சிறையினை உடைப்போம்
4.வேள்வி செய்யும் வேலை வந்தது
5.இறைவா தாயும் நீயே

இன்றைய இளைஞர்கள் நாளைய இந்தியா என்ற தலைப்பில் ஒலிஉலா வந்த ஒலிதொகுப்பு இங்கே கேட்கலாம்.

2 comments:

Covai Ravee said...

நன்றி யூஜின். நேற்று இரவு பதிவு செய்தது. ஒலிகோப்பு சுமாராக இருந்தாலும். அறிவிப்பாளர் எனக்கு நல்ல தொகுப்பு தருகிறேன் என்றார். அவை என் கைக்கு கிடைத்ததும் ஒலிக்கோப்பு மாற்றப்படும் அதுவரைக்கும் இதை கேளூங்க. ஓகே.

Anonymous said...

தறவிறக்கம் செய்துகொண்டிருக்கிறேன் 103 கோவை எப் எம் மனதோடு தான் அட்டகாசமா இருக்கு
தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்.

-யூஜின், தமிழ்தோட்டம்

Follow by Email