Friday, January 27, 2012

331 இதயம் ஒரு கோவில்





இதயம் (இசையும்) ஒரு கோவில்

இணையதளம் பேஸ்புக்கில் எப்போது சென்றாலும் ஆன்லைனில் பார்க்க முடிகின்ற திரையிசை பின்னணி பாடகர் திரு.யுகே.முரளி அவர்களின் தொலைபேசி வானொலி பேட்டி நிகழ்ச்சி இன்று (27.01.2012) காலை ஒலிபரப்பட்டது. நான் வேலை செல்லும் அவசரத்திலும் இந்த நிகழ்ச்சியை
கேட்டு பதிவு செய்து உங்களூக்காக வழங்குகிறேன். எனது பேஸ்புக் நண்பர்களான திரு.முரளி அவர்களூம் அவரை பேட்டி எடுத்த அறிவிப்பாளர் திரு.சந்தீப் அவர்களூம் சேர்ந்து வழங்கியதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் திரு.சந்தீப் அவர்களூம் பேஸ்புக்கில் தினமும் உள்ளே வரும் ஓர்இனிய நண்பர். அவரின் நிகழ்ச்சிகளூம் வானொலியில் பலதடவை கேட்டுரசித்துள்ளேன் இந்த நிகழ்ச்சியிலும் திரு.முரளியுடன் மிகவும் சர்வசாதரணமாக கேள்வி கேட்டு வழங்கியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. மேலும் வளர்ந்து வரும் பாடகர் திரு. முரளி அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்வதில் . அதிகாலை முதல் அவரிடம் தொலைபேசியில் உரையாடி அவரிடம் ஓர் அழகான, இனிமையான நிகழ்ச்சியை வழங்கிய அறிவிப்பாளர் திரு.சந்தீப் அவர்களூக்கும், திரு.முரளி அவர்களூக்கும் நன்றி. அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. முரளி அவர்கள் மேன்மேலும் பல நல்ல பாடல்களை நேயர்களுக்கு வழங்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அதுமட்டுமல்லாமல்.. இவர் சென்னையில் உதயராகம் என்ற ஒரு இசைக்குழுவை பல ஆண்டுகளாக நடத்தி வருவது பலருக்கும் தெரிந்ததே இதோ அவரின் இசைக்குலுவின் இணையதளம் இங்கே பார்க்கலாம்.

யு.கே.முரளி அவர்களின் உதயராகம் இசைக்குழுவின் இணையதளம் இங்கே சென்று பார்க்கலாம்.


அதுமட்டுமல்லாமல் எனக்கு இசையும் ஒரு கோயில் தான் என்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் பாடிய பாடல்களை விரும்பி பாடுபவர் என்று நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அந்த வகையில்
அவர் விரும்பி கேட்ட இளையராஜா அவர்கள் பாடிய இதயம் ஓரு கோயில் என்ற பாடலை கேட்டிருந்தார் அறிவிப்பாளர் சந்தீப் பிரபல பாடகர் டாக்டர் எஸ்.பி.பாலசுபரமணியம் அவர்கள் பாடிய இதயம் ஒரு கோயில் பாடலை இறுதியில் ஒலிபரப்பியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது என்றால் மிகையாகாது. இதற்காக அவருக்கும் மீண்டும் ஓர் நன்றி.

1.நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
2.அடடா அடடா மழை தான்
3.இதயம் ஒரு கோவில்

பாடகர் திரு.யு.கே முரளி அவர்களின் வானொலி பேட்டி இங்கே

Follow by Email