Thursday, March 22, 2012

341 நான் அளவோடு ரசிப்பவன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்றைய பதிவு பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி இவரைப்பற்றி ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் இருந்தாலும் அவரின் பாடல்களூடன் அவரைப்பற்றிய தகவல்களூம் ஓர் இட்த்தில் கேட்க ஒரு புதுவித சுகமான அனுபவம் தான் இதோ இந்த இரண்டு ஒலித்தொகுப்புக்களில் அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் திறம்பட தொகுத்து வழங்கியிருக்கிறார். உங்களூடன் சேர்ந்து நானும் ஒருமுறை கேட்க விரும்புகிறேன். கேட்டு மகிழுங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் அன்பர்களே.

ஒலிகோப்பு 1 இங்கே கேட்கலாம்

மூன்று தமிழ் பாடியதும் உன்னிடமோ ; நல்ல இடம் நீ வந்த இடம்; என்னை பாட வைத்தவன் ஒருவன் ; நான் அளவோடு ரசிப்பவன் ; கேட்டேன் கண்ணனின் கீதோபசம் ; உனது விழியில் எனது பார்வை ; பூவரையும் பூங்கொடியே பூமாலை; கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ; புத்தம் புதிய புத்தகமே.

ஒலிக்கோப்பு - 2இங்கே கேட்கலாம்

தொட்டால் பூ மலரும் ; ஆஹா உதிர்வது போல் இதழ் இருக்கும் ; அவளுக்கென்ன அழகிய முகம் ; ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ; இச் இச்ன்னு ; நான் காத்து வாங்க போனேன் ; குமரிப்பெண்ண்னின் உள்ளத்திலே ; பத்து பதினாறு முத்தம் முத்தம் ; நிலவு ஒரு பெண்ணாகி ; கண் போன போக்கிலே.

Saturday, March 10, 2012

340 பண்பலைக் குயில் துளசிமணி மாரிமுத்து

குடும்பத்துடன் வெளிநாட்டிற்க்கு சுற்றுலா சென்று இந்தியா வரவிருக்கும் பண்பலைக் குயில் துளசிமணி மாரிமுத்து அவர்களை அன்புடன் பாசப்பறவைகள் தளம் வருக வருக என்று வரவேற்கிறது.

இந்த பதிவில் வரும் நட்சத்திரம் அதிதீவிர வானொலி பிரியர்
பேராசிரியர் திருமதி. துளசிமணி மாரிமுத்து அவர்கள். இவரைப்பற்றி
கோடை பண்பலை நேயர்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்
மற்ற மாவட்டங்களின் நேயர்களூம் ஓரளவு இவரைப்பற்றி தெரிந்து
வைத்துருப்பார்கள். இணையதள நேயர்களூக்காக அவரின் தகவல்களூடன்
அவர் வானொலியில் கலந்து கொண்ட பாட்டு போட்டிகளின் தொகுப்புக்களை
தான் இங்கே கேட்க இருக்கிறீர்கள்.

பேராரசிரியை திருமதி.துளசிமணி மாரிமுத்து அவர்கள் பழனி அருள்மிகு
பழனிஆண்டவர் மகளிர் கல்லூரி பேராசிரியாக பணிபுரிபவர்
சின்ன வயதிலிருந்தே சினிமா பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
கோடை பண்பலையில் திங்கள் தோறும் மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகும்
பாட்டுபாடவா நிகழ்ச்சியின் நட்சத்திரம். இவர் தொடர்ந்து 18 வாரங்கள் முதலாவதாக இடம் பெற்று பரிசுபெற்றவர் என்பது குறிப்பிடதககது. பாட்டுபாடவா என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருபவர் அறிவிப்பாளர் திரு.அப்துல்ஹமீது. அவர் நடத்தும் தொலைக் காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று பரிசுபெற்றவர்.

தொலைப்பேசியில் பதட்டமில்லாமல் பாடுவதில் மிகவும் வல்லவர். அநேகம் பேருக்கு தொலைப்பேசி இணைப்பு கிடைத்தவுடன் தட்டு தடுமாறி சுதி போய் பாடுவார்கள் இவர் சுதி சிறிதும் விலகாமல் பாடுவதில் வல்லவர். பொதுவாகவே பேராசிரியர்கள் அதிகம் இசையின் மீது விருப்பமில்லாமல் தான் இருப்பார்கள் ஏதோ பொழுதுபோக்காக பாடலகளை விரும்பி கேட்பார்கள். நான் அனுபவத்தில் கண்டவை இவை. இவர் இவ்வளவு ஆர்வத்துடன் திரையிசை பாடல்களீல் அதிக ஆர்வம் கொண்டு பேராசிரியராக பணிபுரிந்து ஆச்சரியம் தான். இவர் இன்னிசை தமிழ் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இவரது கணவர் திரு.மாரிமுத்து இவரும் இசைப்பிரியர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனி ஆண்டவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை தலைவர் பணியாற்றியவர். இவர் தன் மனைவி பாடிய பாடல்களின் தொகுப்புக்களை அவருடைய ரசிகர்களூக்கு இலவசமாக இரண்டாயிரம் குறுந்தகடுகளாக வழங்கி வருகிறார்.
அப்படி ஒரு ரசிகரிடம் (திருப்பூர் தண்ணீர்பந்தல் அகிலா விஜயகுமார்) வந்த இசைதொகுப்புகள் தான் உங்கள் செவிக்கு இங்கே வந்துள்ளன.

இணையதள நேயர்கள் இதில் வரும் தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து பொருமையுடன் கேட்டு மகிழுங்கள் ஒவ்வொரு தொகுப்பிலும் மற்ற நேயர்களூடன் எப்படி போட்டி போட்டு பாடல்களை பாடி வெற்றி பெருகிறார்
என்று கேளுங்கள். உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களையும் இங்கே எழுத தவறாதீர்கள்.

இந்த ஒலித்தொகுப்பில் பாடிய மற்ற வானொலி நேயர்களுக்கும், அதை வெற்றிகரமாக நடத்திய அறிவிப்பாளர்கள் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒலித்தொகுப்புகளை வழங்கிய திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களூக்கும் என் மனமார்ந்த ந்ன்றிகள்.


வானொலி நேயர் பேராசிரியை டி.துளசிமணி அவர்களின் திரையிசை தொகுப்பு இங்கே கேட்கலாம் .

Thursday, March 8, 2012

339 பாடல்களில் ஒற்றுமை நிகழ்ச்சி

நீண்ட இடைவெளிக்கு பிறகு அறிவிப்பாளர் திரு. லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் வழங்கிய ஒற்றுமை வானொலி நிகழ்ச்சி எப்பவோ பதிவு செய்து வைத்தது இப்போது தான் தளத்தில் இடம் பெறுகிற்து. இனிமையான பாடல்களூடன் ஒற்றுமை கானும் நிகழ்ச்சி நீங்களூம் கண்டு பிடியுங்கள் கேட்டு இன்புறுங்கள். பாடல்கள் பட்டியல் பிறகு சேர்க்கப்படும்.

பகுதி 1

Get this widget | Track details | eSnips Social DNA


பகுதி 2

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email