Saturday, March 10, 2012

340 பண்பலைக் குயில் துளசிமணி மாரிமுத்து

குடும்பத்துடன் வெளிநாட்டிற்க்கு சுற்றுலா சென்று இந்தியா வரவிருக்கும் பண்பலைக் குயில் துளசிமணி மாரிமுத்து அவர்களை அன்புடன் பாசப்பறவைகள் தளம் வருக வருக என்று வரவேற்கிறது.

இந்த பதிவில் வரும் நட்சத்திரம் அதிதீவிர வானொலி பிரியர்
பேராசிரியர் திருமதி. துளசிமணி மாரிமுத்து அவர்கள். இவரைப்பற்றி
கோடை பண்பலை நேயர்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்
மற்ற மாவட்டங்களின் நேயர்களூம் ஓரளவு இவரைப்பற்றி தெரிந்து
வைத்துருப்பார்கள். இணையதள நேயர்களூக்காக அவரின் தகவல்களூடன்
அவர் வானொலியில் கலந்து கொண்ட பாட்டு போட்டிகளின் தொகுப்புக்களை
தான் இங்கே கேட்க இருக்கிறீர்கள்.

பேராரசிரியை திருமதி.துளசிமணி மாரிமுத்து அவர்கள் பழனி அருள்மிகு
பழனிஆண்டவர் மகளிர் கல்லூரி பேராசிரியாக பணிபுரிபவர்
சின்ன வயதிலிருந்தே சினிமா பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
கோடை பண்பலையில் திங்கள் தோறும் மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகும்
பாட்டுபாடவா நிகழ்ச்சியின் நட்சத்திரம். இவர் தொடர்ந்து 18 வாரங்கள் முதலாவதாக இடம் பெற்று பரிசுபெற்றவர் என்பது குறிப்பிடதககது. பாட்டுபாடவா என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருபவர் அறிவிப்பாளர் திரு.அப்துல்ஹமீது. அவர் நடத்தும் தொலைக் காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று பரிசுபெற்றவர்.

தொலைப்பேசியில் பதட்டமில்லாமல் பாடுவதில் மிகவும் வல்லவர். அநேகம் பேருக்கு தொலைப்பேசி இணைப்பு கிடைத்தவுடன் தட்டு தடுமாறி சுதி போய் பாடுவார்கள் இவர் சுதி சிறிதும் விலகாமல் பாடுவதில் வல்லவர். பொதுவாகவே பேராசிரியர்கள் அதிகம் இசையின் மீது விருப்பமில்லாமல் தான் இருப்பார்கள் ஏதோ பொழுதுபோக்காக பாடலகளை விரும்பி கேட்பார்கள். நான் அனுபவத்தில் கண்டவை இவை. இவர் இவ்வளவு ஆர்வத்துடன் திரையிசை பாடல்களீல் அதிக ஆர்வம் கொண்டு பேராசிரியராக பணிபுரிந்து ஆச்சரியம் தான். இவர் இன்னிசை தமிழ் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இவரது கணவர் திரு.மாரிமுத்து இவரும் இசைப்பிரியர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனி ஆண்டவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை தலைவர் பணியாற்றியவர். இவர் தன் மனைவி பாடிய பாடல்களின் தொகுப்புக்களை அவருடைய ரசிகர்களூக்கு இலவசமாக இரண்டாயிரம் குறுந்தகடுகளாக வழங்கி வருகிறார்.
அப்படி ஒரு ரசிகரிடம் (திருப்பூர் தண்ணீர்பந்தல் அகிலா விஜயகுமார்) வந்த இசைதொகுப்புகள் தான் உங்கள் செவிக்கு இங்கே வந்துள்ளன.

இணையதள நேயர்கள் இதில் வரும் தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து பொருமையுடன் கேட்டு மகிழுங்கள் ஒவ்வொரு தொகுப்பிலும் மற்ற நேயர்களூடன் எப்படி போட்டி போட்டு பாடல்களை பாடி வெற்றி பெருகிறார்
என்று கேளுங்கள். உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களையும் இங்கே எழுத தவறாதீர்கள்.

இந்த ஒலித்தொகுப்பில் பாடிய மற்ற வானொலி நேயர்களுக்கும், அதை வெற்றிகரமாக நடத்திய அறிவிப்பாளர்கள் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒலித்தொகுப்புகளை வழங்கிய திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களூக்கும் என் மனமார்ந்த ந்ன்றிகள்.


வானொலி நேயர் பேராசிரியை டி.துளசிமணி அவர்களின் திரையிசை தொகுப்பு இங்கே கேட்கலாம் .

2 comments:

T.N.MURALIDHARAN said...

தண்ணீர் பந்தல் வே.சுப்பிரமணியம் எனக்கு வழங்கிய Liebster Blog விருதை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து விருதை ஏற்றுக்கொளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://tnmurali.blogspot.com

Covai Ravee said...

இசையுலக ஜாம்பவான்கள வழங்கியதையும் அந்த சாதனைகளை வானொலியில் ஒலிபரப்பிய நிகழ்ச்சி தொகுப்புகளையும் தான் நான் எனது வலைபூவில் இணையதள நேயர்கள் கேட்டு இன்புற வழங்கி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் இசையுலக ஜாம்பவான்களின் தகவல்களையும் அதில் வருமாறு பார்த்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் வானொலி அறிவிப்பாளர்களின் திறமைகளையும் உலகுக்கு தெரிவிக்கவும். குறிப்பாக வானொலி நேயர்களின் தனி திறமைகளையும் உலகுக்கு தெரிவிக்கவே இந்த முயற்சி இந்த முயற்சியில் 340 பதிவுகள் கடந்து வந்து விட்டேன். இதற்கே இவ்வளவு பெரிய விருதா? என்று வியப்பில் அசந்து போய்விட்டேன். விருதை ஸ்பெஷல் விருந்தாக வழங்கிய திரு.டி.என்.முரளிதரன் ஐயா அவர்களூக்கு என் இதயங்கனிந்த நன்றிகள். இணையதள நேயர்கள் மேலும் வருகை புரிந்து ஆதரவு கரம் நீட்டுவார்கள் அவர்களூக்கு இன்னும் சிறப்பான பதிவுகள் ஒலிக்கோப்புகளூடன் வழங்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். நன்றி.

Read more: http://tnmurali.blogspot.com/2012/03/i.html#ixzz1pY0PFO76

Follow by Email